kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, February 24, 2013
[ 4 ] ஏன் பிறந்தாய்…?
நயம்பட உழைத்த
செந்நீரை [ இரத்தத்தை ]
வெந்நீராக்கி [ வியர்வையாய் ]
உழைத்த உழைப்பாளிக்கு
ஊதியம் கிட்ட
ஏங்கும் தருவாயில்
என் பிறப்பு
அவனுக்கு உவப்பு
வருட கணக்கில்
வளைகுடாவில்
வாழ்வை கழிக்கும்
எம்மவர்கள் விடுப்பு
ஏன் பிறப்பின் முதல் நாள்
வாழ்விற்கு வளம் சேர்க்கும் நன்னாள்
சிறு சேமிப்பின்
முதிர் தொகையும்
கிடைக்கும் நாள் என் பிறப்பே…!
உழைப்பாளிக்கு என் பிறப்பு
வசந்தத்தின் பிறப்பு
வாழ்வில் வளமில்லா சிலர்
விட்டியில் வீழ்வதால்
அவர்களுக்கு ஒவ்வொரு
விடியலும் கசப்பு தினமே
வரவுக்கேற்ற செலவு செய்தால்
ஒவ்வொரு விடியலும் வசந்தமே
ஏழ்மைக்கு ஏற்ற எளிமையான வாழ்வு
என்றும் நலமே
வருமானம் இல்லா வீட்டில்
வசதிக்கு ஆசை...! அது
சோம்பல் குடியிருக்கும் கூடாரம்
பிள்ளைகள் படிப்பிற்கு
நர்சரி என்பதெல்லாம்
பகட்டு சொல் மட்டுமே
பகட்டிற்கும் படிப்பிற்கும்
ஒரு நூலிழை இடைவெளியே
அரசு பள்ளி
படிப்பின் அசுர வளர்ச்சி
ஏழ்மைக்கு
எளிமையே தோழன்
வாழ வழியுண்டு
வருடங்கள் கடந்தாலும்
வலியில்லாமல் வாழலாம்
உழைத்தால் உயரலாம்
வல்லவன் வகுத்த காலம்
வதை செய்யாது ஒருபோதும்
நல்ல நேரம் கெட்ட நேரம்
என்பதெல்லாம் மனிதன் கூறும்
சாக்கு போக்கு நேரத்தினை
செலவிடவும் நேர்த்தியாக
கற்று கொண்டால்
நலம் பெயக்கும் எந்நாளும்
எந்நாளும் நன்னாளாய்
அமைந்திடவே வாழ்த்துகிறேன்
சோம்பலுக்கு துணை போகும்
கேபிலுமே தேவையில்லை
தவணை முறை பொருட்கள்
தாறு மாறாய் வாங்க வேண்டாம்
துயில் மறந்து
உழைத்தெழுவாய்
ஊதியங்கள் வந்து சேரும்
வெளிநாடு என்றில்லாமல்
உள்ளூரில் உயர்ந்திடுவாய்
பிறர் பிறப்பு ஒருபோதும்
உனக்கு தொல்லை தராது
என கூறி காலமது கடந்ததுவே
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
சமூக அவலங்கள் விறுவிறுப்பாய் நகர்கின்றன...
ReplyDelete“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பழமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.
இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.
கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !
நலதொரு கவிதை !
தொடர வாழ்த்துகள்...
பதிவுக்கு நன்றி
ReplyDeleteவருமானம் இல்லா வீட்டில் வசதிக்கு ஆசை. என்ன ஒரு அழகான வாக்கியம், நிச்சயமாக கடின உழைப்புக்கு நிகர் ஏது?
தொடர்ந்து வர பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ஏன் பிறந்தாய்...?
ReplyDeleteபிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்துள்ளார் நமது சகோதரர் சித்திக்.
தொடரட்டும் பிறப்பின் பயணம்.
சிறு சேமிப்பின்
ReplyDeleteமுதிர் தொகையும்
கிடைக்கும் நாள் என் பிறப்பே
எனக்கு பிடித்த வரிகள்
சேமிப்போம் சிறுதுளி பெருவெள்ளம்
நைஸ்..
ReplyDeleteஉழைப்பாளியின் வியர்வை நிலத்தில் சிந்தும் முன்பே ஊதியம் வழங்கிடல் நன்று
ReplyDeleteதம்பி நிஜாம்,ஜமால் காக்கா சகோஅதிரை மெய்சா
ReplyDeleteநண்பன் சபீர் .தம்பி மாலிக் .சகோ தமிழன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..
வியர்வை காயுமுன் ஊதியம் கொடு என்ற நபி மொழியை நினைவூட்டிய சகோ தமிழனுக்கு நன்றி
good word and very nice...
ReplyDelete