.

Pages

Monday, March 11, 2013

கூகிளும் நானும்...!

நாளும் தெரிந்தவர்
நாட்டு நடப்புகளை
நயம்பட உரைப்பவர்
நண்பர்கள் எனக்கிட்ட பெயர்
அரசியல் ஆர்வலர்
அன்றைய நடப்புகளை
அன்றன்றே  அள்ளித்தருபவர்
குடும்பத்தார்
எனை புரிந்து வைத்திருப்பது
அறிவுரைகளும்,
ஆலோசனைகளும்
வாரி வழங்கும் வள்ளல்
என் மனைவிக்கு
அன்பு மகனின் ஐயங்களை
சட்டென தீர்ப்பேன்
வியந்து பூரிப்பான்
வீட்டுக்கு ஒரு
கணினி வாங்கினேன்
தொலைதூர நண்பர்களிடம்
சுலபமாய் உரையாடினேன்
அறிவுப்பசியை போக்கினேன்
ஆனாலும் ஒரு குறை
அன்பு மகன் ஐயங்களை
என்னிடம் கேட்பதில்லை !
மகனே என்ன ஆயிற்று! ?
அய்யங்களே எழவில்லையா
தந்தைக்கு வயதாயிற்று
என்ற நெருடலா ?
மகன் சொன்னான்
அப்படியொன்றுமில்லை
என் ஐயங்களை தீர்ப்பதற்கு
கூகுள் தான் இருக்கின்றதே !
இப்பொழுதெல்லாம்
எனது வியாக்கியானங்களை
மனைவியோடு நிறுத்திக்கொள்கிறேன்
யாராவது சொல்லுங்களேன்
என் மகனிடம்
என்னைப்போன்றோரின்
பதிவுகளைத்தான்
கூகுள் பறைசாற்றுகின்றனவென்று

மு.செ.மு.சபீர் அஹமது

11 comments:

  1. இணையம் மூலம் நம்மையெல்லாம் இணைத்து வைத்திருக்கின்ற அந்த கூகுளுக்கு நன்றி !

    கூகுளின் பெருமை - அருமை !


    ReplyDelete
  2. கூகுளின் சேவை மிக மகத்தான சேவை. இவ்வுலகில் எந்த கடைக்கோடி மூலையில் இருந்தாலும் ஒரு நொடியில் இணைத்து விடும் அற்ப்புத கண்டு பிடிப்பு. அதனை மறவாது நினைவூட்டிய அன்புச்சகோதரர் சபீர் அவர்களுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. /// என் ஐயங்களை தீர்ப்பதற்கு
    கூகுள் தான் இருக்கின்றதே... ///

    இது தான் இன்றைய பிரச்சனை... சிந்திக்கும் திறன் மாணவ மாணவியர்க்கு தேவையே இல்லை என்றாகி விட்டது... இது சிந்திக்க வேண்டிய விச(ய)ம்...

    ReplyDelete
  4. எத்தனை பேரின் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. எனது பார்வையில் இந்த ஆக்கத்தின் பொருள்

    மனைவி மட்டுமே கடைசி வரை நம்மை சார்ந்து

    இருப்பாள் ...நமது கலாச்சாரம் பாரம்பர்யம் .

    அழகான வழி முறையை கற்று தந்துள்ளது ..

    என்னங்க அது என்ன என்று சிறு பிள்ளை போல

    நம்மிடம் கேட்கும் போது ..நாம் பதில் கூறும் போது

    நிகழும் நிகழ்வு அழகிய நிமிடங்கள் ..

    என் மனைவிக்கு கூகிளும் நானே ..!எல்லாம் நானே !

    //எல்லா வியாக்கியானமும் மனைவியோடு மட்டும் தான் //

    என்பது சரியான வார்த்தை

    ReplyDelete
  6. ஊரில் நடக்கும் வாழ்க்கை முறையை முன்பு அப்படியே சிறுகதையாக வடித்தீர்கள்; இப்பொழுது இவ்வாக்கம் வழியாக நம் எல்லாரின் இருதயங்களிலும் உள்ள ஏக்கத்தை நிதர்சனமாக எழுதிக் காட்டி விட்டீர்கள். உண்மை வெல்லும்; ஆம். உங்களின் ஆக்கமும் உண்மை; உங்களின் உள்ளமும் வெண்மை; எனவே இவ்வாக்கம் நிறைய பேர்களில் உள்ளத்தை வெல்லும்! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  7. உண்மைதான்...

    கூகிலில் பார்த்துத் தெரிந்துக்கொள்வது
    ஏதோ ஆண்டர் தான் இண்டர்நெட்டில் எழுதுகிறார்..என்பது
    போல் தான் பிள்ளைகள் நினைக்கிறார்கள்.

    உங்கள் ஆதாங்கம் தான் வலைப்பதிவில் எழுதும் எல்லா பெற்றோருக்கும்.

    பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கூகிள் இஸ் மை அங்கிள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வந்தோர் அனைவருக்கும் வரவேற்ப்புக்களும் வாழ்த்துக்களும் உங்களின் சிந்தனைகள் எனது சிந்தனையே

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  11. கூகுளின் நிறைய நன்மையும் உண்டு தீமையும் உண்டு அதனை பயன்படுத்தும் விதம் உண்டு. நாம் எங்கு இருந்தாலும் நம்மை இணையவைக்கும் ஒரு இணைத்தளம்.அருமையான பதிவு வாழ்த்துக்கள் மு.செ.மு.சபீர் அஹமது காக்கா அவர்களே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers