வெட்கப்படு இந்தியனே
நீ வெட்கப்படு
நீ வெட்கப்படாததால்தான்
இந்தியா துக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது
O
பசித்தால்-
கையேந்த மட்டுமே
உனக்குத் தெரியும்
தேவைப்பட்டால்-
திருட மட்டுமே
உனக்கு விருப்பம்
கோபப்பட்டாலும்-
கொளுத்துவதற்கு மட்டுமே
உன் கைகள் நீளும்
O
நீ
படிக்கப் போனால்
வினாத்தாள் திருடுகிறாய்
ஆளப்போனாலோ
நாட்டையே திருடுகிறாய்
தினமும்
வீட்டிலும் வீதிகளிலும்
உண்டியல் குலுக்கியே
பாரதத்தை
இன்று ஒரு
சில்லரைக் காசாக்கிவிட்டாய்
O
சொல்
கண்டதுக்கெல்லாம்
கொடி தூக்கிக்
கோஷம் போடுகிறாயே
என்றாவது உன்
தேசியக் கொடியை
நேசித்தது உண்டா
O
ஜீவநதிகள்
ஊர்வலம் வருகின்ற
நாட்டில்
விக்கித் தவிக்கிறாய்
அள்ளித்தரும் நன்நிலங்கள்
எங்கும் கிடக்கின்ற நாட்டில்
பட்டினி கிடக்கிறாய்
O
ஒன்றா இரண்டா
உனக்கு
எத்தனை கோடி கைகள்
இருந்தும் அவை
பிச்சையெடுக்கவே
என்று
பிரகடனப்படுத்திவிட்டாயே
இந்தியனே
நீ வெட்கப்படு
நீ
வெட்கப்படாததால்தான்
இந்தியா
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
அன்புடன் புகாரி
அன்புச்சகோதரர் அன்புடன் புகாரி அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம் !
ReplyDeleteதொடர வாழ்த்தி வரவேற்கின்றோம்...
// நீ
வெட்கப்படாததால்தான்
இந்தியா
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது //
சிந்திக்கக்கூடிய வரிகள்
ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெறுவது அவசியம்
நண்பேன் டா! உருகும் சுப்பிரமணிய சுவாமி!
ReplyDeleteநண்பேன் டா! உருகும் சுப்பிரமணிய சுவாமி!
http://www.sinthikkavum.net/2013/02/blog-post_28.html
முப்பது வருடத்து
ReplyDeleteமுன் நட்பு
முகனூலின் வழியாக
மீண்டும் சந்திப்பு
மாற்றட்ட மகிழ்ச்சியில்
மனம் நிறைந்த
சந்தோசம்
கடந்த கால நம் நட்பு
கண்ணிமைக்கும் நேரத்திலே
காரிருள் தோன்றி
தொலைந்து
தூரமாகிப்போனதுவே
நிகழ் காலம்
நிகழ்த்திய
ஊடக வழி
சந்திப்பை
உவகையுடன் நாம் ஏற்று
இனி உறவாடிடுவோம்
அவ்வினிய நாட்களை
மீண்டும் நினைவுகூர்வோம்.
அன்புடன் புகாரியின்
தேசப்பற்று
கவிதை வரிகளாய்
அழகு நடை கவி வரியில்
ஆழ்மனதில்
உணரும்படி
துளைத்து விட்டன
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கவிதை, வெட்கம் துக்கம்.
மேலும் தொடர பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சரியாகச் சொன்னீர்கள்...
ReplyDeleteஅனைத்தும் சிந்திக்க வேண்டிய வரிகள்...
மிகச் சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteஒவ்வொரு இந்தியனுக்கும் சாட்டையடி இந்தக் கவிதை. விழிப்புணர்வு வருமா?
ReplyDelete'ஆளப் போனால் நாட்டையே திருடுகிறாய்' வலிமையான சொற்கள்.
பாராட்டுக்கள்!
சுள்ளென்று உரைக்கும் வரிகள்
ReplyDeleteஇனி விழிப்புணவு பக்கங்கள் கவியால் மின்னும்
ReplyDeleteஅன்புடன் புகாரி வருகை
தெம்புடன் மலரும் இத்தளம்
திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete"சரியாகச் சொன்னீர்கள்...
அனைத்தும் சிந்திக்க வேண்டிய வரிகள்..."
சரியாகச் சொன்னீர்கள்...திண்டுக்கல் தனபாலன்
அனைத்தும் சிந்திக்க வேண்டிய வரிகள்...
கனடாவின் கவிமேகம் அதிரையின் விழிப்புணர்வு பக்கத்தில் கவிமழைப் பொழிய, நாங்கள் உளம்நிறைவாய் மகிழ்ச்சி வெள்ளம் நிரம்பி வழிய வரவேற்கின்றோம். அறிமுகக் கவிதை தந்த கவிமுகமே வருக! வருக!!
ReplyDeleteபுஹாரி காக்காவின் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் முதல் பதிவு முறையான பதிவு இன்னும் பல பதிவுகள் எதிர்க்பார்க்க படுக்கிறது.
ReplyDeleteஎன்னைப் பாராட்டி மகிழ்ந்த, மகிழவைத்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் நன்றிமழை.
ReplyDeleteஅன்பு சேக்கனாவின் வரவேற்பும்
இனிய மெய்சாவின் நட்புத்தேட்டமும்
கோமுஅ
ஜமாலின் வெட்கதுக்கப் புரிதலும்
திண்டுக்கல்
தனபாலின் வரிக்குவரி சிந்திப்பும்
தோழி சசிகலாவின் ஆமோதிப்பும்
ரஞ்ஜனி அம்மாவின் விழிப்புணர்வு ஏக்கமும்
இன்பத் தமிழனின் சுள்ளுணர்வும்
அதிரை
சித்திக்கின் வருகைப்பாராட்டும்
அண்ணன் ஜின்னாவின் ஆமோதிப்பும்
கவிக் கலாமின் கவிமுகப்பாராட்டும்
என் நெஞ்ச நிலத்தில் நெல்விளைத்துப் போயின!
அன்புடன் புகாரி
இந்தியனே[புஹாரி] நீ வெள்கப்படிகிறாய்(wellcom)எங்கள் வளை தளத்திற்குல் தொடரட்டும் உம்பணி
ReplyDelete