மாற்றம் வேண்டின் மாற்றுக துயரம்
காட்டிடும் வழிகள் கண்டு சோம்பல்
பூட்டினை உடைத்துநீ புறப்படு இளைஞனே
திரைகடல் கடந்து தேடும் செல்வமும்
விரைவுடன் வளர்ந்து வீடு சேர்ந்திடும்
தடைகள் எல்லாம் தாண்டிநீ உழைத்திடு
விடைகள் கிட்டிடும்; விடியல் எட்டிடும்
உலகமும் சுருங்கி உன்னைத் தேடியே
பலவகை வழிகள் பார்ப்பாய் அண்மையில்
தொடர்ந்து வாய்ப்புகள் தொடரும் வாயிலில்
படர்ந்து நோக்கியே பயணம் செல்கவே !
முன்னேற்றத்திற்கு ஏற்றம் தரும் நல்லதொரு வரிகள்
ReplyDeleteவாழ்த்துகள் கவிக்குறள்...
ஆம். நீங்கள் எப்பொழுதும் “விழிப்புணர்வு” முன்னேற்றம், தன்னம்ப்பிக்கைப் பற்றிய கவிதைகளையே விரும்பிக் கேட்பதால், இதனைப் பதிவுக்கு அனுப்பினேன்; நான் எதிர்பார்த்த வண்ணம் இருந்தது உங்களின் பின்னூட்ட எண்ணம் என்றறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உங்களின் உளமார்ந்த வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள், “விழிப்புணர்வு வித்தகரே!”
Delete/// உலகமும் சுருங்கி உன்னைத் தேடியே... ///
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
உலகம் சுருங்கி “உலகம் உன் கையில்” என்ற விளம்பரம் சொல்லும் பேருண்மையை இன்றும் காண்கின்றாம்; கணினி என்னும் காணியில் நாம் விதைக்கும் நல்விதைகளால் மிகவும் பயனுள்ள அறுவடையை நாம் பெறுகின்றோம்; காரணம்; உலகம் சுருங்கி உள்ளங்கையில் பார்க்கும் அளவுக்கு இந்தக் கணினி யுகம் செய்த மாபெரும் புரட்சியில் “வேலை வாய்ப்பு” என்னும் அரிதான ஒன்று, மிகவும் எளிதானதாக மாறிவிட்டது இன்று!
Deleteகாட்டு: இங்கு நிறுவனத்தில் என் சக ஊழியராக இருந்த நண்பர் ஒருவர் இன்று ஆஸ்திரேலியாவிற்கு வேலை வாய்ப்புடன் செல்கின்றார்; அவர் என்னுடன் பணியாற்றிய பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லாமை கண்டு அடியேன் பயிற்றுவித்தேன் (இலவயமாக); அன்று என்னிடம் பயின்ற என் மாணவரான இவர், இன்று ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புடன் விசா பெறும் அளவுக்கு இந்தக் கணினி என்னும் “உலகைச் சுருக்கிய” ஓர் அற்பதம் என்பதை மனத்தினில் வைத்தே இக்கவிதையை அடியேன் வனைந்தனன் எனபதைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு என் மனம் உவக்கும் நன்றிகள் அய்யா.!
Excellent
ReplyDeleteThanks Uncle
Dear niece, Assalaamu alaikkum,
DeleteHow have you been? I didn't see your comment on the last posting : AMMA ENNUM ANBAI NESI" which is the highlight of my creations because it is a contribution to love of my Umma who died. I think you should have left out of station. Anyway, go through that poem too.
You are always welcome.
Take care
Yours
Uncle.
தடைகள் எல்லாம் தாண்டிநீ உழைத்திடு.
ReplyDeleteஇன்னும்பல படைத்து வெற்றிபெற வாழ்த்துக்கள்
ஆம், அன்புச் சகோதரர் கவியாழி கண்ணதாசன் அவர்களே! கண்ணதாசனின் பெயரினைப் பெற்றதால் கவிதைகளின் தாசனாகி விட்டீர்கள்! உண்மையில் இவ்வரிகள் எனக்குள் நானே சொல்லிக் கொள்ளும் வரிகளாகும். ஒவ்வொரு நாளும் ஏற்படும் தடைகளை எண்ணினால்(மனத்தால் நினைத்தாலும்; கணக்கிட்டு எண்ணினாலும்) முன்னேற்றம் என்பதைக் காண இயலாது என்பதை அனுதினமும் எனக்குள் சொல்லிக் கொண்டே உழைக்கிறேன்; அத்னையே அனைவர்க்கும் பயிற்றுவிக்கிறேன் பாடலின் வழியாக; உங்களையும் அவ்வரிகள் ஈர்த்தன என்பதில் அடியேன் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன்! உங்களின் வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள் அய்யா.
Deleteநல்ல கவி
ReplyDeleteஇளைய சமுதாயத்திற்கு
ஊக்கம் தரும் கவி
இன்றைக்கு சவூதியில் நம்மவர்களை வெளியேற்றிக் கொண்டிருப்பதால்- இந்தியாவிலும் வேலை வாய்ப்புகளை விரைவாகப் பெற்றிட இயலாமல் இருப்பதால், இளைஞர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அல்லல்களை எண்ணினேன்; அதனையே கருவாக்கி இப்பாடலை யாத்தேன் என்பதை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Deleteதமிழூற்று அதிரை சித்திக் அவர்களின் ஊக்கம் தரும் உளமார்ந்த வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமச்சானின் கவிதைக்கு கருத்து எழுதணும் என்றால் கொஞ்சம் யோசனை செய்யணும், ஏன் தெரியுமா?
கே.பாலச்சந்தர் படம் என்றால் அவ்வளவு சீக்கிரம் விமர்சனம் செய்யமுடியாது. அதுபோல்தான் மச்சானின் கவிதையும், பொருள் ஆழமாக இருப்பதால் அதை கண்டெடுத்து பின்பு கருத்து எழுதுவது என்பது ஒரு அலாதிதான்.
தொடர்ந்து வாய்ப்புகள் தொடரும் வாயிலில்
படர்ந்து நோக்கியே பயணம் செல்கவே !
எனக்கு பிடித்த வரிகள்.
பாராட்டுக்கள் மச்சான்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
This comment has been removed by the author.
Deleteஅன்பின் மச்சான் அவர்களின் ஆழமான ஆய்வுக்கும் அகமகிழ்ந்தளித்த வாழ்த்துக்கும் என் அகமுவக்கும் நன்றிகள்!
Deleteநன்றி மச்சான்.
Deleteமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். வரிகளில் எதோ ஒரு மெஸ்மெரிசம் இருக்கு. மீண்டும் மீண்டும் வாசிக்க தோனுகிறது.
ReplyDeleteவாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று
உண்மையில் உங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் உங்களின் இரசனையையும் உன்னிப்பாக ஊடுருவிப் படித்துணரும் உங்களின் ஆழமான தமிழ்ப்புலமையயும் காண்கிறேன். அதனால் என் விளக்கம் தர வேண்டிய அவசியத்திற்கு ஆளாவதால், “தற்பெருமை” என்றோ சுயபுராணம் என்றோ எவரும் கருதிட வேண்டா.
Deleteஇப்பாடலில் யான் வைத்துள்ள சூத்திரம் “ஆசிரியப்பா” வாய்பாட்டின் சீரமைபிலான அடிகளாகும்; அதனாற்றான் “ஓசை” நயம் கூடி உள்ளத்தில் பதியும் வண்ணம் அமைந்து விட்டது, உங்கட்கு “மெஸ்மரிசம்” என்னும் அளவுக்கு ஓர் ஈர்ப்பையும் திரும்பத் திரும்பப் வாசிக்கத் தூண்டும் ஓர் அவாவினையும் உண்டாக்கியது. இப்பாடலுக்கு இவ்வாய்ப்பாட்டை அடியேன் தெரிவு செய்வதற்கு முன்பாக இணையத் தளத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருந்தது “பாட்டும் நானே; பாவமும் நானே” என்ற பாடலை எழுதியவர் கவி.கா.மு.ஷெரிஃபா? கவியரசர் கண்ணதாசனா? என்ற செய்தியே அஃதாகும்! இப்பாடலின் ஓசை நயம் கூடியதற்குச் சினிமாப்பாடலாய் இருந்தாலும் இதில் இலக்கணம் கூறும் சீர்/ அசைகளின் அமைப்பில் வனையப்பட்டதாற்றான் ஈர்ப்பினைப் பெற்றதும்; மீண்டும் மீண்டும் பாடத் தோன்றும் / மனத்தினில் பதியும் மரபின் வடிவம் பெற்றதும் எனபதை உணர்ந்தேன். அதனடிப்படையில் என் பாடலையும் சீர்/ அசைகளைக் கொண்டு வந்தேன்; ஆசிரியப்பா எனும் யாப்பிலக்கணம் ஏற்கும் வாய்பாட்டின் அமைப்புக்குள் அமைத்தேன். உங்களின் பின்னூட்டம் தந்த ஊக்கத்தால் என் நீண்ட நாள் ஆவலொன்று நிறைவேறும் என்றே கருதுகிறேன். ஆம். இதே ஆசிரியப்பாவில் “ கருவிளம், கருவிளம், கருவிளம், கருவிளம்” என்னும் சீர்/ அசை வாய்பாட்டின் அமைப்பில் ஒரு பாடல் எழுதினால் எந்த அளவுக்கு “ஓசை” நயம் கூடி உள்ளங்களை ஈர்க்கும் என்பதை யான் அறிந்து வைத்துள்ளேனாதலால், இறையருளால் அப்பாடலை யாத்திட வேண்டிய ஓர் ஆவலைத் தூண்டியதற்கும், உங்களின் வாழ்த்துரைக்கும் என் நெஞ்சம் படர்ந்த நன்றிகள்!
K.M.A.J அவர்களின் கருத்துதான் எனது கருத்தும் அந்த மச்சான் என்ற வார்த்தை மட்டும் இல்லை
ReplyDeleteமச்சானுக்கு அளித்த நன்றியுரையே இந்த மருமகனார்க்கும் ஆகட்டும்.
Deleteவாழ்த்துகள் கவிக்குறள்...அபுல் கலாம் காக்கா அவர்களுக்கு.
ReplyDeleteஅன்பின் நேசர் ஹபீப் அவர்களின் நேசமிகு வாழ்த்துக்கு நெஞ்சம் படர்ந்த நன்றிகள்.
Deleteகவியன்பரின் கருத்துள்ள கவி
ReplyDeleteகணீர் குரலை கேட்டிடும் செவி
படித்ததில் பிடித்தவை
//தடைகள் எல்லாம் தாண்டிநீ உழைத்திடு
விடைகள் கிட்டிடும்; விடியல் எட்டிடும்//
அதிரை கவிஞர் மெய்சா அவர்கள் அகமுவந்தளித்த வாழ்த்துக்கு என் அகம்நி|றைவான நன்றிகள்.
Deleteஇந்தக் கந்தக மண்ணில் வெந்து உழைக்கும் பொழுதெல்லாம் முந்தி வரும் தடைகளை அனுதினமும் அனுபவிக்கின்றோம்; அதிலும் குறிப்பாக “காலைத் தூக்கம்” உதறிவிட்டு- தியாகம் செய்து வேலைக்குச் செல்கின்றோம்” இதனை அடிப்படையாக வைத்தே இவ்வரிகளை எழுதினேன்.