பார்வையில் பாடம்
கவன நடிப்பு
விளைவு தோல்வி.
கவனம் குறைவில்
அறிவு சேர
அலை வேகம்
அது கரையும்.
மனதில் பதிவு
மாறா நிற்க
அறிவு பெருகும்
ஆள்மை கூடும்.
கவனம் நிலைக்க
ஆசை வேண்டும்
கவர எவர்க்கும்
வழியும் இருக்கு.
கண் பார்க்கும்
இது வேண்டாம்.
மனம் பார்க்கும்
மதி வேண்டும்.
செவி கேட்கும்
இது வேண்டாம்.
மனம் கேட்கும்
மதி வேண்டும்.
வாய் ஓதும்
இது வேண்டாம்.
மனம் ஓதும்
மதி வேண்டும்.
உடல் உணரும்
இது வேண்டாம்.
மனம் உணரும்
மதி வேண்டும்.
நாசி நுகரும்
இது வேண்டாம்
மனம் நுகரும்
மதி வேண்டும்.
மனது புலன்
இரண்டற்ற இருப்பில்
இருந்து செய்யும்
மதியே வேண்டும்.
மனம் நீ
புலன் அடிமை
புரிந்தால் என்றும்
புண்ணியம் நின்றிடும்.
மனம் நீ
புலன் வழியில்
புலன் காத்து
புரிந்து வாழ்.
கருவி உள்ளவன்
செயல் வல்லவன்.
கிடைத்த கருவி
பழுதாக பழகாதே.
கவன குறைவில்
படிக்கும் பாடம்
செய்யும் செயல்
பணிமீது வெயில்.
மனபுலன் ஒன்றி
படிக்கும் பாடம்
செய்யும் செயல்
நிகரற்று நிலைக்கும்.
ஒன்றின் உள்
அடிப்படை அரு
ஒன்றின் வெளி
இருப்பது உரு.
அருவுரு ஒன்றாய்
ஆற்றும் செயல்
ஆகா! அற்புதம்
அறிந்தால் அமைதி.
பார்வை குருடது
செவியால் கேட்கிறது.
மனத்தால் பார்க்கிறது
பாதைமாறா நடக்கிறது.
ஊமை வாயது
கண்ணால் கேட்கிறது
கையால் பேசுகிறது
கவனமாய் வாழ்கிறது.
ஊனம் உள்ளார்
சளைத்தவர் அல்ல
ஒலிம்பிக் பந்தயம்
அவர்களுக்கும் உண்டு.
புலன்கள் நிறைவாய்
இருக்கும் மனிதர்
இதனை புரிந்தால்
ஏற்றம் பெறுவார்.
சொல்லச் சொல்ல
படமாய் பதியபாடத் தேர்வில்
வெற்றி நிச்சயம்.
விளங்கி ஓதும்
வேதம் முறையை
ஏகன் ஏற்றான்
அன்றி இகழ்ந்தான்.
ஒன்றின் அறிவு
ஒன்று அறிய
முழுமை கவனம்
இருத்தல் நலமே.
நபிதாஸ்
பின்னிப்பினியும் வார்த்தை விளையாட்டு !
ReplyDeleteரசித்து வாசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்...
அதிரை நியுஸ் நல் நிர்வாகி சேக்கனா M. நிஜாம் அறிஞர் தங்களுக்கு,
Deleteஉங்கள் அன்றாட குடும்ப, தொழில் செயல்பாடுகளுக்கு இடையில் இந்த தி அதிரை நியுஸ் செய்திகளை சேகரித்தல், கருத்துக்களை கவனமுடன் கவனித்தல், நாட்கள் முழுவதும் இந்த வேலையில் தொய்வில்லாமல்... அப்பப்பா! எப்படி? இந்த சமூக சேவை விளையாட்டு, பின்னிப்பின்னி விளையாடுகிறீர்கள்! இதற்கு இடையில் 'கவிதைகளை ரசித்து வாசித்தேன்' என்ற பொறுப்பு.
உலகமே ஒரு விளையாட்டு. ஆம்! வாழ்க்கை விளையாட்டு. படைத்தவன், படைக்கப்பட்டவைகள் இதன் தாத்பரியத்தில் உண்மைகளை புரிதல் இதன் விளையாட்டு. அதனுள் வார்த்தை விளையாட்டு, கருத்துக்கள் விளையாட்டு. இப்படி கவிங்கர்களுக்கு விளையாட்டு. நன்றாக எல்லோரும் விளையாடத்தானே இதுபோன்ற கருதுக்கால்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
/// கண் பார்க்கும்
ReplyDeleteஇது வேண்டாம்...
மனம் பார்க்கும்
மதி வேண்டும்....///
நல்ல சொல்லாடலுடன் கருத்துக்கள் அருமை... வாழ்த்துக்கள்...
'நல்ல சொல்லாடலுடன் கருத்துக்கள் அருமை' என்ற வரிகள், நீங்கள் கவனமாக "கவனம்" இரசித்தீர்கள் என்பது உங்கள் உயிரோட்ட வரிகள் சொல்கிறது.
Deleteஎழுதுவது ஓர் அறிவானால் அதனை இரசிப்பது ஓர் உயர்வான அறிவு.
கருத்துக்கள் மனதில் கரைந்து வாழ்வானால் வாழ்வு செழுமை.
அறிங்கர்,திண்டுக்கல் தனபாலன் அவர்களே, நன்றி! உங்கள் வாழ்த்துக்கு.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅழகான தகவலோடு தவழ்ந்து வந்த கவிதை, தொடர்ந்து தவழ வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மனித உரிமை காவலரே! அறிஞரே!
Deleteஉங்கள் சமூகப் பணி உயர்வானது.
என்ன அருமையான செய்திகளை எவ்வளவு சிரத்தையுடன் சேகரித்து தருகிறீர்கள்.
இதற்கு இடையில் கவிதை அலசி கருத்துக்கள் தருகிறீர்கள்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!
உங்கள் நன்றிக்கு நன்றி நபிதாஸ் அவர்களே.
Deleteசுருங்கிய வரிகளாயினும் விரிவான விளக்கம் அருமை.
ReplyDelete//ஊனம் உள்ளார்
சளைத்தவர் அல்ல
ஒலிம்பிக் பந்தயம்
அவர்களுக்கும் உண்டு//.
தன்னபிக்கை கொள்ளவைக்கும் தரமான எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கவிச்சிர்ப்பிக்குள்ளிருந்து வெளிவந்த முத்துக்கள். .
வாழ்த்துக்கள்.அன்பரே.!
கருத்து விதைகள் கவிதை என்று 'சுருங்கிய வரிகளாயினும் விரிவான விளக்கம்'
Deleteஎன
'தன்னபிக்கை கொள்ளவைக்கும் தரமான எழுத்துக்கள்'
என்று
முத்தான உங்கள் சுருங்கிய வரிகளில் விரிவான வாழ்த்துகளுக்கு நன்றி!
அதிரை.மெய்சா நல் கவிங்கரே!
மலை மேலே சிறு நீர் சுனைகள்
ReplyDeleteமருவி ஆங்கே பல சேர்ந்து ..
அருவியாக மாறுவது போல் .
"கவி அருவி " நபி தாசின்
சிறு வார்த்தை ஒன்று சேர்ந்து
கவியாக மாறியதே ..
அருவிக்குள் குளிரிருக்கும்
உங்கள் கவிக்குள்ளே அறிவு இருக்கு
அருவி சேர்ந்து ஆறாகும் .
உங்கள் கவி சேர்ந்து பல உள்ளங்கள்
நல்வழிக்கு சேர்ந்து பல நூறாகும் ..
ஆறாத புரையோடிய மனங்களுக்கு
உங்கள் கவி மயிலிறகில்
மருந்திட்டு மென்மையாக
மாற்றி விடும் ...கவி மூலம்
ஆற்றி வரும் தொண்டிற்கு
வாழ்த்துகிறேன் பலவாறு ..
வாழ்க நின் தொண்டு .
மன மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
கவிதைக்கு கருத்திடலும் கவியா!
ReplyDeleteகவிமழை பொழியும் அறிவுமேகமா!
கவிகருத்திலும் வாழும் உயிரோட்டமா!
கவிமழை அதிரைசித்திக் கருத்துமழை!
கவிழ்ந்தேன் குளிரில் கரைந்தேன்!
கவிராயர் கவித்துவமதில் காணாமலானேன்!
வாழ்த்தும் பண்பிலே
வாழ்க நின் தொண்டு.
வாழ்த்துகிறேன் நினை
வாழ்க நீர் பல்லாண்டு!
வாழ்த்துகிறேன் மனமகிழ்ந்து!
வாழ்க! நன்றி! நன்றி!
தத்துவக்கவிஞரின் தரமான கவிதை என் ஞான தாகத்திற்கு நீரூற்றி விட்டுச் சென்றது! அடியேன், அபுதபியிலிருந்து அதிரைக்குப் பயணத்தில் இருந்தேனாதலால், உடன் கருத்திட இயலாமற் போனது; இணையத் தொடர்பும் இன்று தான் கிட்டியது.
ReplyDeleteஎன் செல்ல்லிடைப்பேசி இலக்கம்: 7200332169
என்னை காண எண் தந்துவிட்டீர்கள்...
Deleteஎன்ன பதில் தந்து தப்பிப்பேன்!
என்பதிலே சிந்தனைகள்.
எண்ணக் கருத்திலே எனைக் காண
என்றுமே இருத்தல் நலமென்று
எண்ணிதான் இவ்வலை தளத்தில்
என் எண்ணம் பதிக்கின்றேன்.
கண் நோக்கும் நிலை வேண்டாம்-நின்
மனம் பார்கும் நிலை வேண்டும்.
தவறாக புரிந்திட்டால் என் உள்ளம் தாங்காது.
தயவுடன் புரிந்திடல் வேண்டும்.
தவறாது ஏற்றிடல் வேண்டும் .
தயங்கியே வேண்டுகிறேன் கவிஞரை.
உங்கள் கவியறிவுக்கு முன் நான் குழந்தை.
உள்ளத்தில் உதித்ததை எழுதுகிறேன்.
உதிப்பு எனதன்று தானே?
உயர்ந்தோனின் விளையாட்டுப் பொம்மை நான்.
உண்மையென்று உங்கள் மனம் ஏற்கும்தானே.
மறைந்திருந்தே மனத்தால் காண முடியும்; மாண்புமிக்க நட்பைப் பேண முடியும்; அதனால் ஏற்கிறேன், உங்களின் அன்புக் கட்டளையை!
Deleteஅய்யாவின் கவிதையில் பொருளை உணர்ந்து வாசித்தால் நன்மை தரும் பொருள் உள்ளது.
ReplyDeleteவாழ்க தமிழ். வளர்க தமிழ் பற்று.
பொருள் உணர்ந்து, சிந்தித்து வாசித்தல் நலமே.
Deleteதமிழ் பற்று ஆட்கொண்டு தமிழன் என பெயர் கொண்ட அய்யா அவர்களுக்கு நன்றி!
வாழ்கையில் கவனம் இருந்தால் எதுவந்தாலும் எங்கு போனாலும் ஜெயித்து விடலாம் அதற்கு தன் நம்பிக்கை ஊட்டும் வகையில் உங்கள் கவிவரிகள் அருமை தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிஞர் ஹபீப் அவர்களே,தங்கள் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி!
Delete