.

Pages

Tuesday, March 19, 2013

எழுதாத பட்டியல் அழுதாலும் தீராது !

ஆதிமனிதன் குறிப்பு போன்ற பட்டியல்களை கற்களில் எழுதி வாழ்ந்து வந்தான், அவனுக்கு பிறகு வந்த மனிதன் குறிப்பு போன்ற பட்டியல்களை எழுதுவதற்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் இன்னும் கல்வி, அத்தாட்சி, பத்திரம், உரிமம், மேலும் பல தேவைகளுக்கு சற்று மாற்றத்துடன் ஓலைகளை பயன்படுத்தினான், இக்காலத்தில் அனைத்து பட்டியல், குறிப்புகள் போன்றவற்றை காகிதங்களை பயன்படுத்துவதோடு நவீனங்களும் வளரவே, பிளாப்பி டிஸ்க், காம்பக்ட் டிஸ்க், இன்டெர்னல் ஹார்டு டிஸ்க், எக்ஸ்டெர்னல் ஹார்டு டிஸ்க், மெமரி கார்டு, மெமரி சிப், பென்டிரைவ், கணினி போன்ற சாதனங்களையும் இணையம் போன்ற வழிகளையும் பயன்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றான். இருந்தாலும் தேவைகள் முழுமையாக பூர்த்தி ஆவது இல்லை.

ஒரு காரியத்தை செய்ய நாம் முற்படும்போது தனி ஒருவரோ,  இரண்டு பேர்களோ அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களோ இணைந்து ஆலோசனை செய்கின்றோம், பிறகு அதை ஒரு பட்டியலாக தயாரித்து சரிதானா என்று முடிவுசெய்து காரியத்தை நிறை வேற்றுகின்றோம்.

சில படித்த மேதாவிகள், விபரங்கள் தெரிந்த வல்லுனர்கள் எல்லாம் அங்கத்தினர்களாக வகிக்கும் எத்தனையோ நிறுவனங்களில் முறையாக பட்டியல் போட்டு எந்தக் காரியத்தையும் செய்வதில்லை, அதனாலேயே முடிக்கப்பட வேண்டிய ஏகப்பட்ட காரியங்கள் வாய் சொற்களால் மட்டும் பட்டியல் போட்டபடி அப்படியே ஒரு துளிக்கூட வளராமல் கிடந்து நேரம் வீணாய் அழிகின்றது. மேலும் முறையாக பட்டியல் போடாமல் செய்த காரியங்களும் அளவுக்கு அதிகமாகப் போய் அதிலும் நேரம் பொருள் வீணாகிக் கிடக்கின்றது.

ஆனால் சமூக விரோதிகள் மட்டும் முறையாக பட்டியல் போட்டு சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ண முயற்ச்சித்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு மனிதனுக்கு அடிப்படையில் தேவையானவைகள் யாவன என்று பாப்போம். 
மனிதனுக்கு - உணவு, உடை, இருக்க வீடு. இம்மூன்றும் அடிப்படையானது. 

உணவு – உயிர்வாழ முக்கியமானது.
"பசி அடங்கிய நேரத்தில் மட்டும்" போதும் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் என்னவென்றால் அது உணவைத் தவிற வேறு எதுவும் இருக்க முடியாது.

உடை – உடம்பை மறைக்க முக்கியமானது.
கலாச்சாரம், நாடு இவைகளுக்கு இடையே உடையின் வடிவங்கள் மாறினாலும், தேவைகளுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது சமூகத்தில் அந்தஸ்த்து பெறுவதில்லை. உடையிலும் முறையான போதுமான அளவு எடுத்து தைக்கும் உடைக்கு சிறந்த அந்தஸ்த்து கிடைக்கும். 

வீடு – தங்குவதற்கு முக்கியமானது.
ஒரு வீடு வேணும், அதை எப்படி அமைப்பது? முதலாவது இடம், இரண்டாவது அஸ்திவாரம், மூன்றாவது சுவர், நான்காவது தூண், ஐந்தாவது நிலையோடு கதவு, ஆறாவது ஜன்னல், ஏழாவது உத்திரம், எட்டாவது கூரை, ஒன்பதாவது படிக்கட்டு, இது அடிப்படையானது.

மேலும் படுக்கை அறைகள், சமையல் அறை, வீட்டுக்கு தேவையான சாமான்களை வைப்பதற்கு ஒரு அறை, கூடாரம், குளியல் அறை, கழிப்பறை போன்றவைகளை எந்தந்த அளவுகளில் இருக்க வேணும் என்று முறைப்படி பட்டியல் போட்டு கட்டுகின்றோம். மேலும் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்றவைகளையும் சரிபடுத்தி இது இப்போதைக்கு வசிப்பதற்கு போதும் என்று கருதுகிறோம்.

மேலே சொன்ன மூன்று அடிப்படை வசதிகளையும் மனிதன் முறைப்படி பட்டியல் போட்டு தேவைக்கு ஏற்ப உபயோகித்து வருகின்றானா? சிந்தித்து பாருங்கள்.

நாம் தினம் தினம் என்னென்ன செய்தோம், அல்லது செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு செய்ததுண்டா? சிந்தித்து பாருங்கள்.

கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் பள்ளியில் என்ன கற்றோம், நாளை என்ன கற்க வேண்டும் என்று பட்டியல் போட்டு படித்ததுண்டா? சிந்தித்து பாருங்கள்.

இன்று எத்தனை வீடுகளில் பள்ளிச் சிறுவர்கள் படிக்கும் பாடங்களை பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர்? சிந்தித்து பாருங்கள்.

தினம் தினம் நம்மலுடைய நேரங்கள் எப்படி கழிகின்றது? உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எப்படி செலவு ஆகிறது? கடைகளில் வாங்கிய சாமான்கள் சேதம் அடையாமல் இருக்கின்றதா? தண்ணீர் மற்றும் மின்சாரம் ஒவொரு நாளும் எவ்வளவு உபயோகப்படுத்தப்படுகிறது? சிந்தித்து பாருங்கள். 

இப்படியாக இன்னும் எவ்வளவு விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறதே, இதையாவது சிந்தித்து பார்த்ததுண்டா? 

நாம் எல்லா விஷயத்திலும் முறைப்படி பட்டியல் போட்டு விழிப்புணர்வோடு செயல்பட்டால், நேரம் பொருள் எல்லாம் மிச்சம் பெரும் என்பதில் சந்தேகமில்லை என்பதையாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

சிந்தித்து பாருங்கள். சில பேர் சொல்லலாம் அதாவது சிந்தித்தால் சிரிப்பு வரும் என்று. இந்த விஷயத்தில் சிந்திப்பதினால் சிரிப்பு வந்தால், மனம் வந்தால் அழுகை வருமே, அதுக்கும் சிந்தித்து விழிப்புனர்வோடு செயல் படனும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

குறிப்பு : உங்களுடைய பூர்வீக சொத்து, தொழில், வரவேண்டியது, கொடுக்கவேண்டியது, இன்னும் பிற சங்கதிகளை சரியான ஆவணங்களுடன் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று பெரும்பாலும் யாரும் இதை முழுமையாக பட்டியல் போடாததினால் எல்லாமே முறை தவறி கை மாறிக் கொண்டிருக்கு. இப்பவாவது சிந்தித்து பாருங்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

20 comments:

 1. சிந்திக்க வேண்டிய பதிவு !

  அருமை - தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   திட்ட மிட்ட தீர்மானம் ஒருநாளும் தடம்மாறி போவதில்லை.

   Delete
 2. ஜமால் காக்காவின் கட்டுரைகள் யாவும் ஐந்து வகை கறியுடன் நெய்ச்சோறு சாப்பிட்டது போல எல்லா சுவையும் கலந்திருக்கும்.

  அதில் இது ஒருவகை சுவை.

  பட்டியல் போடாவேண்டிய விசயங்கள் நிறைந்து இருந்தன.

  சிந்திப்போம். பட்டியல் போட்டு செய்திடுவோம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   அறிவுகள் ஆறு இருப்பதுபோல், மற்ற எல்லாம் அப்படித்தான் இருக்கும் போல,

   Delete

 3. ///பட்டியல் போடாவேண்டிய விசயங்கள் நிறைந்து இருந்தன///


  பட்டியல் போட வேண்டிய விசயங்கள் நிறைந்து இருந்தன.

  என்பதாக திருத்தி வாசிக்கவும்.

  ReplyDelete
 4. ஒவ்வொருவரின் ஆக்கங்களை பார்க்கும் பொழுது இத்தளம் வலுப்பெறுகிறது மாஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து நன்றி.

   உடம்பு வலுப்பெற புரதங்கள் தேவை, ஆடை வலுப்பெற நல்ல நூல்கள் தேவை, இவ்வலைத்தளம் வலுப்பெற நல்ல ஆக்கங்கள் தேவை.

   உலகத்தில் எத்தனையோ வலைத்தளங்கள் இருக்குது, ஆனாலும் இந்த வலைத்தளத்தில்தான் பங்காளர்களின் பெயர்களை பட்டியல் போட்டு கிழமை வாரியாக வரிசைபடுத்தி உள்ளார் இந்த வலைதளத்தின் உரிமையாளர்.

   Delete
 5. வாழ்வியலின் அத்தியாவசியமான பட்டியல்கள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   உண்மையை சொல்லிவிட்டீர்கள், உண்மையும் அதுவே.

   Delete
 6. அவசியமான வாழ்க்கை குறிப்புகள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீங்கள் சொன்னதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன்.

   Delete
 7. திட்டமிட்ட வாழ்கைத் திடமான வாழ்க்கையாம்
  பட்டியலில் சொன்னீர்ப் பகிர்ந்து.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   திட்டமிட்ட வாழ்க்கை திடமான வாழ்க்கை. பழையவர்கள் எல்லோரும் அப்படித்தான் உள்ளனர், புதியவர்கள் எல்லோரும் இப்படி இருக்க விரும்புகின்றேன் மச்சான்.

   Delete
 8. அனைவருக்குமான அவசியமான அறிவுரை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   மனிதனைவிட மிருகத்தை பாருங்க, வெளியில் சென்ற வீட்டுப்பிராணிகள் சரியாக மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுகின்றன. அதுக்கு பட்டியல் போட்டு கொடுத்தது யார்?

   Delete
 9. பட்டியல் பலவிதம் அது ஒவ்வன்ற்றும் ஒருவிதம்.

  அருமை புதுமை கலந்த கலவை அதுவே உங்கள் பெருமை.வாழ்த்துக்கள் காக்கா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   இந்த பட்டியல் கலப்படம் இல்லாதது.

   Delete
 10. சிந்திக்க வேண்டிய பதிவு !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   சிந்திப்பதற்கும் பட்டியல் வந்துவிடும்.

   Delete
 11. வாழ்க்கையில் பட்டியல் அவசியம் வேண்டும்.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers