.

Pages

Tuesday, March 12, 2013

பெண்களே ! உஷாரா நீங்கள் !?

இந்த உலகத்தை தோற்றுவித்த இறைவன், அதில் எண்ணில் அடங்கா ஜீவராசிகளை படைத்துள்ளான், அவற்றில் நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய தன்மையில் படைத்து, அவைகளில் ஓன்று ஆணினம், மற்றொன்று பெண்ணினம் இப்படியாக பிரித்து, ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக வாழ இயல்பாகவே வசதிகளை செய்து கொடுத்துள்ளான். யாருக்கு யாரும் அடிமை இல்லை, ஆகா, இறைவன் படைப்பில் இருவரும் சரிசமம் ஆனவர்கள்.

அன்பின் பிறப்பிடம், தாய்மை, அன்னை, அம்மா, தாய்மொழி, தாய்நாடு, இன்னும் மதிக்கத்தக்க நல்ல நல்ல வார்த்தைகளைக் கொண்டும்,  அடை மொழிகளைக் கொண்டும் அழைக்கப்பட்டு வருகிறாள், வாழும் நாட்களை எடுத்துக் கொண்டால் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகநாட்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன, ஆணைவிட அனைத்திலும் வலிமை பெற்றவள் என்று பெண் கருதப்படுகின்றாள்.  பல ஆய்வு அறிக்கைகளும் இதை ஏற்றுக்கொள்கிறது.

பெண்மையைக் குறித்து உயர்த்தியும் புகழ்ந்தும் பாடாத பாடல்கள் இல்லை, எழுதாத கவிதைகள் இல்லை, வர்ணிக்காத கட்டுரைகள் இல்லை, காட்டாத காட்சிகள் இல்லை. தீட்டாத ஓவியங்கள் இல்லை, தீட்டாத காவியங்கள் இல்லை, பாவையர், பூவையர், மங்கையர், இல்லத்தரசி, குடும்பவிளக்கு, குத்துவிளக்கு என்றெல்லாம் பெருமையாகப் பேசப்படும் அந்த பெண்ணினத்திற்காக தீவிர முழக்கம், ஆண்கள் போராட்டம், புதுமைப் பெண்ணுக்கு புத்துயிர் தர ஆண்கள் பரிந்துரை. பெண்களை பாது காப்போம், வரதட்சணையை ஒழிப்போம், பெண்கள் எங்களின் கண்கள், இப்படி ஒரு பக்கம் பெண்களுக்காக ஆண்களின் குரல்கள்.

மறுபக்கம் பெண்களை பொம்மைகளாக, அழகுப் பொருளாக, போதைப் பொருளாக, பார்க்க மட்டும் ரசிக்க, ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கின்றாள் என்று பெருமையாக பேசும் ஒரு சில ஆண்கள்தானே பெண்களை சீரழிக்க விரும்புகின்றனர்.

பெண்களுக்கு கருவரையிலும் பாதுகாப்பு கிடையாது, கருவிலே பெண் என்று ஸ்கேனில் தெரிந்துவிட்டால் போதும், சிலர் கருவிலே சமாதி கட்டிவிடுகின்றனர். சிலர் சமாதி கட்டிய கல்லறையையும் விட்டு வைக்கவில்லையே, இது மாதிரி சம்பவங்களை பல இடங்களில் காணமுடிகிறதே, இதற்க்கு மானிட சமூதாயம் என்ன சொல்லப்போகிறது?
பல இடங்களில் காலந்தொட்டு நடந்து வரும் சிசுக் கொலைகள், கல்லிப்பால் கொலைகள், வரதட்சனைக் கொலைகள், இன்னும் எத்தனையோ கொலைகளுக்கு மத்தியில் பெண்களை ஒரு வட்டத்துக்குள் சுழலுபவளாகவே இந்த சமூகம் பாவித்து வருகிறது.

பெண்களே உங்களுடைய பாதுகாப்பு எந்த நிலையில் இருக்குது? நீங்கள் கண்ணீரை வெல்லும் பெண்ணாக மாற வேண்டாமா? வாயைத் திறந்து நன்றாக பேச தகுதி இருந்தும் மௌனமாக இருக்கலாமா? உங்களுடைய பெலன் என்ன? இருக்கின்ற பெலத்தோடு போராட வேண்டாமா? உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். 

உதாரணத்திற்கு இதை கவனியுங்கள், நீங்கள் வீட்டில் சமையல் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வேலையாக இருக்கும்போது எரிவாயு தீர்ந்துவிட்டது அல்லது மின்சாரம் தடைப்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம், உடனே நீங்கள் என்ன செய்வீர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையோ அல்லது அதிகாரிகளையோ தொடர்புகொண்டு இது எப்போ கிடைக்கும் அல்லது வரும் என்று வினவும்போது ஒரு சில அதிகாரிகள் தடிமனான வார்த்தைகளை பிரயோகித்தால், அந்த மாதிரி சமயங்களில் உங்களுக்கு மனம் புண்படும்படி இருக்கும், மௌனம் சாதிக்காமல் நீங்களும் அவர்களை இப்படி கேட்கலாம், அதாவது உங்கள் குரலை சற்று உயர்த்தி அதேசமயம் அக்கம் பக்கம் கேட்டுவிடாமல், "என்ன சார் நீங்க, ஒரு பெண் என்றும் பார்க்காமல் இப்படி பேசுறீங்க, நீங்க ஒரு நிறுவனத்தின் அதிகாரிதானே, கண்ணியமாக பேசதெரியாதா ?" என்று தைரியமாக ஒரு ஏறு ஏறி இறங்குங்க, பிறகு பாருங்க அவர் உங்களிடம் பணிவாக "சாரிம்மா – கொஞ்சம் பிசியா இருந்துட்டேம்மா" என்று பதில் வரும்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மனதை புண்படும்படி இருந்தால் திருப்பிக் கேட்க்க எல்லோருக்கும் உரிமை இருக்கு, அதே உரிமையை தவறுதலாக உபயோகப்படுத்தக்கூடாது.

மேலும் நீங்கள் வீட்டில் தனியாக இருக்கின்ற நேரம் வீட்டின் கதவுகளை உட்புறமாக தாழிட்டு இருங்கள், சில சமயம் அரசாங்க சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது குறிப்பு எடுக்க வந்தால், கதவை திறக்காமல் பேச தைரியம் இருந்தால் பேசலாம், இல்லையென்றால் இப்போது என்னால் பதிலளிக்க முடியாது என்று சொல்லிவிடுங்கள்.

இனம் தெரியாத இடங்களில் உங்களுடைய விபரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம், நீங்கள் பயணத்தில் இருக்கும்போது அலை பேசியில் அழைப்பு வந்தால் குடும்பம், தொழில், வேறு ஏதும்  சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசாமல், நான் இப்போது பயணத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்ளுங்கள்.

படைப்பில் எல்லோரும் நல்லவர்கள், வளர்ப்பில் ஒரு சிலர் கெட்டவர்கள், பழக்க வழக்கங்களில் ஒரு சில ஆண்களும் சரி, பெண்களும் சரி சில தவறான வழிகளில் சென்றாலும் இதையெல்லாம் தாண்டி ஆண்களிலும் பெண்களிலும் ஏதாவது சிற்சில தவறுகள் செய்து இருந்தாலும் மனம் திருந்தி நல்லவர்களாக நம் மத்தியில் இருக்கின்றார்கள். இருந்தபோதிலும், மானிட சமூதாயம் முழுமையாக திருந்தாமல் இருப்பது கவலையே !?.,

இன்று உலகம் முழுக்க அனேக மகளிர் அமைப்புகள் உருவாகி உரிமைக்காகவும் பாதுகாப்பு கருதியும் பேரணிகளை நடத்தி வருகின்றனர், இதையெல்லாம் இந்த உலகம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ஒரு நாள் வரும், அந்த நாள் மகளிர் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வோடும், உரிமைகளைப் பெற்றும், பாதுகாப்புடன் இருப்பார்கள். இது நிச்சயம் நடக்கும்.

உங்களிடம் கண்டிப்பாக, உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை, மகளிர் போலீஸ், மகளிர் அமைப்பு, வார்டு கவுன்ஸிலர், தன்னார்வ தொண்டு நிறுவனம், தீயணைப்பு நிலையம், மின்சார வாரியம், குடும்ப மருத்துவர், சமூக அமைப்பு போன்றவற்றின் தொலைபேசி எண்கள் எந்தநேரமும் உங்கள் கையில் இருக்க வேண்டும்.

பெண்களே, இப்போது நீங்கள் உஷாரா ?

உன் உரிமையை இழக்காதே ! பிறர் உரிமையை பறிக்காதே !!

வாழ்க வளமுடன்

அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

17 comments:

  1. மனித உரிமைக்காவலரின் உச்சகட்ட விழிப்புணர்வு !
    // உங்களிடம் கண்டிப்பாக, உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை, மகளிர் போலீஸ், மகளிர் அமைப்பு, வார்டு கவுன்ஸிலர், தன்னார்வ தொண்டு நிறுவனம், தீயணைப்பு நிலையம், மின்சார வாரியம், குடும்ப மருத்துவர், சமூக அமைப்பு போன்றவற்றின் தொலைபேசி எண்கள் எந்தநேரமும் உங்கள் கையில் இருக்க வேண்டும்.//

    நல்லதொரு உபதேசம்...

    உன் உரிமையை இழக்காதே ! பிறர் உரிமையை பறிக்காதே !!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      எனக்கு நம்பிக்கை இருக்கு.

      Delete
  2. மகளிரை காக்க மகத்தான விழிப்புணர்வு ஆக்கம்.

    பதிந்து மகளிர் மனதை விழிப்புணரச்செய்த மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவிற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் கொடுமைகள், பாலியல் பலாத்காரம்,கொடுஞ்செயல் புரிபவர்கள் பெருகிவிட்டதால் இத்தகைய விழிப்புணர்வு ஆக்கம்கள் அவசியம் தேவைப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.
      பெண்களை நம் கண்களாக மதிக்கணும்.

      Delete
  3. மங்கையர்க்கு சிறப்பு சேர்த்து நல்ல ஆலோசனை

    கூறிய ஜமால் காக்காவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      பெண் மென்மையானவள்.

      Delete
  4. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு...

    ReplyDelete
  5. மனித உரிமை காவலரே தாங்கள் மகளிர்க்கு அளித்த ஆலோசனைகள் சால சிறந்தது அனைத்து மகளிறும் படிக்க வேண்டிய கட்டுறை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நம்பிக்கை இருக்கு, ஒரு திருப்புமுனை உண்டாகும்.

      Delete
  6. இந்த கட்டுரை முழுக்க பெண்களின் விழிப்புணர்வு அருமை இந்த கட்டுரையை படித்த பிறகு பெண்களுக்கே ஒரு புத்துணர்வு கிடைக்கும்.வாழ்த்துக்கள் ஜமால் காக்கா அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நிச்சமாக இந்த மாதிரி விழிப்புணர்வுகள் பற்றிக்கொண்டு எரியும்.

      Delete
  7. பெண்கள் எப்பொழுதும் உசாரே

    ReplyDelete
  8. பெண்களைப் போற்றிப் பெரிதும் மதித்திடக்
    கண்களாய் இவ்வாக்கம் காண்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers