.

Pages

Tuesday, January 22, 2013

நான் பெத்த மொவனே !

நமது வாழ்வில் முக்கிய அங்கம் தாய். தாயின் சிறப்பு விலைமதிப்பற்றது தாய் அன்பிற்கு ஏதும் ஈடாகாது.

மாதா :                                         
தாய் தங்கத் தாம்புலத்தில் அமர வைத்து தலை மேல்வைத்து கொண்டாடப்பட வேண்டியவள் தன் காலுக்கு கீழே சுவர்க்கத்தை வைத்திருப்பவள்; தாயவள் தூயவள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை என்பர் வணக்கஸ்தளத்தை அலங்கரிக்கு முன் தாயை பராமரிப்பதே மேல் பணிக்குக்குச் செல்லும் முன் தாய்க்கு பணிவிடை செய்துவிட்டுச் செல்வது சிறப்பு.

தாய் தாரமாகிறாள் தமக்கையாகிறாள் பாட்டியாகிறாள் உறவுகளாள் பலமுகம் பெருகிறாள் அவள் எப்படிப்பட்டவளானாலும் தாய் உள்ளத்தோடு இருத்தலே பெண்னின் சிறப்பு.

கோபம்கொண்ட மனைவி சமைக்காமல் படுத்துவிடுகிறாள்

கோபம்கொண்ட தாய் சமைத்துவிட்டு பசியோடு படுத்துவிடுகிறாள்

ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் இருக்கையில் மேற்ச்சொன்ன விஷயம் உருத்தலாம் கோபம் கொண்ட மனைவி தன் பிள்ளைக்கு மட்டும் உணவு ஊட்டிவிட்டு தானும் தன் கோபத்திற்க்கு காரணமான  கனவரையும் பசியோடு படுத்து விட மேல குறிப்பிட்ட விஷயம் சரியாகி விட்டதல்லவா!

தாயை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு பெண் பிள்ளைகளை விட ஆண் மகனுக்கே பொறுப்பு உண்டு பெண் பிள்ளைகள் தன்னுடைய கணவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவள் ஆணுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை நாம் எத்தனையோ சம்பவங்களை கேட்டிருக்கிறோம் மகனுக்குத்தான் பொறுப்பு அதிகம் ஆகையால் நாம் நம் வயது முதிர்ந்த தாயை நம் பிள்ளைகளை பராமரிப்பதுபோல் கடைவீதிக்கு செல்லும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து வாங்கும் தீன் பண்டங்களை தம் முதிய தாய்க்கும் வாங்கி கொடுத்து அருகில் அமர்ந்து சாப்பிடக்கொடுத்து பின் சாப்பிட்ட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதையும் நாமே கவனிக்க வேண்டும்.

தாயை வெறுக்கின்ற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் அது அவர்களின் துரதிஸ்டம் பிள்ளைகளின் செயல்பாடுகளில் குறை கண்ட தாய் பிள்ளைகளில் வேறுபாடான பரிவை காட்டும் தாயும் இருக்கத்தான் செய்கிறார்கள் இது காலத்தின் கோலம் கட்டளையிட்டவனின் கட்டுப்பாட்டை மீருதல் எது எப்படியோ தாயிடம் நாம் காட்டும் பரிவு, பற்று, பாசம் எந்தவகையிலும் குறைவு இருக்கக்கூடாது.

பிதா :
ஆதி மனிதர் ஆதம் [ நபி ] மின் விளா எலும்பில் இருந்துதான் ஹவா [ அலை ] படைக்கப்பட்டார் [  ஏவாள் ] இது இஸ்லாத்தின் கோட்பாடு பரலோகத்தில் [ அல்லாஹ் ]இருக்கும் பிதாவே என்கிறது கிரிஸ்துவம் சிவனில் பாதி பார்வதி என்கிறது இந்து மதம் இப்படி அனைத்து மதக்கோட்பாடுகளும் ஆணிற்க்கு அந்தஸ்தை கொடுத்திருக்கிறது.

தாய் இடுப்பில் சுமக்கும் பிள்ளையை தந்தை தோளில் சுமக்குறான் தான் காணாததையும் பிள்ளைக்கு காணச்செய்கிறான் உரிமையை விட்டுக்கொடுக்கிறான் எனக்கே எனக்கா என்று ஆசையாய் காதலித்த மனைவியின் அன்பை பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து பகிர்ந்து கொள்கிறான்.

சொத்தின் உரிமையை தம் பிள்ளைகளுக்காக தாரை வார்க்கிறான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் செல்வ செழிப்புள்ள தந்தைக்கும் இந்த பழமொழி பொருந்தும் தாய் சோரூட்டினால் தந்தை அறிவூட்டுகிறான்.

தாயை மதிப்போம் அரவணைத்து வாழ்வோம் !

மு.செ.மு.சபீர் அஹமது

11 comments:

 1. தாயின் சிறப்பை பற்றி அழகாக கூறியுள்ளீர்கள்.

  தாயின் சிறப்பை எவ்வளவு வேண்டும் என்றாலும் சொல்லிக்கொண்டே போகலாம்.

  பதிவு சிந்திக்க வைத்துவிட்டது !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. உலகின் 100 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 3.16 லட்சம் என்கிறது ஆய்வு அறிக்கை !

  குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தும், தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தும் அவர்களின் எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டி அதற்கு தாய் தந்தையர் பெயரைச் சூட்டி மகிழும் பிள்ளைகள் அவர்களை கவனிக்கத் தவறி விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை !

  வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

  ReplyDelete
 3. 1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

  2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

  3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

  4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....

  5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

  6. தேவையான நேரத்தில் உன்ன உணவுக் கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களாகட்டும்...

  7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

  8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

  9. பிள்ளைகள் மூலம் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு அன்றாட பொழுதுகளை துயரத்துடன் கழிப்போரும்...

  10. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

  என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

  ReplyDelete
 4. வயதான தாத்தா - பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

  மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது என்பதையும் இளம் வயது அறிவுக்கு புலப்படாத பல விசயங்களை மூத்தவர்களின் அனுபவத்தால் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  அரசின் சார்பாக வருமான வரிவிலக்கு, ரயில், விமான பயணங்களில் கட்டண சலுகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி கெளரவிக்கும் போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்/தந்தையருக்கு நமது கடமைகளை செலுத்த மறந்துவிடுகின்றோம்.

  1. குறிப்பிட்ட நேரத்தில் சத்தான உணவு
  2. போதுமான உடற்பயிற்சி, ஓய்வு
  3. நண்பர்கள், குடும்பத்தினருடன் பழகுதல்
  4. குழந்தைகளுடன் விளையாடுதல்
  5. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை
  6. சமூக சேவைகளில் ஈடுபடுதல்

  போன்றவற்றில் அவர்களை கவனம் செலுத்தவைத்து, அவர்கள் படும் கஷ்ட/நஷ்டங்களை நன்கு புரிந்து அதற்கேற்றார் போல் அவர்கள் மீது பரிவு/பாசத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம்.

  இன்றைய இளைஞன்-இளைஞி ! நாளைய தாத்தா - பாட்டி !!

  வாழ்க தாத்தா - பாட்டி ! வளர்க அவர்களின் ஆரோக்கியம் !!

  சேக்கனா M. நிஜாம்

  ReplyDelete
 5. உங்களின் இப்பதிவு மூலம் சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளம் 1000 வது கருத்தை பெற்றுள்ளது.

  உங்களுக்கும் ஏனைய பங்களிப்பாளர்களுக்கும், பின்னூட்டம் மிட்ட தளத்தின் வளர்ச்சியில் பங்குபெற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை வாழ்த்துகளுடன் கூறிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

  ReplyDelete
 6. தாயின் புகழ் பாடும் தாங்களின் கட்டுரை அருமை.

  வாழ்த்துக்கள்.

  தாய்க்கு நாம் எத்தனை எத்தனை அள்ளிக்கொடுத்தாலும் தாயின் அன்புக்கு ஈடாகாது.

  தாயிடம் அன்புசெலுத்துவோம்,ஆதரிப்போம். அரவணைப்போம்...!

  இன்னும் இது போன்ற விழிப்புணர்வு ஆக்கம் நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 7. தாய் பற்றிய ஆக்கம் எவ்வளவோ வந்தாலும் .
  எளிமையான நடையில் மனதில் பதிய வைத்த
  அன்பு நண்பர் சபீர் எழுதுங்கள் ...ஒவ்வொரு
  ஆக்கமும் .காலத்தால் அழியா வண்ணம்
  புத்தகமாய் பதிய பட வேண்டும்

  ReplyDelete
 8. அம்மா என்றழைக்காத உயிரில்லையே

  என் அம்மாவை பற்றிய நினைவை ஏற்படுத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 9. பதிவுக்கு நன்றி.
  அதிரை.

  ஆயிரம் குற்றம் கண்டாலும் அன்பு மாறாத மனம் தாய் மனம். இவ்வுளகில் தாய்க்கு ஈடு இணை ஏதுமில்லை.

  இதுக்குமேல் எழுத என் கண்களீல் நீர் ததும்புகின்றது, காரணம் என்னைப் பெற்றெடுத்து மழையிலிலும் வெயிலிலும் பாதுகாத்து வளர்த்த என் தாய்க்கு நான் செய்தது என்ன? அவ்வளவும் ஒரு தூசிக்கு சமம்.


  தாயின் ஏக்கத்துடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 10. ஆம் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூர் உண்மையான விசயம் சிலர்க்கு தாயின் அருமை புரிவதில்லை தாய் உயிர்ரோடு இருக்கும் பொழுது தாயே கவனிப்பது இல்லை அவர்கள் இறந்த பின் என் தாயே அப்படி பார்த்துக்கொண்டேன் இப்படி பார்த்துக்கொண்டேன் என்று பலர் இடம் சொல்லுவது. எல்லாவற்றையும் அல்லாஹு அறிவான்.அருமையான விழிப்புணர்வு ஆக்கம் இன்னும் இது போன்ற ஆக்ககள் எதிர்பார்க்கபடுகிறது.

  ReplyDelete
 11. மாதா !
  தாய் தாரமாகிறாள்!
  பிதா !
  ?????!!!!!!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers