.

Pages

Tuesday, January 22, 2013

அதிரைப் பதிவர்களின் தேநீர் சந்திப்பு !


விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ள 'மனித உரிமைக்காவலர்' K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் நேற்று இரவு என்னைத் தொடர்பு கொண்டு, அதிரை மெய்சா அவர்கள் தனது விடுமுறையைக் கழித்து விட்டு இன்று துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் இன்றே உங்கள் இருவரோடு அவசர விடுமுறையில் ஊர் வந்துள்ள 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களையும் காண ஆவலாக இருக்கிறேன். அதற்காக எனது வீட்டில் ஒரு தேநீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா ? என்றார். இரவு நேரமாக இருந்தாலும் அவரின் ஆர்வத்தை பாராட்டிவிட்டு முயற்சிக்கிறேன் என்றேன்.

K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று மற்ற இருவரையும் உடன் தொடர்பு கொள்வதில் மும்முரம் ஆனேன். பயண ஏற்பாட்டில் பிஸியாக இருக்கும் புதுமைக்கவிதைகளையும், விழிப்புணர்வு ஆக்கங்களை பதியும் அதிரை மெய்சா அவர்களும், தனது கவியால் உலகளவில் எண்ணற்ற வாசகர்களைப் பெற்றுள்ள யாப்பில் மூத்த கவி 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களை சந்திக்க தனது ஆவலை ஏற்கனவே என்னிடம்  தெரிவித்து விட்டதால் இவர்களை உடனடியாக ஒருங்கினைப்பதில் எனக்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.

அடுத்து சில நிமிடங்களில் பெரிய ஜும்ஆ பள்ளியில் ஒன்று கூடுகின்றோம். உடனே அவர்கள் இருவரையும் என்னோடு அழைத்துக்கொண்டு K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் இல்லத்திற்கு செல்கிறேன்.

K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுடனான எனது சந்திப்பு முதல் தடவை என்றாலும், K.M.A. ஜமால் முஹம்மது அவர்களும் அவரது மகன் தம்பி முஹம்மது நிஜாமுதீனும் அன்புடன் எங்களை வரவேற்று அழைத்து சென்றது எங்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
பரஸ்பரம் நலம் விசாரிப்புகளோடு எங்களின் பேச்சுகள் சமூக நலன், தமிழ் மொழியின் சிறப்பு, உச்சரிப்பு, குடும்ப உறவுகள், விபத்துகள் ஏற்படக் காரணம், மனித உரிமைகள் போன்றவற்றை சார்ந்து இருந்தது.

எனது ‘விழிப்புணர்வு பக்கங்கள்’ மற்றும் ‘மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்’ இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய ‘மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ?‘ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இச்சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எங்களுக்கு மகிழ்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் பயனுள்ளவையாகவும் அமைந்தது. இறுதியில் எங்களின் சார்பாக K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

சேக்கனா M. நிஜாம்

18 comments:

 1. பரஸ்பரம் நலம் விசாரிப்புகளோடு எங்களின் பேச்சுகள் சமூக நலன், தமிழ் மொழியின் சிறப்பு, உச்சரிப்பு, குடும்ப உறவுகள், விபத்துகள் ஏற்படக் காரணம், மனித உரிமைகள் போன்றவற்றை சார்ந்து இருந்தது.
  நண்பர்களின் கலந்துரையாடலிலும் நாட்டுப்பற்று தெரிகிறது . வாழ்த்துக்கள் தொடரட்டும் இது போன்ற சந்திப்புகள்.

  ReplyDelete
 2. ஜமால் காக்க களர் வேட்டியோடு இருக்கும் பொழுதே தெறிகிரது காக்கா வீட்டில் தான் சந்திப்பு என்று நாமும் களந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று வருத்தமாக உள்ளது(வட போச்சே)

  ReplyDelete
 3. // ஜமால் காக்க களர் வேட்டியோடு இருக்கும் பொழுதே தெறிகிரது காக்கா வீட்டில் தான் சந்திப்பு என்று நாமும் களந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று வருத்தமாக உள்ளது(வட போச்சே)//

  நீங்கள் ஊரில் இருந்து இருந்தால் நிச்சயம் உங்களின் பங்களிப்பும் இருந்துருக்கும். இது அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பாகும். விரைவில் மற்றுமொரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வோம். இதில் அனைவரின் பங்களிப்போடு பிறருக்கு பயன்தரும் வகையில் நல்லதொரு சப்ஜட்டை கையில் எடுத்துக்கொண்டு கலந்துரையாடுவோம்.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி
  அதிரை

  நான் எதிர்பார்த்திராத சந்தி்ப்பும் கலந்துரையாடலும் பதிவும் அதனைத்தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கருத்துக்களும்.

  என் முதல் நன்றியை இறைவனுக்கும் அடுத்த நன்றியை அன்பின் தம்பி சேக்கனா நிஜாம் அவர்களுக்கும் தெரிவுத்துக்கொள்கிறேன்.

  அநேக சகோதரா்களையும் சகோதரிகளையும் இணைத்து இனிவரும் நாட்களில் ஒருசந்திப்கை ஏற்படுத்தி ஒரு கலக்கல் பதிவை உண்டாக்கலாம் என்று நினைத்துள்ளே்ன.

  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 5. இதுக்குத்தான் அதிரடி சந்திப்பு என்பதா
  இப்படியும் ஒரு சந்திப்பு நிகழுமா? இணையம் எல்லாத்தையும் எல்லோரையும் சேர்த்துவைக்குது ...

  ReplyDelete
 6. சும்மா பேச்சுவார்த்தை என்பது வேறு, ஆனால் இப்படி சந்திச்சு ஆக்கப்பூர்வமா என்னிக்கு பேசிருக்கோம். இங்க பகிர்ந்த கருத்துக்களை ஒரு பதிவா எதிர்ப்பார்க்குறேன்

  ReplyDelete
 7. கவிஅன்பர் அபுல் கலாம் ஐயாவை நீண்ட காலத்திற்கு பிறகு பதிவில் பார்ப்பது சந்தோஷம் ஐயா உங்களின் கவிதை உணர்வு பூர்வமாக இருக்கும்.

  வாழ்க உங்கள் எழுத்துப்பணி வளர்க தமிழ்

  ReplyDelete
 8. தம்பி சேகன நிஜாம்
  நேரில் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
  இறைவன் நாடினால் நடக்கும்

  ReplyDelete
 9. இப்படிப்பட்ட பதிவர் சந்திப்புகள் மகிழ்ச்சியை தருகின்றது. தொடருங்கள் !

  ReplyDelete
 10. எங்களின் சந்திப்பை இணையத்தில் கண்ட அனைவர்களுக்கும் கருத்தாக பதிந்து ஊக்கப்படுத்திய சகோதரர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்...!

  அன்று நான் என் விடுப்பை முடித்து கொண்டு அதிகாலை விமானப்பயணம் மேற்கொள்ளும் நாள். நடுனிசிப்பொழுதில் நான் ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். இச்சூழலில் அன்புச்சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்கள் எங்களை சந்திக்க வைத்து பரஸ்பரம் நட்பை மென்மேலும் வளர்த்துக்கொள்ள பாடுபட்ட விதம் மெய்யாலுமே என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது

  நன்றி...நன்றி...நன்றி...வாழ்த்துக்கள் பல கோடி

  எங்கள் அனைவரையும் உலகறிய வைத்து இந்த சந்திப்பின் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த விழிப்புணர்வு வித்தகர் அன்பின் சகோதரர் சேக்கனா அவர்கள் எங்கள் உள்மனதில் ஆழப்பதிந்து விட்டார்கள்.

  காரணம் எங்கள் சந்திப்பையும் ஒரு பதிவாய் தந்து தன் பெருந்தன்மையை நிரூபித்து விட்டார்கள்.

  நன்றி மறப்பது நன்றன்று...............

  ReplyDelete
 11. அன்பின் சகோதர/சகோதரிகட்கு என் உளம்நிறைவான நன்றியை உரித்தாக்குகிறேன். சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அதனைப் பதிவாகவும் இட்ட சகோ.நிஜாம் அவர்கட்கும் இச்சந்திப்பில் பயணக் களைப்பு மறந்து எங்களுடன் உரையாடிய என் மச்சான் ஜமால் மற்றும் பயணத்தின் நெருக்கத்திலும் நேரம் ஒதுக்கி எங்களை மகிழ்வித்த கவிஞர் மெய்சா அவர்கட்கும் என் உளம்நிறைவான நன்றியை உரித்தாக்குகிறேன். நண்பர் “தமிழன்”அவர்கள் என்பாலும் என் கவிதையின் பாலும் கொண்டுள்ள மதிப்பை அவர்களின் பின்னூட்டம் வழியே அறிந்து கொண்டேன்;மிக்க நன்றி. உடல்நிலை மற்றும் சில காரணங்களால் என் ஆக்கங்கள் பதிவதில் இடைவெளி ஏற்பட்டு விட்டாலும், மறவாமல் என் கவிதையை எதிர்பார்க்கும் தமிழ்கூறும் நல்லுள்ளங்களில் நீங்களும் ஒருவர் என்பதால், இறையருளால் என் குறுவிடுப்பு விட்டு அபுதபிக்குச் சென்றதும் தொடர்ந்து ஆக்கங்களைப் பதிவேன்

  ReplyDelete
 12. ///எங்களின் சந்திப்பை இணையத்தில் கண்ட அனைவர்களுக்கும் கருத்தாக பதிந்து ஊக்கப்படுத்திய சகோதரர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்...!///


  மன்னிக்க வேண்டுகிறேன்.எனது பின்னூட்டத்தில் சகோதரர்,/ சகோதரி என்பதாக திருத்தி வாசிக்கவும். நன்றி.

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரைப் பதிவர்களின் அதிரை சந்திப்பு ஒரு பயனுல்ல சந்திப்பாக அமைந்திருக்குமென்று கருதுகிறேன் உங்கள் அனைவரையும் உலகறி செய்த தம்பி நிஜாம் அவர்களுக்கு நன்றி ஜமால் காக்கா ஊர் சென்றது தெரியவில்லை நீங்கள் சொன்ன தேதியும் எனக்கு நினைவு இல்லை. வாழ்க உங்கள் எழுத்துப்பணி வளர்க தமிழ்

  ReplyDelete
 14. பயனுள்ள இதுபோன்ற சந்திப்புக்கள்
  அடிக்கடி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. சந்திப்பு முடிந்த பிறகு சகோ. நிஜாமையும் சகோ கவியன்பன் கக்காவையும் நடுத்தெரு மூச்சந்திப்பில் பார்க்க நேர்ந்தது சிறு வருத்தம் என்னை கண்ட இருவரும் ஆட விட்டுட்டோமே னு சொன்னார்கள் அதுக்கென்ன அடுத்த சந்திப்பில் கலந்துகலாமே என்று முனங்கியபடி நடையை கட்டினோம்.


  பதிவர் சந்தி்ப்பும் கலந்துரையாடலும் அரங்கேறியது மகிழ்ச்சியளிக்கிறது... அல்ஹம்துலில்லாஹ்

  ReplyDelete
 16. அருமையான சந்திப்பு எனக்கும் ஆசையாகத்தான் இருக்குது உங்களின் சந்திப்பில் நானும் கழந்துக்கொள்ளனும் என்று என்னசெய்வது ஒரு ஆளு ஊரில் இருந்த ஒரு ஆளு ஊரில் இருப்பது இல்லை உங்களின் சந்திப்பு எங்களின் ஆதரவு கவியன்பன்' அபுல் கலாம் அவர்கள், 'மனித உரிமைக்காவலர்' K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள், 'புதுமைக் கவி' அதிரை மெய்சா அவர்கள், அதிரை சமுக சேவகர் சேக்கனா M. நிஜாம்,அவர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த சலாத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 17. கவியன்பன்' அபுல் கலாம் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள் .அவரது உடல் நிலையை விசாரித்ததாகவும் தெரிவியுங்கள். அதிகமான பதிவர்கள் அரபு நாட்டில் இருந்துக் கொண்டு தங்களது சேவையை செய்கிறார்கள். ஒரே ஊரைச் சார்ந்த இஸ்லாமிய பதிவர்கள் அதிரையில்தான் அதிகம். .அது பற்றி எழுதுங்கள். அல்ஹம்துலில்லாஹ்

  ReplyDelete
 18. ஊடக வானில் என் கவிதைகளை உலவ விட்டு ஊக்கம் அளித்து வரும் அண்ணன் முஹம்மத் அலி ஜின்னா அவர்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்” என்னும் பிரார்த்தனையுடன் நன்றி

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers