ஒரு தொழில் சிறக்க படிப்பு அவசியமா ? அனுபவம் அவசியமா ? இதை பட்டி மன்றம் போல் வாத பிரதி வாதமாக எழுதலாம் என ஆசைப்படுகிறேன். சிறு வயதில் கல்வியா ? அனுபவமா ? என்று நண்பர்களோடு நிறைய நேரம், நிறைய நாட்கள், பல மாதங்கள் கூட வாதாடி இருக்கின்றோம். பின்வரும் இரு கருத்துக்களுக்கும் நம் வலைதளத்தில் கருத்திடும் எழுதிடும் அன்பர்களாகிய உங்களிடம் தீர்ப்பை எதிர்நோக்கி எழுதுகிறேன்.
கல்விதான் சிறந்தது; இவ்வலைதளத்தில் தொடர்புள்ள சான்றோர்களே நல்லோர்களே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக எனக்கு பின் பேச இருக்கின்ற அனுபவ ஆதரவாளர்களே நாம் பயிலும் கல்விக் கூடத்தில் கவியை கற்றுத்தரும் பாட புஸ்தகம் எல்லாம் அனுபவசாலிகளால் அனுபவித்து ஆராய்ந்து எழுதப்பட்டதைத்தான் நாம் பயில்கின்றோம். அனுபவம் என்பது உயரம் குறைந்த தலை வாசலில் முட்டிவிட்டு பின் குனிவதுதான் !
உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் இரவுநேரம் ஓர் குகையினுள் செல்லவேண்டும் குகைக்கு செல்லும் இடமும் இருட்டு குகை உள்ளே அதைவிட இருட்டு ஏற்கனவே குகைக்குள் சென்ற மனிதர் குகை வாசல் சிறியதாக இருந்ததால் தலையில் இடித்துக் கொள்கிறார் பின் தலை குனிந்து சிறிது தூரம் நடக்கின்றார் பின் நிமிர்ந்து நடக்கின்றார்.
உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் இரவுநேரம் ஓர் குகையினுள் செல்லவேண்டும் குகைக்கு செல்லும் இடமும் இருட்டு குகை உள்ளே அதைவிட இருட்டு ஏற்கனவே குகைக்குள் சென்ற மனிதர் குகை வாசல் சிறியதாக இருந்ததால் தலையில் இடித்துக் கொள்கிறார் பின் தலை குனிந்து சிறிது தூரம் நடக்கின்றார் பின் நிமிர்ந்து நடக்கின்றார்.
தனது அனுபவத்தை குறிப்பில் குறிப்பிடுகிறார் குகை வாசல் 50 வது அடி தூரத்தில் ஆரம்பிக்கின்றது. வாசல் நான்கு அடி உயரமாக இருக்கின்றது அந்த நான்கடி உயரம் 20 அடிவரை நீள்கிறது பின் சாதாரண ஆள் கையை உயர்த்தியவாறு நடக்கலாம் என்று குறிப்பில் விவரிக்கின்றார். இப்பொழுது சொல்லுங்கள் குறிப்பை படித்த நாம் அதன்படி சென்றால் தலை தப்பும் பயணம் சுலபமாகும் அனுபவக்காரர் பல இன்னல்களை அனுபவித்து இருப்பார் தலை முட்டிவிட்டி குனிவது சிறந்ததா குறிப்பில் படித்து முட்டுவதற்கு முன் குனிவது சிறந்ததா ? குறிப்பை படிப்பதுதான் கல்வியாகிறது.
ஓர் அனுபவசாலி ஒரு நிறுவனத்தில் மேல் நிலை அடைய பல வருடங்களாகும் Tea Boy யாக சென்றவர் தம் உழைப்பால் மேலாளராக கூட ஆகலாம் ஆனால் அதற்க்கு 15 வருடம் பிடிக்கும் படித்தவர் நாங்கள் வேளையில் சேர்ந்த உடனே உதவி மேலாளர் 2-3 வருடத்தில் மேலாளர் உங்களுக்கு தேவைப்பட்ட 15 வருடம் எங்களுக்கு வெறும் 3 வருடம்.
நாங்கள் கல்லூரியில் பயிலும் போதே வேலை கல்லூரி தேடிவரும் நீங்கள் அலையோ அலையென்று அலைந்தே தேட வேண்டும் கிடைத்த வேளையில் சூப்பர்வைசர், Foreman,மேலாளர்களிடம் குட்டுப்பட்டு அனுபவத்தை கற்றுக்கொள்வீர்கள் நல்ல படித்த எங்களுக்கு நல்ல மரியாதையோடு வேலை மரியாதை இல்லையெனில் வேறு வேலை தேடிக்கொவோம்
டாக்டர், வக்கீல், கலக்டர், இவர்கள் எல்லாம் படித்தவர்கள். அனுபவசாலிகளுக்கு இங்கு இடம் இல்லை அந்த பதவிக்கு படிப்புதான் முக்கியம் அனுபவசாலி டாக்டரை நாங்கள் போலி டாக்டர் என்போம்.
படிக்காத மனிதர் பாஷை தெரியாத ஊரில்[ மும்பை ] சுரைக்காய் வாங்குவதற்கு கடைக்கு கிளம்புகிறார் காய்கறி கடையில் சுரைக்காய் தென்படவில்லை இவருக்கோ பாஷை புரியவில்லை எப்படி சொல்லி கேட்பது இவர் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் பேசி இருப்பார் கையால் சைகை செய்து காட்டினார். கடைக்காரரோ கியா லடிக்கி !? வேற இடத்த பாரு என்று ஹிந்தியில் திட்டி அனுப்பிவிட்டார் கடைசியாக ஓர் யோசனை உருவானது ஒரு காகிதத்தை எடுத்தார் சுரைக்காய்யை வரைந்தார் கடைக்காரரிடம் காட்டினார் ஓ இதுவா ! என்று அது கிடைக்கும் இடத்தை காட்டினார் ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பார்களே ஏட்டில் வரையப்போய்தான் கூட்டுக்கு உதவியது.
என்னுரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன் சான்றோர்களே நல்ல தீர்ப்பை தாருங்கள்
அனுபவமே சிறந்தது ! கணினிக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் பெரியோர்களே, நண்பர்களே, சகோதரிகளே, படித்தொர்களே, அனுபவத்தால் பன்பட்டோர்களே. உங்கள் அத்துனைபேர்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. அனுபவக்காரர்களின் குறிப்பேடுகள் தான் பள்ளிப்பாட புத்தகம் என்று சேம் சைடு கோல் அடித்த எதிர்கட்சி நண்பரே வாழ்த்துக்கள்.
குகைக்குள்ளே சென்றவர் தலை முட்டியபின் குனிந்தார் அவரின் பட்டறிவை நாங்கள் படிப்பரிவாக்கி தலை முட்டாமல் பாதுகாக்கப்பட்டோம் என்கிறீர்கள் அனுபவக்காறரை தியாகியாக்கிவிட்டீர் குகையின் இருளுக்குள் சென்றவர் உங்கள் தலையை காப்பாற்றி இருக்கலாம் ஆனால் நீங்கள் செல்லும் பொழுது பாம்போ,தேளோ வந்தால் தாங்கள் அனுபவப்பட்டுதான்ஆகவேண்டும்
குறிப்பேடுகள் பயன் தராது முதன் முறையாக இருளில் நடக்கும் பொழுது தட்டித்தடுமாறி நடந்துதான் ஆகவேண்டும் மறுமுறை நடக்கையில் கொஞ்சம் அனுபவம் கிடைத்து விடும்.
நாங்காள் கடைநிலை ஊழியராக இருந்து மேல்நிலை அடைய 15 வருடமாகளாம் ஆனால் உங்கள் பள்ளி,கல்லூரி காலங்கள் மட்டும் சும்மாவா எவ்வளவு பணங்களை செலவு செய்கிறீர்கள் எத்துனை ஆண்டுகள் செலவாகிறது. எத்தனையோ படிக்காத முதலாளிகளிடம் வேலையாட்கலாய் இருக்கின்றீர்களே உங்களுக்கு படிப்பு மட்டும் போதுமா சுயதொழில் செய்ய அனுபவம் இல்லாமல் உங்கள் பெற்றோர்களே முதலீடு தர யோசிப்பார்கள் மகனே கொஞ்ச நாள் எங்காவது வேலை செய்து அனுபவம் பெற்றுக்கொள் பின் தொழில் சுயமாய் செய்யலாம் என்றுதான் சொல்வார்கள்.
டாக்டர் வக்கீல் படிபில்லாமல் தொழில் செய்யமுடியாது என்றீர்கள் ஆம் உண்மைதான் ஆனால் டாக்டர் பிராக்டீஸ் இல்லாமல் பட்டம் பெறவோ கிளீனிக் அமைக்கவோ முடியாது வக்கீல் படிப்பை முடித்ததும் தொழில் செய்து கொண்டு இருக்கின்ற மூத்த வழக்கரிங்கரிடம் ஜுனியராக சிறிது காலமேனும் பணியாற்றினால் தான் உங்களை தேடி கேஸ் வரும் அனுபவமில்லாமல் சிறந்தோங்க முடியாது என்பதே எனது வாதம்.
சுரைக்காய் படம் வரைய படிப்பு தேவையில்லை ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது தான் பெரியோர்களே உங்களது தீர்ப்பை அனுபவம்தான் சிறந்தது என்று கூருங்கள் விடை பெறுகிறேன்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவம் படிப்பு சிறந்ததென்று படிப்பால் பயன் பட்டவர்கள் கூறுவர் சிலர் அந்தப் படிப்பு பயன்தராது போய் இருக்கும் அவர் அனுபவத்தில் சிறந்து விளங்கி இருப்பார் அவர் கூறுவர் அனுபவமே சிறந்ததென்று உண்மை நிலையை நீங்கள் கூறுங்கள்.
ஒருவர் படிக்காத ஒரே காரணத்தால் அவரவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது அது பற்றி அடுத்தக் கட்டுரையில் காண்போம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது
அனுபவம் தான்... பெரிய மாற்றத்தை அறிய ஆவலாய் உள்ளேன்...
ReplyDeleteபுதிய தொழில் புரிய அனுபவம் தேவைப்பட்டாலும் அடிப்படை கல்வியறிவு அவசியம் வேண்டும் என்பதை மறுக்க இயலாது.
ReplyDelete// ஒருவர் படிக்காத ஒரே காரணத்தால் அவரவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது அது பற்றி அடுத்தக் கட்டுரையில் காண்போம்.//
அனைவரைப்போல் நானும் ஆவலில் உள்ளேன்
// டாக்டர் வக்கீல் படிபில்லாமல் தொழில் செய்யமுடியாது என்றீர்கள் ஆம் உண்மைதான் ஆனால் டாக்டர் பிராக்டீஸ் இல்லாமல் பட்டம் பெறவோ கிளீனிக் அமைக்கவோ முடியாது வக்கீல் படிப்பை முடித்ததும் தொழில் செய்து கொண்டு இருக்கின்ற மூத்த வழக்கரிங்கரிடம் ஜுனியராக சிறிது காலமேனும் பணியாற்றினால் தான் உங்களை தேடி கேஸ் வரும் அனுபவமில்லாமல் சிறந்தோங்க முடியாது என்பதே எனது வாதம். //
ReplyDeleteஅனுபவம் தேவைப்பட்டாலும் அடிப்படை கல்வியறிவு அவசியம்.
கல்வியா.? அனுபவமா..? என்று கேட்டு கொஞ்சம் யோசிக்க விட்டீர்கள். காரணம் இவ்வுலக வாழ்வில் நாம் அனைத்தும் அறிந்து கொள்ள இரண்டுமே அவசியமாக உள்ளது. கல்வி மட்டும் இருந்து அனுபவம் இல்லையெனில் எதையும் சாதிப்பது கஸ்ட்டமே,,!
ReplyDeleteஅனுபவமிருந்து கல்வித்தகுதி இல்லையெனில் உயரிடத்தில் தேர்ச்சிபெற்று விளங்க முடியாது. அதேசமயம் முதலில் கல்விகற்ற பின் தான் அனுபவம் என்ற உலக வலைக்குள் நுழைகிறோம். [என் அனுபவத்தில் உணர்ந்தவை] ஆகவே தீர ஆராய்ந்து பார்த்ததில் கல்விக்கே எனது முதல் ஓட்டு.
[போட்டிக்கு பரிசு ஏதும் உண்டா..?]
அனுபவம் முதுமை .
ReplyDeleteகல்வி என்பது முதியோர் சொல்
சொல் கேட்டாரே கல்வியாளர் ..
அனுபவத்தையும் அழகாய் ஏற்று நடுக்கும்
படித்தவரின் பண்பு பாராட்ட தக்கது சிறந்தது .
கற்றலும் கேட்டலும் கண்களாய் எண்ணியே
ReplyDeleteபெற்றவுன் பட்டறிவைப் பேண்
படிப்பறிவு
ReplyDeleteபட்டறிவோடு
ஆய்வறிவு அவசியம் வேண்டும்
ஆய்ந்தறியத் தெரியாதவன் படித்துப் பிரயோசனம் ஏதுமில்லை
ஆய்ந்தறியத் தெரியாதவனுக்கு அனுபவம் பாடமாகாது
கூடவே மனிதநேயம் போற்றும் ஆன்மிக ஞானமும் இருப்பது சிறப்பு
வ- அலைக்கு முஸ்ஸலாம் மச்சான்!
ReplyDeleteபடிக்காமலே நீதிபதியாக்கியமைக்கு நன்றி.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது இது பழய மொழி
அதுவே இன்று கறிக்கும் வழி வகுத்து பழ மொழியை தவறென மெய்ப்பித்து விட்டீர்கள். அருமை.
அனுபமே அதி முக்கியம் என நான் தீர்ப்பளிக்கிறேன்!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல ஆக்கம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அருமையான ஆக்கம் வாழ்வில் முன்னேர கல்வி மற்றும் அனுபவம் இரண்டுமே அவசியம். என்னுடைய கருத்து.
ReplyDeleteஒருவன் கல்விக்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் அவனின் வருமானத்தை பெருக்க உதவும்...
ReplyDeleteபடிக்காதவன் மேலாளராக இருந்தபோதும் 20 வருஷமா சம்பாதிச்சதை படிச்சவன் 4-5 வருஷத்துலே சம்பாதிச்சிடுறான்.. என்ற கருத்தோடு யாரெல்லாம் ஒத்துப்போறீங்க...
வெறும் படிப்பறிவு மட்டும் போதாது.அனுபவமும் சேரும்போது தான் ஒருவர் சிறந்து விளங்குகிறார்.
ReplyDeleteபெரிய மாற்றத்தை அரிய நானும் காத்திருக்கிறேன்.
அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய தீர்ப்பை மனதார மதிக்கின்றேன் ஒவ்வொருவரின் அனுபவங்கள்தான் கருத்தில் வெளிப்படும் அவரவர்களுக்கு அவர்கள் சொன்ன விஷயம் சரியாகப்படும் அடுத்த கட்டுரையை உங்களின் கருத்தையும் அலசுவோம்
ReplyDelete