.

Pages

Saturday, June 29, 2013

அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' !

முன்னுரை : 
வளைகுடா வாழ்க்கை !

சிலரின் வாழ்வில் வசந்தம் வீசிய வாழ்கை... சிலரின் வாழ்வில் புயலான வாழ்க்கை... கல்வியின் முக்கியத்துவம் தெரிய வைத்த வாழ்க்கை, உற்றார் உறவினர் விட்டு பிரிந்து வந்த இடத்தில் புது உறவாய் தன்னுடன் தங்கிய வெளியூர்க்காரர்களின் நட்பு அதில் கிடைத்த பல உதவிகள், பல துரோகங்கள், ஏமாற்றம், சந்தோசம் என்று பல விசயங்கள் கலந்த படைப்பாக தொடர்ந்து வர இருக்கின்றன. கடந்த கால நிகழ்வு, நிகழ்கால சம்பவங்கள் உள்ளடக்கிய ஆக்கமே "வளைகுடா வாழ்க்கை"

தனி மனித வாழ்க்கை தேவைகள் மிகவும் குறைவான காலங்களில் மனித உழைப்பு அந்த தேவைகளின் அடிப்படையிலேயே இருந்து. அதாவது உண்ண உணவு... உடுத்த உடை... இருக்க இருப்பிடம் இதற்கான சேவைகளே அந்த உழைப்பு தேவைப்படுகிறது.

பண்டை கால தமிழ் மன்னன் அதியாமான் ஆண்ட காலத்தில் வாழ்ந்த ஔவை பாட்டி உழைக்கும் வர்க்கத்தை பார்த்து 'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று உறங்கும் இளைஞனை  பார்த்து கூறினாள். ஔவையின் அன்றைய அறை கூவல் இன்றைய இளைஞர்களுக்கு பொறுத்தமாக  இருக்கிறது என்றால் மிகையாகாது.

நமது மூன்று தலை முறையினர் வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இன்று மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொருளீட்டி வந்த நாம்மவர்களுக்கு 1968 முதல் 1972 வரை தொய்வான நிலை இருந்து வந்தது. ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று அந்நாட்டை வளம் பெற செய்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் நம்மவர்களின் வாழ்வில் பேரிடியாய் அந்நாட்டு மண்ணின் மைந்தர்களால் தொல்லைகள் ஏற்பட்டு அகதிகளாய் நாடு திரும்பும் நிலை ஏற்படத்தான் செய்கிறது.

இவைகளை பற்றி முத்தாய்பாய் வைக்க காரணம் பின் வரும் ஆக்கத்தில் வரும் நிகழ்வைப்பற்றி கூறிடவே இதனைக் குறிப்பிடுகிறேன்.

1972 அரேபிய வளைகுடாவில் வேலை வாய்ப்பு துளிர்த்த நேரம் அரபி கடலோரம் உள்ள மலையாளிகள் விழித்து கொண்டனர். வியாபாரிகளும், படித்த பட்டதாரிகளும் அதிகமானோர் அரபு நாட்டை குறி வைத்து குடியேறினர். அரபிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய மலையாளிகளின் சேவையே போதுமானதாக இருந்தது. கன ரக இயந்திரங்கள் குறைந்த காலமது அந்த கால கட்டத்தில் அதிகமான தொழிலாளிகள் தேவைப்பட்டனர். சளைக்காது வேலை பார்க்க நம் தமிழர்களே  தகுதியானவர்கள். தேவைகள் முடிந்த பின்னர் சக்கையாய் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணத்தில் நம்மவர்களை அதிகமாக வேலைக்கு அழைத்தனர். ஏஜெண்டுகள் மூலம் அன்று பம்பாய் என்று அழைக்கப்பட்ட மும்பைக்கு அழைத்து செல்ல பட்டு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு  தலைமை ஏஜென்டிடம் அணி வகுத்து காண்பிக்க பட்டு பின்னர் அரபியிடம் அழைக்க பட்டு அவர் சம்மதம் கிடைத்த பின்னர் விசா ரெடியாக ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்பர்.

நம்மவரும் கனவோடு காத்திருப்பர்...
 [ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

27 comments:

 1. நல்ல ஆரம்பம்... வளைகுடா வாழ்க்கை அறிய தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ..

   சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..

   Delete
 2. வளைகுடா வாழ்க்கை !

  எனக்கும் ஒன்பதாண்டுகால அனுபவம் உண்டு கைநிறைய பணம் கிட்டினாலும் எதோ ஒன்றை இழந்ததுபோல் உணர்வு...

  இத்தொடரில் நல்ல பல அனுபவங்கள் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பல நூறு வாசகர்களைப்போல் நானும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்

  தொடர சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பத்திரிக்கைத்துறை நிபுணர் அதிரை சித்திக் அவர்களுக்கு...

  ReplyDelete
  Replies
  1. நன்றி .

   தம்பி நிஜாம் அவர்களே .

   தங்களுடைய அனுபவங்களை பின்னூட்டங்களில்

   பதியுங்கள்

   Delete
 3. The greatest disadvantage of working overseas is that you miss your family and home.

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோதரி

   குடும்பத்திற்காக ..குடும்பத்தை பிரியும் சூழல்

   தங்களின் வருகைக்கு நன்றி

   Delete
 4. வெளி நாட்டு வாழ் நம்மவர்களின் அனுபவங்கள் இதில் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறேன் room ல் நடந்த அரட்டைகள் சுவாரஸ்ய சம்பவங்கள் மற்றும் சங்கடங்கள் அனைத்தையும் விளக்கவும் மற்ற நேயர்களும் தங்கள் அனுபவங்களை கருத்து பகுதியில் இடவும்
  ஓர் சம்பவம் நம்மவருக்கு வயிற்று போக்கு அதிகமாகி அதை அரபியிடம் சொல்ல தெரியாமல் அரபியை கையேடு அழைத்து சென்று பாத்ரூம் தண்ணீர் பைப்பை திறந்து விட்டு தமது பின்பகுதியை சுட்டிக்காட்டி சேம் சேம் என்றாராம் நம்மவர்

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஹா...

   சபீராக்கா வாசிக்கும் போதே சிரிப்பு வந்துடுச்சு

   Delete
  2. பல சுவையான நிகழ்வுகள்

   உண்டு ..முதல் ஆக்கத்தின் பின்னூட்டத்திலேயே

   கலகலப்பை .தந்தமைக்கு நன்றி

   Delete
 5. பதிவுக்கு நன்றி.

  எல்லோரும் எதிர்பார்த்தது, இனியும் ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என்று ஏங்கும் உள்ளங்கள் இன்னமும் உண்டு.

  நல்லா எழுதுங்க.

  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜமால் முகம்மது காக்கா அவர்களே

   Delete
 6. பாலையான வாழ்க்கையைப்

  பசுஞ்சோலையாய் ஆக்கவே

  பாலைவன நாட்டுக்கே

  பறந்து வந்த பறவைகள் நாங்கள்...

  இச்சையை மறந்தோம்;

  இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;

  பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;

  பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...

  இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;

  இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;

  "பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"

  பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

  "இல்லானை இல்லாலும் வேண்டாள்;

  ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்

  சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்

  ஔவ்வையார் அன்றே......

  மூதாட்டியின் மூதுரைக்கும்

  முழுமையான விரிவுரை நாங்களே...

  பாதாளம் வரை பாயும் பணமே

  பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே

  “கவியன்பன்”,கலாம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியன்பன் கலாம் காக்கா அவர்களே

   தங்களின் கவி பின்னூட்டத்திற்கு நன்றி

   Delete
 7. வளைகுடா வாழ்க்கையை தலைப்பை வைத்து துவங்கியிருக்கும் தாங்களின் இந்தக்கட்டுரை சுவராஸ்யமான பல நிகழ்வுகளை வெளிக்கொண்டு வருமென்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  நானும் இந்த வளைகுடா வாழ்க்கையை பற்றி கட்டுரையாக எழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் உங்களின் ''வளைகுடா வாழ்க்கை'' தொடராக எழுதுவதால் இன்னும் மெருகூட்டும் வண்ணம் இருக்குமென ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  தொடருங்கள். என்றும் எனது ஆதரவும் வாழ்த்துக்களும் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி .சகோ அதிரை மெய்சா அவர்களே

   வாருங்கள் வருங்கால சந்ததிகளுக்கு தகவல் பதிவோம்

   Delete
 8. நல்ல ஆரம்பம்... வளைகுடா வாழ்க்கை கட்டுரை தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ...

   மூத்த சகோ ஜின்னாஅவர்களே ..

   Delete
 9. அன்பரே!
  உங்கள் 'வளைகுடா வாழ்க்கை'
  எல்லோரையும் வளைத்துப்போட்டுவிட்டது!
  உங்கள் கட்டுரை தொடங்கும் முன்பும் ஒரே ஆனந்த வரவேற்ப்பு!
  எல்லோர் மனதையும் இதுகால் எழுதிய கட்டுரைகள் மூலம் வளைத்துவிட்டதே இத்தனை ஆனந்த களிப்பு என்பது தெரிகிறது.
  //
  கல்வியின் முக்கியத்துவம் தெரிய வைத்த வாழ்க்கை, //
  என்று தொடக்கத்திலே அழகாக அறிவுரைகளை இலகாக இணைத்து இளைஞர்களை ஊக்கம் ஊட்டியது சமுதாய அக்கறை நிறைந்த உள்ளம் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது.

  வாழ்க நீவீர்!

  ReplyDelete
  Replies
  1. ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ..கவி அருவி நபி தாஸ் அவர்களே ...

   Delete
 10. உங்கள் வளைகுடா பயணம் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஜசாகல்லா ஹைரன் ..சகோதரி

   Delete
 11. வாழ்த்துகள்
  Good post

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers