.

Pages

Saturday, May 18, 2013

[ 10 ] உள்ளம் கேட்குமே !? MORE…

காதல்..! காதல் என்றால் ஒரு ஈர்ப்பு ! எனக்கு எழுத்தின் மேல் காதல்… சிலருக்கு பணத்தின் மேல் காதல்…தொழில், கல்வி என்று பலவிதமான நடவடிக்கை மேல் காதல் ஏற்படும் அவைகள் காலம் காலமாய் உணர்வோடு உள்ளத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதற்காக தன்னை மாய்த்துக்கொள்ள துணிய மாட்டார்கள். இன கவர்ச்சியால் ஏற்படுகின்ற காதல் உள்ளத்தை உருக்கும். காதலாக உறவை உதறி தள்ளி தான் நேசிக்கும் ஒருவனோடு அல்லது ஒருத்தியோடு ஓடிச்செல்ல வைக்கும் நிலைக்கு தள்ளி விடுகிறது.

இதற்கு காரணம் இயற்கையை ஒட்டிய உணர்வு ! உயிரினங்கள் இன பெருக்கத்திற்கு தயார் ஆகி விட்டால் உடனே துணை தேடிச்செல்லும். ஆதி மனிதனும் அப்படி தான் கற்கால மனிதன் தனக்கு துணை கிடைக்க சிற்றின்பம் நிறை வேற மிகவும் சிரமப்படுவான் என ஒரு ஆவணத்தில் படித்துள்ளேன்.

இரைதேட இரண்டு ஆதி மனிதன் சென்றால் போதிய உணவுக்கு இருவரும் சண்டையிட்டு ஒருவன் சாப்பிடுவான் மிஞ்சியதை தோற்றவன் சாப்பிடுவான் .ஆனால் ஒரு பெண்ணை கண்டு அவளை புணர முற்படும் ஆதி மனிதன் தனிமையை விரும்புவான் சில தருணங்களில் இரண்டு ஆண் ஒரு பெண் என்ற சூழல் அந்த தருணத்தில் இரண்டு ஆணுக்கும் போட்டி ஒருவன் வெல்லுவான் மற்றவன் கொல்லபடுவான். மற்றவன் செயல் இழக்கும் வரை அதி மனிதனின் ஆவேச தாக்குதல் தொடரும்...

இது கற்கால மனிதனின் உள்ளத்தின் நிலை பாடு. நாகரிக வளர்ச்சி அடைந்த பின்னர் ஆண் பெண் என்ற கட்டுப்பாடு பல வகையான கலாச்சாரம் என்று வந்து மக்களை நல்ல வழிக்கு கொண்டு வந்தாலும் ஆண் பெண் என்ற ஈர்ப்பு இருக்கவே செய்கிறது.

* மன நிலையை ஓர்மைப்படுத்தி, மத நம்பிக்கை அடிப்படையில் இறைவனின் தண்டனைக்கு ஆளாக்கப்படுவோம் என்ற நம்பிக்கை உள்மனதில் ஆழமாய் பதிய பட்டஆண்,பெண்...

* குல கோத்திரம் என்ற அடிப்படையில் அந்நிய ஆணிடம் தொடர்பு நமது குலத்திற்கு இழுக்கு என்று என்னும் ஆண், பெண்...

இவர்களை காதல் என்ற மாய வலையால் சிக்க  வைக்க முடியாது. நான் உளவியல் ரீதியாக கூற வந்த திசை விட்டு மாறி செல்வதாக நினைக்கிறேன்.

சரி விசயத்திற்கு வருகிறேன்...

1980 களில் இந்திய டுடே தமிழ் பதிவு வந்த சமயம் வாஸந்தி என்ற எழுத்தாளர் தமிழ் பதிப்புக்கு பொறுப்பாசிரியராக இருந்த சமயம் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தார். காதல் என்பது மாயை அமர காவியம் என்று போற்ற படுகின்ற அம்பிகாபதி, அமராவதி காதல்... சலீம் அனார்கலி காதல் இன கவர்ச்சிதான் காதல். இவர்களின் காதல் வெற்றி பெற்றிருந்தால் விவாகரத்தில் தான் முடிந்திருக்கும். என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்கள்.

நான் கூறியது போல் ஒரு தொழில் மீதோ .ஒரு கலை மீதோ  இருக்கும் காதல் ஈர்ப்பின் வயதை விட ஆண் பெண் இன கவர்ச்சி காதல் அற்ப ஆயுளை கொண்டது. வெற்றி பெற்றிருந்தால், கணவன் மனைவியாகி சண்டையிட்டு கொண்டிருப்பார்கள்.

தூர நின்று ஏங்கிய ஈர்ப்பு அது அடைந்து விட்டால், சலிப்பாக மாறி விடும் ஒரு கலை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் சாதிக்க வேண்டும் என்று ஒருவர் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் தருவாயில்  அதன் இலக்கை அடைய கால அவகாசம் ஒன்றும் இல்லை சிலர் இளம் வயதிலேயே பிறரால் இனம் காண பட்டு புகழ் அடைவர் சிலர் முதுமை நிலையில் இனம் காண பட்டு வல்லுனராக போற்ற படுவர் அது வரை தான் ஈடு படும் துறை மீது உள்ள காதல் ஓயாது. ஆனால் ஒருவன் ஒருத்தி மீது கொண்ட காதல் உடனே காதலிக்கு சென்றடைய வேண்டும். அவசர நிலையில் தனது எதிர்காலம் என்ன ? என்ற சிந்தனைகளை ஓரம் கட்டி விட்டு ஒருத்தி பின்னால் சற்ற எத்தனிக்கும் ஒருவனின் வாழ்க்கை சின்ன பின்னமாகி போய் விடுகிறது.

தான் காதலிக்கும் ஒருத்தியை ஈர்க்க இளைஞன் தன்னை பல வகையில் தயார் படுத்தி கொள்கிறான் பறவைகளை பிடிக்க வேடன் வலை விரிப்பான் தானியங்கள் பல தூவியும் வன விலங்குகளை பிடிக்க அதற்குதகுந்த இரையை வைப்பான் அது போன்று கன்னியவள் கரம் பிடிக்க காளையவன் போடும் வேடங்கள் பல அதில் ஒன்று சாதுவான தோற்றம் படிக்கும் மாணவனாக... கவிஞானாக... பல கலை கற்றவனாக, காசுள்ள பணக்காரனாக தன்னை காட்டிக் கொள்வான்.

முதலில் தூது விடுவது கவிதை மூலமே ஒருத்தி அகங்காரம் பிடித்த பெண்ணாக இருப்பாள்.அவளை பார்த்து

"அன்பே! நீ
'அமைதியின் ஆளுமை' என்பான்...பிறர் வசீகரிக்கும் அழகு அவன் கண்ணுக்கு தெரிவதால்... அந்த பெண்ணின் அகங்காரம் கூட "அமைதியின் ஆளுமையாய்" தெரிவதுதான் வேடிக்கை !

காதல் மணந்த பின் கசப்பது ஏன் !? அடுத்த ஆக்கத்தில் பார்போம்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

35 comments:

  1. கால ஓட்டத்தில் காதல் எப்படி என்பதை மிக நுணுக்கமாக தந்துள்ளீர்கள்.

    "வர வர காதல் கசக்குதய்யா" ,ன்னு அடுத்த ஆக்கதில் பாட்டு எழுத போறீயலா?

    வாழ்த்துக்கள். சி.காக்கா.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாரம் ..

      நீங்கள் குறிப்பிடுவது போல

      கசக்கும் காதலை பற்றித்தான்

      Delete
  2. LOVE என்ற ஆங்கில வார்த்தையை எல்லா இடங்களிலும் பொதுவாக ஆங்கிலம் பேசுபவர்கள் குறிப்பிடுகின்றனர்; குறிப்பாக அமெரிக்காவில் இருந்த அடியேனும், அமெரிக்காவில் இருக்கும் நீங்களும் அறிவீர்கள்.

    I LOVE THIS STORE
    I LOVE THIS STUFF
    என்று சொல்லும் பொழுது அங்கு love என்ற வார்த்தைக்கு நீங்கள் குறிப்பிட்ட ஓர் ஈர்ப்பு என்பதே சரியான உட்பொருளாகும்; உண்மையில் உங்களின் அறிவாற்றலைப் புகழ்கிறேன்; பாராட்டுகிறேன். அல்ஹமதுலில்லாஹ்!

    அஃதேபோல், “ஹுப்” என்னும் அரபு மொழியின் வார்த்தையும் பொதுவாக எதுவொன்று நம்மை ஈர்க்கின்றதோ அதற்குப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் மொழியில “காதல்” என்பதை “காமம்” கலந்தப் பார்வையுடன் நோக்குதலாற்றான், எதனையும் தவறாகவே பயன்படுத்தும் அற்பர்கள் கையில் இக்காதல் படும்பாடு மிகவும் கேவலப்படுத்தப்பட்டு விட்டது!

    ஆயினும் மனைவியைக் காதலிப்பதில் ஆகுமானதொன்றாக இருந்தும், பொதுவாக இந்தக் காதலை மனைவியிடம் மட்டும் பேச்சில் கூட அறிவிப்பதில்லை என்பதிலிருந்தே , காதல் என்பது காமம் மற்றும் விபச்சாரத்தின் “காமன் விடும் அம்பு” என்பதாகவே தவறான புரிந்துணர்தலில் ஆக்கப்பட்டதன் வேதனையை மிக அருமையாக உங்களின் ஆக்கத்தில் வடித்துள்ளீர்கள்; மீண்டும் பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. கவியன்பரின் ..கருத்து

      என்கருத்தை ஒத்த கருத்தாகும்

      நன்றி கவிஞரே

      Delete
    2. காதல் என்ற மந்திர சொல்லில் விழுந்திராதவரே இருக்க வாய்ப்பில்லை. காதலில் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் அதை ஒரு முறையாவது நாம் கடந்து சென்றிருப்போம். பல பேர் காதலில் தோற்று விடுவர். சிலர் வெற்றி பெற்று திருமணம் வரை சென்று பின் அதில் தோல்வி அடைவார்கள். காதலில் வெற்றி பெற்று, அது திருமண பந்தமாக மாறும் போது, அதிலும் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்?

      காதல் என்பது ஒரு தனித்தன்மையான உணர்ச்சி. இந்த உணர்வை அனுபவித்தவர்களுக்கு தான் சொல்வது புரியும். இன்னும் காதலில் விழாதவர்கள் இந்த உணர்வு எப்படியிருக்கும் என்று அறிய ஏங்குவாகள். காதலிக்கும் பெரும்பான்மையினர் அவர்களின் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளனர். ஆனால் சிலருக்கோ காதல் வாழ்க்கை கசந்து விடுகிறது. பல நேரம் காதலில் சிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடுவார்கள்.

      Delete
    3. காதலில் விழுவது வெறும் மோகத்தினால் தான் என்பது பலரின் கருத்து. மோக உணர்வை பெற்று அந்த உணர்வோடு வாழ விரும்பவே காதலில் விழுகின்றனர் என்பதும் இவர்களின் எண்ணமாகும். மோகத்தினால் ஒரு காதல் உணர்வை வளர்த்தால், அது சீக்கிரமே வளரத் தொடங்கி விடும். ஆனால் அந்த வேகத்திலேயே நம்மை விட்டும் நீங்கியும் விடும். அதனால் காதலுக்கும் மோகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.

      Delete
    4. பல பேருக்கு உடல் உறவு கொள்வதற்கு சுலபமான வழி காதல் என்ற எண்ணம் உள்ளது. இது தவறான எண்ணம். காதலில் விழுவது என்பது தூய்மையான உணர்வு மற்றும் அன்பை பரிமாறுதல் ஆகும். இது உடல் உறவு கொள்வதற்கான கருவி கிடையாது.

      Delete
    5. ஒரு நண்பராக உங்கள் நண்பர்களுக்கென்று நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். ஆனால் காதலிப்பவருக்கு கண்டிப்பாக நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு சிக்கலான வேலையில் ஈடுபட்டிருந்தாலும், காதல் துணையோடு நேரத்தை செலவழிப்பதை மறந்து விடக்கூடாது. அப்படி செய்தால் தான், காதல் எந்த ஒரு பிரச்சனையுமின்றி வாழும். நேரம் என்பது ஒரு பெண்ணை பொறுத்த மட்டில் காதல், பக்தி மற்றும் உணர்ச்சி. எவ்வளவுக்கு அதிகம் நேரத்தை அவர்களுக்காக செலவு செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகம் காதல் ஆழமாகும்

      Delete
    6. காதலில், வலி என்பதற்கும் முக்கிய பங்கு உண்டு. காதலிக்கும் போது, அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். காதலில் வலியை பல நேரங்களில் அனுபவிக்க முற்படுவோம். ஆனால் உண்மையான காதல், வலி மற்றும் கஷ்டங்களால் தான் வலுவாக வளரும். இந்த நேரங்களில், காதலன்/காதலி உங்களுக்கு தோள் கொடுப்பார்கள்.

      Delete
    7. காதலின் உணர்வு ...

      காமத்தின் அடிப்படையில் தான் என்பதை நாம் மறுக்க

      முடியாது .உணர்வுகள் பரிமாறி கொள்ளும் வயதில்

      ஆண் பெண் காதல் உறவுகளை முறிக்கும் காதலாகவே அமையும்

      Delete
  3. அவசியமான பொருள் குறித்து
    ஆழமான அலசல்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா

      தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  4. உளவியல் ரீதியான பார்வை !

    அநேகமானோருக்கு ஆரம்ப கட்டத்தில் இனிமையைத் !? தரும் காதல் !? நாளாக நாளாக அதிகமதிகம் தீங்கை ஏற்படுத்தி விடுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி நிஜாம் ..

      நீங்கள் கூறுவது போல இளையோருக்கு

      காதல் இனிமையாக தான் இருக்கும்

      கால சக்கரம் நல்ல பாடத்தை கற்று கொடுக்கும்

      Delete
  5. நல்ல அலசல்... திரு அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் அவர்களின் கருத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  6. காதலின் வகையைப்பற்றி இவ்வாக்கத்தில் கட்டுரையாய் வடித்திருந்தீர்கள் அருமை.

    காதல் என்ற தமிழ்ச்சொல் காமச்சொல்லேயாகும் காரணம்.

    ஆங்கிலத்தில் LOVE-என்ற ஒற்றைச்சொல் இடத்திர்க்கேற்றாற்போல் அர்த்தங்கள் பொருந்திக்கொள்ளுமாறு உள்ளன. அதே சமயம் நமது தாய் மொழி தமிழில் LOVE என்ற சொல்லுக்கு அன்பு,பாசம்,நேசம்,விருப்பம்,காதல் இப்படி பல உட்பொருள் உள்ளது ஆகவே சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போல் நாம் தான் சொல்லெடுத்து பேசவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. காதல் என்ற தமிழ்ச்சொல் காமச்சொல்லேயாகும்///

      அன்பு கவி அதிரை மெய்சா அவர்களே

      பண்டை கால கவிகள் கடவுளை கவி பாடும் போது அன்பு

      மிகுதியை ..காதலாய் ..என கூறுவர்..

      இயற்கையை வர்ணிக்கும் கவிஞன் தனது ரசனையின்

      வெளிப்பாட்டினை இயற்கை எனும் இளைய கன்னி

      ஏங்குகிறாள் ..என்பான் தனது ஈர்ப்பை அழகாய் தருவான்

      குணங்குடி மஸ்தான் அவர்களின் பாடலில் இறையை

      கவியல் கொஞ்சும் காதலாய் என கூறியுள்ளார்

      காமுகர்கள் வலை வீசும் செயலுக்கும் காதல் என்ற பெயர்

      கூற படுவதால் ..காதல் காமம் என்ற சொல்லுக்கு இணை அல்ல ..மீண்டும் சந்திப்போம் நன்றி

      Delete
    2. என் எண்ணமும் எழுத்தும் உங்களின் எண்ணம் எழுத்துடன் ஒத்துப்போவதால், நம்மிருவரின் உள்ளங்கள் ஒன்றிவிட்டன! அன்பெனும் காதலால்- நட்பால்-பாசத்தால்!

      Delete
    3. மிக்க நன்றி ..

      கவியன்பரே ..வளமான கருத்தை நலமாய்

      கவிமூலம் தரும் நீங்கள் நட்பாய் என்னிடன்

      தரும் அன்பை ஏற்கிறேன்

      Delete
  7. நல்ல தொகுப்பு சகோதரரே!

    ReplyDelete
  8. காதலுக்கு ஒரு அறிவுறை ஆக்கம். படித்து விட்டு அசந்து போனம் சிலநேரம்.
    அருமையான வரிகள் ஆக்கத்தின் அடியான் அதிரை சித்திக் அவர்களே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ஹபீப் அவர்களே

      Delete
  9. பதிவுக்கு நன்றி.

    நல்ல தொகுப்பு சகோதரரே!

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  10. நன்றி சகோ ஜமால் காக்கா அவர்களே

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றியை ஏற்றுக்கொண்டேன்.

      Delete
  11. காதலின் வெற்றி காதலித்தவரை கரம் பிடிப்பதல்ல! நம்முடைய ஒருதலை காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் முதல் வெற்றி. நாம் எவ்வளவு பிறரை காதளிக்கின்றோமோ அவரும் நம்மை அதே அளவு அல்லது அதற்கும் மேல் காதலிக்க வேண்டும் இது இரண்டாம் வெற்றி டாக்டர்
    திருமணத்திற்கு பின் ஆண் பெண் என்றில்லாமல் கணவன் மனைவி எனும் சமூக பேதத்திற்கு கட்டுப்பட்டு சமய நெறிகளுக்கும் கட்டுப்பட்டு தமது காதலை, விட்டுக்கொடுத்தலை தொடர்ந்தால் முழு வெற்றி
    teen yage காதல் காமுகக்காதாலே தொழில் கல்விபயில்வோர் டாக்டர்க்கு படிப்பவர் எதிர்கால டாக்டரையே காதலிக்கின்றனர் வக்கீல் படிப்பவர் எதிர்கால வக்கிலையே காதலிக்கின்றனர் so இவர்கள் காதல் காமம் தாண்டி எதிகால நோக்க காதல்
    காதலை பற்றி சொல்ல நிறைய இருக்கு நேரம் போதவில்லை sory

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் சபீர் ..அவர்களே

      உங்கள் பார்வையில் காதல் என்ற தலைப்பில் ஒரு ஆக்கம்

      தாருங்களேன் வருகைக்கு நன்றி ..நாளை மீதம் உள்ள கருத்தை தாருங்களேன்

      Delete
  12. காதல் உலகத்தில் ஜீவிக்கூடிய ஜீவராசிகளுகிடையே காணப்படக்கூடிய ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ..இக்காலகட்டத்தில் காதல் வலை விரிக்கும்

      இளைஞர்கள் ..பெண்களை போக பொருளாக பார்கிறார்கள்

      இதன் விளைவு வருங்காலம் கற்பு என்ற சொல்லுக்கே

      இடம் இல்லாமல் போகும் தாய் தந்தை என்ற பாச பிணைப்பு

      இல்லாமல் போகும் ...ஒற்றை வரியில் சொல்வதென்றால்

      வருங்காலம் சுயநலத்தால் சூன்யமாகும் காலம்

      Delete
    2. சகோ சித்திக், உங்களின் இந்த சிந்தனை வரிகள் இப்போது அரங்கேற ஆரம்பித்து விட்டன.

      Delete
  13. வரும் வாரமும் இதே அவலத்தினை அலசுவோம்

    ReplyDelete
    Replies
    1. கருத்து பரிமாற்றம்

      புதிய சித்தாந்தம் காணும் ..அலசுவோம் வாருங்கள்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers