.

Pages

Tuesday, April 30, 2013

ஏமாறாதே !? ஏமாற்றாதே !?

இந்த வாரம் ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு ஆக்கத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்ப காரணம் மக்கள் இன்னும் மூட நம்பிக்கை என்னும் ஏமாற்றத்தில் இருப்பதுதான். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

அனேகமனோருக்கு 8, 13 போன்ற எண்கள் என்றாலே அலர்ஜி. அது ஒரு துரதிஷ்டமான எண்கள் என்று. யாரும் 8ம் 13ம் நம்பர் உள்ள வீட்டு எண்ணில் குடிவர மறுப்பார்கள். அந்த நம்பர் உள்ள ஹோட்டல் அறை எண்ணில் தங்க மறுப்பார்கள். அந்த நாளில் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க தயங்குவார்கள். சில/பல நாடுகளில் ஆஸ்பத்திரிகளில் 8ம் 13ம் எண் உள்ள வார்டே கிடையாது.

எண்களை உருவாக்கியது மனிதன், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் பூஜ்யம் வரை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப வடிவங்களும் மாறும். இப்போது இந்த வடிவங்களை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. பாருங்கள் இதுதான் இன்று உலகளவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் வடிவமாகும். இதில் மூட நம்பிக்கையாளர்களுக்கு பிடிக்காத எண்கள் 8ம்  13ம். நானும் பல பேர்களிடம் கேட்டுப்பார்த்து விட்டேன் ஒரு விடையும் இன்றளவும் கிடைக்க வில்லை.

நாட்களை உருவாக்கியது மனிதன், எண்களைப்போலவே ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எது நல்ல நாள் எது கெட்ட நாள். காரணம் கேட்டால் தெரியவில்லை.

நேரங்களை உருவாக்கியதும் மனிதன், இதிலும் நல்ல நேரம், கெட்ட நேரம், இன்னும் எனக்கு விடை கிடைக்க வில்லை, ஒரு சமயம் நல்ல நேரத்தில் விடை கிடைக்கப் போகுதோ ?

குழந்தை இறைவனால் கொடுக்கப்படுகின்ற ஒரு உயிர், குழந்தை பிறந்த நேரம் பார்த்து குடும்பத்தில் ஏதாவது நடந்திருந்தால், அவ்வளவுதான் அந்தக் குழந்தை. அதுவும் அது பெண் குழந்தையாக இருந்தால் சொல்லவே தேவை இல்லை.

மனிதனுக்கு உண்டான அடிப்படை தேவைகளில் வீடும் ஒன்று. அதை எல்லோரும் இப்படித்தான் கட்டிக் கொள்ளனும் என்றில்லை, அவரவர் விருப்படி எப்படி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். கட்டும்போது தனித்தோ அல்லது கூட்டியோ அந்த எட்டும் பதிமூன்றும் வராதவாறு வீடு மற்றும் உள் அளவுகளை அமைத்து, நல்ல நாட்கள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, எல்லாம் பார்த்து அந்த புதிய வீட்டுக்குள் குடி போய் இருப்பார்கள், கை தவறி ஒரு கண்ணாடி கிளாஸ் உடைந்து இருக்கும், அவ்வளுதான் எல்லாம் அவுட். அந்த கண்ணாடி கிளாஸ் உடைந்தது இவர்களுடைய கவனக் குறைவினால், ஆனால் அவர்கள் அதை உணர மாட்டார்கள், வீடு சரியில்லை, முதலில் யார் அடி எடுத்து வைத்தது ? என்றெல்லாம் ஒரு போறே நடக்கும்.

யார் முகத்தில் விழித்தேனோ ? மருமகள் வந்த நேரம் சரியில்லை, பூனை குறுக்கே போய்விட்டது, எதிரே அந்த ஆள் வந்த சகுனம் சரியில்லை, நேற்று இராத்திரி ஆந்தை வீட்டின் கூரைமீது கத்தியது, நாடு இராத்திரி ஜாமம் ஒன்றரை மணிக்கு குடு குடுப்பைக்காரன் ஏதோ சொல்லிவிட்டு போனது மனதுக்கு சங்கடமாக இருக்குது, மேலும் அப்படியென்றும் இப்படியென்றும் புழம்பித் தள்ளுபவர்கள் அநேகரைக் காணாலாம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த மூட நம்பிக்கையைப்பற்றி எழுதித் தள்ளலாம்.

ஒரு விபத்தில் பல பேர் ஒரே நேரத்தில் உயிர் இழந்து விட்டதாக வைத்துக் கொள்வோம், அந்த அத்தனை பேர்களுடைய ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள், வித்தியாசமாக இருக்கும், உயிர் இழந்தது ஒரே நேரம், ஜாதகம் சொல்லுவதோ வித்தியாசமான நேரங்கள். இதில் எது உண்மை எது பொய் ?

ஒரு தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்தக் குழந்தையை தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள், காரணம் அந்தக் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததினால் அவளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவன் சொன்னது தான். மந்திரவாதிக்கு ஒழுங்கான வேலை இல்லாததினால், அவன் ஊர் ஊரா சென்று மக்களை ஏமாற்றி வாழ்ந்து வருகின்றான்.

பதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களிலும், இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நமது தமிழகத்திலேயே நிகழ்ந்துள்ளது என்பது மூட நம்பிக்கை எந்த அளவுக்கு நம்முடைய சமுதாயத்தின் வேர்களை அரித்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. இது மட்டுமல்ல, தலைப்பிள்ளையை நரபலியிடுதல், குழந்தையைக் கீறி இரத்தம் எடுத்தல் என்றெல்லாம் தினசரி ஏடுகளில் வரும் செய்திகள் 

இறைவன் நமக்கு மன வலிமையை கொடுத்துள்ளான், சிந்திக்கக் கூடிய திறமையை கொடுத்துள்ளான், எல்லாவற்றிற்கும் அவனே காரணம் என்று இறைவன் கூறுகின்றான். விதை விதைத்தவன் நீர் ஊற்றாமல் இருப்பனா ? நடப்பவை எல்லாம் நம்மைக்கே என்று இருந்து விட்டால் அந்த இடத்தில் ஒரு சிறு துளி சிரமம் ஏதும் இல்லாமல் மனது நிம்மதியாக இருக்கும்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

11 comments:

  1. நல்ல பகுத்தறிவான பார்வை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இந்த பதிவை நேற்று நல்ல நேரம் பார்த்து, வார்த்தைகளின் வாஸ்து பிரகாரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

      Delete
  2. மூட நம்பிக்கைக்கு எதிரான ஆக்கம் ! கவனத்துடன் இருப்பது நலம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஒவ்வொரு மனிதனும் தன் உடம்பை இறைவன் வாஸ்துபடி படைத்துள்லானா என்று சரி பார்ப்பானா?

      Delete
  3. இன்றும் இந்த மூட நம்பிக்கை இருக்கிறது... முழுமையாக மாற வேண்டும்... நல்லதொரு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஐயா,
      மூடர்கள் இருக்கும்வரை மூட நம்பிக்கையை ஒழிக்க முடியாது.

      Delete
  4. வித்தியாசமான சிந்தனை நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.

    மூட நம்பிக்கை பல குடும்பத்தை சிதைத்துள்ளன.பண்டு மிகையாக காணப்பட்ட இந்த மூட நம்பிக்கை இன்று மக்கள் உணர்ந்து கொஞ்சம் குறைந்துள்ளது. என்றாலும் இந்த மூட நம்பிக்கை முழுவதுமாக ஒழிய வேண்டும்.அதற்க்கு இத்தகைய ஆக்கங்களும் படைக்கவேண்டும்.

    வாழ்த்துக்கள்.ஜமால் காக்கா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என்ன செய்வது, இணையத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமை.

      Delete
  5. மூட நம்பிக்கை முழுவதுமாக ஒழிய வேண்டும்..அதற்க்கு இத்தகைய ஆக்கங்களும் படைக்கவேண்டும்.


    நல்லதொரு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாகன பதிவு அலுவலகத்தில் கூட்டு தொகைன் எட்டு வராமல் இருக்க RTO விற்கு பணம் கொடுத்துவந்தார்கள் இப்பொழுது கூட்டு தொகை எட்டு நம்பர்கள் எல்லாம் அரசு வாகனத்திற்கு அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எட்டு வருவது கிடையாது பழைய வாகனம் எட்டு வந்தால் விற்பனையாவது ரொம்ப கஷ்டம் மூடத்தனம் அழிவுப்பாதை

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers