.

Pages

Wednesday, May 29, 2013

புக்கி !? ஜாக்கி !? ஜோக்கர் !? ரம்மி !? கிரிக்கெட் சூதாடிகளே...

பணி செய்யும்
அலுவலகத்திற்கு
போடாச்சு லீவு
பள்ளி, கல்லுரிக்கு
கொடுத்தாச்சு
விடுப்பு மடல்
சொந்தபந்தங்களின்
விஷேசத்திற்கு
காட்டியாச்சு
டாடா
காரணம் கிரிக்கெட்
         
***

இரவை பகலாக்கி
பணத்தை விரையமாக்கி
கண்டுகளிக்கும்
களியாட்டம்
அதுதான்
கிரிக்கெட் எனும்
சூதாட்டம்
   
***

ஆடுகளம்
விளையாடுகளம்
ஆனது
சூதாடுகளம்
     
***

நம் நாட்டு அணி ஜெயிக்க வேண்டும், நம் மாநில அணி ஜெயிக்க வேண்டும் நமக்கு பிடித்த வீரர் கலக்க வேண்டும் என்று அப்பாவி ரசிகனின் ஆசைகள், கனவுகள், மண்ணாகிபோனது புக்கிகளால். யார் அந்த புக்கி ? சூதாட்ட கம்பெனிகளால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் சொல்லும் காரியத்தை கச்சிதமாய் விளையாட்டு வீரர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி வீரர்கள் கேட்கும் அத்துனையும் கொடுத்து [ மது, மாது பணம்... ] வீரர்களை வளைத்துப்போடும் தந்திரகாரர்கள்தான் இந்த புக்கிகள் [ கேவலம் கெட்ட புரோக்கர்கள் ] புக்கிகளுக்கு நிறைய நடிகைகளின் தொடர்புகள் உண்டாம் !?

சமீபத்தில் சூதாட்டம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டு மூன்று விளையாடிகள் போலீசாரால் கைது செயப்பாட்டு இருக்கின்றனர்

1. ஸ்ரீசாந்த்
2. அங்கித் சவான்
3. அஜித் சந்டிலா

ஆகிய மூவர் விளையாட்டு மைதானத்தை வெளிச்சம் போட்டு காட்டி விளையாடி ஏமாற்றியவர்களை நமக்கெல்லாம் காவல் துறை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது இன்னும் எத்துனை பேர்கள் வெளிச்சத்திற்கு பின்னால் ஒழிந்து இருக்கின்றார்களோ ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் இந்த விளையாடிகளுக்கு பத்ம பூசனும், பத்ம விபூசனும் கொடுக்கச்சொல்லி நாமெல்லாம் சிபாரிசு செய்கின்றோம் அரசியல் வாதிகளோ MP பதவி கொடுத்து அழகு பார்க்கின்றனர் இந்த மாயை ஒழிய வேண்டும்.

Match fixing, Spot fixing, Part fixing, என்று விதவிதமாய் சூதாடுகின்றனர் மேட்ச் பிக்சிங் என்பது அன்று நடக்கும் மேட்ச்சில் யார் வெற்றி பெறுவார் என்பதை வைத்து சூதாடுவது ஒரு குழுவையே வளைத்துப்போடுவது சிரமம் என்பதால் ஓரிரு விளையாடிகளை வலைத்து போட்டு Spot fix செய்கிறார்கள் இப்பொழுது புதிதாக Part fixing  அதாவது விளையாட்டின் ஓர் பகுதியை தேர்ந்தெடுத்து சூதாடுவது சென்னையில் CBCID யினரால் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் விசாரித்ததில் கிரிக்கட் சூதாட்ட புரோக்கர்கள் நானுறு கோடிக்குமேல் இலாபம் அடைந்து இருப்பதாக கண்டு பிடித்துள்ளனர்.

அந்நியனின் ஆட்டம் அந்நியனின் குறுக்கீடு அந்நிய கலாச்சாரம் உள்ளூர் விளையாட்டை புறந்தள்ளிவிட்டு அந்நிய விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் ஏமாற்றம் வெட்கக்கேடு தலைகுனிவு மாட்டிக்கொண்ட விளையாடிகளுக்கு மட்டுமல்ல அந்த விளையாட்டை ஆதரித்த நமக்கும்தான் இப்பொழுது புதிய சூதாட்டம் சூதாடிகளிடம் வளம் வருகின்றது என்ன தெரியுமா ? இன்னும் எத்துனை விளையாடிகள் வலையில் மாட்டப்போகின்றனர் என்றுதான் ! பெட் கட்டிக்கொள்கிறார்கள் திருந்தாத ஜென்மங்கள்.  .

நாட்டை காட்டிக்கொடுப்பவனும் சொந்த வீட்டில் திருடுபவனும் இந்த சூதாடி விளையாடிகளும் ஒரே ஜாதிதான். சமீபத்தில் சூதாட்டத்தில் பங்கு பெற்றதாய் கைது செய்யப்பட பிரபலமானவர்கள், கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்புடைய பணக்காரர்கள் ஆவார். இவர்களுக்குத்தான் பணத்தின் மீது பேராசை அதை சம்பாதிக்கும் வழி பற்றி கவலைப்படாமல் மனம்போன போக்கில் செல்கிறார்கள் மாட்டிக்கொண்டால் சம்பாதித்த பணமிருக்கு வெளியில் வந்துவிடலாம் என்ற தைரியம் அவர்களுக்கு.

வீரன் என்பவன் நேர்மையான போராளி இந்த விளையாட்டு காரர்களையும் விளையாட்டு வீரர்கள் ? என்கிறோம் அவமானம். அணியை ஏமாற்றி ரசிகனை ஏமாற்றி விளையாடும் இவர்களா விளையாட்டு வீரர்கள் இல்லை இவர்கள் வெறும் விளையாடிகளே [ சூதாடிகளே ]

மு.செ.மு.சபீர் அஹமது

26 comments:

  1. விளையாட்டு விளையாட்டா இருக்கணும்

    அதையும் மீறினா இப்பிடித்தேன்...சூதாடிகள் இனியாவது திருந்தட்டும்


    ReplyDelete
  2. பலே... பலே...

    அழகிய எழுத்து நடை !

    காலச்சூழலுக்கேற்ற கட்டுரை எழுதுவதில் வல்லவர் என்று நிருபித்துள்ளீர்

    தொடரட்டும் உங்களின் விழிப்புணர்வூட்டும் ஆக்கங்கள்...

    ReplyDelete
  3. திருந்தாத ஜென்மங்கள்...

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    அது யாரு புக்கி?

    நல்ல சாடுதல், சமயத்திற்கு ஏற்ற ஆக்கம். திருந்து வானுகளா? திருந்தவே மாட்டாங்களே.

    கிரிக்கெட் எனக்கு பிடிக்காத ஒரு விளையாட்டு, இன்றல்ல அது சிறுபிராயம் முதல் எனக்கு பிடிக்காது.

    அதெல்லாம் சரி, அடுத்த அடி யாருக்கு?

    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. தொழிலதிபரின் கவித்துவ எழுத்துக்கு ஒரு காட்டு:

    //ஆடுகளம்
    விளையாடுகளம்
    ஆனது
    சூதாடுகளம்\\

    இப்பொழுது ச.வி.ப ஒரு பாடுகளம் ஆகி விட்டதில் மகிழ்ச்சி; கவிதை பாட வைக்கும் ஆற்றலை உருவாக்குவதால்.

    தோண்டத் தோண்ட “சூதாடி பூதங்கள்” கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுதாவது இந்த மட்டைப் பந்து விளையாட்டை விட்டு விட்டு கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுக்குமா நடுவண் அரசு?

    ReplyDelete
  6. கருத்திட்ட மூவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள் அறிஞர் பெர்னாட்ஷா என்றோ சொல்லிவிட்டார் பைத்தியக்கார விளையாட்டு என்று

    ReplyDelete
  7. மோதிரக்கையால் குட்டுப்படுவதே சிறப்பெனும் பொழுது கவியன்பரே நம்மை பாராட்டியமைக்கு பேரானந்தம் [அல்ஹம்துலில்லாஹ்]

    ReplyDelete
  8. புக்கி !? ஜாக்கி !? ஜோக்கர் !? ரம்மி !?

    தலைப்பிலேயே கிரிக்கெட்டை கிண்டலடித்துள்ளீர்கள்.அருமை.

    கிரிக்கெட் ஒருகாலத்தில் திறமையாய் நேர்மையாய் விளையாண்ட காலம் போய் எல்லாம் காசுபார்க்கும் சூதாட்டமாய் மாறியதை நினைத்து வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  9. சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் நாட்டாளுமன்றத்தை முடக்கும் கட்சி இது பற்றி வாய் திறக்கவில்லை. காரணம் முக்கியப் பொறுப்புகளில் அருண் ஜெட்லி, நரேந்திர மோடி, ராஜீவ் சுக்லா ஆகிய செந்தாமரைகள். பி. சி. சி. ஐ. யின் தலைவர் சீனிவாசன் ஒரு .......... சொல்லவேண்டுமா? பட்டையைக் கிளப்பும் ஆட்டத்தில் பட்டைகளின் அட்டகாசம். ஐ. பி. எல் தடை செய்யப்படவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  10. கிரிகட் போர்டு தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுவதே சிறந்தது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது இதனிடையே ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி[pjp]காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்லா [இணை அமைச்சர்]இருவரும் சீனிவாசனை காப்பாற்ற முயர்ச்சிப்பதாய் செய்திகள் வெளியாகின்றது இ.அன்சாரி காக்காவின் கருத்தும் இதற்க்கு வலு சேர்க்கின்றது

    ReplyDelete
  11. அருமையான தலைப்பு வைதுள்ளீர்கள்.

    சூதாட்டம் ஆடுபவர்கள் சூழ்ச்சிக்காரர்கள்.மது மாது சூது இவைதான் இப்போது தலைவிரித்து ஆடுக்கிறது நம் நாட்டில்.

    ReplyDelete
  12. இவ்வளவு பேரு கைது, தினமும் புக்கிகளின் தொடர்புகள் வெளிவந்தவண்ணம் இருந்தன இவ்வளவு கலேபரங்களுக்கிடையிலேயும் ஐ.பி.எல் ஃபைனல் மேட்ச்லே ரூபாய் 2,500 கோடிக்கும் குறையாமல் சூதாட்டம் நடந்ததாம்... என்னத்த சொல்ல காக்கா..

    ReplyDelete
  13. சூதாட்டம் என்றால் நமக்கு நியாபகம் பருவத்து சீட்டாட்டம்தான் ஆதலால்தான் அப்படி ஒரு தலைப்பு. தம்பி ஹபீப்,அப்துல் மாலிக் இருவருக்கும் எனது சலாம் லண்டன்[வானொலி]புகழ் அ.மெய்ஷா அவர்களுக்கும் எனது சலாம். நண்பர் சித்தீக் எங்கே காணோம் ரக்பி விளையாட போய்ட்டாரோ?

    ReplyDelete
  14. எங்க ஊர்ல ஒவ்வொரு அணியின் பெயரால் சூதாட்டம்

    நடக்கும் .ஆனால் எந்த ஒரு அணியின் வீரரையும் விலைக்கு

    வாங்க முடியாது அவர்களின் வருட வருமானம்எண்ணி பார்க்கவே நாள் போறாது ..அணியின் மேல் உள்ள விசுவாசம் ..உயிரை
    போல் பேணுவர் ...

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே
    கதைகளும்,கட்டுரைகளும்,உரைநடைகளும் எழுதியாகிவிட்டது இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் மகளீர் ஸ்பெசல் நம் வலை தளத்தில் மகளீர் அதிகமாக பார்வை இடுகின்றனர் அவ்வப்போது கருத்துக்களும் இடுகின்றனர் ஆகையால் அவர்களுக்காக மங்கையரை போற்றும் ஓர் ஆக்கம் வெயிட் அன் சீ

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, மங்கையரைப்பற்றியா? நல்ல வரவேற்ப்பு கிடைக்கும், வரும் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியை பார்த்து வைத்து கொள்ளுங்கள்.

      Delete
    2. கத்திமேல் நடப்பது போன்றுப் பத்திரமாய்க் கையாளுக! கண்மணிகளாம் பெண்மணிகளின் உணர்வுகளும், அவதானிப்பும் மிகவும் கூர்மையானதும், மென்மையாந்துமாகும்; அவர்களைக் கேலி செய்யும் வண்ணமோ, குத்திக் காட்டும் வண்ணமோ அமையாமல், நன்னெறி படுத்தும் விதமான- அமைதியான ஆற்றொழுக்கு நடையில் இருக்கட்டும், உங்களின் “மங்கையர் ஸ்பெஷல்”

      இதனால், உங்களின் மீது இத்தளத்திற்கு வருகை தரும் சகோதரிகளிடம் பெரிய மதிப்பும் உண்டாகும்.

      Delete
  16. Cricket is the worst game in the world. The peoples should away from this kind of stupid game

    ReplyDelete
  17. கவியன்பன் அவர்களின் உபதேசத்தை ஏற்கிறேன் மங்கையர் ஸ்பெஷல் என்ற உடனேயே ஒரு சகோதரியின் வருகை.வரவேற்ப்புகள் உங்களுக்கு KMA.J அவர்களும் மங்கையர் ஸ்பெஷலை ஆதரிப்பதாய் அறிகிறேன் சந்தோஷம்

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவே நான் ஆதரிக்கின்றேன், மங்கை என்றால் என்னைப் பொருத்தமட்டில் தாயாகவே நினைத்து பார்ப்பேன், ஏன் தெரியுமா? தாயைவிட ஒரு பெண் இருந்து விட முடியுமா?

      Delete
    2. முதலில் தாரம் பின்தானே தாயாகிறாள்?தாயின் மேன்மை தளம். தாரமாகிய படிக்கட்டில் இருந்துதான் துவங்கும் I AM RIGHT

      Delete
    3. நான் பிறக்கும் முன்னே தாய் வயிற்றில் உயிரோடு சுகம் கண்டவன். அதனால்தான் தாயை முன்னிலை படுத்தினேன்.

      என்ன தான் இருந்தாலும் தாயிக்கு பின் தாரம்.

      Delete
  18. உங்களது தாய் எப்படி உங்களுக்கு தாயாகினார்? தங்களின் தந்தையின் தாரமாகினதின் காரணம் கொண்டுதானே?![தாய்க்கு பின் தாரம் என்பதன் பொருள் வேறு] iam right

    ReplyDelete
    Replies
    1. பொருள் அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம். எடுத்துக்கொள்கின்ற மனநிலையை பொறுத்தது.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers