'உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா'
என்ற பாடலின் வரியே இந்த வார ஆக்கத்தின் ஆய்வாய் ஆராய்வோம். சிறு வயதில் நீதி போதனையாய் கேட்ட ஒரு கதையை இங்கு பதிய விரும்புகிறேன்.
ஒரு ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உணவுக்கு பஞ்சம் பல மக்கள் ஊரைவிட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர். அதில் ஒருவர் ஊருக்கு வெளியே மணல் மேடுகளைக் கண்டு அடடா... இவை அனைத்தும் தானியங்கள் ஆகவோ அல்லது ரொட்டி சுடும் மாவாகவோ இருந்து அது எனக்கு சொந்தமாக இருந்தால் ! இவ்வூரில் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து உதவுவேனே என்று உள்ளத்தால் நினைத்தானாம்.
உள்ளத்தை அறிந்த இறைவன் அந்த மணல் மேடு அளவு தானியங்கள் தருமம் செய்த நன்மையை அம்மனிதனுக்கு கிடைக்க அதாவது நன்மை செய்ததாக பதிந்திட ஆணையிட்டான் என்று பாட்டி மூலம் காது குளிர கேட்டேன்.
உள்ளத்தூய்மை இறைவனுக்கு உகந்த ஒன்று.
உள்ளத்தை பார்க்கும் மனிதன்
மனிதனில் புனிதன்
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
ஒரு முறை முல்லா நசுருதீன் விருந்திற்கு அழைக்கபட்டார். தூய்மையான உடை அணியாமல் செல்ல விருந்திற்கு அனுமதிக்க வில்லை. நிலைமையை அறிந்த முல்லா வீட்டிற்கு சென்று நேர்த்தியான உடை அணிந்து மீண்டும் விருந்திற்கு செல்ல உள்ளே அனுமதிக்க பட்டார். விருந்து பரிமாறப்பட்டது எல்லோரும் முல்லாவை வினோதமாக பார்த்தார்கள்.
அப்படி என்ன செய்தார் முல்லா !?
கொடுக்கப்பட்ட சுவையான உணவுகளை தனது உடையில் அள்ளி தேய்த்து கொண்டாராம் ஏன் இப்படி என கேட்க ? விருந்து எனக்கல்ல எனது உடைக்கு தான் என்றாராம் புரிகிறதா !?
உள்ளத்தை பார்க்காமல் உருவத்தை பார்க்கும் உலகம் ! உருவத்தால் வசீகரம் நாகரிக உலக நடைமுறைக்கேற்ப தன்னை அலங்கரித்து உலகில் வளம் வருபவர்களுக்கு இக்கால மனிதர்கள் தரும் மரியாதை. சாதாரணமாக உலகில் எளிமையாக வளம் வருபவர்களுக்கு கிடைப்பதில்லை ..
உருவத்தை வைத்து மனிதர்கள் தரும் மரியாதை பற்றிய உளவியல் பார்வையை பாப்போம்...
சிறு வயதில் பிள்ளைகளுக்கு உடை விசயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அனுப்பும் பெற்றோர் கசங்கிய நிலையில் உள்ள ஆடைகளை அணிவித்து அனுப்புவர் அது பிள்ளைகளின் மனதில் ஏனோ தானோ என்ற மன நிலை உண்டாகும் ! பிறர் நம்மை பற்றிய எண்ணம் எப்படி இருக்கும் என்பதை அறிய வாய்ப்பில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் தமது உடைகளை நேர்த்தியாக மடித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
உடை நறுமணம் வீசும் அளவிற்கு பிள்ளைகளின் உடையை சுத்தமாக சலவை செய்து கொடுக்க வேண்டும். அக்குழந்தைகளிடம் ஆசிரியர்களின் அணுகுமுறையும் நன்றாக் இருக்கும். பிறரை கவர வைக்கும் பிறர் தம்மை மதிக்க தோற்றம் முக்கியம்.
* பிறர் நம்மை பார்த்து புன்முறுவல் பூப்பதும். பாராமுகமாக இருப்பதும் நமது உருவத்தின் அடிப்படையில்தான்.
* பிறர் நம்மிடம் அணுகும் போது புன்முறுவல் பூத்து முகமன் கூறுதல் நலம் விசாரித்தல் மூலம் பிறர் மனம் கவரலாம்.
* பிறர் நமக்கு தரும் நன் மதிப்பை வைத்தே நமக்குள் தன்னம்பிக்கை ஏற்படும்.
* இயற்கையான முக வசீகரம் இறைவன் தந்த அருட்கொடை. அதற்காக இறைவனுடன் நன்றி பாராட்டலாம். ஆனால் பிறரை நகைப்பது, பிறர் குறை கூறித்திரிவது தனது அழகினால் இறுமாப்பு கொள்வதால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். திமிர் பிடித்தவன் கர்வம் கொண்டவன் என்ற பெயர் கிடைத்து விட்டால் நல்ல வாய்ப்புகள் வரும்போது கர்வம் பிடித்தவன் அவனுக்கு ஏன் உதவ வேண்டும் என எண்ணுவர்.
* பிறரை மதித்து நாமும் உயரலாம்.
உள்ளத்தை தூய்மையாய் வைத்து மனிதரில் புனிதராய் ஆக முயற்சிப்போம். தூய்மையான உள்ளத்திற்கு மதிப்பளித்து மனிதரில் புனிதராவோம் !

இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
உடலும்,உடையும்,உள்ளமும் தூய்மையானதாக இருந்தால் தான் தொழுகையே கூடும் என்ற விதி இருக்கும் பொழுது, இறைவன் தூய்மையானவன்; தூய்மையானவர்களையே நேசிக்கின்றான் என்ற வேத வரிகளும் சான்று பகர்கின்ற பொழுது, தூய்மையில் நாம் அலட்சியமாய் இருப்பதைக் கண்டு வியக்கிறேன். உங்களில் ஆக்கத்தின் தாக்கத்தால் உடல், உடை மற்றும் உள்ளம் தூய்மையுடையோராய் மாறுவதற்கு முயற்சிப்போம்!
ReplyDeleteஉள்ளம் தூய்மை ..
Deleteஇறைவன் சன்னிதானத்தில் முதலிடம் பெறும்....
தூய்மை உடலில் உடையிலும் அவசியம் .
ஆனால் எளிமையை இவ்வுலகம் மதிப்பத்தில்லை ..
ஆக்கத்திற்கு வழுசேர்க்கும் தங்களின் பின்னூட்டத்திற்கு
நன்றி
நல்ல ஆக்கம் நன்றி சகோதரரே!
ReplyDeleteஅன்பு ..சகோ
Deleteதங்களின் வருகை நல்வரவாகுக ..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மிகப் பெரிய விஷயத்தை மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை.
ReplyDeleteமரியாதைக்குரிய ...
Deleteமனித மேம்பாட்டு துறை நிபுணர் ..
எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி காக்காவின்
பாராட்டு எனக்கு மேலும் ஆக்கம் எழுத தூண்டுகிறது
உள்ளம் மகிழ்ந்தேன் நன்றி
'உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
ReplyDeleteஉள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா
தமது கட்டுரைக்கு விமர்சனமே மேலே குறிப்பிட்ட அந்த வாக்கியம்தான் அருமை அருமையான சிறு கதைகள்
நன்றி நண்பா
Deleteநல்ல பல கதைகள் மூலம் நம் தமிழ் கலாசாரம்
Deleteவளர்ந்தது ..நல்ல கருத்து பதிய இரு கதை தேர்வு
செய்தேன் ..உன் உள்ளம் கவர்ந்த கதை ..உள்ளம்
மகிழ்ந்தேன் நண்பா
சிறு கதையுடன் நல்ல விளக்கம்... பாராட்டுக்கள்...
ReplyDeleteநமது கலாச்சாரம் ..
Deleteகதையோடு பின்னி பிணைந்தது தானே
சகோ திண்டுக்கல்தனபாலன்..அவர்களே
தங்களின் பாராட்டு என்உள்ளம் துள்ளுதே
நன்றி
உள்ளம் - உருவம் நல்லதொரு உபதேசம் !
ReplyDeleteஆக்கம் நல்ல சிந்தனைகளைக் கொண்டுள்ளது.
ஆலோசனைகள் ஐந்தும் அருமை
தொடர வாழ்த்துக்கள்...
ஆக்கத்திற்கு
Deleteஊக்கம் தரும் தம்பி நிஜாம்
ஊடக ஆழ்மை நிறைந்த தங்களின்
கருத்திற்கு நன்றி
இந்தவாரம் ''உள்ளம் கேட்குமே'' சற்று வித்தியாச கோணத்தில் சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள் அருமை.
ReplyDelete///திமிர் பிடித்தவன் கர்வம் கொண்டவன் என்ற பெயர் கிடைத்து விட்டால் நல்ல வாய்ப்புகள் வரும்போது கர்வம் பிடித்தவன் அவனுக்கு ஏன் உதவ வேண்டும் என எண்ணுவர்.///
வரிகள் ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள்.
அதிரை மெய்சா அவர்களே
Deleteதங்களின் துல்லியமான பார்வைக்கு பாராட்டுக்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஉள்ளம் + உருவம் அழகான விளக்க்கம், உங்கள் ஆக்கமும் ஆய்வும் அருமை.
உள்ளம் பேச சொல்லும்.
வாய் பேசாது.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நன்றி ..காக்கா
Deleteதங்களின் ஆக்கங்களை
பின்னூட்டமும் மிக அருமை
உங்கள் நன்றிக்கு நன்றி அதிரை சித்திக் அவர்களே.
Deleteஅருமையான விளக்கத்தோடும் ஒழுக்கத்தோடும் ஒரு ஆக்கம் அனைவரும் மனம் பார்த்து பழகுவோம்.இன்ஷா அல்லாஹ் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதர் சித்திக் அவர்களே.
ReplyDeleteஆசிரியரிடம் பண்புள்ள மாணவனை போல ..
Deleteஆக்கத்தை உணர்ந்து பின்னூட்டமிடும் தம்பி ஹபீப் அவர்களே
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
'உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
ReplyDeleteஉள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா'
அருமையான தலைப்பு, நல் சிந்தனை, தேவையான நேரத்தில் தகுந்த நல்லறிவு கருத்துக்கள்.
உள்ளம் தெளிவாக நற்குணங்கள் நிரம்பி இருந்தால் தனி மனிதனும் நலம், நாடும் நலம்.
ஒரு உள்ளம் கெட்டுவிட்டாலும் பல உள்ளங்கள் கெட்டுப்போக வாய்புகள் நிறையவே இருப்பதை காண்கிறோம்.
எனவே தங்கள் கூற்று பிரகாரம்....
"உள்ளத்தை தூய்மையாய் வைத்து மனிதரில் புனிதராய் ஆக முயற்சிப்போம். தூய்மையான உள்ளத்திற்கு மதிப்பளித்து மனிதரில் புனிதராவோம் !"
ஆனால் சில உள்ளங்கள் வேறுவிதமாகக் கெட்டுவிட்டன. ஆயிரம் ஆயிரம் பெயர்கள் இருக்க என் unkalukku nanban பெயரிலே கருத்திடல் எவ்வாறு நியாயம்?
அதற்காக profile photo சேர்த்தேன். அத்தைனையும் காப்பி அடித்து அப்படியே ஒரு நல்ல திறமைசாலி போட்டுள்ளார்.
தி அதிரை நியுஸ் நிர்வாகி ஜனாப் சேக்கனா M. நிஜாம் அவர்கள் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ஒரு புனை பெயரில் முதலில் ஒருவர் கருத்துகள் எழுதிவிட்டால் எந்த மொழியுலும் அதே உச்சரிப்புடன் அதே போன்ற புனை பெயர் வந்தால் அதனை நீக்கிவிடுதல் வாசகர்கள் குழம்பாமலிருக்க தாங்கள் உதவி செய்தது போல் இருக்கும் என்பது என் கருத்து. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும் விபரங்கள் காண...
Thursday, 6 June 2013
பிலால் நகர் சிறுவர்களின் குசும்பான விளையாட்டு !? செய்தியில் வரும் பினூட்டங்கள் யாவையும் பார்க்கவும்.
இது இங்கு எழுத வேண்டியது அல்ல. ஆனாலும் உள்ளம் சம்பந்தமாக விளக்கங்கள் வந்ததால் தவறு வராது என்று பதிந்துவிட்டேன்.
பின்னூட்டம் மூலம் ஆக்கம் படைக்கும்
Deleteசகோ ,,உ .நண்பன் அவர்களே ..
உள்ள தூய்மை ..மிக முக்கிய மான ஒன்று
சர்ச்சையான விசயத்திற்கு நல்ல விளக்கம் கொடுத்த்
உ.ந. புனை பெயரில் மற்றொருவர் உலா வருவது
கண்டிக்க தக்க ஒன்று தான்..நய வஞ்சகம் இஸ்லாத்தில்
அனுமதிக்க படாத ஒன்று ..இறை வணக்கம் செய்யும்
நபர்கள் நய வஞ்சகத்தில் ஈடு பட்டால் அவர்களின்
இறை வணக்கம் எப்படி ஏற்றுகொள்ள படும்
சமந்த பட்டவர்கள் கவனம் கொண்டால் சரி
தம்பி நிஜாம் அவர்களே ..!
Delete"உங்கள் நண்பன் "விவகாரம் குறித்து
விளக்கம் தாருங்களேன் ..