.

Pages

Friday, March 15, 2013

”காத்திருப்பு என்னும் ஏக்கம்”

தலைவி
தலைவனுக்காக
தலைவன்
தலைவிக்காகக்
காத்திருப்பது

தலைப்புக்காகக்
கவிஞன்
காத்திருப்பது

குழந்தைகள்
அரவணைப்புக்கும்
அன்புக்கும்
காத்திருப்பது

பயிர்கள்
பாயும் நீருக்காகக்
காத்திருப்பது

உணர்வுகள்
உணரப்படுவதற்காகக்
காத்திருப்பது

இருள்
வெளிச்சத்திற்காகக்
காத்திருப்பது

அறிவு
ஊட்டப்படுவதற்காகக்
காத்திருப்பது

விவசாயி
அறுவடைக்காகக்
காத்திருப்பது

பிரசவத்தில் தாய்
பிள்ளையைக் காணக்
காத்திருப்பது

தனது ஆக்கம்
பிரசுரம் ஆகும்
நாளுக்காக
எழுத்தாளன்
காத்திருப்பது

தேர்வெழுதிய மாணாக்கர்
மதிப்பெண்ணைக் காணக்
காத்திருப்பது

உழைப்பவர் யாவரும்
உரிமையாம் கூலிக்குக்
காத்திருப்பது

இந்தக்
காத்திருத்தல் எல்லாம்
என்று நிறைவேறும்
என்றே
காலமும்
காத்திருக்கும்
ஏக்கத்துடனே...
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

24 comments:

 1. காத்து இ(க)ருப்பு !

  1. பூமி மழைக்கு காத்திருப்பதுபோல !

  2. கூலித்தொழிலாளிகள் வெயிலுக்கு காத்திருப்பதுபோல !

  3. வங்கிகள் டெபாசிட் தொகைக்கு காத்திருப்பதுபோல !

  4. ஊழியர்கள் தன் சம்பளத்தை பெற 1’ ந் தேதியை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல !

  5. பயணிகள் பஸ்ஸுக்கு காத்திருப்பதுபோல !

  6. நோயாளிகள் டாக்டருக்கு காத்திருப்பதுபோல !

  7. வாலிபன் வெளிநாட்டு ”விசா“ க்கு காத்திருப்பதுபோல !

  8. மனைவி தன் வெளிநாட்டு கணவன் வருகைக்கு காத்திருப்பதுபோல !

  9. வலைப்பூவின் ஓனர் கட்டுரை கிடைக்குமா எனக் கண்விழித்து காத்திருப்பதுபோல !

  10. கட்டுரையாளர் வாசகர்களிடமிருந்து நல்ல பின்னூட்டங்களுக்கு காத்திருப்பதுபோல

  கவிக்குறளின் கவிதையை நான் எதிர்பார்கிறேன்

  காத்திருப்பு - அருமை... இனிமை...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நிஜாம் என்றாலே நிஜாமாகவே வேகம் என்று பொருளா? காத்திருக்காமல் அனுப்பிய உடனே சனிக்கிழமைக்கு முந்தைய நாளில் -இன்றே- வெள்ளிக்கிழமையில் பதிந்து விட்டீர்கள். உண்மையில், உங்களின் வேகத்திற்கு யாரும் ஈடுகொடுக்க இயலாது! மாஷா அல்லாஹ்! ஜஸாக்கல்லாஹ் கைரன்!!

   Delete
 2. நன்றாக முடித்துள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இந்தக் காத்திருப்புக் கவிதையை இலண்டன் தமிழ் வானொலியின் வியாழன் (14-03-2013) கவிதை நேரத்தில் நேற்று ஒலிபரப்பானதன் இணைப்பு (யூட்யூப்) இன்னும் எனக்குக் கிட்டவில்லை; எனினும், காத்திருக்காமல் இக்காத்திருப்பை உடன் இத்தளத்தில் பதிய விட்டேன்.

   Delete
 3. யார் யாருக்காக எதற்காக காத்திருந்தாலும் காலம் நமக்காக காத்திருக்காது. நல்ல கவி.

  ReplyDelete
  Replies
  1. காலம் நமக்காகக் காத்திருக்காது என்ற உங்களின் வரிகளே என் அடுத்தப் படைப்பின் தலைப்பாக “காலம்” என்னும் கவிதையைப் படைக்க உந்து சக்தியாக அமைந்தன. காத்திருங்கள் “காலம்” வரும்!

   துணிவுமிக்க வரிகளைத் தொடர்ந்து இடுகையில் இட்டுவரும் என் அன்புச் சகோதரி சகிகலா அவர்கட்கு என் இருதயம் நிறைவான நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

   Delete
 4. It is fantastic poem. I look forward to reading your next poem soon. Best wishes kaaka

  ReplyDelete
  Replies
  1. Dear sister Parveen Ayisha,

   Assalaamu alaikkum warahmathullahi wabarakkathahu,

   I am immensely glad to read your kind appreciation which has come from core of your satisfaction on my poem creation. Your appreciation shows that you are in expectation on my poem creation. In Sha ' Allah, I will fulfill by posting my poems regularly and seek your supplication to Allah for my health too. Because, health is so important to complete all of our ambition. By the by, while reading your comments in English language, i am so glad to know that you should be a degree holder and it's very rare in our muslim community that women are having better education, Now this is my appreciation on your education. Moreover, i humbly request you to write to my emal id if you have any doubts on EnglIsh grammar. As I am a teacher fo BASIC ENGLISH GRAMMAR TEACHING, i can help you either by clearing your doubts or sending my booklet which is like guide to improve your English grammar.

   All the best,

   Wassalam.


   Thanks and regards, Jazakkallah khairan

   Yours brother in Islam
   ABU AL KALAM

   Delete
 5. ஏக்கங்கள் பல இருப்பின்
  ஏற்ற மிகு
  ஏக்கமாய்
  எங்களுக்கு தந்து
  ஏங்க வைத்த
  எங்களன்பு கவியன்பருக்கு
  ஏக்கமாய்
  ஏகோபித்த
  என் வாழ்த்துக்கள்.

  ஏக்கங்களுக்கு முடிவில்லை
  ஏங்கியோர்க்கு
  ஏமாற்றமில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதிரவைக்கும் அற்புதமான கவிதைகளின் படைப்பாளர் அதிரை மெய்சா என்னும் அன்பு நண்பா, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்தஹூ,

   உங்களின் “ஏக்கம்” என்னும் கவிதையின் தாக்கம் தந்த ஊக்கம் தான் என்றன் இவ்வாக்கம்!

   உங்களின் அன்பான வாழ்த்துக்கு என் அன்பார்ந்த வாழ்த்தும் நன்றியும் உரித்தாகுக!

   Delete
 6. நல்ல கவி

  இன்னும் காத்திருக்கிறேன் நல்ல கவிக்காக

  ReplyDelete
  Replies
  1. அன்பின் முதலாளி அதிரை சித்தீக் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபர்க்காத்தஹு.,உங்களின் வருகைக்காக உண்மையில் காத்திருக்கிறேன், மீண்டும் அந்த “கெய்டு ட்யூசன் செண்டர்” போல் ஒன்று நீங்கள் உருவாக்கித் தந்தால் நான் மீண்டும் அங்கு ஆங்கில இலக்கணம் கற்பிப்பேன் என உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன். என்னால் பயிற்றுவிக்கப்பட்ட என் மாணவர்கள் இன்னும்-இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பதும், இன்னும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருப்பதும்; அதற்காகவே நான் “காத்திருப்பதும்” எல்லாம் உங்களின் அந்நிறுவனத்தில் அடியேன் புரிந்த பணிகள் என்ற நினைவுகள் என்றும் மாறா.

   உங்களின் காத்திருப்புக்கு என் நன்றிகள்

   Delete
 7. பதிவுக்கு நன்றி.

  அந்த மச்சானுக்காக காத்திருப்பது அந்த தோப்புக்குள்ளே, இந்த மச்சானுக்காக காத்திருப்பது இந்த தோப்புக்குள்ளே.

  தொடர்ந்து காத்துக்கொண்டே இருப்பேன் உங்களின் கவி கனிகளுக்கு.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மச்சானுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்தஹு.

   மலைவாழைத் தோப்புக்குள்ளே மச்சானைக் காணக் காத்திருப்பது போல், யாப்புக்குள் திரிந்து கொண்டிருக்கும் இம்மச்சானையும் காணும் ஆவல் கொண்டமைக்கு நன்றி, மச்சான்! மா, பலா, வாழை என்னும் முக்கனிகளாய் மரபு, புதுமை, ஹைகூ என்னும் முக்கனிக் கவிதைகளை யான் படைப்பேன் - பகிர்வேன்,இன்ஷா அல்லாஹ்!

   பருகக் காத்திருக்கும் உங்களின் பக்குவத்திற்கும் பொறுமைக்கும் அடியேன் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

   Delete
 8. நாங்களும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றோம் எப்போது வரும் அந்த சனிக்கிழமை என்று உங்களின் பதிவே எதிர் பார்த்து காத்திரிக்கிறோம்.அருமை வரிகள் காக்கா.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் நேசர்- ஹபீர் அவர்கட்கு , அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்கத்தஹு. “எப்போது வரும்” என்ற ஏக்கமும் காத்திருப்பும் என் கவிதையின் தாக்கம் என்பதைக் காணும் போதில், என் நினைவு நாடாக்கள் பின்னோக்கிச் செல்கின்றன. சில வருடங்கட்கு முன்னர், ஒரு வலைத்தளத்தில் என்னைப் பின்னூட்டங்களால் பின்னி எடுத்தவர்கள் அதிகம் பேர்; சென்ற ஆண்டின் இறுதியிலும் ஒரு வலைத்தளத்தில்”உங்கள் கவிதை எல்லாம் புரியவில்லை” என்றார் ஓர் அன்பர். உண்மையில் அவர்க்கு என்னைப் பிடிக்கவில்லை போலும். ஆனால், என் பொறுமைக்கும், கடின உழைப்புக்கும் (ஆம். நேற்று முதல் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்று வருகின்றேன்; இருப்பினும், உங்களின் பின்னூட்டம் காணவே கணினியைத் திறந்தேன்) அல்லாஹ் எனக்கு உங்களைப் போன்ற நல்லுல்லங்களை இப்பின்னூட்டங்களில் வாழ்த்துரை இடுகின்ற அன்பானச் சகோதர\ சகோதரிகளை என் கவிதையின் தாக்கத்தால் ஈர்த்து எனக்கு வழங்கி விட்டான். அல்ஹம்துலில்லாஹ். அதனாற்றான், என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாரந்தோறும் பதிவுக்கு அனுப்பி வைப்பேன்; காத்திருங்கள்; அடியேனும் காத்திருப்பேன் மறுமை வரை உங்களின் ஆதரவும் அன்பும் வேண்டியவனாக.....................

   Delete
 9. அறிவு அடைகாத்த அபுல் கலாம் அவர்களின் கவிதைக்கு காத்துக் கிடைப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு.இந்த புல் புல் பறவை பாடுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் நானும் உண்டு.

  ReplyDelete
 10. அன்பின் மூத்த சகோதரர்- முனைவர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு , அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்தஹு.

  தங்களிடம் அறிவு அடைக்கலம் ஆகியும் அடக்கமாகவே பவனி வரும் உங்களின் பண்புக்கு முன்னால் என் படைப்புகள் எல்லாம் சாதாரணமானவைகளே. ஆயினும், கவிமலரில் கவித்தேன் உண்ணும் வண்டாகத் தாங்களும் சுற்றிச் சுற்றி வருவதும் யான் அறிவேன்.

  தங்களின் வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள். செவ்வாய் எப்பொழுது வருவாய் என்று நானும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. அய்யாவின் கவி வாசகனான எனக்கு இத்தளத்தில் மூலம் பல படைப்பாளிகளின் நட்பு கிடைத்தது மிகப்பெரும் பாக்கியம்.

  வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று

  ReplyDelete
  Replies
  1. தமிழன் அய்யாவின் தமிழ்ப்பற்றால் என் கவித்தேன் பருக வரும் நீங்கள் மேலும் நண்பர்களைப் பெற்றது யாம் பெற்ற பேறு என்பேன். மிக்க நன்றி.

   Delete
 12. தாங்கள் கூரும் காத்திருப்பு ச.வி.ப.தில் கிடையாது அதையும் தாங்களே கூரியுள்ளீர் சுட சுட தருவதில் நமக்கினை நாமே

  ReplyDelete
  Replies
  1. தொழிலதிபரின் சுருக்கெழுத்துக்கு அடியேனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை (ச.வி.ப. என்றால் என்ன?)

   சுடச் சுட இங்குப் பதிவு செய்யும் விழிப்புணர்வு வித்தகர்க்கே நாம் நன்றியுடையவர்களாய் இருப்போம்.

   Delete
  2. // ச.வி.ப. என்றால் என்ன ? //

   கவிக்குறள் அவர்களே,

   சமூக விழிப்புணர்வு பக்கங்கள் என்பதாக தொழில் அதிபரின் சுருக்கெழுத்தில் இருக்குமோ என்னவோ !?

   Delete
 13. நிஜாம் அவர்களின் கருத்துத்தான் சமூக விழிப்புணர்வு பக்கங்கள் ச.வி.ப

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers