kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, August 30, 2013
முறிவு
....மனமுறிவு உண்டாதல் ஆகுமே
குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே
...குடும்பத்தில் இன்பத்தை வளர்க்குமே
பணம்பறிக்கும் எண்ணமெலாம் இல்லறம்
...பாழ்பட்டுப் போவதற்கு அறிகுறி
உணர்வறிந்தப் பாலியலில் இன்பமே
...உதட்டளவில் பழகுவதால் துன்பமே!
இணைகோடு இணையாது போயினும்
....இணைபிரியா உறவுகளில் இரயிலின்
இணைசேரா தண்டவாளம் மீதினில்
...இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
....துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக
வீணையோடு இணைகின்ற பாடலும்
....வெற்றியான தாம்பத்யம் போலவே!
முதலாளி தொழிலாளி உறவினில்
......முறிவும்தான் ஏற்படுதற் காரணம்
முதலில்நீ ஒப்பந்த நிபந்தனை
...முறித்துவிட்டு விருப்பம்போல் நடப்பதே
உதவாத காரணங்கள் சொல்லியே
..ஒதுங்குகின்றாய்ப் பணிநேர கடமையில்
அதனாலே உங்கட்குள் முறிவுகள்
....அனுதினமும் வருவதையும் காண்பீரே!
சந்தேகம் கொண்டாலே நட்பினில்
...சந்தோசம் முறிந்துவிடும் விரைவுடன்
உந்தேகம் அவன்தேகம் வேறுதான்
....உயிருக்குள் உயிராகப் பழகினால்
உந்தேசம் அவன்தேசம் மாறியும்
...உள்ளன்பில் வென்றிடுவாய் யாரையும்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
...வண்டமிழ்போல் போற்றுவது நட்பையே!
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 28-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
Subscribe to:
Post Comments (Atom)
உணர்வறிந்தப் பாலியலில் இன்பமே
ReplyDelete...உதட்டளவில் பழகுவதால் துன்பமே
சந்தேகம் கொண்டாலே நட்பினில்
...சந்தோசம் முறிந்துவிடும் விரைவுடன்
முறிவின் ஆதாரப் புள்ளிகளைத் தந்திருக்கிறீர்கள் கலாம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
முதலாளி தொழிலாளி உறவினில்
ReplyDelete......முறிவும்தான் ஏற்படுதற் காரணம்
முதலில்நீ ஒப்பந்த நிபந்தனை
...முறித்துவிட்டு விருப்பம்போல் நடப்பதே//..
முறிவின் தாத்பர்யத்தை நன்றாய் கூறினீர்கள் .
மனமறிந்து நடந்தால் எங்குமே முறிவு ஏற்படாது நலமாய்
சொன்னீர்கள் ..கவிதீபம் அவர்களே .
மிக்க நன்றி; அதிரைத் தமிழூற்று சித்திக் அவர்களே; உங்களின் அருமையான வாழ்த்தினுக்கு.
Deleteயாருக்கு இவ்வரிகள் பிடிக்கும் என்று நினைத்தேனோ, அந்த என் எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது. எங்கே இதில் உள்ள ஒரு சொல்லை எடுக்கச் சொல்லி அம்பு பாயுமோ என்று எண்ணினேன். உண்மையில் ஆதாரப்பூர்வமான உண்மைகள், நீதிமன்ற வழக்குகள், நேரில் கண்ட காட்சிகள் யாவும் எனக்கு அறிவித்த ஓர் உண்மை இதுதான்:” உணர்வின்றி நடாத்தப்படும் ஓர் இல்லறத்திலிருந்து தான் விவாகரத்து- தலாக்- டைவர்ஸ் என்று அதிக அளவில் “முறிவு” கள் உண்டாகின்றன என்பது தான் அது.
ReplyDeleteஇச்செய்தியை எத்தி வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்; நான் எதிர்பார்க்காம்லேயே இந்த முறிவு என்னும் தலைப்பும் எனக்குக் கட்டளையிடப்பட்டுக் கவிதை வனைய வேண்டியாதனதால், இந்தச் செய்தியை இதனுள் வைத்தேன்; உங்களின் அருமையான வாழ்த்தினையும் பெற்றேன்,
மிக்க நன்றி ; கனடா கவிஞர் அன்புடன் புகாரி அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்தினுக்கு.
"வீணையோடு இணைகின்ற பாடலும்"
ReplyDeleteஇனிமையைத்தரும்; சுகத்தைத்தரும்.
வீணையிலே பாடலை பெறும்பொழுது
தெளிவான இன்பம் தெரியும்.
ஒருங்கிணைந்த உணர்வு; ஒத்த உணர்வு;
ஒன்றின் உணர்வு; இன்பமே.
பிரிவுகள் என்றும் துன்பம்.
உங்களோடு ஒத்திசைய உண்டான உணர்வு.
நன்றி கவிஞரே !
”தாம்பத்யம் ஒரு சங்கீதம்” என்னும் அடிப்படை விதியை ஈண்டு- இவ்வரிகளில் கொணர்ந்து வனைந்தனன். மிக்க நன்றி என் குருவான நபிதாஸ் ஞானி அவர்கட்கு, உங்களின் அன்பான- உணர்வுடன் உள்ளம்நிறைவான வாழ்த்தினுக்கு!
ReplyDeleteசங்கீதம் ஒரு கலை; சங்கீதம் தப்பாமல் இசைத்திட “இலக்கணம்” அறிய வேண்டும்; இதுவே போல, இல்லறம் என்னும் தாம்பத்ய உறவும் ஓர் அழகிய- உணர்வுபூர்வமான கலையாகும்; அதில் இங்கிதம் தெரியாமல் நடந்தால் கொலையாகும்; உணர்வுகள் யாவும் உயிரின் அலையாகும்; அவ்வுணர்வுகளை ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் இலக்கில் நடாத்தினால் இல்லறம் நிலையாகும் என்பதை உணர்த்தவே இவ்வரிகளை இணைத்தேன். இன்னும் தெளிவாக “இல்லறமும் இலக்கணமும்” என்னும் தலைப்பில் என் சொந்த வலைத்தளத்தில் பதிந்துள்ளேன்;
http://kalaamkathir.blogspot.ae/2012/02/blog-post_04.html
இந்த இணைப்பைச் சொடுக்கினால் கிடைக்கும் அக்கவிதை; அஃது உணர்வுகளின் விதை!
“எங்கெங்கு சுகங்கள் இருக்கு என்று இலக்கணம் தான் இருக்கு” என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைரவரிகளிலும் ஓர் அர்த்தம் இருக்கின்றது. உண்மையில் தெரிய வேண்டிய இக்கலையைத் தெரியாமல் இருப்பதனாற்றான், விவாகரத்து- தலாக்- டைவர்ஸ் எல்லாம் இற்றைப் பொழுதினில் புற்றீசல்களாய்ப் பெருகின; இன்பம் துய்க்கும் தாம்பத்ய உறவின் ஆழமானக் கல்வியறிவு அருகின; இஃதே இந்த “முறிவு” என்னும் கவிதையின் அடிப்படை நாதம்; தாம்பத்யம் ஒரு சங்கீதம்!
http://youtu.be/bRh5gXtfm3U?t=43m10s
ReplyDeleteஇந்த யூட்யூப் இணைப்பில் என் இக்கவிதை இலண்டன் வானொலியில் ஒலிபரப்பானதன் பதிவைக் கேட்டு மகிழலாம்.
விதவிதமான முறிவுகளை வியக்கும் நடைவரியில் வீரியம் முறியாமல் முறிப்போர் நடத்தியுள்ளீர்கள்.அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் கவித்தீபம் அவர்களே.!
மிக்க நன்றி அதிரை மெய்சா அவர்களே! உங்களின் உளம்நிறைவான வாழ்த்தினுக்கு!
ReplyDeleteஅன்பின் தம்பி நிஜாம் அவர்கட்கு மிக்க நன்றி; இணைப்புக் கிட்டியதும் என் கவிதையின் யூட்யூப் இணைப்பை உடன் இங்குப் பதிவில் கொண்டு வந்தமைக்கு மீண்டும் நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கவிதை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அன்பு மச்சானின் அருமையான வாழ்த்தினுக்கு அகம் நிறைவான நன்றிகள்!
ReplyDelete