.

Pages

Wednesday, February 27, 2013

[ 5 ] ஏன் பிறந்தாய்…?

உயிர் போகும்
நிலை தன்னில்
ஊசலாடும் நிலையினிலே
உயிர் காக்கும் நோக்கோடு
கார் என்னும் ஊர்தியிலே
ஏற்றி கொண்டு விரைந்தார்கள்
ஒரு குடும்பம்
ஒரு மணி நேரத்திற்குள்
வைத்தியமும் செய்ய வேண்டும்
விரைந்தததுவே வாகனமும்
வீதியிலே ஓர் கூட்டம்
வாகனத்தை மரித்ததுவே
விலை வாசி ஏறியதால்
சாலை மறியல் போராட்டம்
எங்கள்கட்சி...நேற்றே
அறிவித்தது தெரியாத
என்றதுவே அந்த கும்பல்
கட்சிஎனும் பெயரில்
மிரட்டியது அந்த கும்பல்
தலை பிரசவம்
வீறிட்டாள் ஒரு பெண்ணும்
வழி விட்டால் நல்லதப்பா
என்று ஒரு தனையன் கூறிடவே
கட்சி ஆணை என்று கூறி
கும்பலுமே மறுத்ததுவே
பொது தேர்வு எழுதிடவே
கிராமத்து மாணவனும்
கண் மலங்கி கேட்கின்றான்
பட்டணம் சென்று நானும்

பரிச்சை எழுதிடணும்
வழி விட்டால்
நடந்து நான் சென்றேனும்
பரிச்சை நான் எழுதிடுவேன்
இட ஒதிக்கீடு உனக்கும் தான்
கட்சி அது சொல்லுதடா
காலை முதல் மாலை வரை
சாலை அதை மறித்து விடு
என்று கும்பல் சொல்லியது
என்ன நியாயம் என்ன நியாயம்
ஏன் பிறந்தாய்
கட்சி எனும் கொடும் குணமே
[ கட்சியின் பதில் அடுத்த ஆக்கத்தில்... ]
ஏன் பிறந்தாய் தொடரும்...

7 comments:

  1. நல்லதொரு படிப்பினை !

    சமூக நலனுக்கு எதிராக செயல்படுவோருக்கு மக்களின் சவுக்கடி நிச்சயம் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிடுவதுதான் வேடிக்கை !

    பதிலை ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன் தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.

    இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ளவும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர முடியும்.

    நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸ்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.

    ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !

    எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...

    வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !

    ReplyDelete
  3. சாலை மறியலினால் ஏற்ப்படும் பொதுமக்களின் கஷ்டங்களை அழகாக புரியும்படி சொல்லி இருக்கிறார் சகோதரர் சித்திக்.

    வாழ்த்துக்கள்.

    இன்றைய சூழலில் நமக்கு தேவையானதை அரசிடம் கேட்டுப்பெற வீதியிலிறங்கி குரல் கொடுக்க வேண்டி உள்ளது.

    அதே சமயம் எதுவானாலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்வதே நலம் பயக்கும்.

    ReplyDelete
  4. இதுவும் ஒரு வகையில் வன்முறை செயல் தான் மக்கள் உணர வேண்டும் நல்ல பகிர்வு நன்றிங்க.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    ஏற்கனவே நம் நாட்டு சாலைகள் ஓணான் முதுகைப் போன்று கரடு முரடு, வாகனங்கள் செல்ல பெரும் அவதி, இந்த இலட்சணத்தில் சாலை மறியல் வேறு.

    பொது மக்களே என்ன செய்ய?
    சிந்துத்து பாருங்கள் விடை கிடைக்கும்.
    விடை கிடைக்கவில்லையா?
    அவசரம் வேண்டாம் மிகவும் பொறுமையுடன் சிந்தித்து பாருங்கள்.
    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


    ReplyDelete
  6. சந்தற்பத்திற்கு ஏற்றார் போல் கட்சிகள்

    போராட்டம் நடத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது ..

    தம்பி நிஜாம் .சகோ அதிரை மெய்சா ..சகோ ஜமால் ...சகோதரி சசி கலா ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  7. விழிப்புணர்வு கவிதை வரிகள் காலச்சூழ்நிலை கேற்ப பதிவு அருமை வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers