.

Pages

Sunday, January 27, 2013

சினிமா ஒரு கலாச்சார சீர்கேடா !?

சினிமா ஒரு கலாச்சார சீர்கேடு, பொய்யின் பெட்டகம், கால விரயம்.உண்மை கவிஞனும், பாடகனும், தாளம் போடுபவனும் திரைக்கு பின்னாள் தள்ளப்பட்டு பொய் பிம்பம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓர் சாதனம் தான் சினிமா திறை[துறை]
  
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு எத்தனையோ இளம் பொண்கள் வீட்டை விட்டு ஓடிப்போயும், வாழ்க்கையை சீரளித்தும்  வாடியவர்கள் பல பேர்களுண்டு 10 இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒரே பொய்யை தம் படத்தில் காட்டும் பொழுது பொய்கள் உண்மையாக்கப்படுகின்றது. 

பழையகால சினிமாவில் சாம்பிரானி புகை போடுபவரும் நம்மல்கி நிம்மல்கி என்று தமிழை கொலை செய்பவரை தான் முஸ்லீம் என்று காட்டினார்கள்.

இன்றோ நாட்டை காட்டிக்கொடுப்பவனும் குண்டு போட்டு சாமானியனை கொல்பவனும் மனித வெடிகுண்டாய் செயல்படுபவனும் தான் சினிமாக் காரர்களுக்கு இஸ்லாமியர்கள் ! தங்கள் பணப்பெட்டியை நிறப்ப ஏன் மற்ற சமுதாயத்தை கொச்சை படுத்துகின்றீர் ?

பொய்யர்களே 5 அடி உயரத்தில் குதிப்பதற்க்கு டூப் [ மாற்று நபர் ] வைத்துக்கொள்ளும் பயந்தான் கொள்ளிகளே ஏன் இந்த வீண் பதட்டம்? ஏற்படுத்துகின்றீர்கள் ?

அனைத்து சமய, சமுதாய மக்களே அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் எந்த சினிமா பெண்களை போகப்பொருளாக காட்டுகிறதோ, காமக்களியாட்டம் போடுகிறதோ, வாழ்க்கைக்கு ஒத்துவராத கட்டுக் கதைகளும் காட்டப்படுகிறதோ அவைகளை எதிர்த்து விஸ்பரூபம் எடுப்போம் நாமும்.

பொய் பிம்பங்களுக்கு சாட்டை அடி கொடுப்போம் !

மு.செ.மு.சபீர் அஹமது


8 comments:

  1. // சினிமா ஒரு கலாச்சார சீர்கேடா !? //

    ஆம் நிச்சயமாக கலாசார சீரழிவே !

    நான் சினிமா பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்

    ReplyDelete
  2. நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம் பதிந்துள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    சினிமாவால் சீர்கேடே அதிகம் இன்று நம் நாட்டில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்க சினிமாவும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறது. சினிமாவை பார்த்துத்தான் அதனை பின்பற்றி நிறைய வன்செயல்கள் நடக்கின்றன.

    முன்பு ஒரு காலத்தில் நமது சிறுபிள்ளை பருவத்தில் நாம் சினிமாவிற்கு செல்வதாயின் வீட்டுக்கு தெரியாமலும்,பொய்சொல்லி விட்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம்.

    அப்படி நல்ல விஷயம் என்றால் ஏன் பயந்திருக்க வேண்டும்...? வீட்டார்கள் ஏன் தடுக்க வேண்டும்...?.

    ஆக சினிமா பார்ப்பதும் ஒரு கேட்ட செயலாக கருதப்பட்டதால் தானே...?!?!

    அனைவர்களும் சற்று சிந்திப்போமாக...!

    ReplyDelete
  3. சினிமா பற்றி சரியான பார்வை ..எங்கோ நடக்கும்பயங்கர வாதத்தை
    தமிழகத்தில் முடிச்சி போடும் தந்திரம் ...தமிழக மக்களிடம்
    பலிக்காது

    ReplyDelete
  4. loosada neenga ellam

    ReplyDelete
  5. பொய் பிம்பத்தின் ஆதரவு பிம்பமும் ANONYMOUS ஆக இருக்கிண்றதே கருத்தை சொல்வதர்க்கும் டூப்பா ஹாஹாஹா

    ReplyDelete
  6. தலைவா நெத்தியடி கட்டுரை, அடிமைகளுக்கு நல்ல ஒரு பாடம்

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    சினிமா.
    ஆம் சினிமாதான் சார். ஏன் சார் இப்படி கேட்கிறீங்க? இல்லே இப்ப சினிமா மட்டும் இல்லே எல்லாமே சரியில்லாமே இருக்கே அதான் கேட்டேன்.

    ஒரு காலத்தில் அதாவது 35 வருடங்களுக்கு முன்பு நல்ல படிப்பினையைக் கொடுத்த எத்தனையோ அம்சங்களில் சினிமாவும் ஒன்று. 35 வருடங்களுக்கு முன்பு சூரியனும் ஒளியைத் தந்தது சந்திரனும் ஒளியைத் தந்தது கடல்களும் அலைகளைத் தந்தது பறவைகளும் இனிய ஓசைகளைத் தந்தது இன்றும் அவைகள் யாவும் அப்படியே தந்துகொண்டு இருக்கின்றன.

    ஆனால், காலத்தின் சுழட்சி நவீனங்கள் இன்னும் பல, இதனால் இவ்வுலகமே தடம் மாறிக் கிடக்கின்றது. இன்றை காலக் கட்டத்தில் சினிமாவை பார்ப்பதென்பது அது ஒரு சீர்கேடானது என்று சொல்லத் தோனுது, காரணம் சொல்லத் தேவையில்லை.

    சினிமாவை ஒழிக்க முடியாது, மதுவையும் ஒழிக்க முடியாது, ஆனால் அதை நாடுவோரை வேண்டுமானால் திருத்தி நல்ல வழியில் கொண்டு வரமுடியும்.

    இவைகளை ஒழிக்க போராடங்களை நிறுத்திவிட்டு, சினிமா மது நுகர்வோர்களை சந்தித்து அவர்களை நல்ல வழியில் திருத்த முயறிசிக்கலாம், இது சம்பந்தபட்ட நுகர்வோர்கள் குறைந்து காணப்படுவார்கள், அப்படி குறையும்போது மற்றது தானாகவே குறைந்துவிடும்.

    சார் இப்படி செய்தால் ஓரளவு குறையும்தானே? நிச்சயமாக குறையும், அதே சமயம் கடினமாக உழைக்க வேண்டும். உண்னமயை சொன்னீங்க சார், எதிலும் முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே நாம் முழு வெற்றியை காணமுடியும்.

    இன்று முதல் நாம் எல்லோரும் ஒரு சபதம் எடுப்போம் அதாவது எல்லா விஷயத்திலும் நாம் சரியாக இருக்கின்றோமா?

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  8. சினிமா ஒரு சீர்கேடே இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை அருமையான பதிவு இப்போது உள்ள காலக்கட்டகளில் பதிய வேண்டிய ஒரு ஆக்கம் சேக்கனா M. நிஜாம் காக்கா சினிமா பார்ப்பதையே நிறுத்திவிட்டார்கள் அதுபோல் நாமளும் இதை பின் பற்றுவோம் இன்ஷா அல்லாஹு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers