.

Pages

Saturday, April 27, 2013

[ 7 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

அன்றாடம் நடைபெரும் பள்ளி கூட வகுப்பறையில் ஆசிரியரின் அணுகு முறை எப்படி இருக்கும் இதனை உளவியல் ரீதியாக பார்ப்போம்...

ஆசிரியருக்கு பாடம் நடத்திட  காலகெடு  நிர்வாகம்  கட்டளை இட்டிருக்கும் காலாண்டிற்குள் இத்தனை பாடம் நடத்தி முடிக்க வேண்டும்.

அறையாண்டிற்கு ..இத்தனை பாடம்  ..கல்வியாண்டு முடிவிற்குள் அனைத்து பாடங்களும் முடிக்க பட வேண்டும் இவையல்லாமல் வகுப்பில் நூறுசத விகிதம் தேர்வு பெற வேண்டும் என்ற கட்டளையும் இட்டிருப்பார்கள். இதுவே ஆசிரியரின் கடினமான அணுகு முறைக்கு காரணமாக அமைகிறது. நான் முன்பு கூறிய நான்கு பின்னணி கொண்ட மாணவர்களின் நுகர்வு அடிப்படையிலேயே  ஆசிரியரின் அணுகு முறையும் அமைகிறது.

சில பள்ளிகளில் நல்ல கல்வி பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகமாக காணப்படும் நிலை என்றால் அங்கு அமைதியான சூழலும் நிகழும். ஆனால் நான் கூறிய வறுமையில் வாடும் கல்வி பின்னணி இல்லா சூழலில் வளர்ந்த பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்ப்பிக்கும் முறை வழக்கத்திற்கு மாறான முறையில் இருக்கும். தனக்கு இவ்வுலகில் எந்த வசதியும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வாடிய முகம், வதங்கிய உள்ளம் உற்சாக மில்லா சூழல்  இதையறியா ஆசிரியர் கனிவான அணுகுமுறையை கையாளாமல், தான் நடத்திய பாடத்தை கவனிக்க வில்லையே என்ற குற்ற பார்வையே அவன் மீது  விழும் கடுமையான வார்த்தைகள், சில நேரங்களில் அவமதிப்பு ,சில நேரங்களில் வகுப்பை விட்டு வெளியே அனுப்பும் தண்டனை என்று மேலும் உள்ளத்தை வதங்க வைக்கும் என்ற உளவியல் ரீதியான  ஒரு தகவலைக் கூற விரும்புகிறேன்.

ஆசிரியருக்கும் மன அழுத்தம் இருக்கவே செய்யும் அவருக்கும் உளவியல் வல்லுனரின் ஆலோசனை தேவை. அதே போன்று வாழ்க்கை பின்னணி அறிந்து மாணவருக்கும் உளவியல் வல்லுனரின் ஆலோசனை தேவை.

எனவே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் வல்லுநர் நியமிக்க பட வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கவனி.. கவனி.. என்பார்கள் ஆனால் மாணவர்களை ஒவ்வொருவராக கவனிக்க வேண்டியது ஆசிரியரே ஆவார். 

சில மாணவர்களுக்கு பாராட்டு தேவை, 
சில மாணவர்களுக்கு அன்பு தேவை, 
சில மாணவர்களுக்கு ஆறுதல் தேவை.

உள்ளத்தை அறிந்து ஆசிரியர்கள் செயல்பட்டால் மாணவர்களின் உள்ளம் கேட்கும் MORE ... MORE... ஆசிரியரின் பாடத்தை கேட்பர்.

உயர்நிலை பள்ளிக்கூடம் செல்லும் ஏழைக் குழந்தைகள் உள்ளம் கேட்கும். சாய்ந்து கொள்ள ஒரு தோல் வேண்டும் என்று அது என்ன !? என்பதை அடுத்த தொடரில் காண்போம்....
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

28 comments:

  1. அருமையான அறிவுரை

    அரசு இவற்றைக் கவனத்தில் கொள்ள முன்வர வேண்டும்.

    // எனவே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் வல்லுநர் நியமிக்க பட வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கவனி.. கவனி.. என்பார்கள் ஆனால் மாணவர்களை ஒவ்வொருவராக கவனிக்க வேண்டியது ஆசிரியரே ஆவார். //

    கண்டிப்பாக கவனத்தில்கொள்ள வேண்டியவை

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி ...தம்பி நிஜாம்

      Delete
  2. நமது வாழ்க்கையில் நான்கு பருவங்களாக பிரித்து அதில் குழந்தை பருவம், வாலிபப் பருவம், குடும்பப்பருவம், முதுமைப்பருவம் என கணக்கீடு செய்தால் இதில் ரொம்ப முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வாலிபப் பருவமே.

    சமூகம் போற்றக்கூடிய பொறுப்பான மாணவன் / மாணவி என்றும், பெற்றோர்கள் மகிழக்கூடிய நல்ல பிள்ளை என்றும், ஆசிரியர்கள் பெருமைபடக்கூடிய நல்ல மாணவன் / மாணவி என்று இப்பருவத்தில்தான் உருவாகின்றன...

    அதேபோல் பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதும், குற்ற செயல்களில் ஈடுபடுவதும், கல்வியில் பின்தங்குவதும், என எல்லாமும் இந்த வாலிப பருவத்தில்தான் உருவாகின்றன...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாரம் இது பற்றிய ஆய்வைத்தான்

      வாசகர் முன் வைக்க உள்ளேன் ..நிஜாம் அவர்களே

      Delete
  3. இன்றைய வாலிப பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை உணர வேண்டும். மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.. இந்த நேரத்தில் வாலிப பருவத்து மாணவ / மாணவிகளை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேல் நிலைப் பள்ளிகளில் இந்த வாலிப பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

    ReplyDelete
  4. பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடமை என்று மட்டும் இருந்துவிடாமல்......மாணவர்களின் ஒழுக்கங்கள், அவர்களின் கடமைப் பொருப்புனர்வுகள், மார்க்க பற்றுதல்கள், கல்வி அறிவு, ஆரோக்கியம் என அவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்தும் இடமாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி நிஜாம் ..நமதூர் பள்ளி ஆசிரியர்களுக்கு இத்தகவலை

      எத்தி வைக்க வேண்டுகிறேன்

      Delete
  5. குறிப்பு : ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இத்திட்டம் நிறைவேறினால் இதன் மூலம் மாணவர்களை ‘ COUNSELLING ‘ செய்து அவர்களின் வழிகேட்டிலிருந்து தடுக்கலாம்.

    ReplyDelete
  6. எனது மகன் படிக்கும் பள்ளியில் மாணவர் pass ஆகி வேறு class மாறும் பொழுதே ஆசிரியரும் மாணவரோடு class மாறுவார் ஆகையால் மாணவரின் மனோ நிலை அந்த ஆசிரியருக்கு நல்ல பரிச்சயமாகும்
    நண்பரே நல்ல ஆய்வு

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் நண்பரே ...

      நன்றி

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான அறிவுரை.
    கடந்த காலங்களில் வேண்டுமானால் ஆசிரியர்கள் அவர்கள் பணியை முறையாக செய்தார்கள் என்று நான் சொல்வேன், அந்த மாதிரி நாட்களில் ஆசிரியர்கள் மாலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரை வீடு வீடாக வருவார்கள், மாணாக்கர்களை கவனிப்பார்கள். அந்த நேரத்திலும் இலவசமாக டியுசன் எடுப்பார்கள்.

    அன்று போல் இன்று எத்தனை பேர்?

    சகோ சித்திக் அவர்கள் சொன்னதுபோல் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களை முறையாக கவனிக்க தங்களை பழகிக்கொள்ள வேண்டும்.

    பாடம் நடத்தும் சமயங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன் உபயோகப் படுத்தக்கூடாது. இன்னும் அனேக விஷயங்களில் ஆசிரியர்கள் ஆசிரியராக இருக்க வேண்டும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. இன்று அனேக ஆசிரியர்கள் ஏன் முறை தவறி நடக்கின்றனர்?

      Delete
    2. சரியாக சொன்னீர்கள் ..காக்கா

      Delete
  8. அவசியம் ஆசிரியர்களும் மாணவ,மாணவியர்களும் படிக்க வேண்டிய பதிவு.

    சகோதரர் அதிரை சித்திக் அவர்கள் சொன்னது போல ஆசிரியர்களும் மாணாக்களும் புரிந்துணர்வு கொள்ளல் வேண்டும். மாணவர்களை ஆத்திரப்பட்டு அடிபணிய வைப்பதை விட அன்பால் அடிபணிய வைக்க வேண்டும். அவர்களின் மன நிலையை புரிந்து அதன்படி அவர்களுக்கு பாடம் கர்ப்பித்தால் நல்ல தரமான மாணாக்களை உருவாக்கலாம்.

    தொடருங்கள் உங்களின் MORE...MORE..ஆக்கத்தை....

    ReplyDelete
  9. மாணாக்களை ஆசிரியர்கள் புரிதல் அவசியம்

    ReplyDelete
  10. ஆசிரியர்கள் மாணாக்களை எப்படி வழி நடத்தவேண்டும் என்பதற்கு உங்களின் இந்த படைப்பு அருமை.தொடரட்டும் உங்களின் மோர் மோர் பதிப்பை.

    ஆசிரியர்கள் மாணாக்களை புரிந்துக்கொண்டு அதன் படி அவர்களை அன்பால் அரவணைத்து கொண்டுச்செல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ஹபீப் அவர்களே .

      நீங்கள் ஆதரிப்பது போன்று ஆசிரிய பெருமக்களும்

      ஆதரிக்க வேண்டும்

      Delete
  11. கவனி கவனியென மாணவர்களை ஆசிரியர் சொல்வது போல,
    இப்படி செய் செய்யாதே என ஆசிரியர்களை வழிப்படுத்த
    உளவியல் வல்லுனரின் அவசியத்தை
    சரியாக சொல்லியுள்ளீர்கள் சித்தீக் காக்கா!

    ReplyDelete
    Replies
    1. வருக ..வருக ..அன்பு சொந்தம் ஜகபர் அவர்களே .

      தங்களின் பின்னூட்டத்தால் இவ்வலைத்தளம் பெருமை

      அடைகிறது ..நல்ல ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்

      Delete
  12. நீங்கள் நினைப்பது நடக்கட்டும்... நடக்க வேண்டும்...

    கல்வி மீண்டும் சேவையாகவும் மாற வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..சகோ திண்டுக்கல் தனபாலன்..அவர்களே

      நல்ல பல கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

      Delete
  13. ஆசிரியர்களுக்கும் நல்ல யோசனைகள் சொன்னமைக்கு நன்றி

    ReplyDelete
  14. நன்றி சகோதரி ...தங்கள் வருகை நல்வரவாகுக

    ReplyDelete
  15. அழகிய அறிவுரைகள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers