சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது
அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்
பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன
பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன
கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்
கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்
ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்
விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது
கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது
நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
எச்சூழலிலும் மனம் துவண்டுவிடாமல் தன்னம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதை சாதூரியமான வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே..!
It is nice poem !
ReplyDelete//இன்று வரும்
ReplyDeleteதுயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது//
மனத்தினில் ஒட்டும் மகத்தானக் கோர்வை
தினம்தினம் பார்ப்பேன் திறந்து
கள்ளம் கபடம் இல்லா கவி
ReplyDeleteவாழ்த்துக்கள்
தன் நோக்கிற்கு ஏற்ப உள்ளம் உற்பத்தி செய்து உண்மைகளை இவ்வுலகிற்கு தந்துகொண்டுதான் இருக்கிறது.
ReplyDelete//
நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து
//
நல்ல நோக்கம்
நல்ல வழிகாட்டுதல்
பெருமானார்(ஸல்) அன்னவர்களின்
அமுதங்களில் ஒன்றை நினைவூட்டியமைக்கு
நீர் நலமுடன் வாழ்க!
அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான வரிகள். அற்புதக் கருத்துக்கள்.
ReplyDeleteஅருமையான வரிகளில் உங்களின் படைப்பு மிக எழிமை.
ReplyDelete