.

Pages

Saturday, March 9, 2013

இளைஞர்களை யோசிக்க வைக்கும் இரண்டு முதியவர்கள் !?

தமிழகத்தில் காந்தியின் சீடர் ஓர் சித்த மருத்துவர், விவசாயி இன்று தமிழகம் முழுவதும் பிரபல்யம் அடைந்து இருக்கும் சீரிய சிந்தனை விடாமுயற்சிக்கு சொந்தக்காரர் சசி பெருமாள் வயது முதிர்ந்தாலும் சிந்தனை இளமை சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் பிறந்து சித்த மருத்துவம் செய்து கொண்டு விவசாயமும் செய்து வாழ்க்கை பிழைப்பை நடத்தியவருக்கு தன்னிடம் வரும் நோயாளிகளில் அதிகம் பேர் மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள். அதைக்கண்ட இந்த முதியவருக்கு தமிழகத்தின் மது கொள்கையின் மீது ஓர் வெறுப்பு.
மதுவினால் எத்தனையோ இளம் பிஞ்சுகள் முளையிலேயே கருகுகிறதே எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் இந்த அரசு செவிசாய்க்கவில்லையே என்ற கவலை மனதில் தோன்ற கிளம்பிவிட்டார் காந்தியவழியில் போராட மெரீனா கடற்கரையில் ஆரம்பிக்க போலிஸ் காரர்களின் கெடுபிடி தற்கொலை முயற்ச்சி போக்குவரத்திற்கு ஊருவளைவித்தல் போன்ற குற்றம் செய்வதாய் கைது செய்தது. மீண்டும் போராட்டம் ரத்தவாந்தி 12 முறை எடுத்தார் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தினார் 57 வயது இளம் மனிதர். இளைஞர்களே ! உங்களின் கவனத்திற்காகத்தான் சிந்திப்பீர் செயல்படுவீர்

2 வது முதியவர், இவர் ஏற்கனவே உலக மக்களால் அறியப்பட்டவர் ஒரு சமுதாயத்தால் மிகவும் போற்றப்பட்டவர் உலகமக்களின் 3 ல் ஒரு பங்கினருக்கு தலைமை ஏற்றவர் வாட்டிகனின் தலைமை பீடத்தின் அரசர் போப் பெனடிக். ஆம் இவர்தான் தனது வயதை காரணம் காட்டி கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து விலகியும் விட்டார் !

இன்று இவரின் விலகல் சர்ச்சைக்குரியதாக பேசப்படுகிறது இவரின் முந்தைய செயல்பாடு இஸ்லாத்தின் ஈடுபாடுடன் இருந்தாதாகவும் இன்று அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராகவும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத சூழல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றது கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்துதான் ஆகவேண்டும் அவரின் விலகல் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கின்றது.

சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
மு.செ.மு.சபீர் அஹமது

9 comments:

  1. சிந்தனை தரும் பதிவு !

    என்னைக் கவர்ந்தவர் முதலாமவர் காரணம் குடும்பக்கொல்லியாகிய போதையை எதிர்த்து அமைதியான முறையில் போராடி வருகின்றார்.

    “ஆல்கஹால்” என்பது ஒரு போதைப் பொருளா ?

    சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு “நோயே” !

    1. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

    2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

    3. விஷேசத் தினங்களில் தங்களின் “மகிழ்ச்சி”யை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

    4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

    5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

    6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

    7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

    8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

    9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

    10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

    11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் “420” களும்...

    12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

    என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
  2. “குடி” நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

    என்னதான் தீர்வு ?

    1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

    2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

    3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக
    வழங்கப்படவேண்டும்.

    4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

    5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு “கவுன்சிலிங்” செய்வதன் மூலம் குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

    6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான “ஜூன் 26” அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

    7. நமதூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனால் நமது சமுதாய மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை கருத்தில்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்யலாம்.

    8. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் “பூரண மதுவிலக்கு சட்டத்தை” இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. எத்தனை எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன குடியால் வணங்குகிறேன் அம்மாமனிதரை உணர வேண்டும் இளைய சமுதாயம்.

    ReplyDelete
  4. நண்பர் தளத்தில் இட்ட கருத்துரை... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்...

    http://nadikavithai.blogspot.in/2013/03/33.html

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    அது இது எது?

    எதுவாக இருக்கும்?
    ஒரு கையில் அது,
    மறு கையில் இது,
    அப்போ எதுவாக இருக்கும்?

    வயது முதிர்ந்தாலும் தளராத மனம், ஆம், அதைத்தான் தேர்ந்து எடுத்தேன், இக்கால இளைஞர்கள் மனம் திருந்துவார்களா? திருந்த வேண்டிய சூழ்நிலை வந்தால் திருந்திதானே ஆகவேண்டும், சூழ்நிலை வருகின்ற வரைக்கும் ஏன் காத்திருக்கணும்? என் அன்பு நல்ல நல்ல இளைஞர்களே சிந்தித்து பாருங்கள், வயதான காலத்தில் நாங்கள் பாடு படுவது உங்களுக்காகத்தான்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. குடியை ஒழிக்க ஒரு சசிபெருமாள் அல்ல பல ஆயிரம் சசிபெருமாள்கள் உருவாக வேண்டும்

    ReplyDelete
  7. முதியோர்களும் குடியை ஒழிக்க பாடுபட்டதை வெளிக்கொணர்ந்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளீர்கள்.பாராட்டப்பட வேண்டியவை.

    ஆனால் குடியொழிப்பு என்பது அவ்வளவு சீக்கிரம் ஒழியக்கூடியது அல்ல. அதன் தீமைகளை அனைத்து தகவல் அறியச்செய்யும் ஊடக வாயிலாகவும் இது போன்ற விழிப்புணர்வு ஆகமேனும் ஆயுதன்கலினாலுமட்டுமே முடியும். ஆகவே நமது பங்களிப்பான நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரைகளை நாளெல்லாம் பதிந்து நன்மைகள் செய்திடுவோம்.


    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. குடி குடியை கெடுக்கும் அது சில சமயம் உயிரே எடுக்கும் ஆனால் அரசாங்கம் இதை தடை செய்ய விரும்பவில்லை ஆதலால் என்னவோ இவரை பற்றி கவலைப்படவில்லை அரசாங்கம்.

    யாரு தடுத்தாலும் அல்லாஹு வழங்கிய மார்க்கம் நிச்சயம் அவரிடம் சென்று அடையும். இன்ஷா அல்லாஹு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers