.

Pages

Friday, February 22, 2013

சூடான மேட்டரு !?

சூடான செய்திகள்  பிரபல நடிகைக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், தந்தையே மகளை சூறையாடிய அவலம், ஓபாமாவின் செல்ல நாய்குட்டிக்கு உடல்நலக்குறைவு என இது போன்ற செய்திகளை தாங்கிய பத்திரிக்கைகளை விற்பதற்காக சிக்னல் அருகே ஒரு சிறுபையன் சப்தமாக கூவிக்கொண்டு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம் பத்திரிக்கையை வாங்கியும் இருப்போம் .

சூடான செய்திகள் என்ற பெயரோடு [ கேவலமான ] செய்திகளை முந்தித் தருவதில் முன்னணியாய் இருக்கும் பத்திரிக்கை என்ற விளம்பரத்தோடு பல பத்திரிக்கைகள்  இன்று இயங்குகிறது.

சாமான்யர்களாகிய நாமும் அதைத்தான் விரும்புகிறோம். உதாரணத்திற்கு ஒரு உணவு விடுத்திக்கு சென்றால் சூடா என்ன இருக்கின்றது என்றுதான் கேட்கிறோமே தவிர சாப்பிடுவதற்க்கு ஆரோக்கியாமாக நல்ல பண்டம் ஏதும் இருக்கின்றதா ? என வினாவுவது இல்லை.

தொடர் வண்டி நிலையத்தில் சூடா இட்லி, வடை, பொங்கல் என்றுதான் கூறிக்கொண்டு போவார்கள் ! உடலுக்கு ஆரோக்கியமான சாப்பாடு என விற்பனை செய்வதை பார்த்திருக்கிறீர்களா ? 

இதோ ஓர் உரையாடல் :

பயணி :  ஏம்பா சூடா இட்லி வடைன்னு கூரிக்கொண்டு செல்கிறாயே சுவையான சத்தானதுன்னு எப்பவாவது கூவி இருக்கிறாயா ?

விற்பனையாளர் : சார் நான் பொய் பேசுவது கிடையாது !

பயணி : சந்தோசம், சூடானதுன்னு பொய் சொல்றியே ?

விற்பனையாளர் : தயார் செய்யும் போது சூடாகத்தான் இருந்தது சார்

பயணி :  நல்லா சமாளிக்கிறியே வாழ்க்கையிலே நீ முன்னுக்கு வந்திடுவே.
நாம் அனைவரும் சூடான விஷயத்திற்கு ஆசைப்பட்டு கண்ட கன்றாவி செய்திகளை மேய்வதை தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அதிக சூடு உடம்புக்கு ஆகாது !

சரி சமூக விழிப்புணர்வுக்காக இரண்டு சூடான செய்திகள்.

1. சூடான உணவை சாப்பிடுவது பற்களுக்கு பாதிப்பு உண்டு பண்ணும்.

2. வருகிறது வெயில் காலம் வெள்ளரி, இளநீர் போன்ற உணவை உட்கொண்டு உடல் சூட்டை தவிருங்கள்.

சரி நண்பர்களே உடல் சோர்வாக இருக்கின்றது சூடா ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வருகிறேன் மீண்டும் சந்திப்போம் [ இறைவன் நாடினால் ! ] வேரு ஒரு தலைப்பில்...
மு.செ.மு.சபீர் அஹமது

9 comments:

  1. படிக்கும் போதே சூடா ஸாரி கூலா சிரிப்பு வந்துடுச்சி

    இன்றைய காலக்கட்டத்தில் பத்திரிக்கைகள் பரப்பரப்பு / விற்பனை / அவசரம் போன்றவற்றிற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமானதொன்று.

    இறுதியில் அருமையான உபதேசத்துடன் ஆக்கத்தை முடித்திருப்பது தனிச்சிறப்பு !

    டீ சாப்பிட்டுவிட்டு மீண்டும் தொடர வாழ்த்துகள்...:)

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம், குளிர்சியாகாமல் சூடு இருந்தால் நல்லது்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

  3. சூடான செய்தி என்று தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோ என்று பதை பதைத்து போய் விட்டேன்.

    காலம் காலமாக பத்திரிக்கைகளின் கவர்ச்சித்தலைப்பின் காரணமாகத்தானே மக்கள் மயங்கி கிடக்கிறார்கள்.

    இப்போது நீங்களுமா..?

    சகோதரர் சபீர் அவர்களின் சூடான செய்தி ஆறிப் போகும் முன்பே படித்து விடுங்கள்.

    அடுத்து ஒரு சூடான செய்திகள் பதியும் முன்பே....!

    ReplyDelete
  4. நிதானம் மனிதனுக்கு அவசியம். அது பிறருக்கு நன்மை விளைவிக்கும்

    ReplyDelete
  5. சூடான உணவு ...

    உடல் நலத்திற்கு கேடானது

    நல்ல தகவல்கள்

    ReplyDelete
  6. வாடிக்கையாளர்;சூடா என்ன இருக்கு
    சிப்பந்தி ;சூடா போண்டா இருக்கு
    வாடிக்கையாளர்;2எடுத்து வா
    சட்டியிலிருந்து அப்பொழுதுதான் இரக்கி வைத்த போண்டாவை சூடாக கொண்டுவந்தார் சிப்பந்தி
    சிப்பந்தி ;இந்தாங்க ஐயா
    வாடிக்கையாளர்;இதை விட சூடா என்ன இருக்கோ இதில் ஒன்று எடுத்து வா
    சிப்பந்தி; இதைவிட சூடா நெருப்புதான் இருக்கு கொண்டுவரவா?

    ReplyDelete
  7. // வாடிக்கையாளர்;சூடா என்ன இருக்கு
    சிப்பந்தி ;சூடா போண்டா இருக்கு
    வாடிக்கையாளர்;2எடுத்து வா
    சட்டியிலிருந்து அப்பொழுதுதான் இரக்கி வைத்த போண்டாவை சூடாக கொண்டுவந்தார் சிப்பந்தி
    சிப்பந்தி ;இந்தாங்க ஐயா
    வாடிக்கையாளர்;இதை விட சூடா என்ன இருக்கோ இதில் ஒன்று எடுத்து வா
    சிப்பந்தி; இதைவிட சூடா நெருப்புதான் இருக்கு கொண்டுவரவா? //

    ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
  8. நம்ம ஊரிலே அஜீஸ் அப்பா என்று ஒருவர் இருந்தார் அவர் ஒரு கடையில் போய் சூட என்னா இருக்கின்றது என்று கேட்கே கடைக்காரனோ விளையாட்டுகாக நெருப்பு இறுக்கின்றது என்று சொல்ல அதை எடுத்து வா என்று அஜீஸ் அப்பா சொன்னார் அவனும் அதை எடுத்து வந்தான் நெருப்பு வந்ததும் அவரிடம் இருந்த பீடியை பத்தவைத்து விட்டு அந்த கடையில் இருந்து வீடு திரும்பினார் அப்போது கடையில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.இந்த கட்டுரையை படித்ததும் அந்த நாபகம் வந்து விட்டது. இதுவும் சூடான செய்தி தான் அப்போது.

    சபீர் அஹமது காக்காவின் சூடான செய்தி பதிவு அருமை.

    ReplyDelete
  9. // நம்ம ஊரிலே அஜீஸ் அப்பா என்று ஒருவர் இருந்தார் அவர் ஒரு கடையில் போய் சூட என்னா இருக்கின்றது என்று கேட்கே கடைக்காரனோ விளையாட்டுகாக நெருப்பு இறுக்கின்றது என்று சொல்ல அதை எடுத்து வா என்று அஜீஸ் அப்பா சொன்னார் அவனும் அதை எடுத்து வந்தான் நெருப்பு வந்ததும் அவரிடம் இருந்த பீடியை பத்தவைத்து விட்டு அந்த கடையில் இருந்து வீடு திரும்பினார் அப்போது கடையில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.இந்த கட்டுரையை படித்ததும் அந்த நாபகம் வந்து விட்டது. இதுவும் சூடான செய்தி தான் அப்போது.//

    இவற்றை நானும் கேள்விப்பட்டதுண்டு...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers