...இடுக்கண் வந்தால்
முந்தியே எழுந்து
...முழங்கல் வேண்டும் !
திருச்சி அபுதபி
...தினமும் வானூர்தி
திரும்ப இயக்கிட
..திடமாய் வாக்குறுதி !
தங்கம் கொணர
..தாராளச் சலுகை
எங்கள் உழைப்பால்
..ஏராளம் வருகை !
அன்புடன் நடத்தும்
..அலுவலர் வேண்டும்
பண்புடன் பழகப்
...பயிற்றுதல் வேண்டும்!
கடவுச் சீட்டுடைக்
..காலம் ஆயுளைக்
கடக்கும் நாள்வரை
..காலம் நீட்டவும் !
:
பட்டம் பெற்றதும்
..பட்டென வேலை;
திட்டம் நன்றெனத்
..தீட்டுக நாளை !
தொலைபேசிக் கட்டணம்
..தொலைவாய் இலாமலும்
விலைவாசி ஏற்றமும்
..விரைவாய் இறங்குக !
சதிசெய் அரசியல்
..சண்டைகள் சரிசெய
நதிநீர்ப் பிரச்சினை
..நன்றென முடிக்கலாம் !
வேலிப் போலவே
..விதைக்கும் வரியால்
போலிச் சாமியார்ப்
..பிழைப்பும் ஒடுங்கும் !
ஒளிரும் இந்தியா
...ஒட்டுக்கு மட்டுமா
மிளிரும் திட்டமே
...மின்சாரம் கிட்டுமே !
ஆவனச் செய்க
..ஆக்கும் அறிக்கை
ஆவலும் மிஞ்ச
...ஆகும் நெஞ்சே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கை
ReplyDeleteகோரிக்கையில் சமூக நலன் மேலோங்கி இருக்கு. இந்திய அரசு இவற்றை கவனத்தில் கொண்டால் நாடு வளர்ச்சியில் சிறப்பது உறுதி !
கவிக்குறளின் அழகிய கோரிக்கை !
தொடர வாழ்த்துகள்...
உடன் :பதிவுக்குக் கொணர்ந்த உங்களின் அதிவேக சுறுசுறுப்புக்கும்,
Delete”அதிரைக்கு அப்பால் அக்கரையிலிருந்து கொண்டும் அதிரையின் பால் அக்கறையுடன் கோரிக்கைக் கவிதை விடுத்துள்ள” என் கவிதைக்குப் பாராட்டு வழங்கிய உங்களின் இனிய கருத்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகோரிக்கைகளை வீர நடைபோட்டு போராட்டம் செய்துதான் பெறவேண்டுமா?
அப்படி இல்லாமல் அழகு கவி நடையிலும் விளங்கவைத்து பெறலாமே என்று கவி மச்சான் ஜனாப் அபுல்கலாம் அவர்கள் உரைத்துருப்பது அழகாக இருக்கின்றது.
உங்களின் அழகு கவி நடைகள் ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மெச்சிப் புகழ்ந்துரைத்த மச்சானின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.
Deleteகோரிக்கையைக்கூட கவிதையாக போராடி இருப்பது அருமை இப்படியும் முறையிடலாம் என்பது அபுல்கலாம் காக்காவிற்கு மட்டும் எப்படி முடிக்கிறது.வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னையும் என் கவித்திறனையும் உளம்நிறைவாய் வெளிப்படையாய்ப் புகழ்ந்துரைத்த நேசர் என்னும் பொருள் கொண்ட ஹபீப் அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்.
Deleteகலாமின்
ReplyDeleteகவி வரிகள்
கட்டளையாய்
நிதி அறிக்கை
அரசுக்கு
சொல்லிட்ட
செய்தியிது
அடிமனதில்
உதித்திட்ட
எண்ணமிது
காணும்
அரசு அலுவலர்
களமிறங்கி
செய்திடுவர்
ஆணைகள்
பிறப்பிக்கும்
நேரமிது
செவி சாய்த்து
செப்பனிட
சுணங்காது
உத்தரவு
சொல்லிடுமாம்
சந்தோஷ
செய்தியை
சகல கலா
கவிக்குரலின்
ஆலோசனைபடி..!
மிக்க நன்றி புதுமைக் கவிஞர் மெய்சா அவர்களே! உங்களைச் சந்தித்தப் பின்னர் எனக்கு ஏற்பட்ட பேரின்பத்தைப் போலவே உங்களின் வாழ்த்துரையும் கண்டு பேரின்பம் கொண்டேன்.
Deleteஅழகிய கவிதை
ReplyDeleteகலாமின் நடை
வெளிநாட்டு இந்தியருக்கு
ஏராள கோரிக்கைகள்
எங்களை போன்ற
தொழிலதிபருக்கு
எதும் கேட்காது
விட்டு விட்டீரே
மன்னிக்க வேண்டுகிறேன், தொழிலதிபர் அவர்களே. இக்கவிதையை எழுதத் துவங்கிய நேரம் நேற்றைய ஜூம் ஆவுக்கு முன்னர்; பின் தொழுத உடன் மீண்டும் இணைத்தேன் சில வாசகத்தை- அதில் நினைத்தேன் என் தாயகத்தை. அவ்வண்ணம் இணைக்கின்ற போதில் வணிகர் நலன் போல இன்னும் சமூகத்தின் எல்லாப் பிரிவினரின் கோரிக்கைகளும் இணைத்தாலும் நீண்டு விடும் என்பதால் சுருக்கி விட்டேன்; வேண்டுமென்று உங்கள் தரப்பு நியாயத்தை விட வில்லை. மேலும், நேற்றும் இன்றும் என் அறையை விட்டும் வேறோரு புதிய அறைக்கு மாற்றலாகிச் செல்வதால் நிரம்ப வேலைகளும் இருந்தன. அடுத்து ஓர் ஆக்கம் ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறேன் (கவிதையாக அல்ல; கட்டுரையாக); அதன் தலைப்பு “படிப்பினை வளர்க்கும் படிப்பினைகள்” அதனை இன்ஷா அல்லாஹ் புதிய அறைக்குச் சென்று - அங்கு இணையத் தொடர்புக் கிட்டியதும் எழுத வேண்டியிருப்பதால் என்னால் அவ்வாக்கத்தை நிறைவு செய்ய இயலவில்லை; இக்கவிதை எழுதும் வரைக்கும் தான் என் பழைய அறையின் இணையத் தொடர்பு இருந்தது. அடியேனும் வணிகக் குடும்பத்தில் வளர்ந்தவன் என்பதும்; வணிகம் செய்தவன் என்பதும்; வணிகவியல் பட்டம் படித்தவன் என்பதும்; வணிகவியலைக் கற்பித்துக் கொடுப்பவன் என்பதும் நீங்கள் அறிவீர்கள். எனவே, அடியேன் வணிகர்களின் நலன் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை என்பதை உங்களின் ஆதங்கம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டதால் இவ்விளக்கம் தருகிறேன்.
Deleteமிக நீண்ட விளக்கம் thanks
Deleteஎன்னிலை விளக்கம் என்பதால் நீண்டுவிட்டது.
Delete// வெளிநாட்டு இந்தியருக்கு
ReplyDeleteஏராள கோரிக்கைகள்
எங்களை போன்ற
தொழிலதிபருக்கு
எதும் கேட்காது
விட்டு விட்டீரே //
இந்தியாவுக்கு அந்நிய செலவாணி அதிகளவு கிடைப்பதால் என்னவோ !? இருந்தும் மின்சாரம், விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏற்றார் போல் உள்ளது கவிக்குறளின் கோரிக்கை
ஜஸாக்கல்லாஹ் கைரன். மிக்க நன்றி விழிப்புணர்வு வித்தகர் அவர்கள் என் தரப்பு நியாயங்களை அடுக்கி எழுதி விட்டீர்கள். மேலும், அடியேனும் உங்களிடம் செல்லிடப்பேசி வழியாக எனக்குத் தற்பொழுதுள்ள கால அவகாசம் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லி விட்டேன்.
Deleteகடவு சீட்டு ஆயுள் காலம் வரை
ReplyDeleteநல்ல கோரிக்கை
வாழ்த்துரையளித்த அதிரைத் தமிழூற்று சித்திக் அவர்கட்கு நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன். இக்கோரிக்கை என் மனத்தினில் நீண்ட நாடகளாய் உள்ளது.
Deleteதரமான கவிதை அய்யா
ReplyDeleteவாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பற்று
அய்யா என்று அன்பொழுக அழைக்கும் உங்களின் இனிய வார்த்தைகும் வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள் அய்யா.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
Deleteநாளை நிதி நிலை அறிக்கை. நான் இன்றுதான் இதைப் படித்தேன். சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஅதிரையின் மற்றொரு தளத்தில் உங்களின் பொருளாதார ஆக்கத்தில் “ப.சி. போடும் பட்ஜெட் பசி தீர்க்குமா” என்று வினவி, கவிவேந்தர் சபீர் அவர்களிடம் கோரிக்கைகளை “கவிதையாக “ வினவினீர்கள் சென்ற வெள்ளிக்கிழமை. அக்கவிதையைப் பாராட்டும் தருணம், என் பின்னூட்டக் கவிதையாகவே இக்கவிதையை ஆங்குப் பதிவு செய்தேன். ஒரே நேரத்தில் ஒரே விடயத்தில் ஒரே இடத்தில் முகப்புக் கவிதையாக இருப்பது முறையல்ல என்பதால் அப்பின்னூட்டக் கவிதையையே ஈண்டுப் பதிவு செய்தேன் இத்தளத்தில். எனவே, தாங்கள் தாமதமாக வருகைப் புரிந்தாலும் இக்கவிதையை உருவாக்கக் காரணமானவர்கள் தாங்களே என்பதை இச்சபையோர் முன்னிலையில் ஏற்கிறேன். தங்களிடமிருந்து ஏதும் செய்தியாக வந்தாலும் அஃது எனக்குக் கவிதைக்கான கருவாக எடுத்துக் கொள்வேன்; தாங்கள் ஒரு கவிநேசர் என்பதை யான் அறிவேன். ரியாத் தமிழ்ச் சங்கக் கவிதைப் போட்டிக்குத் தங்களிடம் ஒரு தலைப்பை வேண்டினேன்; தாங்கள் சொன்னீர்கள்: ”ஷரிஅத் பற்றி எழுதலாம்” என்றீர்கள். விழிப்புணர்வு வித்தகர் வழக்கம் போல், விழிப்புணர்வு கவிதை எழுதுங்கள் என்றார்கள். ஆயினும், நாட்கள் குறுகியதாய் இருந்ததால் வேறொரு தலைப்பில் எழுதி அனுப்பி விட்டேன். அத்தலைப்பை எனக்கு ஊட்டியது, என் மகனுக்கு எலும்பு முறிவு மருத்துவர் (பட்டுக்கோட்டை இரா.இரவி) அவர்கள் வழங்கிய மருத்துவச் சீட்டுக் கோப்பின் ஓரத்தில் ஆங்கிலத்தில், life is movement; movement is life என்று அச்சடித்திருந்தார்; அதனைக் கண்டதும் அதனையே தலைப்பாக்கி “ வாழ்கையே இயங்குதல்; இயங்குதலே வாழ்க்கை” என்று கவிதை வனைந்து அனுப்பி விட்டேன். இதில் தாங்களும், விழிப்புணர்வு வித்தகரும் கூறிய விடயங்களை உள்ளடக்கி வரும் வரிகளாய் அமைத்துத் தங்களிருவரின் அவாவினை நிறைவேற்றி விட்டேன். எனவே, என் கவிதைகளின் கருவாகத் தங்களின் விருப்பங்களை வைத்துக் கொள்வதே என் வழக்கம் என்பதைச் சுட்டிக் காட்டவும் தங்கட்கும் எனக்கும் உள்ள அன்பின் பிணைப்பை வாசகர்கள் அறியவும் வேண்டியே இம்மறுமொழிப் பின்னூட்டம் நீண்டு விட்டது.
Delete