.

Pages

Friday, May 31, 2013

விதி

நினைப்பு – இது
அமைதியில்
அசைபோடும்
நடந்தவைகள்.

சிந்தனை – இது
அமைதியில்
அசைபோடும்
விரும்புபவைகள்.

நடந்தவைகள்
விரும்புபவைகள் – இதன்
நாட்டத்தில்
நடப்பவைகள்
நிகழ்பவைகள்.

நடந்தவைகள்
விரும்புபவைகள்
நிகழ்பவைகள்
இவைகள்
வாழ்வுகள்.

அவனின்றி
ஆற்றல்கள்
இல்லை!...
அதில்
சர்சைகள்
வேண்டாம்!

எங்கோ
யாரோ
எழுதவில்லை!

உன்னில்
உன்னுள்
உன்னால்
அவன்
எழுதுகிறான்.

நடப்பவை  
விதி
நடத்துனர்
மதி.

இனியென்ன!
இனிப்பும், கசப்பும்
உன்கையில்!

நடத்திடு!
நலமுடன்
வாழ்வை.
நபிதாஸ்

16 comments:

  1. Replies
    1. அறிங்கரே, நல் சேவகரே! எல்லாம் அவன் செயல் என்ற உங்களது கருத்துக்கு நன்றி!

      'இது நான் செய்தது', 'இது அவர் செய்தது' என்றவைகள்... எல்லாம், அவன் ஆற்றலைக் கொண்டு 'தாமரை இலையும் தண்ணீரும்' போல் உரிமையில்லா உரிமையில் 'எல்லாம் அவன் செயல்' என்ற பொருள் பொதிந்த உங்கள் கருத்துக்கு நன்றி!

      Delete
  2. எல்லாம் நம் கையில் (மனதில்)

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களை மிக கவனமாக உள்வாங்கும் அறிங்கரே!

      'எல்லாம் நம் கையில் (மனதில்)' என்பதில் மனதை அடைப்புக்குறியில் காட்டியது மிகவும் ரசிக்கத்தகுந்தது, அறிங்கரே!

      நம் வாழ்வு நம் கையில். அதன்படி நம் மனதை செம்மை படுத்த வேண்டும். வெற்றி நடைபோடவேண்டும். அமைதியாக வாழவேண்டும்.

      மேலும்,'எல்லாம் நம் மனத்தின்படி' என்று சொல்லாமல், 'புனித வாழ்வு' கவிதையில் வரும் 'பிரபஞ்ச மனம்' என்று பொருள்கொள்ளும் கருத்திலே 'எல்லாம் நம் கையில்(மனதில்)' என்ற பொருள் புதைத்த ஒரு வரியில் கருத்திட்டமைக்கு நன்றி!

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    எல்லாம் அவன் செயல் !

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. அயராது கருத்துக்களை உங்கள் உள்ளும், வெளியுலும் தேடி அழகுற அமைத்து தரும் நுகர்வோர் பாதுகாப்பாலரே!
      'எல்லாம் அவன் செயல் !'
      அவனின்றி எதுவுமில்லை. அவனைக்கொண்டே எல்லாம் இயங்குகிறது. அவன் ஆற்றல் நல்முறையில் கையாளப்படவேண்டும். அதற்கேற்ப வாழ்வுகள் அமையும் என்ற 'எல்லாம் அவன் செயல் !' என்று கருத்து தரும் ஒரு வரி உங்கள் கருத்துக்கு நன்றி!

      Delete
  4. நீங்கள் எதைக் கேட்டாலும் அதற்குரிய அம்சங்கள் வந்து சேரும். ஆனால் அது நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள், எந்த இடத்திலிருந்து கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. வருவதில் எந்தப் பாகுபாடும் கிடையாது. நல்லது கேட்டால் நல்லது வரும். கெட்டதைக் கேட்டால் கெட்டது வரும். எதை விரும்புகிறோம், எதனால் கவரப்படுகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது.

    வாழ்க்கையில் பல தடவைகளில், நாம் பார்க்கும் பார்வையில்தான் பயனுள்ளது என்பதும் பயனற்றது என்பதும் தங்கியுள்ளது. உன்னிடமுள்ள எல்லா உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு உன் மனசு உனக்குச் சொல்வதைச் செய். பின்பு உன் வாழ்நாளில் அதைச் செய்யவில்லையே என வருந்தாமலிருக்கலாம்.

    ஓர் எண்ணத்தை மனத்தினில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.


    இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் உளவியற் தத்துவங்களை “நறுக்கவியாய்” “நச்” என்று நான்கு நான்கு வரிகட்குள் அடக்கி வாசித்த அற்புதமே எமது தத்துவக் கவிஞர் நபிதாஸ் அவர்களின் வித்தகம்; இக்கவிதை என்னும் சிற்றேடு நம் வாழ்வைத் துலக்கும் புத்தகம்; அதனால் நாம் பெறுவோம் புத் + அகம் (புதிய மனம்).

    வாழ்க வளமுடன்!

    சூழ்க பலமுடன்!!

    ReplyDelete
    Replies
    1. எதோ என்று உள்வாங்காமல் மிகக் கவனமாக ஒவ்வொன்றையும் உணர்ந்து நீங்கள் அலசும் விதமே தனி! சமூகத்தை விழிப்புணர்வு கொண்டுசெல்வதில் மிகுந்த கவனமுடன் உள்ளீர்கள்.

      "நீங்கள் எதைக் கேட்டாலும் அதற்குரிய அம்சங்கள் வந்து சேரும்.
      ஆனால் அது நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள்,
      எந்த இடத்திலிருந்து கேட்கிறீர்கள்
      என்பதைப் பொறுத்து இருக்கிறது.
      வருவதில் எந்தப் பாகுபாடும் கிடையாது.
      நல்லது கேட்டால் நல்லது வரும். கெட்டதைக் கேட்டால் கெட்டது வரும்.
      எதை விரும்புகிறோம், எதனால் கவரப்படுகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது."

      ஆகா! என்ன அற்புதம்!

      "வாழ்க்கையில் பல தடவைகளில், நாம் பார்க்கும் பார்வையில்தான் பயனுள்ளது என்பதும் பயனற்றது என்பதும் தங்கியுள்ளது.
      உன்னிடமுள்ள எல்லா உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு உன் மனசு உனக்குச் சொல்வதைச் செய்.
      பின்பு உன் வாழ்நாளில் அதைச் செய்யவில்லையே என வருந்தாமலிருக்கலாம்."

      எவ்வளவு சமூக மேம்பாட்டு அக்கரையில் இவ்வாறு எழுதுகிறீர்கள் என்பதை உணராமல் எப்படி இருக்கமுடியும்!

      "ஓர் எண்ணத்தை மனத்தினில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்."

      இவ்வாறெல்லாம் எழுதி தத்துவமழை பொழிகிறீர்கள். யார் தத்துவ கவிங்கர்? அது நீங்கள்தான் கவிங்கரே!

      வாழ்க வளமுடன்!

      சூழ்க பலமுடன்!!

      Delete
  5. நிறைந்த விளக்கங்களை சுருங்கச்சொல்லி சொல்மடக்கி எழுதிய விதம் அருமை.

    விதியை மதிகொண்டு வென்று சிந்தனைத்துளிகள் சந்தனமாய் மணக்கிறது உங்கள் வரிகள்.

    வாழ்த்துக்கள் அன்பரே.! இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. "விதியை மதிகொண்டு வென்று" என்ற உங்களது சிந்தனைக் கருத்து, ஆம்! சந்தனமாக கமகமவென்று மணக்கிறது.

      உங்களது ஒரு வாக்கியம் ஆயிரம் வாக்கியங்களை உள்ளடைகியது. கவிங்கனின் வார்த்தைகள் விரியும் விதைகள் அல்லவா!

      நன்றி கவிங்கரே!

      Delete
  6. உன்னில்
    உன்னுள்
    உன்னால்
    அவன்
    எழுதுகிறான்.///
    என்னம்போல் வாழ்வு எனும் தத்துவத்தை
    சொன்னவிதம் அழகு

    ReplyDelete
    Replies
    1. அறிங்கரே!
      அறிவின் முழு உருவம் அண்ணல் நாயகம்(ஸல்) அன்னவர்கள் சொல்லாத அறிவுகள் எதுவும் இல்லை என்ற உலகம் அறிந்த உண்மையை,
      அவற்றில் அன்னவர்களின் புனித அறிவுக் கருத்து "என்னம்போல் வாழ்வு" என்பதனை இங்கு நினைவுகொண்டமைக்கு நன்றி அறிங்கரே!

      Delete
  7. வாழ்வே மாயம் எல்லாம் விதி படி நடக்கும்.

    உங்களது கவி வரிகள் ஆயிரம் வரிகளை உள்ளடைகியது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிலையற்ற வாழ்வு
      அதனை சமைத்தவன் நித்தியன்,
      எல்லாம் வல்ல இறைவன் என்பதற்கிணங்க உங்கள் "வாழ்வே மாயம்" கருத்தை ரசிந்தேன்.

      விதி செயல்பட அதற்கு மதி வேண்டும். அதாவது விதிக்குள் மதி. அறிவைப் படைத்தவனும் இறைவனே.அறிவுகள் இல்லாமல் எதுவும் இயங்காது. இது போன்ற கருத்துக்களை மனதில் மலரச் செய்தமைக்கு நன்றி, அறிஞரே! அதனையே

      "நடப்பவை
      விதி
      நடத்துனர்
      மதி."

      என்ற வரிகளை மனதில் மலரச் செய்தமைக்கும் நன்றி, அறிஞரே!

      Delete
  8. இனியென்ன!
    இனிப்பும், கசப்பும்
    உன்கையில்////

    நேரான வழியை காண்பித்து

    உன் விருப்பம் என கூறிய விதம் அற்புதம்

    தொடருங்கள் சகோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களது இதயம் கனிந்த தேனின் ருசியை ரசித்தேன். ஆனாலும் அச்சப்படுகிறேன்!
      எங்கும் நிறைந்த வல்லவன் அருள் வளம் இதயத்தில் என்றும் வந்தவண்ணம் இருக்க வேண்டியவண்ணம் இருக்கின்றேன். உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி! அறிஞரே!

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers