இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை :
மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி
நடுத்தெருவின்
நடுத்தெருவில்
நற்றளிர் நடை
நடுங்கும் கையில் குடை
பிஞ்சுக் கையில்
மஞ்சள் பையில்
புத்தகம் யாவும்
மொத்தமாய் நனைய
குடையின் பிடிதளர
நடை வேகமாய்
உடை நனைந்த
மழைக்காலம்
மனத்தினில்
கனாக்காலம்
விடாமுயற்சியின் விடியல்
விடாமழையிலும் குடையில் !
தடையிலாப் பயணம்
நடையிலே கவனம் !
படிப்பில் தீவிரம்
துடிப்பில் தெரியும் !
பாடம் படிக்கும்
இச்சிறுமி
பாடம் கற்பிக்கும்
ஆசிரியையாய்
“மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்”
வாழ்த்துகிறேன் உன்னையும்
வளர்த்தெடுத்த பெற்றோரையும்
கற்பித்த ஆசிரியையும்
சோம்பல் என்னும்
சாம்பல் போக்கித்
திறமைத் தீயைத்
திறம்படத் தூண்டும்
வேகம் உன்றன் நடையில் !
இப்படித்தான்
இடியாய்ச் சத்தமும் வாழ்விலே
...இன்னலாய் வந்திடும் போதில்
துடியாய்த் தோல்வியில் துவண்டிடத்
....தோன்றிடும் வேளையில் நீயும்
பிடியாய்க் கொள்வது துணிவுடன்
....பிடித்தவுன் குடையுடன் கூடி
மடியா நோக்கிலே படிப்பினை
...மட்டுமே நினைத்தலைப் போலே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
கவியன்பன் அபுல் கலாம் அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம் ! வாழ்த்துகளுடன் அன்புச் சகோதரரை வரவேற்கின்றோம்.
ReplyDeleteஇறைவன் நாடினால் தொடருங்கள்...
அழகிய குரலில் குளிர்ச்சியான கவிதை !
ReplyDeleteநல்லதொரு கருத்துடன் தந்திருப்பது கவிக்குறளின் தனிச்சிறப்பு !
உங்களின் கவிதை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் !
தொடர வாழ்த்துகள்...
நலம்.நலமறிய ஆவல்.ஸலாமுடன் வாழ்த்துக்கள். கவியன்பரே...
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பின்
நீர் கொடுத்த கவி மழையில்
நானுமதில் நாணத்துடன்
நினைந்திட்டேன்.
பார்போற்றும் உன் கவியை
பலமுகங்கள் கண்டாலும்
காணாத என் விழிகள்
கரைந்தொடியதே
நிகழ் நீராய்...!
நீர் கிடைத்தால்
நிலம் மகிழும்
நீ தொடுத்த
உரிமை உறவில்
நான் மகிழ்ந்தேன்
நாளெல்லாம்...!
உலகப்புகழ் பெற்ற லண்டன் வானொலியில் கவியன்பர் அபுல் கலாம் ஐயாவின் கவிதையை கேட்டதில் மனம் மகிழ்கின்றது.நன்றி ஐயா
ReplyDeleteஅர்த்தம் செறிந்த கவிதையை படிக்கக் கேட்பது பெரிய மகிழ்ச்சி!
ReplyDelete“மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்"
மழையிலே பள்ளிக்குச் செல்லும் சிறுமியை நாமும் வாழ்த்துவோம்!
கவியன்பன் கலாம் காக்காவின் கவிதை
ReplyDeleteஉலக தமிழர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற
வாழ்த்துக்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅன்பின் கவியன்பன் கலாம் மச்சான் அவர்களின் கவிதையில் எல்லா நற் சுவைகளும் கலந்திருக்கும். படிப்பவர்கள் எந்தச் சுவையை நினைத்தாலும் அந்தச் சுவையை கொடுக்கும் வண்ணம் அவர்களின் கவிதை அமைந்திருக்கும்.
மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி.
இது கவிதையின் தலைப்பு.
பள்ளிக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட தூரத்தை ஒரு கவிதை வடிவில் உருவாக்கி இருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
உங்கள் நீண்ட நாள் வருகைக்கு நன்றி அபுல் கலாம் காக்கா அவர்களுக்கு உங்களின் இந்த கவிதை பதிவு நம் தமிழ் சொந்தகள் கேட்க படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு மனம் நிறைவு.
ReplyDeleteஇலண்டன் வரை எடுத்து சென்ற
ReplyDeleteகவியன்பன் கலாம் காக்காவிற்க்கு
கடல் நுறையளவு வாழ்த்துக்கள்
அன்பின் சகோதர/ சகோதரிகட்கு என் உளம்நிறைவான நன்றி!
ReplyDeleteசிறுவிடுப்பில் தாயகம் வந்த போதில் அன்பினுக்கினிய மச்சான் மனித உரிமைக்காவலர் ஜமால் முஹம்மத்,புதுமைக் கவிஞர் மெய்சா ஆகியோரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கள் ஆர்வமுடன் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்களின் இத்தளத்தில் என் கவிதையைப் பதிவு செய்ய அனுப்பினேன். அவர்கள் வேண்டிக் கொண்ட அதே நேரத்தில் தான், இக்கவிதையும் இலண்டன் தமிழ் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த நேரடி இணைப்பை - இலண்டன் தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும், என் தமிழைத் தங்கக் குரலால் தரணி எங்கும் ஒலிக்கச் செய்து வரும் அன்பினுக்கினியத் தங்கை ஷைஃபா மாலிக் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள்; உடன் இத்தளத்தில் பதிய அனுப்பினேன்.
சேக்கனா நிஜாம் அவர்களின் நட்பு வட்டம் பெரிதென உணர்கிறேன்; அதனாற்றான் என் முதல் பதிவுக்கு இத்தனை அன்புள்ளங்களின் ஆதரவைக் காண்கிறேன்.
பதிவு செய்த விழிப்புணர்வு வித்தகர்க்குப் பாராட்டுகள். மீண்டும் பணிச்சுமைகள் கூடியதால் ஆக்கங்கள் தொடர்ந்து அனுப்புவதில் தாமதம் ஆனாலும், உங்களின் நல்லெண்ணம் மற்றும் தமிழார்வம் கண்டு விரைவில் தொடர்ந்து அனுப்புவேன்.
This comment has been removed by the author.
Delete