கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை
வீதி அழுக்கும்
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை
அட்டைகளோ அட்டைகள்
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள்
இங்கே
எந்த அட்டை
இருந்தால் என்ன
கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்
இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்
கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது
ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர்
அசிங்கமும் கிடைக்காது
"ஐலவ்யூ" சொல்ல
கடன் அட்டை மட்டும்
கொஞ்சம்
கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்
கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை
கிடைத்துவிட்டாலோ
அலாவுதீன் பூதம்
தன்
முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு
வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த
நாகரிகத் திருடர்கள்
வாசல்வழியை
அடைத்தால்
தொலைபேசி வழி
தொலைபேசி வழியை
அடைத்தால்
மின்னஞ்சல் வழி
மின்னஞ்சல் வழியை
அடைத்தால்
கனவுவழி என்று
வந்து வந்து வழிவர்
நொந்த மனமுடன்
ஓர்
இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்
"இங்கு மட்டும்
என்ன வாழுதாம்
அந்தச்
சனியன்தான்"
என்கிறாயே
கடன் அட்டை வைத்திருப்பது இன்றைய காலத்தல் அதை நாகரீகமாகவும்,கௌரவமாகவும் நினைக்கிறார்கள். அதன் பின் விளைவுகளை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.
ReplyDeleteசிந்திக்க வேண்டிய நல்லதொரு விழிப்புணர்வு கவி வரிகள். அருமை.
வாழ்த்துக்கள்.
உண்மையான வரிகள்.
Deleteஇன்றைய பொழுதில் பர்சை திறந்தாலே அதில் விதவிதமான கார்டுகள் !?
ReplyDelete`சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை'
கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும் ! :)
ஹா... ஹா... சரியாச் சொன்னீங்க...
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteகடன் கார்டுகளின் கவர்ச்சி ஒருபக்கம், மறுபக்கம் அதன் கவர்சிகரமான கடன் சலுகைகள், இன்னொரு பக்கம் கவர்ச்சியாக கடன்களுக்கு பொருள்களை வாங்குதல், இறுதியாக கவர்ச்சியாக இருந்த கார்டுகள் தேய்ந்துபோய் கவர்ச்சியை இழப்பதுபோல் கார்டு உரிமையாளர்களும் பெரும் கவலையில் மூழ்கிஇருப்பார்கள், ஆக என்ன செய்வது என்று புலம்பும்போது வேறு ஒரு கவரிச்சியான கார்டு வந்து இந்த கடன்களை அடைக்கும்.
கார்டு கார்டுதான், கடன் கடந்தான், கவலை கவலைதான், வங்கி வங்கிதான், ஆனால் மனிதன்?
உலகம் திருந்துமா?
உள்ளம் திருந்துமா?
யாரு திருந்துவது?
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தே கடன் அட்டைகளினால் நன்மை - தீமை உண்டு
ReplyDeleteகடன் அட்டைகள் கைக்கு வந்ததும் கைகள் முனுமுனுக்கின்றன , இந்த முனுமுனுப்பு நன்மைக்கா அல்லது தீமைக்கா?
Deleteபெரும்பாலானவர்கள் அதை தீமை என்று கருதுவதில்லை, ஆனாலும் பட்டவுடன் இறுதியில் தீமை என்று கருதுகின்றனர்.
நம்ம ஊரில் இருக்கும் நிலைமை வேறு, அமெரிக்க நிலைமை வேறு. அமெரிக்காவில் கடன் இல்லை என்றால் அவன் அங்கு வாழத் தகுதியில்லாதவன்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்.
Deleteகடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கி
ReplyDeleteமடமைக்குப் பின்னால் மடிந்து விடாதிருக்கச்
சிக்கனம் தானே சிறந்த படகாகும்
இக்கணம் தீர்வாம் இது
மச்சான் உங்களுடைய கருத்தில் (சிக்கனம் சிறந்த படகு) அருமையான விளக்கம்.
Deleteபடகு சிறியதுதான், அதன் மகிமை பெரியது.
அன்பு மச்சான்! உங்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றி.
Deleteநேர்த்தியாக கடன் அடைபோற்கு மட்டுமே
ReplyDeleteமீண்டும் கடன் என்ற அடிப்படை கொள்கையை
கடன் கொடுப்போரே மறப்பதில்லை ...
ஐயா ......
ReplyDeleteஅமெரிக்கா ..
உழைப்போருக்கு உயர்ந்த இடம்
நாணயத்தை போற்றும் இடம்..
நல்ல ..பணமும் ..
நல்ல மனமும் ..
நல்ல ஒழுக்கமும் இருந்தால்
வாழநல்ல இடம் ...
இங்கு பொறாமைக்கு இடமில்லை
போட்டிக்கு இடமுண்டு
வாட்டும் வறுமைக்கு இடமில்லை
வளமைக்கு இடமுண்டு...
வந்தோரை வாழ வைக்கும்
அமெரிக்க ..
நம் போன்ற இந்தியர்க்கு
மதத்தின் பெயரால் அரசியல்
பேசும் பேதம் பார்க்கும் ..மற்ற நாடுகளை விட
அமெரிக்க ஒரு கனவு பூமி
அதுவும் இனிமையான கனவு பூமி
அன்பின் தமிழூற்று அதிரை சித்திக் அவர்களின் கூற்றுக்களை உண்மையாக ஒப்புக் கொள்கிறேன்; அடியேனும் அமெரிக்க என்னும் செல்வ வளநாட்டில் உழைத்தவன்;அங்குள்ளோரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியனவற்றைப் பார்த்து வியந்தவன் என்ற முறையில் எனக்கும் உடன்பாடே! ஆயினும், திருட்டு மட்டும் ஒழியவில்லை; அந்தத் திருடர்களின் (நீக்ரோ) வழிப்ப|றியால் என்னைக் கொலை செய்ய எத்தனித்ததாற்றான், செல்வம் கொழிக்கும் இடத்தையும்- மதிப்புமிக்க வேலையையும் விட்டு விட்டு வந்தேன். இந்தக் கொலை மற்றும் திருட்டு பயமின்றி வாழலாம் என்று மட்டும் உறுதியிருந்தால் அமெரிக்காவை விட்டு யார் தான் ஓடி வர முடியும்?
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
Deleteஇத்தளம் மிளிர ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் உழைப்பு இதில் உள்ளது. உங்களின் ஊக்கம் எங்களை வலுப்படுத்திக்கொள்ள உதவும்.
பின்னூட்டம் மூலம் எங்களின் பார்வைக்கு எடுத்துவந்த அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எங்களது நன்றி
அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என் வலைத்தளம் (”கலாமின் கவிதைகள்”) என்னும் வலைத்தோட்டத்தின் நிரந்தர வருகையாளாராவார்; அவர்க்ள் என் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நல்லுள்ளம் கொண்ட நண்பர். அவர்களின் பண்புக்கு என்றும் நாம் கடன்பட்டுள்ளோம்.
Deleteமிக்க மகிழ்ச்சி ..
Deleteபின்னூட்டம் மூலம் ஊக்கம் தரும் திரு தனபாலன்
அவர்களின் தகவல் மகிழ்ச்சியை தருகிறது
அமெரிக்காவா அல்லது கடன் நாடா?
ReplyDelete
ReplyDeleteசிந்திக்க வேண்டிய நல்லதொரு விழிப்புணர்வு கவி வரிகள். அருமை.
வாழ்த்துக்கள்.
கருத்துச்சொன்ன பாராட்டிய அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்
ReplyDelete