.

Pages

Friday, September 20, 2013

மரணமும், ஜனனமும் பேசிக்கொண்டால்...

ஜனனமும்
மரணமும்
உயிர்களோடு
ஒட்டிப்பிறந்த
ரெட்டைப்பிறவிகள்

மரணம் கேட்டது ?
ஜனனத்தை
விரும்பும்
மக்கள்,
மரணத்தை !
ஏன் வெறுக்கின்றனர் !

ஜனனம் சொன்னது
நான்
இனிமையான பொய்
நீ
கசப்பான உண்மை !

மானுடர் விருப்பம்
இனிப்பு

கசப்பின்
மருத்துவமும்
மகத்துவமும்
அறிந்தோர்
நம்மில் உண்டு

மறுமையை
நம்பினோர்
வாழ்வின்
கசப்பை
சகிப்போடு ஏற்பர்

உண்மைக்கு
அழிவில்லை
மரணம் என்பது
முடிவல்ல!?

வந்த மரணம்
விதி
நாம்
தேடிய மரணம்
சதி
மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

 1. மரணம் நமக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. மரணத்திலிருந்து நாம் தப்பவே முடியாது.

  நல்ல சிந்தனை தரும் படைப்பிற்கு நன்றி

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. // மரணம் என்பது முடிவல்ல... // அருமை...

  வந்தது தெரியும் போவது எங்கே
  வாசல் நமக்கே தெரியாது...
  வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
  மண்ணில் நமக்கே இடமேது...?
  வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
  ஜனனம் என்பது வரவாகும் – அதில்
  மரணம் என்பது செலவாகும்...

  ReplyDelete
  Replies
  1. என் கவிக்கு பொழிப்புரையாக உங்கள் கருத்தைக் கொள்கிறேன்

   Delete
 3. //வந்த மரணம்
  விதி
  நாம்
  தேடிய மரணம்
  சதி //

  அருமையாக முடித்து இருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. மரணத்தை பயந்தோர் பலர் இருக்க தன்னுயிரை மாய்த்துக்கொல்வோர் மரணத்தின் பயமறியாமல் அல்ல வாழ்க்கையின் சோதனைக்கு பயந்து.
   மரணத்திற்கு பின் ஓர் வாழ்க்கை சுவர்க்கம்,நரகமாய் இரண்டில் ஒன்று வாழ்ந்த வாழ்க்கைக்கு பரிசாக கிடைக்கும் என்பதையும் அவர்கள் மறந்ததின் விளைவுதான் தற்கொலை

   Delete
 4. உண்மைக்கு
  அழிவில்லை
  மரணம் என்பது
  முடிவல்ல!?
  மிகச்சரியாக சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. சிலபேர் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வரைமுறை இல்லாது மனம்போன போக்கில் வாழ்கின்றனர். நல்ல எண்ணத்தோடு நம்மை படைத்தவனின் கட்டளைக்கு இணங்கி வாழ்ந்தால் சுவர்க்கம் எனும் முடிவில்லா வாழ்க்கை இருப்பதை உலகில் உள்ள அத்துனைபேர்களும் ஏற்ப்பதில்லை?! இஸ்லாத்தின் முக்கிய சித்தாந்தமே மறுமை வாழ்க்கை பற்றியதுதான்
   தங்களின் ஏற்புரைக்கு அகமகிழ்கிறேன்

   Delete
 5. மறுமையை
  நம்பினோர்
  வாழ்வின்
  கசப்பை
  சகிப்போடு ஏற்பர்/////

  மிக சரியான கருத்து..வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 6. பதிவுக்கு நன்றி.

  அருமையான கவிதை.

  எந்த உயிர் தாய் வயிற்றில் மரணித்து விடுகின்றதோ அங்குதான் ஜனனமும் மரணமும் பேசிக்கொள்கின்றன.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 7. ஆழ் மனதில் உதித்திட்ட புதுச் சிந்தனை தாங்களின் கவி வரிகள். அனைவரும் யோசிக்க வேண்டிய நல்ல பதிவு.அருமை.

  ஜனனத்தின் அடுத்த கட்டம் மரணமே.! அதை அனைவரும் அடைந்தே தீரவேண்டும். அதற்குமுன் நம் ஜனனத்திற்க்கான அர்த்தங்களை புரிந்து அதன்படி நடந்திடல் தான் மரணித்தும் மனதில் வாழும் மாமனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருப்போம். .

  வாழ்த்துக்கள் சகோதரரே.!

  ReplyDelete
 8. இது இலண்டன் வானொளி நிலையத்திர்ர்க்கு அனுப்பப்பட்டது [கவியன்பரின் தூண்டுதலால்]ஒளிபரப்ப பட்டதா இல்லையா என்பது கூட தெரியவில்லை

  ReplyDelete
 9. முயற்சிக்கு வாழ்த்துகள்.
  இலண்டன் வானொலியின் பாமுகம் வியாழன் கவிதை நேரம் ஒலிபரப்பின் யூட்யூப் இணைப்பின் பகுதி 3 ம் பகுதி 4 ம் மட்டுமே பதிவில் வந்துள்ளன. பகுதி 1 ம் பகுதி 2 ம் வரவில்லை. அதில் தான் என்னுடையதும் உங்களுடையதும் வந்திருக்கலாம். பொறுத்திருந்துப் பார்போம்; எனினும் தொடர்ந்து எழுதுக.

  மீண்டும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஊக்கப்படுத்தியமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்

   Delete
 10. இந்த வாழ்வு
  பலன்,
  நம்
  அந்த வாழ்வு
  களம்.

  நம்
  இந்த மரணம்
  வழி,
  அந்த வாழ்வு
  ஜனனம்.

  அதனால்
  மரணமே
  ஜனனம் !
  ஜனனமே
  மரணம் !

  மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களே, தங்கள் கவிதை உள்வாங்க இது பிறந்தது. நன்றி !

  ReplyDelete
 11. நன்றாய் உள்வாங்கி இருக்கின்றீர்கள் நபிதாஸ் அவர்களே வாழ்க வளமுடன் ஈருலக வெற்றிக்கு அனைவரையும் வாழ்த்துகிறேன்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers