.

Pages

Saturday, June 1, 2013

[ 12 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ உள்ளம் துள்ளும் ]

உள்ளம் துள்ளும் :
நிலம் உழுது
பதமாக நீரிறைத்து
விதை போட்டு
பயிர் காத்து
கதிர் முற்றி பலன்
காணும் விவசாயி
உள்ளம் துள்ளும் !

இரவு பகல் பாராது
பாடங்கள் பல படித்து
பரிட்சைக்கு காத்திருந்து
பக்குவமாய் பதில் எழுதி
சில வாரம் காத்திருந்து
தேர்வின் வெற்றி செய்தி கேட்கும்
மாணவனின் உள்ளம் துள்ளும் !

சிந்தித்து  பல விடயம்
ஆக்கமாக  எழுதும்
எழுத்தாளன் எழுத்திற்கு
வாசகரின் கருத்துகளால்
உள்ளம்  துள்ளும் !

பத்து மாதம் சுமந்த தாய்
பல வருடங்கள் உழைத்த தந்தை
தன் பிள்ளை சான்றோன் என
பிறர் கூற செவி வழியே
உள்ளம் சென்று குளிர்ந்த
உள்ளம் துள்ளும் !

பெற்றால் தான் பிள்ளையா ?
பள்ளிக்கு வரும் மாணாக்கரும்
பிள்ளைதான் என மகிழும் ஆசான்
பெரும் பதவி பெற்ற தன் மாணவன்
என அறிந்த ஆசானின் உள்ளம் துள்ளும் !

இப்படி உழைத்து  காத்திருந்து  பலன்  அடைந்தோர் உள்ளம் மகிழச்சியால் உள்ளம் துள்ள காரணமாய் அமையும். சிறு உள்ளங்கள் துள்ள, மகிழ்வில் திளைக்க பெற்றோர்கள், உறவினர்கள் மூலம் சிறு சிறு பரிசு பொருட்கள் மூலம் மகிழ்வடைய செய்யலாம்.

நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மகிழ ஊதிய உயர்வு போன்றவைகளால் உள்ளம் துள்ள புத்துணர்வோடு வேலை செய்வர்.
உறவினர் உள்ளம் துள்ள, அவர்தம் நிறை குறை அறிந்து அவர்களுக்கு உதவுவதன் மூலம் உறவில் மறுமலர்ச்சி ஏற்படும் அவர் தம் உள்ளம் துள்ளும் நம் முன்னோர் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடியதெல்லாம் உள்ளம் புத்துனர்வு பெறவே !

பொருளாதாரத்தில் மேம்பாடு அமைந்த நாடுகளில் மதம் சாரா பண்டிகைகள் வருடத்தில் ஆறு எழு விழாக்களாவது இருக்கும் அவை எல்லாம் உள்ளம் மகிழ்வாய்  துள்ளவே !

எனவே என் அன்பு நெஞ்சங்களே உங்கள் குடும்பம் மகிழ்வால் உள்ளம் துள்ள சுற்றுலா சென்று மழலைகள் மனம் மகிழச்செய்யுங்கள்.

மீண்டும் ஒரு தலைப்போடு அடுத்த வாரம் சந்திப்போம்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

19 comments:

  1. எல்லா துள்ளல்களும் அருமை...

    சுற்றுலா செல்லாதவர்கள் சென்று வந்தால் (10 ஆம் தேதிக்குள்) குழந்தைகளுக்கும் உள்ளம் துள்ளும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களை முதலாவதாவதாக வந்து முத்தான

      கருத்தினை தரும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

      நன்றியும் வாழ்த்துக்கள்

      Delete
  2. நண்பரே தமது 50வது ஆகம் வாழ்த்துக்கள். பத்தாம் வகுப்பு பள்ளித்தேர்வில் எனது மகன் நல்ல மார்க் எடுத்து நான் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் எனக்கேற்ற கவி வரிகள் ஜசக்கால்லாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ..

      தங்களின் அருமை மகன் வருங்காலத்தில் பட்டதாரியாக

      மா மேதையாக திகழ வாழ்த்துக்கள் ..து ஆக்களும்

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    இந்த ஆக்கத்தை படித்தால் துள்ளாத மனமும் துள்ளும். துள்ளலுக்கு ஏற்றதொரு ஆக்கம், துள்ளித் துள்ளி தேடினாலும், தேடின இடமெல்லாம் அழகான துள்ளல்கள், அந்த அழகான துள்ளலைக் கண்டு என் கண் இமைகள் இரண்டும் துள்ளித் துள்ளி கலைத்து விட்டது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...K.M.A.J அவர்களே .!

      தங்களின் பின்னூட்டமும் உள்ளம் துல்லுவதாகவே உள்ளது

      Delete
  4. துள்ளாதமனமும் துள்ளும். ஒவ்வொரு துள்ளலும் அருமை.

    வாழ்த்துக்கள் சகோதரர் சித்திக் அவர்களே.!

    ReplyDelete
    Replies
    1. வெற்றிப்பாதையைநோக்கி போய்க்கொண்டிருக்கும் உங்களது அரைச்சதம் முழுச்சதமாய் சமூக விழிப்புணர்வு பக்கங்களை நிரப்ப என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.!

      Delete
    2. நன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே

      தங்களின் வாழ்த்துக்களை மனதார ஏற்கிறேன் ..

      தங்களோடு உரையாடியதில் மகிழ்ச்சி அடைந்தேன்

      Delete
  5. துள்ளாத வுள்ளமும் துள்ளும் மனத்தினைக் கொள்ளையடித்துச் செல்லும்!

    ReplyDelete
    Replies
    1. கவியன்பரின் ...

      பின்னூட்டத்தில் இடும் கருத்து கூட

      கவி மழை

      Delete
  6. மன மகிழ்ச்சியை தருகின்ற பதிவு !

    ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரின் மனதையும் உளவியல் ரீதியில் அலசிய விதம் அருமை.

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி நிஜாம் .

      தளம் அமைத்து களம் காண வைத்தமைக்கு நன்றி

      Delete
  7. 50 பதிவு என்ன 500 பதிவுகள் எழுதி மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிக்கைத்துறை நிபுணருக்கு என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல இளைய எழுத்தாளர்கள் நம் தளத்தில்

      இணைய முயற்ச்சிப்போம்

      Delete
  8. எங்களுக்கும் மனம் துள்ள எதிர் பார்த்துக்கொண்டு இருப்போம் எப்போது வரும் ஞாயிறு என்று ஏன் என்றால் உங்களின் பதிவு உள்ளம் கேட்குமே மோர்காக வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி .!தம்பி ஹபீப் அவர்களே ...!

      தங்களின் எதிர்பாபிற்கு உள்ளம் கனிந்த நன்றி

      Delete
  9. மனதை கொள்ளை கொள்ளும் பதிவு

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பற்று

    ReplyDelete
    Replies
    1. தமிழ் கூறும் நல்லுலகில் ..

      தங்களை போன்றோர் பங்கு மிக முக்கியம்

      நுகவோர் இல்லா ஆக்கம் பயனில்லா ஆக்கம்

      அக்காத்திற்கு மதிப்பளித்து பின்னூட்ட கருத்து அளித்துள்ளது

      சகோ தமிழன் தமிழ் பற்று போற்ற தக்கது ..நன்றி சகோ

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers