.

Pages

Wednesday, March 20, 2013

[ 3 ] தொழில் புரிவோம் வாருங்கள் !


சென்றவாரம் ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன் எத்தனை தொழிற்சாலை தொழிலாளர்கள் காலம் ஆகியவைகளை தாண்டி வருகிறது என்பதை விளக்குவதாக சொல்லி இருந்தேன்.

உதாரணமாக ஆண்கள் அணியும் டி சர்ட் கடையை அலங்கரிக்க விவசாயிகளின் உழைப்போடு துவங்குகிறது.

1. பருத்தி செடியில் காய்க்கும் பருத்திதான் முதல் மூலப்பொருள்

2. பஞ்சாலைக்கு அனுப்பப்பட்டு பருத்திக்காயும் பஞ்சும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பஞ்சு சுத்தமாக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

3. நூற்ப்பாலை தரம் பிரிக்கப்பட்ட பஞ்சு நூற்பாலையில் பல தரங்களாக நூற்கப்பட்ட நூலாக வெளிவருகிறது.

4. நூலானது லுங்கி போன்ற தயாரிப்புகளுக்கு கஞ்சி போடக்கூடிய சைசிங் மில்களுக்கும் டி-சர்ட் தயாரிப்புகளுக்கு நிட்டிங் எனப்படும் நுல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நுல் துணியாக உருவெடுத்துவிட்டபின் 

5. சாயப்பட்டறை [ Dyeing Factory ] க்கு அனுப்பப்பட்டு தேவயான கலர் ஏற்றப்படும்

6. காம்பக்டிங் அல்லது ஸ்டீம் காலண்டரிங் செய்யும் இடம் [ அதாவது துனியை அயர்ன் செய்வதுபோல் செய்து மடித்து தரும் ஓர் அங்கம் ] வந்து சேர்ந்து அதன் பின் தேவைப்பட்டால் பிரிண்டிங் செய்யுமிடம் வரும் 

7. பிரிண்டிங் தேவை இல்லை எனும் பச்சத்தில் கட்டிங் செக்ஷன் வந்து ஆடையின் வடிவத்திற்க்கேற்ப்ப Patton வெட்டப்பட்டு தையல் செக்ஷனுக்கு வந்து சேரும் 

8. எம்பிராயட், லேபிள் போன்ற தேவைகளும் முடிக்கப்பட்டு

9. பேக்கிங் செக்க்ஷசன் வந்து பேக்கிங் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆக பல நாட்களை செலவிட்டு பல தொழிலாளர்களை  வேலை செய்ய வைத்து பல தொழிற்ச்சாலைகளை கடந்துதான் ஒரு பனியன் உருவாகிறது அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்துதான் ஒரு முதலாளி இருக்கவேண்டும்.

ஒரு நிறுவனத்தை நடத்தும் பொழுது நல்ல மேலாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்க்கு என்ன தகுதிகள் தேவையாக இருக்கும் என்பதை நல்லி குப்புசாமி செட்டியார் தனது நூலில் அழகாக விவரிப்பார் அதாவது தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒரு மேலாளர் என்பவர் கடின உழைப்பாளி, கை சுத்தமானவர், பணிவுமிக்கவர் என்ற பண்புகள் இருப்பது என்பதை கருத்தில் கொண்டால் சரியல்ல இந்த குணங்கள் சாதாரன   மனிதர்களுக்கு இருக்கக்கூடிய நற்பன்புகளாகும் மேலாளர் என்பவர் நல்ல ஆளுமை திறமை மிக்கவராக இருக்க வேண்டும் அதோடு கடின உழைப்பு, நேர்மை ஆகியன சேர்ந்திருந்தால் நல்ல தேர்வாகும் என கூறுவார் மேலும் கூடுதல் பலம் சமயேஜித முடிவுகளை உடனடியாக எடுக்க தெரிந்தவராக இருந்தால் முதலாளிக்கு பயனுள்ளவராக ஆகிவிடுவார்.

உதாரணமாக நம் நிறுவனத்தில் இருந்து சாமான்களை ஏறிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு நமது வேன் செல்கிறபோது வழியில் நமது வேன் எதிரே சென்ற பைக்கில் மோதிவிட்டன பைக்கிற்கு சிரிய சேதாரம் பைக் ஓட்டியவருக்கும் காயம் ஏற்பட்டு விட்டது வேன் ஓட்டுனர் மேலாளரான நமக்கு போன் செய்து விவரிக்கின்றார் [முதலாளி ஊரில் இல்லை] நாம் என்ன செய்யவேண்டும் ?

உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்க்கு நாம் செல்லவேண்டும் முன் எச்சரிக்கையாக ஆக்டிங் டிரைவரை கூடவே அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரை சந்தித்து பரிதாபத்தைக்காட்டி நிகழ்வுகளை கேட்டு அவருக்கு உண்டான உதவிகளை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு நம்முடைய வேனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்து காரியத்தை சரியாக முடிக்கவேண்டும் வேன் கிளம்பியதும் முதலாளிக்கு போன் செய்து கண்டேன் சீதையை என அனுமார் ராமனிடம் சொல்வதாக கம்பர் கூருவாரே அது போல் பிரச்சனையை விவரிக்கும் முன்பே பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்பதை தெரியப்படுத்தி பின் விளக்கமாக சம்பவத்தை விவரிக்களாம். அதுதான் சமயோஜித புத்தி. இரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வேலை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

 1. ஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா !

  அறிந்துகொள்ள வேண்டிய தகவல்... புதிதாக தொழில் தொடங்க நினைப்போருக்கு பயன்தரும் பதிவாக அமையும்

  இரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வேலை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பல நூற்று வாசகர்கள் காத்திருப்பது போல் நானும் காத்துக்கொண்டு உள்ளேன்.

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. சுருக்கமாக இருந்தாலும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்....

  25 வருடம் இதில் அனுபவம் உண்டு...

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.

  கட்டுரை மிக மிக அருமை, சொன்ன விதமும் அருமை, தொழில் ஆரம்பிக்க துடிக்கும் நெஞ்சங்களுக்கு இது ஒரு விருந்து.

  இரண்டு நண்பர்களா?
  சந்தித்து உரையாட போறாங்களா?
  அடுத்த வாரம் இதில் வரப்போதா?

  ஒரு வருஷம் காத்திருந்தால் கையில் ஒரு பாப்பா.
  ஒரு வாரம் காத்திருந்தால் கண்ணில் ஒரு படைப்பு.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 4. ஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா !

  ReplyDelete
 5. அய்யா நல்லி குப்புசாமி செட்டியாரின் உதாரணம் அருமை

  ReplyDelete
 6. புதிய வரவான சுல்தான் மெய்தீன் அவர்களுக்கு வரவேற்ப்புக்கள் மற்றும் தனபாலன் அவர்கள் திருப்பூர் தொழில் அனுபவம் உண்டா தங்களுக்கு தெரிந்தவைகளை கருத்திடலில் பதியுங்களேன்

  ReplyDelete
 7. தொழிலின் சூட்சமங்களை
  தொய்வில்லாமல் சொல்லிய விதம்
  தொழிலாளியின் கடின உழைப்பை
  தூய்மையாய் எடுத்துரைத்த சரம்
  தூண்டியிழுக்கிறது தாயகத்தில்
  தொழில் தொடங்க

  துவளா மனம் படைத்தோராயின்
  தொடங்கிடலாம் சுய தொழிலை

  சுருங்கச்சொன்னாலும்
  சுல்லாப்பாய் சொல்லியுள்ளீர்கள்.அருமை.

  ReplyDelete
 8. உணவை அருந்து முன்னர் அவ்வுணவை நம் முன்னால் கொண்டு வர எத்தனை பேர்களின் கடின உழைப்புகள் அரங்கேறியிருக்கின்றன என்பதை நினைக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருட்கொடைகளால் இவ்வுணவு உருவாக்கப்பட்டிருப்பதையும் எண்ணி அவன் பெயர் சொல்லி உணவு உண்ணத் துவங்க வேண்டும். அஃதேபோல் உடுத்தும் உடையிலும் பின்பற்ற வேண்டும் என்பதைக் கருவாக அமைத்துத் தந்தீர்கள் இக்கட்டுரையின் நோக்கமாக என்று கருதுகிறேன். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் பெற்றன போல், ஓர் ஆக்கத்தில் கடவுளின் நினைப்பு+ கடின உழைப்பு = வெற்றி என்ற சூத்திரத்தையும் அழகாக விதைத்து விட்டீர்கள். நாநயம் மிக்க உங்களிடம் நாணயம் பெருக்குவது எப்படி என்பதை வணிகவியல் பட்டதாரிகளும் பாடம் பயிலலாம். மாஷா அல்லாஹ்!

  ReplyDelete
 9. ஆக்கம் அழகாக உள்ளது ..

  நேர்த்தியான ஆடை போல

  வாழ்த்துக்கள் நண்பா ..!

  ReplyDelete
 10. எனது கட்டுரையை அதிரை மெய்ஷா,கவியன்பன் கலாம் காதிர் அவர்கள் வெகுவாய் ரசித்து பாராட்டி உள்ளீர்கள் சந்தோஷம் மற்ற சக எழுத்தாளர்களுக்கும் வரவேற்ப்புக்கள்

  ReplyDelete
 11. நீங்கள் பதிந்த ஆக்கம் என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு தள்ளி விட்டது நாம் ஒருகடையில் பனியன் வாங்க போனால் கடைக்காரனீடம் எவ்வளவு விலை குறைக்க முடியுமோ குறைத்து வாங்கின்றோம் அது எத்தனை பேருடைய உழைப்பு இருக்கின்றது.என்பது நமக்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. பனியன் ஆவது எப்படி? பனியன் கம்பெனி BOSS எப்படியிருக்கனும் என்பதற்கு நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பதிவுக்கு நன்றி.

  ஆக ஒட்டுமொத்த உழைப்பாளிகளுக்கும் பொதுவாக இருப்பது மின்சாரம்.

  ReplyDelete
 14. k.m.a jamal mohamed காக்கா இன்னும் 5 நாட்கள்தான் உள்ளது பொறுத்திருங்கள் ஹபீப் அவர்களேன் இனி விலை குறைத்து கேட்கமாட்டீர்களே

  ReplyDelete
 15. பயனுள்ள கட்டுரை பாராட்டுக்குரியது

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers