வளைகுடா வாழ்க்கை தொடர் எழுதத்துவங்கிய நாள் முதல் தொலைபேசி மூலமும் சில அன்பர்கள் நேரிலும் தனது மனதில் உள்ள ஆதங்கங்களை கூறுகின்ற போது இன்னும் பல படிப்பினை உள்ள சம்பவங்களை பதிய வேண்டும் என்ற வேட்கை எண்ணுள்ளே எழுகிறது.
மனைவி ஒரு மந்திரி என்ற தலைப்பை படித்த வாசக அன்பர் ஒருவர் இந்த ஆக்கம் பத்து வருடத்திற்கு முன் வந்திருந்தால் நான் ஒரு கோடீஸ்வரன். வெல்லந்தியாய் உறவுகளுக்கு அள்ளி கொடுத்து விட்டு ஒன்றுமில்லாமல் தெருவில் நிற்கிறேன் என்றார்.
கணவனின் வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது. தர்ம பிரபைப்போல அள்ளிக்கொடுத்து விட்டு வயதான காலத்தில் உறவுகள் பாராமுகமாக இருப்பதை சொல்லி காட்டினார்.
சம்பாதிக்கும் பணத்தை நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். வாழ்க்கையின் உற்ற உறவான மனைவி கூட உன்னை கட்டி என்ன சுகம் கண்டேன் ? என்று அவர் மீதே பழியைபோட்டது தான் அபாண்டம்.
வளைகுடா நாட்டில் பல காலம் பொருளீட்டிய ஒருவர் தனது கட்டுபாட்டில் பணத்தை வைத்து கொள்ளாமல் மனைவிக்கே அனுப்பி வைத்தார். மனைவியோ தன் உற்றார் உறவினருக்கு அள்ளி கொடுத்து விட்டார். ஊர் திரும்பிய அவர் தனது வாழ்வை கழிக்க ஏதாவது தொழில் செய்ய பணம் தேவைப்பட்டது. பணம் கிடைக்க வில்லை உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்க வில்லை. இன்று அவர் மன நோயாளி போல ஊரில் உலா வருகிறார்.
முதலீடு அவசியம் என்பதை அறியா அவரின் வாழ்வு சூன்யமாய் போனதுதான் மிச்சம். மனைவி கெட்டிக்காரராக இருந்தால் அவரிடம் பணத்தினை ஒப்படைப்பதில் தவறில்லை. எதிர்கால திட்டம் அறியாதவராக இருந்தால் நீங்களே முதலீட்டில் இறங்குங்கள்.
உழைப்பை உறிஞ்சும் உறவுகள் !? இதைப்பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
வாசகரின் ஆதங்கம் உங்களின் தொடருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ! நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ReplyDeleteஇறுதியில் இவற்றை புத்தகமாக தொகுத்து வெளியிடுவோம்.
இன்சா அல்லாஹ் .தம்பி
Delete// உழைப்பை உறிஞ்சும் உறவுகள் !? //
ReplyDeleteநிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும்.
பல நூறு வாசகர்களைப்போல் நானும் ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த பகுதியை வாசிப்பதற்கு.
பிறருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதே ஏன் நோக்கம்
Deleteவாசகரின் தொலைபேசி ஆதங்கம் அனைவரின் கவனத்தை ஈர்க வேண்டும் என்பதற்காக அதிக முக்கியத்துவம் தந்து விவரித்தது நியாயமானதே.
ReplyDeleteபொருளாதாரத்தை சார்ந்த வாழ்வில் வாழும்வரை பொருளாதாரம், அதன் பாதுகப்பு அவசியம் என்பதோடு அல்லாமல், வாழும்போது பலர் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் பொருளாதாரம், அன்றி தான் சுகமாக வாழ்வதற்கு மட்டும்மல்ல என்பதையும் ஒரு சந்தியாளன் கவனத்தில் கொள்வதும் அவசியமே. அதோடு நன்றி மறவாமையும் நீங்காதிருந்தால் நிம்மதியும் நிச்சயம்தானே !
அதைத்தான் மனிதகுல வழிகாட்டி அண்ணல் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் தனது கடைசி தருவாயில் "என்னிடம் எதுவும் பொருளியல் இல்லை . எப்படி வந்தேனோ அப்படியே செல்கிறேன்', என்றும் வழிகாட்டினார்களே.
நன்றி ! நல்லவர் அதிரை சித்திக் அவர்களே !
"ஒரு சாந்தியாளன்" என்று வாசிக்கவும்.
Deleteஅறிஞர் நபி தாஸ் அவர்களின் விளக்கம் இவ்வாக்கத்திற்கு
Deleteமேலும் வலு சேர்ப்பதாக எண்ணுகிறேன் ..நன்றி
சம்பாதிக்க தெரிந்தவர்க்கு சேர்க்கவும் தெரிந்திருக்கவேனும் தனது சம்பாத்தியத்தில் மனைவிக்கு,பெற்றோர்க்கு,பிள்ளையின் பள்ளி,கல்லூரி செலவினங்களுக்கு ,எதிர்கால செலவினங்கலான கல்யாணம் வீடு கட்டுதல் போன்றவைகளுக்கு மற்றும் முக்கியமாக நம் முதுமை வாழ்வில் யாரையும் எதிர்பார்க்காமல் நமக்கே நமக்காய் மாத வருமானம் வரக்கூடிய சொத்து நம் பெயரில் இருத்தல் அவசியம் [யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க பாட்டெல்லாம் அவசியமாகாது]
ReplyDeleteநீ நேசிக்கப்படுவது உன் பெயரில் இருக்கும் சொத்தின் மதிப்பளவில் [அனுபவப்பட்டவர்கள் ஆம் என்பர் அனுபவப்படாதவர் சேச்சே என்பர்]
சரியாய் கூறினாய் அன்பு தோழா..!
Deleteவித்தியாசமான பல கோணத்தில் உலாவரும் ''வளைகுடா வாழ்க்கை'' இனி வரும் காலங்களில் அனைவருக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள். தொடரட்டும்....!
மிக்க நன்றி ..அன்பு சகோ
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteசகோ, அதிரை சித்திக் அவர்களின் இந்த தொடர்களுக்கு நான் என்ன கருத்து எழுத போகிறேன், என்னால் முடியாது.
பிச்ல்த்கப்ஜ் ஜ்ரொஎஇர்ப்ட எவ்பொஇர்ம்ப்ஸ ல்க்ப்டச்த்கல்ப்ழ்க் க்ஜ்ப்சட்ல்ப் க்ப்ச்டப் ஜ்ப்ல்சஜ்ப்சஜ்ப் lkiewrljflf 564f465sdffjlksfl
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தனிமரம் தோப்பாக இயலாதென்பதை உணர்ந்திருப்பதால் , இயன்றவரை அதிரைத் தமிழூற்றின் படைப்புகளைப் பாரெங்கும் பரப்பிடச் செய்ய வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் என் தொடர்புகளிடம் முன்னெடுத்து, அவரின் படைப்பின் சிறப்பினைப் பார் போற்ற பரிசிலுக்குத் தேர்ந்தெடுக்க ஆவன செய்திட்டால் எங்களூரின் தமிழ்க் காவலர், தீயன கண்டால் ஆர்த்தெழும் அதிரை சித்திக் என்பாரின் ஆக்கங்கள் உலகமெலாம் பரவும்.
ReplyDeleteநிற்க. “நீடூர் சன்ஸ்” நிர்வாகி என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் அவர்களின் வலைத்தளத்தில் உங்களின் படைப்புகளை இட்டு வருகின்றார்கள்; இதுவே போல், என்ன்னால் இயன்ற அளவு உங்களின் படைப்புகளைப் பரப்பிட வேண்டும் என்கின்ற வேணவா உண்டு.
முதற்கட்டமாக, இலண்டன் தமிழ் வானொலியில் உள்ள அன்புத் தங்கை ஷைஃபா மலிக் அவர்களிடம் கேட்டு அவர்கள் பணியாற்றும் ஆங்கு இப்படிப்பட்ட “ஆக்கங்கள்” சிந்தனைத் துளிகள் என்னும் பகுதியில் ஒலிபரப்ப இயலுமா என்று வினவுகிறேன்.
அடுத்தக் கட்டமாக, இன்று எனக்கு வந்த அழைப்பின்படி, ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டினர். என்னைப் பொருத்தவரை இப்பொழுது கட்டுரையை விட கவியரங்கில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்; அதனால் எனக்கு வந்த அழைப்பை உங்கட்கு அனுப்புகிறேன்; தொடர்பு கொள்க.
கவியன்பரின் அன்பிற்கு ..நான்..என்றும் கடமை பட்டுள்ளேன் .
ReplyDeleteஎனக்கு வந்த அந்த மடலை உங்கட்கு அனுப்புகிறேன்; இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதனை ஓர் ஆய்வுக் கட்டுரை என்ற தலைப்பில் அங்கு அனுப்புக.
ReplyDeleteவிவரம் தனி மடல் காண்க.
யான் அனுப்பி வைத்த மடல் வந்ததா? அதில் கேட்டுள்ளபடி ஓர் ஆய்வுக்கட்டுரையை அனுப்பி வையுங்கள், அதிரைத் தமிழூற்றே!
ReplyDeleteமடல் கண்டேன் ...தலைப்பு அதில் இல்லை
Deleteஏதேனும் ஒரு தமிழாய்வுக் கட்டுரை என்று தான் கேட்டிருப்பதால், உங்களின் இந்தத் தொடர் மிகவும் ஆழமானது என்பதால் இதனையே தலைப்பிட்டு அனுப்புக.
ReplyDelete