.

Pages

Wednesday, December 19, 2012

[ 5 ] ஏன் சிரித்தார் கவிஞானி..? சிரிப்பது தொடர்கிறது...

காரிருள் கொண்டுவந்த மழை
ஊர் கோடியில் பெருவெள்ளம்
வீதியெங்கும் பாய்ந்த வெள்ளம்
வீட்டிற்குள்ளும் புகுந்ததுவே
அடுக்களையும் என்றும் பார்க்காது
படுக்கையறை என்றும் பார்க்காது
புகுந்ததுவே பெருவெள்ளம்
குடியிருப்போரை பதைபதைக்க
வைத்ததுவே பெருவெள்ளம்
மக்கள் படும் துயரம் கண்டு
அனைவரும் அடைந்தனரே பெரும் துயரம்
அவ்வழியே வந்த நம் கவிஞானி
மனம் கனத்தும் நகைத்தாரே ஏன்..?

இதோ கவிஞானி பதில்
பண்டைக்கால மக்கள் .
மேடு பள்ளம் பார்த்து
வீடுகளை கட்டிவைத்து .
ஊரென்றும்... வீதியென்றும்
குளமென்றும் ஏரியென்றும்
ஓடையென்றும் வாய்க்கால் என்றும்
வகுத்து வைத்த விதியை மீறி
ஆற்றுக்குள்ளும் ஏரிக்குள்ளும்
வீட்டுமனை போட்டு விட்டு
ஏரிகளை ஊர்களாய் மாற்றி விட்டு
ஊருக்குள் தண்ணீர் என்றால்
நகைக்காமல என்ன செய்வேன்
என்றாரே கவிஞானி
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

9 comments:

  1. வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்களைக் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது ஒவ்வொரு ஊரிலும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.

    கவிஞானி காரணத்தோடு சிரிப்பது தொடரட்டும் !

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மிகச் சரியான நகைப்பு விதைப்பது நாமே அறுவடை செய்வோம் அழிவை.

    ReplyDelete
  3. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி

    வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்களைக் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது ஒவ்வொரு ஊரிலும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.

    கவிஞானி காரணத்தோடு சிரிப்பது தொடரட்டும் !

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. மழைநாள் ஏற்படும் அவதிகள் கவிதைக்வாயினில் சொல்லுவது அருமை.வயல் வரப்புகள் விற்பனை செய்வது ஒவ்வொரு ஊரிலும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.

    தொடரட்டும்

    கவிஞானி காரணத்தோடு சிரிப்பது.

    அருமை அதிரை சித்திக் அவர்களே.

    ReplyDelete
  6. கவிஞானி சிரிப்பில் அர்த்தம் உள்ளது.

    இன்னும் பல அவலங்களை வெளிக்கொண்டு வந்து பலமாக சிரிக்கட்டும் கவிஞானி.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அன்பு தம்பி சேகனா M நிஜாம்
    சகோதரி சசிகலா ,
    சகோ .thamil newspapper..
    சகோ .கோ.மு.ஜமால் காக்கா
    தம்பி ஹபீப் ..,சகோ அதிரை மெய்சா
    ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும்
    நன்றி ..

    ReplyDelete

  8. ''..ஊரென்றும்... வீதியென்றும்


    குளமென்றும் ஏரியென்றும்


    ஓடையென்றும் வாய்க்கால் என்றும்


    வகுத்து வைத்த விதியை மீறி

    ஆற்றுக்குள்ளும் ஏரிக்குள்ளும்


    வீட்டுமனை போட்டு விட்டு..''
    மிக நல்ல எடுத்துக்காட்டு.
    விழிப்பணா:வுக் குறிப்பு.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. வேதா. இலங்காதிலகம்.அவர்களே
    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers