.

Pages

Tuesday, March 5, 2013

போகாதே... பேசாதே... பார்க்காதே... செய்யாதே...

தடை :
தடை என்று சொன்னால்,  போகாதே, செய்யாதே, பார்க்காதே, விரும்பாதே, உபயோகிக்காதே, சாப்பிடாதே, குடிக்காதே, பேசாதே, வாங்காதே, கொடுக்காதே, இன்னும் அநேகம் சங்கதிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

தடைகளில் ஒன்று நிரந்தரமானவை, மற்றொன்று நிரந்தரமற்றவை, இப்படித்தான் நாம் காலம் காலமாக அறிந்து தெரிந்து வருகின்றோம்.

உலகத்துக்கோ, தேசத்துக்கோ, சமூதாயத்துக்கோ, வீட்டுக்கோ கேடு விளைவிக்கும் எதுவாக இருந்தாலும் அது அனைத்தும் நிரந்தரமாக தடை செய்யப்பட்டவைகளே என்று கருதி, அதை யாராவது மீறி செயல்பட முயற்சித்தால் கடும் தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று சட்டங்கள் மக்களைப் பார்த்து எச்சரிக்கின்றது..

ஒரு சில தடைகள் சில பாதுகாப்பு காரணங்களை கருதி தற்காலிகமாக குறிப்பிட்ட நேரம் அல்லது காலம் வரை நடை முறை படுத்தி பின்பு நீக்கி விடுவார்கள்.

இன்னும் ஒரு சில தடைகள் குறிப்பிட்ட நேரம் அல்லது காலம் வரை நடை முறையில் இருந்து பின்பு காணாமல் போய்விடும். இவைகளைப் போல் வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் நம் எல்லோருக்கும் பொதுவாக காணப்படும் தடைகளாகும்.
வேகத் தடை :
வேகத் தடை என்று சொன்னால், போகாலாம்-ஆனால் நிதானித்து போ, செய்யலாம்-ஆனால் நிதானித்து செய், பார்க்கலாம்-ஆனால் நிதானித்து பார், இப்படி எல்லாவகைகளிலும் நிதானம் தேவை என்று சொன்னாலும் மேலும் கவனமாக செல் என்று மக்களைப் பார்த்து எச்சரிக்கின்றது.

நம் எல்லோருடைய வாழ்க்கையில் வீட்டிலும் சரி, பள்ளிக் கூடங்களிலும் சரி, வேலைகளுக்கு செல்லும் இடங்களிலும் சரி, கணவன் மனைவிகளுக்குள்ளும் சரி, சமூதாயத்திலும் சரி, அரசியல் சார்ந்த, அரசியல் சார்பற்ற எல்லா இயக்கங்களிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி, இன்னும் அனேக வட்டாரங்களிலும் சரி இப்படித்தான் இருக்கணும் என்று தடைகளும் வேகத் தடைகளும் இருந்து வருகின்றது.

பெற்றோர்கள் பிள்ளைகளுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கமாட்டார்கள், மாறாக வேகத் தடையாக இருந்து வாழ்க்கையில் முன்னேற வழி காட்டுவார்கள். குழந்தை ஒரு பொருளை வாங்கிக்கேட்டு அடம்பிடிக்குது என்று வைத்துக் கொள்வோம், ஆனால் பெற்றோர்களுக்கு தெரியும் அந்தப் பொருளை எப்போ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று, அதுவரைக்கும் அந்தக் குழந்தை ஒரு சிறிய தடையில் காத்திருக்க வேண்டும். அதே சமயம் தகாத செயல்களுக்கு நிரந்தர தடை கிடைக்கும்.

குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், பயன் தரும் வகையில் முயன்று நல்ல நல்ல காரியங்களை செய்யும் மனைவிகளுக்கு கணவர்கள் ஒரு நாளும் தடையாக இருக்க மாட்டான், மாறாக வேகத்தடையாக இருந்து அதை சிறப்பாக செய்ய யோசனை சொல்வான். மனைவிக்கு ஒரு தங்க நகைமீது ஆசை வந்து விட்டது; மேட்டர் கணவன் கவனத்திற்கு போய்விட்டது, தற்போது கையில் காசு இல்லை, ஒரு மாதம் ஆகும், என்ன செய்வது? அந்த ஒருமாதம் என்பது ஒரு சிறிய தடை அவ்வளவுதான், அது வரைக்கும் மனைவி பொறுமையுடன் இருக்க வேண்டும், அதை விட்டுட்டு கணவனை டார்ச்சர் படுத்தக்கூடாது. அதே சமயம் தகாத செயல்களுக்கு நிரந்தர தடை கிடைக்கும்.

கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார்கள், சில சமயம் தடையாக காணப்பட்டாலும் பிறகு அது வேகத் தடையாக மாறி அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடு பட்டவர்களாக காணப்படுவர். மாணவச் செல்வங்கள் எல்லாவற்றையையும் உடனே தெரிந்து கொள்ளனும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால் ஆசிரியர்களுக்கு தெரியும் எப்போது கற்றுக் கொடுக்க வேண்டும் என்று, அது வரைக்கும் மாணவச் செல்வங்கள் ஒரு சிறிய வேகத்தடையில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும், அதே சமயம் தகாத செயல்களுக்கு நிரந்தர தடை கிடைக்கும்.

இது தடையா ? அல்லது வேகத் தடையா? என்று சரியாக புரிந்து கொள்ளததினால்தான் சண்டைகளும் சச்ச்ரவுகளும் உருவாகி வெவ்வேறு பிரச்சினைகள் வெடித்து விபரீதங்கள் பல நடக்கின்றன.

எந்த விஷயமாக இருந்தாலும் அவசரப்படாமல் நிதானமாக பொறுமையுடன் செயல்படும்போது எந்த ஒரு பிரச்சினையும் வருவதற்கு இடமே கிடையாது.

இந்த உலகம் ஒரு போர்களமாக இருக்கலாம், இங்கே மனிதன் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கலாம். அவசரம் வேண்டாம், நிதானம் தேவை, பொறுமை தேவை, நல்ல புரிதல் தேவை, பிறகு என்ன வேண்டும் ?

இன்றிலிருந்து ஒருமனப்பட்டு உறுதியோடும், மரியாதையோடும், பணிவுடன் செயல்படுவோம் என்று மனதை சரிசெய்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.

குறிப்பு : நாளை நீங்களும் தடையாகவும், வேகத் தடையாகவும் காணப்படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வாழ்க வளமுடன்

அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

14 comments:

  1. வேகத்தை விட விவேகம் வேண்டும் என்பதை நன்றாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என்ன செய்வது சகோதரரே, இருக்கின்ற பலத்தோடு விழிப்புணர்வு ஆக்கத்தைக் கொண்டு மக்கள் தூங்கினாலும் விழிப்புடன் இருப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கைதான்.

      Delete
  2. புதுமைத்தலைப்புடன் நல்லதொரு விழிப்புணர்வு சிந்தனை.
    ஜமால் காக்காவின் ஆக்கம்.

    வாழ்வில் தடைகள் வேண்டும்.அவசியத்திற்கும் அனாச்சாரங்களுக்குமட்டுமே அது இருக்க வேண்டும்.என்பதை அழகாக புரியும்படியான விளக்கங்களுடன் கூடிய அருமையான கட்டுரை. நன்றி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நாம் எல்லாத் தடைகளையும் புரிந்து கொண்டு தாண்டி வந்து விட்டோம், ஆனால் இப்போ உள்ளதுகளுக்கு என்னத்த சொல்ல?

      Delete
  3. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் வந்தால் அழுகை வரும்.

      Delete
  4. நல்லதொரு விழிப்புணர்வு !

    // இன்றிலிருந்து ஒருமனப்பட்டு உறுதியோடும், மரியாதையோடும், பணிவுடன் செயல்படுவோம் என்று மனதை சரிசெய்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.//

    அருமையான வரிகள் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      உண்மையான வரிகளை நீங்களும் சொன்னீர்கள்.

      Delete
  5. அருமையான விழிபுணர்வு ஆக்கம் வேகத் தடை ஒரு வரலாறு படைப்பு அருமை K.M.A. ஜமால் முஹம்மது காக்கா அவர்களே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      தடைகள் வரும், வரும் தடைகளை தயவோடு ஏற்றுக்கொண்டால், தடைகள் நீங்கி விடும்.

      Delete
  6. // இன்றிலிருந்து ஒருமனப்பட்டு உறுதியோடும், மரியாதையோடும், பணிவுடன் செயல்படுவோம் என்று மனதை சரிசெய்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.//

    நீங்கள் கூறுவது உண்மை அய்யா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      உண்மையை எடுத்து சொன்னாலும், சொல்லும் அளவுக்கு எடுபடமாடேங்குதே?

      Delete
  7. மோகத்துக்குத் தடை என்ன மச்சான்? இற்றைப் பொழுதினில் இளைஞர்/இளைஞிகள் வேகத்தடையையும் மதிப்பதில்லை; மோகத் தடையையும் மதிப்பதில்லை. இதனால் முன்னேறிப் போகத் தடையாக நாமிருப்பதாகவே தவறான எண்ணத்தில் பலர் உளர். தொடர்ந்து உங்களின் வேகத்தடைகளை வழி நெடுகிலும் வையுங்கள் மச்சான்.

    ReplyDelete
    Replies
    1. மோகத்தடையை மறந்து விட்டேனே!?

      சரிரியாக சொன்னீர்கள் மச்சான், நீங்கள் சொல்வது போல், எல்லோருக்கும் தடை நாம்தான் என்று அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers