.

Pages

Wednesday, May 15, 2013

[ 11 ] தொழில் புரிவோம் வாருங்கள் [ முற்றும் ]

கட்டுரையின் துவக்கத்தில் கோல்டு மெடலிஸ்ட் சைக்கிள் பயணம் பற்றி ஆரம்பித்தோம் நன்கு படித்தவர்க்கு தன்னம்பிக்கை அவசியம் ஆனால் அதுவே தலைக்கனமாகக் கூடாது தாம் வேலை செய்யும் இடத்தில் தனது தொழில் கல்வியின் பெருமையால் இறுமாப்போடு வேலை செய்யலாம் அதில் பாதகம் தெரியாது சொந்தமாய் தொழில் துவங்கும் போது பணிவு, ஆளுமை திறன் இரண்டறக் கலந்து இருந்தால் முதலாளிக்கு உண்டான மிக சிறப்பான குணமாகும்.

ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் ஏழு விதமான பிரச்சனைகளை மட்டுமே சிந்திக்கமுடியும் [ தனி நபருக்கேற்ப்ப + / - இரண்டும் மாறுபடும் ] ஒரு சாதாரண மனிதனால்  நான்கு விஷயங்களை மட்டும் தான் யோசிக்க முடியும். ஒரு கட்டாய சூழ்நிலை வரும்போது மன அழுத்தம் ஏற்பட்டு விரக்தி உண்டாகும். ஆகையால் சுயதொழில் செய்ய முற்படுவோர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போதே தம்மை தயார் படுத்திக்கொள்ளல் வேண்டும். இந்த விஷயம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது.

கட்டுரையின் 3 வது பாகத்தில் ஒரு பொருள் தயாராக எத்துனை தொழிற்ச்சாலைகளில் சென்று வருவதை தெரிந்து வைத்துக்கொள்வதும் அதன் விபரங்களை தெரிவதும் அவசியம் அதுபோல் நம் நிறுவனத்திற்கு பணியாள் சேர்க்கையில் மிக கவனம் தேவை. 

வெளிநாட்டு சம்பாத்தியக்காரரும் உள்ளூர் தொழில் செய்பவரும் கலந்துரையாடலை நான்காம் பாகத்தில் குறிப்பிட்டு இருந்தோம் தொழில் செய்ய ஆசை மட்டும் போதாது அனுபவம் மிக அவசியம். ஆசை தேடலுக்கு உந்து சக்தி. கிடைத்த தொழிலை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்ட இருக்க வேண்டும், புதிய தொழில் நுட்பத்தை புகித்திக்கொண்டே இருக்கவேண்டும், புத்தரைப்போல் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் [ஆசையை ஒழிக்க ஆசைப்பட்டாரல்லவா] ஆசையும் ஒரு முதலாளிக்கு மிகப்பெரிய சொத்து. மனச்சோர்வு கூடாது  தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்ற வேண்டும்.

பிறர் ஆலோசனைகளை முழுமையாய் செயல்படுத்தக்கூடாது ஆலோசனை கூறுபவரின் அனுபவம் 10 வருடங்களுக்கு முந்தியதாய் இருக்கும் கால மாற்றம் அவரின் அனுபவம் இன்றைய சூழலுக்கு ஒத்து வராமலும் போகலாம் சுய அறிவு 75% என்றால் 25% பிறர் ஆலோசனைகளாய் இருக்கலாம் 100% பிறர் ஆலோசனைகளாய் மட்டும் இருக்கக் கூடாது சிறந்த தொழிலதிபருக்கு சுயஅறிவு கூடுதல் சதவிகிதமாய் இருக்கவேண்டும். சட்டென புரியும்  தன்மை விரைவாக முடிவெடுக்கும் அறிவு சிறந்த வியாபாரிக்கு அழகு.

விளம்பரத்தில் கவனம் அவசியம்,  முதலாளி தொழிலாளி உறவுகள்  மிக அவசியம், கல்வியாளர்களின் பங்கும் அவசியம் கணக்கு தணிக்கைக்கு ஆடிட்டர் அவசியம்,  சட்ட ஆலோசனைகளுக்கு வக்கீல்கள் அவசியம், தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு அனுபவஸ்தர்களின் உதவி அவசியம், இதற்கும் மேலாக இறைவன் அருள் மிக அவசியம்.   

நோக்கம், சிறப்பு, முயற்ச்சி இவைகள் தான் நல்ல தொழிலதிபரை உருவாக்குகின்றது. சுய தொழிலின் சிறப்புகள் பல உண்டு. கடின உழைப்பிற்க் கேற்ற சம்பாத்தியம், அடிமைத்தனமில்லா பணி, நினைத்த நேரத்தில் விடுப்பு எடுக்கலாம், கெளரவம், அதிக சம்பாத்தியம் இப்படி நிறைய இருக்கின்றது 

இதில் அதிக சம்பாத்தியத்தை மட்டும் நோக்கமாக கொண்டவர் மனிதாபிமானம் அற்றவராய் திகழ்வார். அடிமைத்தனம் இல்லாமை,  நினைத்த நேரத்தில் விடுப்பு. இந்த இரண்டையும் நோக்கமாக கொண்டவர் தொழிலில் சோபிக்க மாட்டார் கடின உழைப்பிற்கேற்ற ஊதியம், கெளரவம் இவைகளை நோக்கமாக கொண்டவர் நல்ல வியாபாரி ஆவார்.

இறைவன் அருளால் நாம் அனைவரும் சிறந்த மனிதாபியாக நல்ல வியாபாரியாக உருவாகிடுவோம் உருவாக்கிடுவோம்.                                                                                                                                                                   

முற்றும்
மு.செ.மு.சபீர் அஹமது

10 comments:

  1. சுய தொழிலின் சிறப்புகளோடு நிறைவான முடிவு... நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வயதில் சிறியவராக உள்ள மருமகனார் - தொழிலதிபர் சபீர் அவர்கள்,, தன் அனுபவ பாடமாக வழங்கிப் பட்டப் படிப்பை விட பட்டறிவப் பாடமே வணிகத்திற்கு உதவும் என்பதை நிலைநாட்டி விட்டார்கள்! ஆம், நம் முன்னோர்கள், தந்தையர்கள் எல்லாம் வணிகத்தில் கோலோச்சியது எப்படி என்பதை இக்கட்டுரையாளரின் பாடங்கள் கூறும் உண்மைகளாகும்.

    படித்து விட்டோம்; பல நாடுகள் சென்று பாடுபட்டுச் சேமித்து வைத்துள்ள உழைப்பின் பலனான அப்பணத்தை எப்படி முதலீடு செய்து வணிகம் என்னும் வளமானதொரு பாதையில் துணிகரமாய்ச் செயலாற்றுதல் எப்படி என்று மட்டும் அறியோம். இந்தக் கவலைக்கு நன்மருந்தாக இக்கட்டுரையாளரின் தொடர் எமக்குப் பெரிதினு பெரிதாய் அமைந்தது என்பதே உண்மையிலும் உண்மையாகும்!

    பாராட்டுகள் மருமகனாரே! இன்ஷா அல்லாஹ் தொழில் துவங்கும் காலத்தில் உங்களின் கட்டுரை எமக்கு ஓர் அரியக் கையேடாகும் என்பதை உறுதியாக வைக்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றி சகோதரரே!
    வேறு தலைப்பு அடுத்து என்ன?

    ReplyDelete
  4. ஆக்கப்பூர்வமான ஆக்கம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இன்னும் தொடர்கள் வளராதா என்ற எதிர்பார்ப்புடன் பல வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் தொடரின் முடிவுரை.

    புதிதாக தொழில் முனைவோருக்ம் நல்லதொரு வழிகாட்டியாக அமையும் வகையில் உங்களின் தொழில் அனுபவத்தில் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களை தொகுத்து அவ்வப்போது பதியுங்கள்.

    மேலும் அழகிய ஆக்கங்களை நல்லதொரு மெசஜ்டன் இதுவரைத் தந்த தொழில் அதிபர் சகோ. சபீர் அவர்களுக்கு நன்றியுடன் பாராட்டுகள் - வாழ்த்துக்களை அன்புடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  6. தொழில் துவங்குவோர்க்கு நல்ல ஆலோசனையாக உங்கள் கட்டுரை இருக்கும்.

    உங்கள் இக்கட்டுரையின் முடிவு தொழில் துவங்குவோர்க்கு நல்ல ஆரம்பமாக அமையட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அடிமைத்தனம் இல்லாமை, நினைத்த நேரத்தில் விடுப்பு. இந்த இரண்டையும் நோக்கமாக கொண்டவர் தொழிலில் சோபிக்க மாட்டார் கடின உழைப்பிற்கேற்ற ஊதியம், கெளரவம் இவைகளை நோக்கமாக கொண்டவர் நல்ல வியாபாரி ஆவார்.///
    அப்பா ..அப்பப்பா...இரத்தின சுருக்கமாக என்ன் அழகான
    அறிவுரை ...நினைத்த நேரத்தில் விடுப்பு எடுக்க நினைப்பபவர்
    தொழிலுக்கு உகந்தவர் அல்லர் ...நல்ல மரியாதை தேவை
    என நினைப்பவர் நல்ல வியாபாரியாக சோபிக்க் முடியும்
    இன்னும் நல்ல ஆக்கத்தை தர வேண்டும் என்பது என்
    அன்பு கட்டளை நண்பா

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.

    ஆக்கப்பூர்வமான ஆக்கம்
    வாழ்த்துக்கள்

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  9. இத்தனை காலம் ஆதரவு அளித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் புதிய வரவான அதிரை அசீனா உங்கள் வரவு நல்வரவாகுக புதிய தலைப்பைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை நமது பணி ச.வி.ப.தில் தொடரும் இது வரை வந்த 10 தொடர்களும் மிண் நூலாக நமது வலைதளத்தில் மிண்னும் கவியன்பன் அவர்களின் கருத்து எனது கட்டுரைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிண்றேன் நன்பன் சித்தீக்கின் ஆர்பரித்த வார்த்தைகள் பெருமகிழ்சி கொள்கிரேன்
    மற்றும் சகோ.சேக்கன்னா நிஜாம் அவர்களின் ஆதரவும் இதில் மிக அதிகம் எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

    ReplyDelete
  10. ஆக்கம் துவக்கம் முதல் முடிவு வரை அருமை விளக்கம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers