ஒருவர் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவருக்கோ அல்லது அவருக்கு எதிரியாகக் கருதப்படுகிற இன்னொருவருக்கோ...
1. கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார்... இல்லை...இல்லை முறித்துக் காண்பிக்கிறேன் பார்...
2. என்னை சீண்டி விட்டான்... அவனை சும்மா விட மாட்டேன் அவனுக்கு மர்ம நோயை உண்டாக்கி வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக கக்க வைக்கிறேன் பார்...
3. ஐயோ....என்னை சீக்கில் படுத்த படுக்கையாய் படுக்க வைத்துவிட்டார்களே ! நான் குணமாக வேண்டுமே....
4. அந்த கஷ்டத்தை ஏங்க கேக்கிறிய... என் மாப்பிள்ளை கடந்த அஞ்சு வருசமா என்னிடம் பேசாம இருக்கிறார். அவர் என்னிடம் பாசம் நேசமாக இருக்க வேண்டும். பணங்காசு அள்ளி அள்ளி அனுப்ப வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....
5. எனது மகன் படித்துவிட்டு வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவன் வெளிநாடுச் செல்ல வேண்டும். அவனுக்கு சீக்கிரம் “விசா” கிடைத்து லட்சம் லட்சமாக அங்கே சம்பாரிக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....
6. எனது பிள்ளைக்கு வயது கடந்து விட்டது. நல்ல “வரன்” கிடைத்து கால நேரத்தோடு அவனுக்கு/அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....
7. எனது குழந்தைக்கு “காய்ச்சலுங்க” ராத்திரியான அழுகையை நிறுத்த மாட்டேன்ங்குதுங்க அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....
8. விலை மதிப்புள்ள அந்த நிலத்தை அவர்களிடமிருந்து சுலபமாக குறைந்த விலையில் எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....
என இதுபோன்றவற்றைச் சொல்லி, பலர் மடமையுடன் நாடிச்செல்வது சமூகத்திற்கு எதிராக கருதப்படுகிற மந்திரவாதிகளையே....
மந்திரவாதியோ...
1. நான் அனைத்தையும் வசப்படுத்தி வைத்துள்ளவன்.
2. அவனைக் குணமாக்கி காண்பிக்கிறேன் பார்... இல்லை...இல்லை அவனுக்கு நோயை ஏற்படுத்தி காண்பிக்கிறேன் பார்...
3. பைத்தியமாக்குவது / பைத்தியத்தை தெளியவைப்பது
4. கணவன் மனைவியைப் பிரிப்பது / சேர்ப்பது
5. திருமணம் நடைபெற / தள்ளிப்போட
6. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது
7. வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க
8. காணாமல்போன பொருளைக் கண்டுபிடித்துத் தருகிறேன் பார் எனச்சொல்லி பொருள் “அங்கே உள்ளது”.... “இங்கே உள்ளது”.... என்ற பொய்யைச் சொல்லி உற்றார் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போன்றவர்களிடேயே சண்டையை வளர்த்து விடுவது
9. பிள்ளைகளுக்குப் படிப்பை வரவழைக்கிறேன் பார்.... வேண்டும் என்றால் அவர்களை “பாஸ்” ஆக்கி காட்டுகிறேன் எனச் சொல்வது.
10. உனது மகனுக்கு ஒரே மாதத்தில் வெளிநாடு விசா வரவழைத்துக் காண்பிக்கிறேன் பார்... நல்ல வேலை கிடைக்க வைக்கிறேன் பார்....
11. உனக்கோ, உன் வீட்டிற்கோ பேய், பிசாசுகள் அண்ட விடாமல் தடுக்கிறேன் பார்...
12. பயத்தை போக்கி காட்டுகிறேன் பார்...
13. உங்களுக்கு தோஷம் உள்ளது. அவற்றை பரிகாரங்கள் செய்து உங்களிடமிருந்து நீக்கி காட்டுகிறேன் பார்...
என அறியாத நம் மக்களிடம் இதுபோன்றவற்றைச் சொல்லி அவர்களிடேயே பயத்தை உருவாக்கி அவர்களிடமிருந்து தேவையான பணத்தை கூடுமானவரையில் பிடுங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் மந்திரவா(வியா)திகள்.
இன்னும் எத்தனை காலத்திற்கு சமூகம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்துக் கொண்டார்கள் ? மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா ? அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா ? இந்த அறியாமையைப் பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளைக் கூட்ட கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும்.
செய்வினை, சூனியம், தாயத்து, பரிகாரங்கள் என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம். எனவே பொதுமக்கள் யாவரும் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் இருப்பது அவசியமானதாகும்
சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...
பயனுள்ள பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅட, மந்திரவாதியா?
என்ன இந்தப்பக்கம், இங்கு யாரை பார்க்கவந்தீர்?
சார் நீங்க?
நாங்கதான் நுகர்வோர் மற்றும் மனிதஉரிமை பாதுகாப்பு அமைப்பு. பிஸினஸல்லாம் எப்படி இருக்கு, இதுவரைக்கும் எத்தனை பேரை முடக்கியாச்சு? எத்தனை பேரை சாவடிச்சாச்சு? எத்தனை குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்தியாச்சு?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்ல சார்,
பிஸினஸ் ரொம்ப மோசம், கஸ்டமர் ஒருத்தரும் வரமாட்டேங்கிராங்க, ஏதோ விழிப்புணர்வுன்னு ஒரு கூட்டம் வந்து தூங்கிக்கிட்டு இருந்து எல்லா மக்களையும் எழுப்பிவிட்டுட்டு இப்போ எங்களை முடக்கி போட்டுட்டாங்க. குடிக்க ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்கல்ல, வேறு ஏதாவது வேலையிருந்தா பார்க்லாம் என்று இந்தப்பக்கம் வந்தேன், நான் எந்த வேலையானாலும் செய்வேன் சார், உதவி செய்யுங்க சார்.
மந்திராவாதிஐயா, இந்த மந்திரம் தந்திரம் இதெல்லாம் உங்களுக்கு சொறு போடுகிறமாதிரி தெரியம், ஆனால் அது உங்களையே எரித்துவிடும், மக்களை ஏமாற்றி உண்பது ஒரு உணவா? இவை எல்லாற்றையும் மண்ணைபோட்டு புதைத்துவிட்டு வந்திடுங்கோ.
எங்கு வரனும் சார்?
ஐயா, நீங்கள் சொன்ன அந்த விழிப்புணர்வு கூட்டம் நாங்கதான், எங்களிடம் வந்து இணைந்து மக்களுக்கு நல்ல சேவைகளை செய்வோம், அப்புறம் பாருங்க உங்க நிலைமையை.
சார், அப்படீன்ன நிறைய காசு பணம் கிடைக்குமா?
காசு பணம் என்ன ஐயா? காசு பணம் தராத நிரந்தரமான சௌக்கியங்களை (சுகம்) அந்த இறைவன் தருகின்றானே அது போதாதா?
ஆமா சார், நீங்க சொல்ரதும் சரியாகத்தான் இருக்கு, நான் தயார் சார்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
கால சூழலுக்கேற்ப அருமையான விழிப்புணர்வு ஆக்கத்தை தந்திருக்கிறார் விழிப்புணர்வின் வித்தை மந்திரம் கற்ற சகோதரர் நிஜாம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூ..... ஊ.....மந்திரக்காளி இத்துடன் ஓடிவிடு. இல்லையேல் விழிப்புணர்வு கூட்டத்திடம் பிடித்துகொடுத்து விடுவேன்.
அருமையான விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள் நிஜாம் காக்கா அவர்கள்.
ReplyDeleteமுன்புப்போல் இப்போது இந்த மாதிரியான மந்திரம் பன்னுவது கிடையாது சில மக்கள்.முன்புதான் வீட்டுக்கு வீடு சண்டை வந்தால் சொல்லுவார்கள் இரி உன்ன கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார் முட்டையே ஓதி வைக்கிறேன் பார் என்றலாம் சண்டையில் சொல்வதுண்டு.ஆனால் இப்போது சிலரிடம் மாற்றகள் வந்துள்ளது.
அவருக்குப் பெயர் மந்திரவாதியல்ல . சாமியார் எனப்படும் தந்திரவாதி.நல்ல விழிப்புணர்வு பகிர்தல் .ஆனால் படிக்க வேண்டியவர்கள் படிக்கணுமே.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!
தகவலுக்கு மிக்க நன்றி !
Delete