.

Pages

Saturday, September 28, 2013

[ 13 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ சேமிக்கும் முன் யோசிக்கணும் !? ]

சேமிக்கும் முன் யோசிக்கணும்...
வளைகுடா வாழ்க்கையில் பல நிகழ்வுகள் கலந்த கலவை. சிலரின் குடும்ப தேவைகள் குறைவாகவும், சேமிக்கும் அளவிற்கு சம்பளம் கூடுதலாகவும் இருக்கும். சிலருக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் பெரிய தொகை தேவைப்படும்.

இது போன்ற தருணங்களில் நண்பர்கள் ஒன்று கூடி சீட்டு பணம் சேகரிப்பார். குறைந்தது பத்து நபர்கள். ஒவ்வொருவரும் இந்திய பணம் மதிப்பிற்கு ஐந்தாயிரம் வீதம் ஒவ்வொருவரிடமும் வசூல் செய்து சேரும் தொகையை ஒருவர் பின் ஒருவராக மாதா மாதம் விநியோகிக்கப்படும். இது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

உடன் தங்கி இருப்பவர்கள் ஒரே ஊராக சொந்தம் பந்தமாக இருக்கும் தருவாயில் பண விநியோகம் சுமூகமாக அமையும். ஆனால் சில சந்தர்பங்களில் ஒரே வீட்டில் தங்கி இருப்பார். ஆனால் வெளியூர் நபராக இருப்பார்.

இது போன்ற சீட்டு பணம் சேரும் நிகழ்வுகள் நடை பெரும் ..வெளியூரை சேர்ந்தவர் கம்பெனியில் பிரச்னை ஏற்பட்டு ஊருக்கு செல்லும் நிலையில் சீட்டு பணம் முதிர் தொகையை பெற்று கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சென்று விடுவர்.

மீதமுள்ளவர்கள் தனக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கு சீட்டு சேர்த்தவரிடம் தொந்தரவு செய்வார்கள் இதன் காரணமாக ஒரு வருட வருமானம் வரை சீட்டிற்கு கொடுத்து அழுதவர்களும் உண்டு. இது போன்ற சிறு சேமிப்பு செய்பவர்கள் சேமிப்பு திட்டத்தில் சேரும் நபர்கள் வேலையின் பின்னணி. உள்ளூர் காரராக இருக்க வேண்டும்.நாணயமுள்ளவராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

பண தேவை அவசியம் இல்லாதவர்கள் உள்ளூர் வங்கியில் கணக்கு துவங்கி பணம் சேகரிக்கலாம். சேமிக்கும் பணம் பற்றிய தகவல் ரகசியமாக வைத்து கொள்ளவும் .ஒவ்வொரு முறையும் விடுப்பில் ஊர் செல்லும்போது நிலதரகர்களை சந்திக்க தவறாதீர்கள். உங்களுக்கு முதலீடு செய்ய ஆசை வரும்...

அரபு நாடுகளில் வியாபாரம் செய்யும் நபர்கள் கூட பணம் அதிக அளவில் இருப்பில் இருக்க சீட்டு சேர்ப்பார்கள் அவர்களும் பல பேர்கள் முழுமையாக பணம் செலுத்தாததின் காரணமாக கடும் சிரமம் ஏற்பட்டு சொந்த தொழிலை இலக்க நேரிட்ட சம்பவமும் உண்டு.

நான் நேரில் பார்த்த சம்பவம் சீட்டு நடத்தியவரிடம் சிலர் மோசடி செய்துவிட்டு செல்ல...மற்றவர் பணம் கேட்டு நச்சரிக்க சிலர் தகாத வார்த்தை கூறி அழைக்க. அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

நண்பர்களே ! சேமிக்க முன் யோசிக்க சொன்னது சரிதானே..!
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

14 comments:

  1. அழகாகக் கூறியுள்ளீர்

    சேமிக்கும் முன்பு யோசனை அவசியம்

    உங்களின் படைப்புகளை பிற சமூகவலைதளங்களில் நன்றியுடன் குறிப்பிட்டு பதிகின்றனர். உங்களின் படைப்பிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என கருதுகின்றோம்.

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல நிகழ்வோடு தளத்தில் சந்திப்போம்..

      தம்பி

      Delete
  2. தக்க ஆலோசனைகளுடன் சேமிப்பை உணர்த்தும் பகிர்வு.

    ReplyDelete
  3. சேமிப்பவர்களும் கவனமாக சேமிக்கவேண்டும். எதிலும் கவனக்குறைவு பதிப்பைத்தான் தரும். கவனமில்லாச்செயல் அதன் பலனை தந்தே தீரும்.
    வியாபாரம், தொழில் மட்டும்மல்லாது அனைத்திலும் நற்கவனம் வேண்டும்தானே ?

    ஆனாலும் இன்று நேர்மை, கவனம், நியாயம் எழுதப்படுகிறது. நடப்பில் பலரிடம் கவனக்குறைவால், பொருமையிலப்பால் இல்லை !

    நன்றி ! பத்திரிக்கைத்துறை நிபுணர் அவர்களே !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து ..ஆக்கத்திற்கு வலு சேர்க்கும் கருத்து ...அறிஞர் நபி தாஸ் அவர்களே

      Delete
  4. சிறு சேமிப்பு என்பது இக்கட்டான சூழ்நிலயில் உதவும். நமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு பங்கை மாதாமாதம் ஒதுக்கி நாமே சேமித்து வைக்கலாம். சிறு துளியே பெருவெள்ளம்.

    சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளீர்கள்.மிக அவசியம் பின்பற்ற வேண்டியவை. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறு சேமிப்பு என்பது இக்கட்டான சூழ்நிலயில் உதவும். நமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு பங்கை மாதாமாதம் ஒதுக்கி நாமே சேமித்து வைக்கலாம். சிறு துளியே பெருவெள்ளம். //
      மிக சரியாக சொன்னீர்கள் கவிஞர் அதிரை மெய்சா
      அவர்களே

      Delete
  5. ஆம் நல்ல ஆழயோசனை வாழ்த்துக்கள். சகோதர் சித்திக் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ...கருத்திற்கும் நன்றி

      Delete
  6. கடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கி
    மடமைக்குப் பின்னால் மடிந்து விடாதிருக்கச்
    சிக்கனம் தானே சிறந்த படகாகும்
    இக்கணம் தீர்வாம் இது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..கவியன்பரே ....
      கவியால் பின்னூட்டமிட்டு ஆக்கத்தை மிளிர செய்தீர்கள் ...நன்றி

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான படைப்பு, வித்தியாசம் தெரியுது.
    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...ஜமால் காக்கா அவர்கள்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers