.

Pages

Saturday, April 6, 2013

தனியாகப் பிரித்தது !? 20/20 IPL போட்டிக்குத்தானா !

IPL கால ஓட்டத்தின் கண்டுபிடிப்பு Instant Tea, Coffee போல் இதுவும் ஓர் 
இன்ஸ்டன்ட் விளையாட்டு 5 நாட்கள் விளையாடிய டெஸ்ட் மேட்ச்,
50 ஓவர் ஒரு நாள் போட்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பாஸ்ட் புட்
காலத்தில் வந்த இளைஞர்களின் பிடித்த விளையாட்டு.

வெளி உறவு மந்திரிகள் கைகுலுக்கி உறவாடினாலும்! விளையாட்டில் 
எதிரிகளாய் பார்க்கும் கிரிக்கட்டில் ! அத்துணை நாட்டவரையும் ஒன்று 
சேர்த்த பெருமை 20/20 IPL போட்டிக்கு உண்டு.

லாட்டரி சீட்டுகள் விற்பனையாகி ஒரு மாதத்திற்கு காத்திராமல்
சுரண்டல் லாட்டரி ஒரு நம்பர் லாட்டரிபோல் 20/20 போட்டியும் உடனடி முடிவு
காணும் சுரண்டல் லாட்டரி.

விளையாட்டு குழுவின் உரிமையாளருக்கும் இது ஒரு லாட்டரி தான் 
வெற்றியை பொறுத்தது. சூது விளையாட்டும் சேர்ந்து கொண்டது இத்தோடு.
ஓர் நடிகையும் ஒரு குழுவின் உரிமையாளர் அவ்வணி வெற்றி கண்டால் 
கட்டிப்பிடி வைத்தியம் நிச்சயமுண்டு விளையாட்டு அரங்கிலேயே!

சிக்ஸரும், பவுண்டரியும், ஏன் கிளீன் போல்டும் அமைந்துவிட்டால் 
கண்ணுக்கு விருந்தாக கிட்டுமே மங்கையரின் ஆட்டம் பாட்டம் 11 நபர்
விளையாட 11000 !? பேர் கண்டுகளிக்கும் கிரிக்கெட்டை பெர்னாட்ஷா முட்டாள்களின் விளையாட்டென்றார் 20/20 IPL போட்டியைக் கண்டால் என்ன சொல்வாரோ !?

விளம்பரதாரர்களின் பொன் முட்டையிடும் வாத்து விளையாட்டை நேரில்
காண்பவரைவிட TV வழி காண்போர்தாம் அதிகம் அதனால்தான் விளம்பரங்கள் விளையாட்டு நிகழ்வைவிட அதிக நேரம் இடம்பிடிக்கின்றன தொலைக்காட்சி பெட்டிக்குள் !

இந்தியா இத்துனை மாநிலங்களாக பிரித்தது 20/20 IPL போட்டிக்குத்தானோ !?

மு.செ.மு.சபீர் அஹமது

23 comments:

  1. காலச்சூழலுக்கேற்ற நல்ல பதிவு

    இளைஞர்கள் தங்களின் நேரத்தையும், சிந்தனையையும் இதில் தான் செலுத்தி வருவது வேதனைத் தருவதாக உள்ளது.

    1. தான் சப்போட் பண்ணிய வீரர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக தற்கொலை !?...

    2. போட்டியைக் காண்பதற்காகவே அன்றைய நாள் முழுவதும் விடுமுறை எடுப்பது...

    3. போட்டியை வைத்து பெட் கட்டுவது...

    4. நண்பர்களிடேயே சண்டை வளர்த்துகொள்வது...

    5. தேச துவேசத்தை வளர்ப்பது....

    என இதுபோன்ற தீமைகளே இதுபோன்ற போட்டிகளினால் அதிகம் ஏற்படுகின்றது

    இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவர்களை நல்ல ஒரு சிந்தனையாளராக உருவாவார் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  2. அதுவும் குழந்தைகள் தேர்வு நேரத்தில்...

    எல்லோருக்கும் லாட்டரி தான்... பார்ப்பவர்களைத் தவிர...

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர் 10th பரிச்சை நேரத்தில் IPLம் கரண்ட் பிரச்சனையும் மாணவர்களை பாடாய் படுத்துகிறது

      Delete
  3. ஒரு காலத்தில் இத்தகைய விளையாட்டு வீரத்தையும் வெற்றியையும் இலக்காக வைத்து விளையாடப்பட்டது. ஆனால் தற்போதிய நிலைமை பணத்தை வைத்தும் பகையை வைத்தும் விளையாடப்படுகிறது. ஆக மொத்தத்தில் பார்க்கும் மக்கள்தான் ஏமாளியாகி விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏமாளி மட்டுமல்ல கொமாளியாயும் ஆக்கிவிடுகின்றனர்

      Delete
  4. நல்லா விலையாடும் வீரர்களை உலகெங்கும் இருந்து ஏலம் எடுத்து நடத்தும் இந்த விலையாட்டு ( விளையாட்டல்ல) இளைஞர்களை பணம் இருந்தால் வெற்றி நமக்கே என்ற தப்பான பாதைக்கு இட்டுச்செல்கிறது.

    ReplyDelete
  5. கவலை பட வேண்டாம் மின் வெட்டு

    I P L ஐ மறக்கடித்து விடும்

    ReplyDelete
  6. ”கோடி” களின் மழை திருவிழா..!

    ReplyDelete
    Replies
    1. கோடி களின் மழை
      கேடிகளின் குடையின் கீழ்
      சரிதானே மாலிக்

      Delete
  7. புரட்சி தமிழனின் வருகைக்கு வரவேற்புகளும் வாழ்த்துக்களும் விளையாட்டு வனையாகிப்போவது பணம்தான்

    ReplyDelete
  8. நண்பரே பகலில் மின்சாரம் இல்லாது IPLக்காக இரவில் மட்டும் மின்சாரம் கொடுத்தால் சந்தோசமாக எதையும் கவலைப்படாது கண்டுகளிக்க ஒரு கூட்டமுண்டு இங்கே

    ReplyDelete
  9. பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு என்று நம்பப்படுகிறது. வாசல்கதவின் முன்னால் ஆடுமேய்ப்பவர் ஒருவர் நிற்க, இன்னொருவர் கல்லை அவரை நோக்கி எறிய குச்சியால் கல்லை அடித்து விளையாடும் விளையாட்டாகத் தான் கிரிக்கெட் ஆரம்பமாகியிருக்கிறது.

    ஆடுகளை மேய விட்டுக்கொண்டு இடையர்கள் குச்சிகளை வைத்து விளையாடத் துவங்கிய கிராமிய விளையாட்டான கிரிக்கெட் அதன் பின் பல இடங்களுக்கும் பரவி இன்று உலகெங்கும் பரவிவிட்டது.

    ReplyDelete
  10. நல்ல தகவல் தமிழன் அவர்களே [அதுதானே உங்கள் பெயர்]

    ReplyDelete
  11. மங்கையரின் ஆட்டமும் நடிகையின் கட்டிப்பிடி வைத்தியத்தையும் நீங்கள் யாரும் விமர்சிக்க காணோமே?

    ReplyDelete
  12. சமீபத்தில் ஒரு கவிதையை இணையத்தில் படிக்க நேரிட்டது. அதில் கிரிகெட் பிரியர்களின் ஸாரி ரசிகர்களின் நிலை வர்ணிக்கப்பட்டுள்ளன.

    இதோ...

    ஏய் கிரிகெட் பைத்தியமே... கொஞ்சம் கவனி !!

    மட்ட பந்து கோவாலு நெலம பாத்தியா!
    மொட்டப்போட்டு தேசபக்தி படத்த காட்டுறான்.
    மசுருவெட்டி கலரடிச்சு மேப்பு போடுறான்!
    மேட்ச்ஃபிக்சிங் தகவல்வந்தா சோர்ந்து போகுறான்.

    பெப்சிகாரன் பணத்தகொடுத்து நடிக்க வைக்கிறான்!
    கிரிக்கெட்ஸ்டாரு அதைவாங்கி குடிச்சித் தொலைக்கிறான்.
    விளம்பரத்துல தாவித்தாவி கேட்சு பிடிக்கிறான்!
    ஆட்டத்துல ஆடும்போது கோட்டை விடுகிறான்.

    விளம்பரத்துக்கு நடுவுலதான் ஆட்டம் நடக்குது!
    ஆட்டத்துக்கு பின்னாலதான் பணமும் சிரிக்குது.
    டிக்கெட்டுக்கு கியூவில்நிக்க போலிஸ் ஒதைக்குது!
    பிளாக்டிக்கெட் காரனுக்கு சலாம் போடுது.

    பாரம்பரிய ஆட்டமெல்லாம் தொலைஞ்சு போச்சுது!
    மட்டபந்து ஆட்டம் மட்டும் தாவிகுதிக்குது.
    காமன்வெல்த் உழல் இப்போ சந்திசிரிக்குது!
    உலககோப்பை தடுகிடுதான் காத்து நிக்குது.

    நாடுபோகும் நெலமைய-நீ பார்த்து நடந்துக்கோ!
    விளையாட்ட விளையாட்டா ரசிக்க கத்துக்கோ.
    ராசாக்கள் மந்திரியாகும் நாடு இதுதான்பா!
    எதிர்க்கலனா தேசத்துக்கே மொட்ட தானப்பா.

    நன்றி : நட்புடன் ரமேஷ்

    ReplyDelete
  13. உதைப்பந்தை ஓரங்கட்டி விட்டு உருப்படாத மட்டைப் பந்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அடியேனும் ஓர் உதைப்பந்து ஆட்டக்காரன் என்ற ஆதங்கத்தில் இருப்பவன்; அதனைச் சரியாக வெளிப்படுத்தி விட்டீர்கள், பெர்னாட்ஷாவின் பொன்மொழியில்!

    ReplyDelete
  14. சகோ.செக்கன்னா m நிஜாமின் நினைவஊட்டல் கவிதை பவுண்டரியை தொட்டுவிட்டது எங்கே அந்த மங்கையர்கள் போடுங்கள் உங்கள் ஆட்டத்தை

    ReplyDelete
  15. பதிவுக்கு நன்றி.

    எல்லாமே அப்படிதான்.

    நானும் ஏதேனும் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன், அது என்ன தெரியுமா?

    இது வரைக்கும் நம்ம ஊரில் யாரும் நினைத்துக் கூட பார்க்காத தொழில்.

    இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் இத்தளத்தில் வெளியிடுவேன்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  16. மச்சான் நானும் பங்கு போடலாமா?

    ReplyDelete
  17. மங்கையரே ஒரு ஆட்டம் போடுங்கள் இங்கே 2 பார்ட்னர்கள் உருவாக இருக்கின்றார்கள்
    அது சரி தொழில் சம்மந்தமாக எழுதும் பொழுது சப்தமில்லாமல் இருந்துவிட்டு IPL அரங்கில் தொழில் உருவாக்கமா அல்ஹம்து லிலாஹ் ஆரம்பம் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டாக இருக்கும்போதுதான் எனக்கு நல்ல மூட் வரும், அதுதான் இந்த தொழில் மூட்.

      Delete
  18. நச்சின்று சொன்னீர்கள் காக்கா அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers