kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, January 23, 2013
[ 12 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...
அவன் சிரிப்பை மிகை படுத்தி
சிரித்தார் கவிஞானி
ஏன் சிரித்தீர் ? என பலர் கேட்க
பதில் பகிர்ந்தார் கவிஞானி
வகை வகையாய்
உணவு உண்டு வளர்ந்தவன்
சொல் கேளாமல்
மனம் போன போக்கில்
நடந்த மகன் கல்லூரி
காலங்களை கன பொழுதில்
களித்திட்டான்
கல்வியோடு காதலையும்
கற்று தேர்ந்தான்...
இதையறியா பெற்றோர்கள்
மணமுடிக்க முடிவெடுத்து
குணமுள்ள மங்கை தனை
வளமுள்ள இடத்தில்
ஊரறிந்து உறவறிந்து
குடும்ப பலமறிந்து
பெண் பார்த்து பேசி வைக்க
இவனோ
அழகு பதுமை ஒருத்தியிடம்
மனதை பறிகொடுத்து
மாலை மாற்றி பெற்றோர் முன்
வந்து நின்றான் !
காதலியின் ஆணைக்கேற்ப
பட்டணம் வந்து சேர்ந்தான்
அழகு குலையா தோற்றம் வேண்டி
அனுதினமும் அழகு கலை பயின்றதனால்
அடுக்களைக்கு செல்ல வில்லை
இவன் பசிக்கு சிற்றுண்டி சாலையே
கதியாயிற்று இப்பவே
இப்படியென்றால் மக்கா
பிள்ளை பெற்றால் எப்படியோ
என்றெண்ணியே சிரித்தேன் ஐயா
என பகிர்ந்தார் கவிஞானி..!
[ சிரிப்பது தொடரும் ]
Subscribe to:
Post Comments (Atom)
பதிவில் கவிஞானி குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு ! துன்பம் வரும் முன் காப்பது நலம் !
ReplyDeleteபதிவு வழக்கம் போல் அருமை !
தொடர வாழ்த்துகள்...
சொல்ல மறந்துட்டேன் !
ReplyDeleteஆமா பதிவிலே நாகர்கோயில் வாடை [ மக்கா ] ரொம்ப தூக்கலா ஈக்கீதே எப்படி !? :)
ஆம் நீங்கள் சொன்னது உண்மையான ஓன்று இப்போது உள்ள காலக்கட்டகளில் இது போன்று நடகின்றது. கவிஞானி ஏன் சிரித்தார் அருமையான பதிவு வாழ்த்துக்கள். அதிரை சித்திக் அவர்களுக்கு.
ReplyDelete
ReplyDelete11ல் பதில் தந்து புரிய வைத்தார் கவிஞானி..!
வாழ்த்துக்கள்...!
பெற்றோர்கள் விருப்பமில்லாது ஊரை விட்டே ஓடிப்போய் காதல் கல்யாணம் செய்தவர்களின் நிலை பெரும்பாலும் கடைசியில் இந்நிலைக்குத்தான் தள்ளப்படுகிறார்கள்.
கவிதையாக கூறாமல் சில நிகழ்வுகளை கூற
ReplyDeleteவிரும்புகிறேன்.சிற்றுண்டி சாலை வாசலில் தனது
பொழுதை துவங்கி .முடிக்கும் சில வாலிபர்களை
பற்றி குறிப்பிட விரும்புகிறேன் ..பெற்றோர்கள்
பார்க்கும் பெண்ணிடம் அந்த குறை இந்த குறை
என்று காலம் தாழ்த்தும் சிலரின் வாழ்வில்
திருமண நிகழ்வு என்பதே இல்லாமல் போகும் நிலை
பெற்றோர்கள் தளர்ந்து போக ..சரியான ஜோடி
அமையாமல் சிற்றுண்டி சாலையே கதி ...
மற்றும் ஒருவரோ தாய் தந்தையின் சொந்தங்கள்
விட்டு போக கூடாது என்ற ஒரே காரணத்திற்காக
செல்லமாக பிறந்து வளர்ந்த பெண் கணவனுக்கு
பாரமாகும் நிலை ..சொல் கேளா மனைவி தினமும்
சண்டை சச்சரவுகள்..இதன் காரணமாக சிற்றுண்டி
சாலைகளே கதி என்று கிடப்பவர்களும் உண்டு
நோயாளி மனைவி ..இது போன்ற காரணங்களால்
சிற்றுண்டி சாலைகளை நாடும் நிலை ...நல்லதும்
கெட்டதும் கலந்த சூழலே சிற்றுண்டி
சாலை நாடும் இளைஞரின் நிலை
கவிஞானியின் சிரிப்பும் சிந்தனையும்
ReplyDeleteபடிப்பவருக்குள் ஒரு கீறலை ஏற்படுத்தித்தான் போகிறது
தொடர வாழ்த்துக்கள்