ஒரு காலக் கட்டத்தில் குடும்ப தேவைகளுக்கு ஆண்கள் அலுவல்கள் வேலை நிமித்தம் வெளியில் சென்று பணம் சம்பாதிப்பதும், பெண்கள்
வீட்டில் இருந்து குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் பராமரித்து சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்த காலம் போயி, தற்போது தேவைகள் அதிகமாகவே இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேலைகளுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தாலும் தொலைக்காட்சியின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியாமல் அநேக பெற்றோர்கள் தவிக்கின்றனர். இதன் காரணத்தினால் வீட்டையும் குழந்தைகளையும் சரியான முறையில் பராமரிப்பதில் தவறிவிடுகின்றனர் பெரும்பாலான பெற்றோர்கள்.
வேலைகளுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தாலும் தொலைக்காட்சியின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியாமல் அநேக பெற்றோர்கள் தவிக்கின்றனர். இதன் காரணத்தினால் வீட்டையும் குழந்தைகளையும் சரியான முறையில் பராமரிப்பதில் தவறிவிடுகின்றனர் பெரும்பாலான பெற்றோர்கள்.
பெற்றோர்களே,
இப்படி உயரமான
இடத்தில் உள்ள
பொருள்களை
எடுப்பதற்கு
குழந்தைகளை
பணிக்க வேண்டாம்,
சில சமயம் அந்த
இரும்பு பீரோ
குழந்தையின் மேல்
விழுந்து விட்டால்
என்ன செய்வீர்கள் ?
நீங்கள் இப்படி செய்யலாமா ?
இப்படி உயரமான
இடத்தில் உள்ள
பொருள்களை
எடுப்பதற்கு
குழந்தைகளை
பணிக்க வேண்டாம்,
சில சமயம் அந்த
இரும்பு பீரோ
குழந்தையின் மேல்
விழுந்து விட்டால்
என்ன செய்வீர்கள் ?
நீங்கள் இப்படி செய்யலாமா ?
பெற்றோர்களே, பால் பவுடரோ அல்லது சமையலுக்கு பயன்படும் பவுடரோ எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். ஒரு வேலை தொண்டையில் அடைத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள் ? நீங்கள் இப்படி செய்யலாமா ?
பெற்றோர்களே, கோழி வியாபாரிகள் தெருக்களில் வந்து இப்படி வியாபாரம் செய்வார்கள், சிறு குழந்தைகளை அதற்க்கு அருகமையில் போகாதவாறு கவனித்து கொள்ளுங்கள், அப்படி அருகில் போகும் பட்சத்தில் பற்பல கிருமிகளினால் இனம் காணாத நோய்கள் தொற்றினால் என்ன செய்வீர்கள் ? நீங்கள் இப்படி செய்யலாமா ?
பெற்றோர்களே ! காய் கனிகளை வாங்கும்முன் அவைகள் வெட்டி துண்டாக்கப்படாமல் இருந்தால் மட்டும் வாங்குங்கள், வெட்டி துண்டாக்கிய நிலையில் உள்ள காய் கனிகளில் பல கிருமிகள் தொற்றிக்கொண்டு கேடு விளைவித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் இப்படி செய்யலாமா?
பெற்றோர்களே எல்லா விஷயத்திலும் மிகவும் விழிப்புணர்வோடு இருங்கள், உங்கள் வீட்டுக்கும் அன்பு குழந்தைகளுக்கும் உங்களின் விழிப்புணர்வு மிகவும் முக்கியமாது.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
சின்ன சின்ன விசயங்களிலும் நல்லதொரு விழிப்புணர்வு கருத்துக்கள்...
ReplyDeleteஅன்பு சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஎளிய வடிவில் அழகிய விழிப்புணர்வு !
ReplyDeleteஅழகிய படத்துடன் விளக்கிய விதம் அருமை
வீட்டில் எடுத்த படமா இது ? குழந்தைகளின் எக்ஸ்ப்ரசன்ஸ் சூப்பர் !
மனித உரிமைக்காவலர் அவர்களுக்கு வாழ்த்துகள்...
அன்பு சகோதரர் சேக்கனா எம் நிஜாம் அவைகளே, உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteசின்ன சின்ன விசயங்களிலும் நல்லதொரு விழிப்புணர்வு கருத்துக்கள்...
ReplyDeleteஅன்பு மகனுக்கு, உன் கருத்துக்கு நன்றி.
Deleteஇப்படியும் சின்ன சின்ன ஆசைகளை விழிப்புணர்வுப் பக்கங்களாய்ப் பொருத்தமான படத்துடன் காட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ள என் அன்பு மச்சானுக்கு அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பு மச்சான் அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநல்லதொரு விழிப்புணர்வு டிப்ஸ்.
ReplyDeleteபதிவில் தந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ஜமால் காக்காவின் ஒவ்வொரு ஆக்கங்களும் வெவ்வேறு சுவையுடன் இருக்கும்.
இன்னும் சுவைமிகு ஆக்கங்களை பதிவில் தரவும்.
அன்பு சகோதரர் அதிரை மெய்சா அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி. இன்னும் சுவைமிகு ஆக்கங்கள் விரைவில்.
Deleteசின்ன விஷயம் என நினைத்தால் மிகப்பெரும் ஆபத்தில் முடிந்துவிடும். சிறப்பான பதிவு நன்றி
ReplyDeleteஅன்பு சகோதரர் தமிழன் அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி, சின்ன விஷயம்தான் இருந்தாலும் ஒரு வேலை......? என்ன செய்திட முடியும்?
Deleteயாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வராமல் இறைவன் பாதுகாப்பானாக. ஆமீன்.
விழிப்புணர்வு விஷயங்களை தொகுத்து அளித்த எழுத்தாளர்,புகைப்பட கலைஞர்,இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDeleteஅன்பு சகோதரர் மு.செ.மு. சபீர் அஹமது அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநல்லதொரு விழிப்புணர்வு பதிவு. இது எல்லா பெண்களும் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை நம் குழந்தை நம் குடும்பம். மனமார்ந்த பாராட்டுக்கள் ஜமால் முஹம்மது காக்கா அவர்களுக்கு.
ReplyDeleteஅன்பு சகோதரர் ஹபீப் HB அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteபிள்ளைகள் விசயத்தில் பெற்றோகள் கவனமாக இருக்க வேண்டும்
ReplyDeleteஎன்ற ஆலோசனை பாராட்டுக்குரியது .
அன்பு சகோதரர் அதிரை சித்தீக் அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி.
Delete