kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, February 20, 2013
இப்படியும் ஒரு சந்தேகம் !
ஒரு சிறிய கிராமம். கதையின் நாயகியான சிறுமி, தன் சக மாணவிகளுடன் காலைப்பொழுதில் சிறிது தொலைவிலிருந்த குர்ஆன் மதரசாவில் ஓதச் செல்பவள். திரும்பி வரும் நேரத்தில் அக்கிராமத்தைக் கடந்து செல்லும் ஒரே ரயில் வரும்வரை தாமதித்து நின்று அதற்கு டாட்டா சொன்ன பிறகு தான் அனைவரும் வீடு திரும்புவர்.
வளர்ந்து பெரியவளானதும் அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவனுக்கு துபையில் நல்ல வேலை. இவளையும் துபைக்கு அழைத்துச்செல்ல எல்லா ஏற்பாடும் ஆகிவிட்டது. புறப்பட வேண்டிய நாளும் வந்தது. பிறந்து இவ்வளவு காலம் வாழ்ந்த ஊரை மீண்டும் எப்போது காண்போமோ ? என்ற ஏக்கம் அவளுக்கு பிரயாண நாளின் காலையில் ஊரை ஒரு முறை சுற்றிப்பார்த்து விட்டு வரும் ஆசையை கணவனிடம் தெரிவிக்கிறாள். அவனும் சம்மதிக்க, இருவரும் வெளியே செல்கின்றனர். அவள் சிறு வயதில் ஓதிய மதரஸா……வழியில் ரயில் கடக்கும் பாதை…
அந்நேரத்தில் ரயில் வருகிறது. ஆசையுடன் நின்று பார்த்துக்
கொண்டிருக்கிறாள். அவளை அறியாமலேயே அவளது கை உயர்ந்து
அப்பாவித்தனமாக ரயிலுக்கு டாட்டா சொல்கிறது. ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்துகொண்டிருந்த எவனோ ஒருவன் பதிலுக்கு கையசைத்துச் செல்கிறான்.
கணவனை சந்தேக நோய் பற்றுகிறது. "யார் அவன் ?" என்று கேட்கிறான்.
அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அவள் "சத்தியமாக எனக்குத் தெரியாது"
என்கிறாள். கணவன் ஒன்றும் பேசவில்லை. வீடு திரும்பும் வழியிலும் பேசவில்லை. பிரயாண நேரம் வந்தும் பேசவில்லை. தன்னுடைய உடைமைகளை மட்டும் எடுக்கொண்டு அவளை விட்டு விட்டு தனியாக புறப்பட்டுச் சென்று விடுகிறான் அனலிலிட்ட புழுவாக அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள்...
கண்ணால் பார்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தலே சரியான தீர்வாக இருக்கமுடியும் விட்டு விட்டு போன கணவனும் மனபுழுக்கத்துடன் தான் [சந்தேக எண்ணத்தோடு] சென்றிருப்பான். சந்ததேகமெனும் கொடிய நோயிலிருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக
முஹம்மது சலீம்
குறிப்பு : தோப்பில் மீரான் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
அன்புச்சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம். சிறுகதையாருந்தாலும் அனைவரையும் சிந்திக்கவைக்கின்ற பதிவு !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான ஆக்கம் என்றாலும், சந்தேகத்திற்கு இவ்வளவு வலிமையா? என்று நினைக்க வைக்கின்றது, இனிமேல் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் நிதானமாக செயல்பட வேண்டும் என்று இக்கதை சொல்கிறது.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சலீம் காக்காவின் வருகைக்கு வரவேற்புகளும் வாழ்த்துகளும்
ReplyDeleteஅவள் கொண்டது ரயிலோடு சிநேகம் ரயில் சிநேகமல்ல கணவர் புரிந்துகொள்ளல்வேண்டும்
சகோதர சலீம் அவர்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறு கதையாயினும் சந்தேகக்கணவன் மார்களுக்கு சரியான விழிப்புணர்வூட்டும் சிறுகதை.
இதுபோன்ற நல்ல ஆக்கங்களை இன்னும் எதிர் பார்க்கிறோம்.
ஒரு துளி நெருப்பு ஒரு பெரும் ஊரையே அழிக்கும் சந்தேகமும் அப்படித்தான்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் ...சலீம் காக்கா முதல் ஆக்கம் முறையான ஆக்கம் இது போல் பல ஆக்ககள் எதிர் பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்
ReplyDeleteசந்தேக புயல் அடிச்சா...
ReplyDeleteசந்தோச பூ உதிரும் ...
புரிந்து கொள்ளாத கணவனிடம் வாழ்வதை விட
மீள்வதே ..மேல்
சிறப்பான சிறுகதையை முதற்பதிவாக்கி இவ்வறிவுச் சுரங்கத்தினுள் மேலும் அறிவுக்களஞ்சியங்களை அள்ளித் தர வருகை புரிந்திருக்கும் சகோதரர் சலீம் அவர்கட்கு “சலாம்” கூறி வரவேற்கிறேன் கலாம்:
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்!
சந்தேகம் அழிவின் பாதைக்கு அழைத்துச்சென்றுவிடும்
ReplyDelete