.

Pages

Friday, September 13, 2013

நாணயம்

மதிப்பினை இழந்தது மனித நாணயம்
விதிப்பயன் என்பது வீணர்க் கூவலே
துதிப்பவர் கூட்டமும் துய்த்தல் வேடமே     
கொதிப்பினக் காட்டினால் நிற்கும் நாடகம்!

சிந்திய உழைப்பினைச் சிறிதும் போற்றிடாச்
சந்தையில் இந்தியா சரிவைக் காண்பதால்   
இந்திய மதிப்பினை இழந்த நாணயம்
நொந்துதான் அழுவதா நினைப்பாய் தோழனே!   

இருபுறம் உள்ளதால் இந்த நாணயம்
தருவதும் மனிதனின் தரத்தைக் கூறிட
வருவதும் அழகிய வழக்குச் சொல்லிலே
பொருளினை மதிப்பவர் புரிந்துகொள்ளுவர்!

இரண்டிலும் பொருட்களில் இருக்கும் வேற்றுமை
திரண்டநம் தமிழ்ச்சுவை தெரிந்து போற்றுவோம்  
புரண்டிடா நாணயம்;   பேசும் நாநயம்
இரண்டுமே  இருப்பவர்  எவரும் நாடுவர்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 12-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

22 comments:

 1. Replies
  1. Thanks you lot Mr.Nijam,

   Jazaakkallah khairan

   Please insert the link of Youtube which I got now only

   http://youtu.be/vhrWqDLjOa8?t=10m22s


   you may see and hear my poem in this link (start time from 10minutes to22 seconds)

   Delete
 2. நாவில் வேண்டுமே நயம்
  நம் கையில்
  நாணயம் இருப்பினும்
  இல்லாதிருப்பினும்
  நம் கொள்கையில் வேண்டுமே நாணயம்

  வாழ்த்துக்கள் காக்கா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் தொழிலதிபர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்,

   உங்களின் இவ்வரிகளை அப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் ஒரு சில (சுமார் 16 வரிகட்குள்= 4 x 4) எழுதி இலண்டன் வானொலிக்கு அனுப்பியிருந்தால் உறுதியாக உங்களின் கவிதையும் வாசித்திருப்பர்; அந்த அளவுக்கு ஓர் ஈர்ப்பு உங்களின் கவிதை எழுத முயற்சிக்கும் இவ்வரிகளில். எனவே, அடுத்த வாரம் உங்களின் கவிதை ஆங்கு ஒலிபரப்பப்பட வேண்டும்; அதிரையிலிருந்து இன்னும் ஓர் அற்புத கவிஞரின் வரிகள் அகிலமெங்கும் ஒலிக்கட்டும் என்பதே என் வேணவா.

   அதற்காக உங்கட்கு யான் ஓர் உதவி செய்கிறேன்.

   அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ் புதன் கிழமைக்குள்ளாக கீழ்க்கண்ட முகவரிகட்கு ஒரே மின்மடலில் உங்களின் கவிதையை அனுப்புக; அடுத்த வாரம் “விருப்புத்தலைப்பு” தான் (ஒரு வாரம் விருப்புத் தலைப்பும் அடுத்த வாரம் அவர்கள் நிர்ணயிக்கும் தலைப்பும் என்று மாறி வரும்)

   கவிதை அனுப்ப வேண்டிய மின்மடல் முகவரிகள்:


   firstaudio@hotmail.co.uk
   Maleek Shaifa Begum
   shaifa begum (googlemail.com)
   KAVITHA R
   FATV Tamil (googlemail.com)

   Delete
 3. பொருளாதார சிந்தனையை பொருள் பட கூறினீர்கள் ..

  மனித நாவில் நயம் இருந்தால் மட்டும் போதாது ...

  நாணயத்திலும் ..நயம் நிறைந்த கொள்கை வேண்டும் ...

  இந்திய நாணய சரிவில் கவலை ..உங்களின் நாட்டின் பற்றை

  பறை சாட்டுகிறது

  ReplyDelete
 4. உங்களின் அன்பான வாழ்த்தினுக்கு என் அகம்நிறைவான நன்றிகள், அதிரைத் தமிழூற்று அவர்களே!

  நன்றாக உள்வாங்கி வாசித்திருக்கும் நீங்கள்
  கீழ்க்காணும் இணைப்பில்

  http://youtu.be/vhrWqDLjOa8?t=10m22s

  யூட்யுப் வழியே கேட்கலாம்.

  ReplyDelete
 5. //
  மதிப்பினை இழந்தது மனித நாணயம்
  விதிப்பயன் என்பது வீணர்க் கூவலே
  //
  ஆம் ! மனிதன் தன்னை நிர்வாகித்தலில் கவனம் இழந்தால்
  நாணயம் நழுவிவிடும். பின் விதி என்று கூறுவதில் பயன் இல்லைதான்.

  நன்றி ! கவிஞரே !

  ReplyDelete
  Replies
  1. ஆம். உன்னிப்பாய் உள்வாங்கி எழுதியுள்ள உங்களின் கவிப்புலமையும் இழையோடும் வாழ்த்தினுக்கு மிக்க நன்றி.

   Delete
 6. கவியன்பரின் நாணயக் கவிதை
  நாவினில் தவழ்ந்து நரம்புக்குள் பாய்ந்தது.
  அத்தனை அத்தனை அர்த்தங்கள்
  ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்திற்று
  எத்தனும் விளங்கிடும் எளிய நற்த் தமிழினிலே
  தமியேனும் வார்த்ததே
  தங்கத் தமிழ் மொழியினிலே
  தாய்நாட்டு நாணயம்
  தரமிழந்து நிற்கவே
  தரமான தொரு நற்க் கவி
  தந்தீரே கவியன்பரே !

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பின் அதிரை மெய்சா உங்களின் கவிதை வரிகளும் ஆங்குள்ளோரை மிகவும் ஈர்த்தன என்பதை அந்த இணைப்பல் தமியேன் காண முடிந்தது. அதிலும் குறிப்பாக சகோதரி திருமதி ஷைஃபா மலிக் அவர்கள் “நாணயம்” “ நா-நயம்” என்பதை அழகாய்-தெளிவாய்ப் பிரித்துப் படித்த விதம் உங்களின் தங்கத் தமிழ் அவர்களின் தேன்குரலால் உயிருடன் உணர்வின் ஓசைகளாய் ஓடி வந்து காதினில் பாய்ந்தன;நற்றமிழ்க் கவியாய் வேய்ந்தன!

   உங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. மொம்ளியத்துமாவை பள்ளிக்கு கூப்பிட்டு வரும்போதே நான் பார்துருகிறேன் எப்பபார்த்தாலும் எழுதிகொண்டீருப்பிர்க்ல் அதனால்தான் கவிஞறகி விட்லிர்க்லோ வாழ்த்துக்கள் காக்கா
  நாவில் வேண்டுமே நயம்
  நம் கையில்
  நாணயம் இருப்பினும்
  இல்லாதிருப்பினும்
  நம் கொள்கையில் வேண்டுமே நாணயம்

  வாழ்த்துக்கள் காக்கா

  ReplyDelete
 8. மொம்ளியத்துமாவை பள்ளிக்கு கூப்பிட்டு வரும்போதே நான் பார்துருகிறேன் எப்பபார்த்தாலும் எழுதிகொண்டீருப்பிர்க்ல் அதனால்தான் கவிஞறகி விட்லிர்க்லோ வாழ்த்துக்கள் காக்கா
  நாவில் வேண்டுமே நயம்
  நம் கையில்
  நாணயம் இருப்பினும்
  இல்லாதிருப்பினும்
  நம் கொள்கையில் வேண்டுமே நாணயம்

  வாழ்த்துக்கள் காக்கா

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குரிய சகோதரி ஹஜீனாகதீஜாவுக்கு , உங்களின் பாசமுள்ள காக்காவின் அஸ்ஸலாமு அலைக்கும்.

   நீங்கள் என் கவிதைகளைப் பார்த்தும், படித்தும், பாரட்டியும் இத்தளத்திலும், அதிரை எக்ஸ்பிரஸ் தளத்திலும் பின்னூட்டங்கள் இட்டிருக்கின்றீர்கள்; உங்களை யார் என்று அறியாமல் இருந்தேன்; இப்பொழுது நீங்கள் நினைவாற்றலில் விஞ்சியவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் என் இளைய தங்கை முஹம்மத் அலி ஃபாத்மா (மொம்லியாத்மா)வின் உற்றதோழி என்பதை அறிந்தும், என்னை உன்னிப்பாக அன்றும், இன்றும் அவதானிக்கின்றீர்கள் என்பதைப் படித்தும் எனக்கொரு தங்கைக் கிடைத்திருப்பதும்; அதிலும், என் பாசமுள்ளச் சின்னத் தங்கையின் தோழியே எனக்குத் தங்கையாக அமைவதும் அல்லாஹ் எனக்கு அருளிய பேறு என்பேன்.

   என் தங்கைகள் படிப்பைத் தொடரவில்லை; ஆனால், நீங்கள் படிப்பைத் தொடர்ந்து இருப்பீர்கள் அதனால் தான் இணையத்திலும் பின்னூட்டம் இடும் அளவுக்கு எழுத்தாற்றல் உள்ளது என்பது என் கணிப்பாகும்; சரியா தங்கையே!

   பட்டுகோட்டையில் தான் உங்களின் தோழி- என் சின்னத் தங்கையிருக்கின்றார்கள்; நீங்கள் சந்தித்தால் என்னை அடையாளம் கண்டு கொண்டதும் என் கவிதைகளை நீங்கள் படிப்பதும் பற்றி சொல்லிக் கொள்ளலாம்.

   நிற்க. உங்களின் அவதானிப்பு நூற்றுக்கு நூறு உண்மையானதே! ஆம். சிறு வயதில், எதுகை எதுகால் என்று விளங்கும் பொழுதே எதுகை மோனையில் பேசுவேன். உங்களின் அவதானிப்பை உறுதி செய்ய ஓர் எடுத்துக்காட்டு:

   எங்கள் வீட்டின் வாசலில் “கலாம் கூறும் சலாம்” என்று எழுதுவேன்

   என் சகோதரிகள் நான் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சத்தம் போட்டால் இவ்வாறு சொல்வேன்:

   “ஒரு துளி சத்தம் வந்தால்; பல துளி இரத்தம் வரும்”

   இதனை உறுதிப்படுத்த இன்ஷா அல்லாஹ் நீங்கள் உங்களின் உற்ற தோழி- என் சின்னத்தங்கையைச் சந்தித்தால் கேட்டுத் தெரிக,

   சென்ற விடுமுறைக்கு முன்னர் நீங்கள் தான் என் தங்கையின் தோழி என்ற அறிவிப்பு அறியத் தந்திருந்தால், என் தங்கையிடம் கேட்டிருப்பேன்; அவர்களும் மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால், அந்தச் சென்ற விடுமுறையில் தான் அதே தங்கை என்னிடம் கேட்டார்கள், “ சின்ன அண்ணன், நீங்கள் கவிதை எழுதுவதில் பிரபலமாகி விட்டீர்களாமே; எங்கட்குத் தெரிந்தவர்கள் துபையிலிருந்து வந்தவர்கள் சொன்னர்கள்” என்று கேட்டது.

   நான், :ஆம்” என்றேன். யாரது என்றேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு வியாப்பாக இருந்தது. ஆம். அவர்கள் சொன்ன நபர், வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமான ஒரு கவிவேந்தர் ஆவார்,

   உங்களின் வருகைக்கும் அந்த நாட்களின் ஞாபகங்களை என் நினைவு நாடாவில் சுழல் விட்டமைக்கும், வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

   Delete
 9. இன்ஷா அல்லாஹ் ஜசக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 10. \\இன்ஷா அல்லாஹ் ஜசக்கல்லாஹ் ஹைர்\\

  அப்படியானால் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் அவதானத்துடன் உன்னிப்பாய்க் கேட்பேன், உங்களின் கவிவரிகள் வருகின்றனவா என்று.

  என்னைப் பார்த்து நம் தளத்தின் நிர்வாகி நிஜாம் ஒருமுறை விடுமுறையில் இருந்த போதில் ஒரு நண்பரிடம் இவ்வாறு அறிமுகம் செய்தார்கள், “கவிக்குறள் கலாம் அவர்கள் தன்னைப் போலவே ஊரில் உள்ள கவிஞர்களும் எழுத்தாளர்களும் உலகலாவிய பெயரை அடைய வேண்டும் என்று பேரவாவினைக் கொண்டவர்கள்” என்பதாக, அதனை என் சூளுரையாகவே எடுத்துக் கொண்டேன்; இப்பொழுது அதனை நிறைவு செய்யும் வண்ணம் உங்கட்கு உதவி விட்டேன்; ஏற்றி விட்டேன்; இனி படிகளில் கால்வைத்து மேலும் ஏறுவது உங்களின் கடமை; திறமை ஆகும்.

  ReplyDelete
 11. அல்ஹம்துலில்லாஹ் ) அல்ஹம்துலில்லாஹ் ) அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோசம் காக்க மொம்ளியத்துமாவை நான் பார்து10வ்ருட்ம் இருக்கும்
  நான்ஊர்வரும்பொதுஎல்லம் உங்க்கல்மூத்த ராத்த்யவிடம் விசாரிப்பதுண்டு இன்சால்லாஹ் இந் தடவை ஊருக்குபோகும்போது போய பார்க்கணும்

  ReplyDelete
 12. அல்ஹம்துலில்லாஹ் ) அல்ஹம்துலில்லாஹ் ) அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோசம் காக்க மொம்ளியத்துமாவை நான் பார்து10வ்ருட்ம் இருக்கும்
  நான்ஊர்வரும்பொதுஎல்லம் உங்க்கல்மூத்த ராத்த்யவிடம் விசாரிப்பதுண்டு இன்சால்லாஹ் இந் தடவை ஊருக்குபோகும்போது போய பார்க்கணும்

  ReplyDelete
  Replies
  1. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் ஆஃபியா தங்கையே!

   யானும் இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு ஜூலையில் விடுப்பில் சென்றால் என் தங்கையிடம் சொல்கிறேன்.

   உன்னைச் சார்தவர்களும் எங்களின் ஆக்கங்களைப் படிக்கின்றார்களா/

   நிற்க, உனக்கு ஒரு வேண்டுகோள்;

   பெண்களின் சார்பாக/ பெண்மணிகளாம் நம் சமுதாயக் கணமணிகள் பற்றிய ஓர் ஆக்கம் தொடர்ந்து நீ இங்குப் பதிந்தால் என்ன?

   நமதூர் நெசவுக்காரத்தெருவில் உள்ள அருட்கவி அதிரை தாஹா அவர்களின் உறவினரான மலிக்காஃபாரூக் அவர்கள் அவர்களின் உம்மா வீடான் முத்துப் பேட்டையிலிருக்கின்றார்கள்; அவர்களும் இணையம் வழியாக எழுதி உலகத்தமிழர்கள் அறிந்த ஓர் எழுத்தாளாராகி=கவிதாயினியாகி, “கவியருவி” என்னும் பட்டமும் வழங்கப்பெற்றவர்கள்.

   இன்னும் நமதூரிலிருந்து எழுத்தாளர்கள்- கவிதாயினிகள் உருவாக வேண்டும் என்பதே என் அவா.

   திருமதி மலிக்காஃபாரூக் அவர்கள் ஷார்ஜாவில் இருந்த வேளையில் அவர்களின் கணவருடன் தான எல்லாக் கவியரங்குகளிலும் கலந்து கொண்டு பேர் பெற்றார்கள்; அவர்களின் கணவரின் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருந்தததை அவர்களின் கவிதைகளில் மறவாமல் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

   அவர்களின் நேர்காணலை இதே தளத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் நிர்வாகி நிஜாம் அவர்கள் மிகவும் சிரத்தை எடுத்தார்கள் என் வழிகாட்டுதலின் பேரில், ஆனால். எதிர்பாராத விதமாக அவர்களின் கணவருடன் மருத்தவமனக்குப் போவதாகக் கூறியாதல் அன்று நேர்காணல் தடைபட்டது; அவர்களின் நேர்காணலை இன்ஷா அல்லாஹ் அன்புத் தம்பி நிஜாம் அவர்கள் விரைவில் இட்டால், இந்தச் சகோதரிக்கும் எழுத்தார்வம் வரலாம்.

   Delete
 13. பதிவுக்கு நன்றி.

  நல்ல கவிதை,

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, மச்சான்!

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers