.

Pages

Tuesday, February 26, 2013

[ 3 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !



கடுதாசி என்னும் காதல் பேசி…
நடுநிசி நேரத்துல
நானுந்தான் உறங்கல
கடுதாசி வரும்வரை
கதவையும் திறக்கல

என்னெஞ்சைப் புரிஞ்சவரே
எழுதுங்கக் கடுதாசி
மின்னஞ்சல் வேணாங்க
மின்னலாய் மறைஞ்சுடுமே

வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவைத் திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு

மண்ணுக்குள் உழுதாக்கி
மறைச்சு வச்ச விழுதாக்கி
எண்ணத்தை எருவாக்கி
என்னையே கருவாக்கி

கடுதாசிப் பூ தந்தாய்
காகிதப் பூ ஆனாலும்
தொடுநேசிப்பு உணர்ந்தேனே
தொடரும் மன வாசனையில்..

கண்ணுக்குள் வாழுமென்
கண்ணான மச்சானே
பெண்ணுக்குள் மறைஞ்சுள்ள
பொக்கிசமாய் வச்சானே

உண்"மை"யால் நிரப்பிய
உன்கடுதாசி என்பேனா
உண்மையில் மனசாய்
உள்ளதெனக் காண்பேனா ?

அழியாத காகிதம்
அதுவென் இதயம்
கிழியாத அதன்மேலெ
கிறுக்கினாய் உன்கடிதம்

அழியாத ஓவியம்
அழகான காவியம்
விழியோர முத்தம்
விழிக்கும் உணர்வின் சத்தம்

உன்கடுதாசிக் கவிதை
உள்ளத்தினுள் விதை
உன்கடுதாசிக்  கதை
உரசி உணர்வூட்டும் சதை!

படுதாயின்னுப் பரிதாபமாய்ப்
பாடுவதாய்ப் படிக்கின்றேன்;
கடுதாசி என்னோடு
கதறுவதாய்த் துடிக்கின்றேன்!

தூக்கத்தைக் கலைச்சுப்புட்டு
தூரத்தில் இருப்பவரே!
ஏக்கத்தை விதைச்சுப்புட்டு
ஏனுங்கக் கடுதாசி ?

பாயும் பழமும்
பார்த்தென்னைச் சிரிக்குது
நோயும் நோவும்
நித்தமுமென அரிக்குது

கடுதாசி வேகத்திலெ
கடிதாக வாங்க மச்சான்
படுத்தாலும் தூக்கமில்லா
பரிதாபம் ஏங்க மச்சான் ?

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

14 comments:

  1. முன்பொரு காலத்தில்
    முகம் மலர அகம் மலர
    மூச்சிரைக்க ஓடிவந்து
    பேச்சு நின்று வாசித்து
    பெருமை கொண்ட
    கடுதாசி

    இன்றைய காலமதில்
    இணையத்தில் ஒன்றிணைந்து
    இழிவுரைத்து இகம் பேசி
    புன் நகைத்துடுவர்
    கடுதாசிக்காலமதை

    காலத்தால் அழியாத
    காவியங்கள் பல படைத்த
    கண் விழியாய் உதவிட்ட
    கடுதாசிக்காகித மலரை
    கனவிலும்
    நான் மறவேன்...!



    ReplyDelete
    Replies
    1. கவிஞர்கட்கிடையில் உணர்வுகள் ஒன்றே என்பதற்கு உங்களின் இப்பின்னூட்டக் கவிதையும் ஒரு சான்று. மிக்க நன்றி கவிஞரே.

      Delete
  2. கடிதம் மூலம் நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை கிளறிவிட்ட கவிக்குறளுக்கு என் வாழ்த்துகள்...

    கடிதங்கள் ! இன்றைய பொழுதில் அரசியல் விளையாட்டப் போய்விட்டது

    ஆம் !

    தண்ணிர் கேட்டுக் கடிதம் !
    மண்ணெண்ணெய் கேட்டுக் கடிதம் !
    மின்சாரம் கேட்டுக் கடிதம் !
    மீனவர்களைக் காப்பாற்றக் கேட்டுக் கடிதம் !
    இட ஒதுக்கீடு உயர்த்திக் கேட்டுக் கடிதம் !
    கூடுதல் அரிசிக் கேட்டு கடிதம் !
    மானியத்தொகையை உயர்த்திக் கேட்டுக் கடிதம் !

    இப்படிக் “கேட்டுக் கேட்டுக்“ கடிதத்தின் புனிதம் கூடிவிட்டது போங்க

    ReplyDelete
    Replies
    1. கடிதென நிற்கும் கடிதமாய் உங்களின் நிதர்சனமான விமர்சனம், விழிப்புணர்வு வித்தகரே! உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  3. கடுதாசி மறையும் காலம் வந்து விட்டது... ...ம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கனவிலும் வருவது கடுதாசி தானே அய்யா, அதனால் மறையாது நிலைத்து நிற்கட்டுமாக. உங்களின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    கடுதாசி.
    கடு+தாசி=?
    கடுதாசி.

    ஆம், கடுதாசிதான், அதுக்கென்ன அண்ணே இப்போ?

    அது இல்லைங்க தம்பி, கடுதாசியை பார்த்து ரொம்ப நாலயிச்சில்லோ அதான் அப்படி கேட்டேன்.

    ஓ அப்படியா அண்ணே, இங்க பாருங்க இந்த கவிதையில் கடுதாசியைப்பற்றி என் மச்சான் அபுல் கலாம் அவர்கள் அழகு நடையில் சொல்லி இருக்காங்க, மேலும் கருத்துக்களும் வந்திருக்கு அப்புறம் சொல்லுங்க அண்ணே.

    நானும் படிச்சேன் தம்பி, கவிதை நல்லாவே அமைந்துருக்கு.

    அப்புறம் இப்போ சந்தோசமா அண்ணே?

    ரொம்ப சந்தோசம் தம்பி.

    அப்போ நான் போயிட்டு வரவா அண்ணே?

    வாங்க தம்பி.

    ReplyDelete
    Replies
    1. என் கவிதைக்குப் பின்னூட்டக் கதையும் புனைந்த மச்சானை மெச்சுகிறேன். உங்களின் ஆற்றல் வளர வாழ்த்துகிறேன். உங்களின் இனிய பின்னூட்டத்திற்கு இருதயம் நிரம்பி வழியும் நன்றிகள்.

      Delete
  5. கலாம் அய்யாவின் கடிதம் கவிதை ஒரு மைல்கல்.
    இந்தளவு சிந்தித்து எழுதிருப்பது சிறப்பு

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பற்று

    நன்றி அய்யா

    ReplyDelete
    Replies
    1. தமிழன் அய்யாவின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  6. கடிதத்தில் மட்டுமே முழுமையான அன்பை

    கொடுக்க முடியும் ..பெற முடியும் ..

    இந்த கடிதம் மூலம் கலாம் காக்காவிற்கு

    அன்பை அள்ளி தருகிறேன் ..

    கவியால் ..நல்ல பண்பால் உயர்ந்த

    கவி காக்கவிற்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்கல்லாஹ் கைரன். உங்களின் இனிய வாழ்த்துரைக்கு உளம்நிறைவான நன்றி. உங்களின் “கைடு ட்யூசன் செண்டரில்” ஆங்கில இலக்கணம் பயிற்றுவிக்க நீங்கள் தந்த அவ்வாய்ப்பை என்றும் மறவேன்; அன்று என்னிடம் அப்பாடம் கற்ற மாணவர்கள் இன்றும் என்மீது மிக்க மதிப்புடன் இருக்கின்றனர்; தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக என்னிடம் ஆங்கில இலக்கண ஐயங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட நல்ல மாணவர்களை உருவாக்கும் இடமாக நீங்கள் அமைத்துக் கொடுத்த “கைடு ட்யூசன் செண்டர்” போல் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நமதூரில் பெரியதொரு “ட்யூசன் செண்டர்” நீங்கள் மீண்டும் உருவாக்கினால் (ஏற்கனவே என்னிடம் நீங்கள் அளித்த வாக்குறுதிப்படி) அதில் அடியேனின் பங்களிப்பு உறுதியாக இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்; இறக்கும் வரை மாணவர்களுடனே இருக்க வேண்டும்; கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதே என் பேரவா.

      Delete
  7. என் ஒவ்வொரு படைப்புகள்- கவிதைகட்குப் பின்னணியாக ஓர் அனுபவம் அல்லது வாசித்தல் இருக்கும். அவ்வகையில் இக்கவிதையை அடியேன் வனைவதற்கு அடிப்படையாக அமைந்தது நான் வாசித்த ஒரு பேட்டி. “கல்ஃப் நியூஸ்” தினசரியில் “எமிரேட்ஸ் போஸ்ட்” மேலாண் இயக்குநர் அவர்கள் அளித்த ஒரு பேட்டியே என் உள்ளத்தில் இக்கரு உருவாக்கியது. ஆம். நீங்கள் சொன்ன அதே விடயம் அவரின் பேட்டியிலும் சொன்னார்கள், “கடிதததில் மட்டும் தான் நாம் அன்பை வழங்க முடியும்; அன்பைப் பெற முடியும்” கனவாகிப் போன கடிதம் எழுதல்- வாசித்தல் மீண்டும் வராதோ என்ற ஏக்கம் தந்தத் தாக்கம் தான் இவ்வாக்கம்.

    ReplyDelete
  8. நமது அபுல் கலாம் காக்காவின் கவிதையை வருணிக்க வரிகள் இல்லை. அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers