.

Pages

Thursday, February 28, 2013

ஐ-ஸ்கிரீ[ம்]ன் வேண்டுமா !?

ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம் தான் !  ஏன் பெரியவர்களுக்கும் கூட  ஆனால் சளி பிடித்துக் கொள்ளும், உடம்பு வெயிட் போட ஆரம்பித்துவிடும் என ஐஸ்கிரிமுக்கு பெரும்பாலும் தடா போடப்படும்.  வெறும் குச்சி ஐஸ், கோன் ஐஸ் இருந்த காலம் போய்  இன்று வெண்ணிலா, கோக்கோ, மேங்கோ,  நட்ஸ் ஃபில்டு என் விதவிதமாய் ஐஸ்கிரீம்கள் வந்துவிட்டன.

இப்படி மனதையும் நாவையும் மயக்கும் வகையில் வந்துவிட்ட ஐஸ்கிரீமில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதாம்.  கால்சியம் அதிகம்  கொண்ட பால் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறுகின்றனவாம்.  ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் பல் ஈறுகள் வலுப்பெற்று பற்கள் பலமாகின்றன.

சாக்லெட் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என்பது இன்றைய மருத்துவ ஆய்வின் முடிவாக இருக்கிறது. சாக்லெட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.  பாலில் உள்ள ஆடைகளை நீக்கிவிட்டுத்தான் ஐஸ்கிரீம் தயாரிக்கிறார்கள் என்பதால் ஐஸ்கிரீமால் குண்டாவோம் என்பது தவறு.  நொறுக்குதீனிகளை நிறைய சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தான்..!? பழி ஐஸ்கிரீம் மேல் விழுகிறது.  ஐஸ்கிரீமை மட்டும்  அளவாக சாப்பிட்டு வந்தால் உடும்பு குண்டாகாது.

ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே, பி12 ஆகியன உள்ளன  இதனால் பார்வை கோளாறு, சிறுநீரகக் கோளாறு இருந்தால் கூட சரியாகிவிடும்.  உடலுக்கு தேவையான புரோட்டீன் எளிதில்  கிடைக்க ஐஸ்கிரீம் சாப்பிட்டாலே போதுமாம்  உடலில் உள்ள தசை திசுவை தினமும் சரி செய்யும்  ஆற்றல் இந்த புரோட்டினுக்கு தான் உண்டாம்.  ஐஸ்கிரீம் தயாரிக்க தரமான தண்ணீரை உபயோகிக்க வேண்டும்.

கெட்டுப்போகாத பாலை உபயோகிக்க வேண்டும். சேர்க்கப்படும் எஸன்ஸ், ஜெலட்டின் பவுடர்  அளவுக்கு அதிகமாக போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறீனால் ஐஸ்கிரீம் கிரீமாக இருக்காது. நீராகிவிடுமாம் !
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தலை வழி, ஜலதோஷம் வராது எற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அவை தீவீரப்படும்.  சைனஸ் பிரச்சனை இருந்தால் சாப்பிடக்கூடாது.

மழை காலதில் தான் அதிகம் பேர் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புகிறார்களாம். அது உடலுக்கு சென்றவுடன் புத்துணர்ச்சியளிக்கிறதாம் ! தரமான கடைகளாக பார்த்து ஐஸ்கிரீம் வாங்க வேண்டும்.

விண்வெளியில் உள்ள சர்வதேச விண் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஆய்வாளார்களுக்கு தனியார் விண்கலம் மூலம் ஐஸ்கிரீம் கப்புகளை அனுப்பி வைத்துள்ளன.  விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும்போது ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவர்களின் உடலை சீராக வைக்க உதவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலே உள்ள செய்திகள் ஒரு தினப்பத்திரிக்கையில் படித்தது. நான் வைத்த தலைப்பிற்கும் நீங்கள் படித்த செய்திக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும் அல்லது தலைப்பில் எழுத்து பிழையோ என யோசிக்கத்தோனும் !? நிச்சயம் இல்லை !
உடல் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு,  உணவு கட்டுப்பாடு அதுபோல் பார்வை கட்டுப்பாடு [ Eye Screen ] வேண்டும். ஆண்டவன் படைத்த அற்புதங்களை ரசிப்பதற்கு தான் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் அன்னியப் பெண்களை பார்வையால் ரசிக்கின்றனர்.

Youtube-ல் வரும் ஆபாசக் காணொளிகளை கண்டு களிக்கின்றனர் ஒன்றுக்கும் உதவாத நாவள் போன்றவைகளை பார்ப்பதை விட்டும் கண்ணுக்கு திரை இட்டு கொள்வது தான் ஐஸ் ஸ்க்ரீன் [ EYE SCREEN ] 

பண்போடு வாழ்வோம் ! பண்பட்டு வாழ்வோம்  !!

மு.செ.மு.சபீர் அஹமது

9 comments:

  1. நன்றாக முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    ஐஸ் கிரீம்.

    ஆம், அது ஒரு நல்ல உணவு, தயாரிப்பை பொறுத்து நல்ல உணவாக அமையும்.

    ஐஸ் கிரீமை சப்பி சப்பி சாபிடுவதைவிட பல்லிலும் நாக்கிலும் வைத்து சிதைத்து சாபிடுவது மிகவும் நல்லது.

    வாங்கும் முன் தரமானதா என்று பார்த்து வாங்குங்கள், போலிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. வித்தியாசமான ஒரு விழிப்புணர்வு ஆக்கம்.

    ஐஸ் கிரீமில் தொட்டு ஐ ஸ்க்ரீனில் முடித்துள்ள விதம் அருமை.

    வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  4. வித்தியாசமான முயற்சியில் தந்துள்ள பதிவு !

    பதிவை இறுதியில் அருமையாக கொண்டுவந்திருப்பது தனிச்சிறப்பு

    பண்போடு வாழ்வோம் ! பண்பட்டு வாழ்வோம் !!

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அருமையான பதிவு இந்த பதிவே படிக்கும் போது எனது நாக்கு ஊர்க்கின்றது வாழ்த்துக்கள் சபீர் அஹமது காக்கா அவர்களே.

    ReplyDelete
  6. // உடல் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு அதுபோல் பார்வை கட்டுப்பாடு [ Eye Screen ] வேண்டும்.//

    நூறு சதவீத உண்மை

    ReplyDelete
  7. நல்ல பதிவு ..

    இன்றைய ஸ்பெசல் எனக்கு ஐஸ் க்ரீம்

    ReplyDelete
  8. சித்திக் மற்றும் அனைவருக்கும் ஐஸ்க்ரீன் treat வேண்டுமா

    ReplyDelete
  9. தலைப்பைப் பார்த்தவுடன் ஐஸ்க்ரீம் பற்றிய பதிவா அல்லது ஐஸ்க்ரீன் பற்றிய பதிவா என்று குழப்பம். படித்துக் கொண்டு வருகையில் ஐஸ்க்ரீம் பற்றிய பதிவில் ஐஸ்க்ரீன் எங்கு வரும் என்று மறுபடி குழப்பம்!
    கடைசியில் ஐஸ்க்ரீன் விளக்கம் படித்து தெளிவு பெற்றேன்.

    மிகவும் அவசியமான ஒரு கட்டுப்பாடு தான் ஐஸ்க்ரீன்!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers