.

Pages

Tuesday, September 10, 2013

பிள்ளைகள் வழிகேடுவது ஏன் !?

தாய், தந்தையர், ஆசிரியர் ஆகியோர் குழந்தைகளுக்கு என்ன என்ன விசயங்கள் சொல்லிக் கொடுக்கின்றோம் என்பதை சற்று நாம் சிந்திக்கவும்...
ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளை சரிவரப் பார்ப்பதில்லையாம். ஏனெனில் அவர்கள்  நன்றாக படித்து வருகிறார்களே..!  என் பிள்ளை நல்லாதானே இருக்கிறது...! சில ஆசிரியரும், பெற்றோரும் அவர்களை சமாளித்து கொள்கிறார்கள்.

அதோட நம்ம வேலை முடிந்து விட்டது என்று எண்ணுகிறார்களா ???
முன்புபெல்லாம் ஆசிரியர், தாய், தந்தை பெரியவர்களின் ஒழுக்க கண்டிப்புகள் கடுமையாக இருக்கும். இப்பொழுது சற்றுக்குறைந்தே காணப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டி ஆசிரியரும் அவருடைய பெற்றோரும்தான் என நீங்கள் உங்களுடைய விசயங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறதே சற்று நிறுத்தி வைத்துவிட்டு பிள்ளைகளின் பக்கம் கவனம் செலுத்துங்கள்.

ஏன் என்றால் அவர்களுக்கு எது சரி ? எது தவறு ? என்று தெரியாத நிலையில் விளையாட்டு தனமாக இருக்கிறார்கள்..

பிள்ளைகள் தாய் ,தந்தை, உறவினர்கள், அவரது வயதைவிட முத்தவர்களுக்கு  மரியாதை தருவதில்லை ஏன் ..??? குழந்தைகளின் ஆரம்ப கால கட்டங்களில் உங்களின் கவனக் குறைவுகளால் ஏற்படுவதே தவிரே வேரு எதுவும் இல்லை.

ஆசிரியர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளூக்கு சிறுவயதிலையே அன்போடு, அரவணைப்போடு, கட்டுபாட்டோடு, கவனத்தோடு, பாதுகாப்போட அவரவரகளுக்கு அறிவு திறன்விசயங்களை எடுத்துச்சொல்லி வெற்றிபெற்றால்  பாராட்டி,தோல்வி கண்டால் தட்டிக்கொடுத்து வளர்க்கலாமே..!!!

முக்கியமாக பாசத்தை அள்ளிக்கொடுத்து வளர்க்கவும், பணத்தை அள்ளிக்கொடுத்து வளர்க்க வேண்டாம் ப்ளீஸ் !

சிராஜுதீன் M-S-T

6 comments:

  1. நல்லொதொரு விழிப்புணர்வு ஆக்கம். காலத்திற்கேற்ற பதிவு. இதை இன்னும் விரிவாக எழுதலாம். இனி வரும் தாங்களின் ஆக்கம் இன்னும் சற்று விரிவாக எதிர்பார்க்கிறேன்.

    வாழ்த்துக்கள். தொடரட்டும் தாங்களின் விழிப்புணர்வு ஆக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதரவுக்கு நன்றி...
      இன்ஷாலாஹ் முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. வாழ்த்துக்கள் தம்பி மேலும் தொடர ஆதரவளிக்கிறேன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers