.

Pages

Saturday, March 16, 2013

[ 1 ] உள்ளம் கேட்குமே !? MORE…!

‘சமூக விழிப்புணர்வு  பக்கங்கள்’ தளத்திற்கு பல கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள் வந்து போகும் நிலையில் உள்ளம் பற்றிய தொடர் எனக்கு சவாலாகவே இருக்கும் என நினைக்கிறேன். உள்ளம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதில் மருத்துவ ரீதியாக  உள்ள பதில் அனைவருக்கும் தெரிந்த விசயமே, இருப்பினும் இத்தொடருக்கு விளக்க வேண்டியது என்பொறுப்பு !

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுக்கு பெயர் உண்டு.
கண் என்றால் பார்வை...
காது என்றால் கேட்பது...
மூக்கு என்றால் நுகர்தல்...
வாய் என்றால் பேச்சு...
உண்ணுதல் கை என்றால்...
எடுத்தல் கால் நடை...

ஆக ஒவ்வொரு உறுப்பின் செயலுக்கு  பெயர் உண்டு. உள்ளம் ஒரு உறுப்பா !? என்றால் இல்லை கண்களால் பார்க்கும் சூழல் காதுகளால் கேட்கும் வார்த்தைகள்  இவைகளின் உணர்வுகளை மூலைக்கு எடுத்து செல்லப்பட்டு அதற்கு ஏற்றார் போல் மூளையின் ஒரு பகுதியின் செயல்பாடே உள்ளம் எனலாம். ஆசை, கோபம், ஏக்கம், வெட்கம், வேசம் இப்படி நூற்றுக்கணக்கான மனித செயல்பாடுகள் உள்ளத்தின் செயல்பாடுகள் அந்த மனித செயல்பாடுகளை விவரிக்கவே  எண்ணி உள்ளேன்.

பின்னூட்டங்கள் மூலம் நான் எடுத்துவைக்க முடியாததை  வாசக நெஞ்சங்கள் அன்போடு எடுத்து வைக்க வேண்டுகிறேன்...

உள்ளம் கேட்குமே MORE...! என்ற தலைப்பில்...

தாய் வயிற்றில் வளர்ந்த பிள்ளை பிறக்கும் தருவாயில் தொப்புள் கொடி வழியாக கிடைக்கும் உணவு நிறைவடைந்து பிரசவிக்கும் குழந்தை உணவுக்காக தாய்மடி தேடி அழும். அந்த சிறு வயிற்றின் பசிக்கு தாயின் பால் இரண்டு மிடறு குடித்த மறுநிமிடமே உறங்கி போகும். அந்த சிறுஉறக்கம்  மறுபசிக்கு விழித்து அழும் மீண்டும் உறக்கம்... இப்படி பட்ட நிகழ்வு ஓரிரு மாதம் நிகழும் குழந்தையின் அழுகை உணவுக்காக மட்டுமே இருக்கும் கண் விழித்து பிறர் முகம் பார்த்து சிரிக்கும் பருவம் கண்களால் தன்னை சார்ந்தவர்கள் என்று அந்த சிறுஉள்ளம் அறிய முற்படும்.

கொஞ்சம் காலம் கடக்க கழுத்து வலுவடைந்து, பிறர் அழைத்தால் திரும்பி பார்க்கும் தனது பெயரை அந்த சிறு உள்ளம் தன்னகத்தே பதிந்து கொள்ளும் காலம் செல்ல செல்ல குழந்தையின் தேடல் அதிகரிக்கும்...இடுப்பு வலுபெற்று உட்காரும் பருவம் அதனை அடுத்து தவழும் பருவம் இப்படியாக குழந்தையின் வளர்ச்சி படு வேகமாக இருக்கும்.

உணவு சற்றே குறைய சராசரி மனிதர்கள் உண்ணும் உணவை உட்கொள்ளும் நிலைக்கு வந்தாலும் அந்த சிறு உள்ளம் மட்டும் சிறுக சிறுகவே அறிவுகளை கிரகிக்கும் ..ஓவ்வொரு பொருளையும் இது என்ன ,என்று கேட்கும் தான் அறியும் வரை கேள்விகள் ஓயாது அந்த சிறு உள்ளம் கேட்கும் MORE...!

குழந்தை உறங்க தொட்டிலில் ஆட்டியும், தாலாட்டு பாடியும் குழந்தையை உறங்க வைப்பாள் தாயவள். சில குழந்தை உடனே உறங்கும் சில குழந்தை உறங்க மறுக்கும் தாலாட்டு இன்னும் இன்னும் வேண்டும் என கேட்கும் அந்த சிறுகுழந்தையின் உள்ளம் கேட்குமே MORE..!

உள்ளம் என்றால் என்ன ?
கேட்பது வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

19 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    உள்ளம்.

    உள்ளம் தேடாதே என்று சொன்னாலும், கண் தேடாமல் இருப்பதில்லை.

    ஒன்றும் அறியாமல் மனிதன் திகைக்கின்றான்.

    உள்ளம் = மனசு.
    புத்தி = ?

    உள்ளம் = புத்தி.
    மனசு = ?

    எனக்கே குழம்புது.
    என்ன செய்ய?
    அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...சகோ ஜமால் காக்கா ...

      சற்றேற குறைய நெருங்கி விற்றீர்கள் ..

      அடுத்த வாரம் வரை காத்திருங்கள் ..உள்ளம் கேட்கும் MORE ..!

      Delete
  2. Replies
    1. தனபாலன் உள்ளம் பற்றி இன்னும் சொல்லுங்களேன்

      Delete

  3. தாங்கள் சவாலாக எதிர்கொள்ளும் ''உள்ளம் கேட்குமே''தொடர் சவால்களை வென்று வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள்.

    உள்ளம் உயர்ந்து உணர்த்தும் வரிகளாய் கேட்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ அதிரை மெய் சா அவர்களே ..!

      உங்கள் வாழ்த்துக்கு என் உள்ளம் கூறுதே நன்றிகள் MORE ..!

      Delete
  4. அறிமுகமே அமர்க்களமாக இருகின்றது...!

    குழந்தைகளின் ஒவ்வொரு நிலைகளின் மனநிலையை குறிப்பிட்ட விதம் அருமை

    உள்ளம் கேட்குமே MORE பதிவு பெப்சி குடித்த எனர்ஜி :)தொடர் பட்டையை கிளப்ப வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. மிக்க நன்றி தம்பி நிஜாம் அவர்களே ..!

    உங்கள் வாழ்த்துக்கு என் உள்ளம் கூறுதே நன்றிகள் MORE ..!

    இறைவன் நாடினால் நிச்சயம் எனர்ஜி கிடைக்கும் இன்னும் இன்னும் ....!

    ReplyDelete
  6. \ஓவ்வொரு பொருளையும் இது என்ன ,என்று கேட்கும் தான் அறியும் வரை கேள்விகள் ஓயாது அந்த சிறு உள்ளம் கேட்கும் MORE...!\\

    இவ்வரிகளைப் படிக்கும் நேரம், என் பெயரனை நினைத்தேன். ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400 வினாக்களைக் கேட்கும் என்று ஒரு குறிப்பில் படித்தேன். அதனை இம்முறை விடுமுறையில் என் பெய்ரனுடன் இருந்த பொழுது அனுபவித்தேன்.

    உள்ளம் என்பது என்ன? மூளையின் ஒரு மூலையென்பார் விஞ்ஞானிகள்; எண்ணங்களின் படித்தரங்கள் (ஏழு விதமான நஃப்ஸ்- ஆன்மாக்கள்) என்பர் மெஞ்ஞானிகள்; இன்னும் உளவியலாரும் தன் பங்குக்கு வேறு விளக்கங்கள் கூறி வருகின்ற இப்படிப்பட்டக் கூர்மையான விடயத்தை நீஙகளும் ஆராயத் தொடங்கி விட்டீர்கள் என்றால், உங்களின் ஆர்வம் பாராட்டப்படக் கூடியதே! ஆயினும், முடிவுகள் எட்டா; விடையறியா வினாக்களில் இஃதும் ஒன்றே என்பதும் என் கருத்தாகப் பதிவு செய்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் சரியான பதிலை தந்துள்ளீர்கள் .கவியன்பர்

      கலாம் அவர்களே ..தங்களின் உள்ளத்தில் உள்ள கருத்துக்கள் நப்ஸ் பற்றியதை கவியாய் வடியுங்களேன்

      Delete
  7. உள்ளம் கேட்குமே MORE..!
    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது தங்கள் விளக்கம். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..சகோதரி சசி கலா அவர்களே ..

      தங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் அளவிற்கு இறைவன்

      நல்ல தகவலை என் மூலம் தந்தருவானாக

      Delete
  8. குழந்தை மனது வேண்டும்மய்யா என பெரியோர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். குழந்தை - வாழ்வின் இனிய காலம்


    ReplyDelete
    Replies
    1. குழந்தை மனம் தெளிந்த நீரோடை ...

      குழந்தை மனம் வெள்ளை காகிதம் ...

      குழந்தை மனம் விளைக்கபடாத விளைநிலம் ..

      நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் குழந்தைமனதில்

      பதியும் அடுத்த வாரம் சிந்திப்போம் சகோ தமிழன் அவர்களே

      Delete
  9. குழந்தைக்கு மட்டுமல்ல என் மனமும் கேட்குதே more more

    ReplyDelete
    Replies
    1. அன்பு உள்ளங்களின் எதிர்பார்ப்பு என் எழுத்தின் நோக்கத்தை நிறைவேற்றும்

      Delete
  10. உள்ளம் கேட்குமே மோர் என்ற தலைப்பு அருமை உங்கள் வரிகளை உள்ளம் மட்டும் கேட்கேவில்லை கண்கள் புத்தி மனசு உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் கேட்க்கின்றன.மீண்டும் மீண்டும் எதிர் பார்க்கின்றன.வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. நேசமிகு வாசகர் தங்களின் மேலான எதிர்பார்ப்பை

      அவசியம் நிறைவேற்றுவேன் இன்ஸாஅல்லாஹ்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers