.

Pages

Thursday, October 24, 2013

[ 6 ] அறிவுத்தேன் [ அரூப வணக்கம் ]

ஒன்றாய் இருப்பான் !
இல்லாது இருப்பான் !
இரன்டற் றிருப்பான் ! -இது
அரூப வணக்கம் ! 

அரூப வணக்கம் என்றால் என்ன ?

அருவம் அல்லது அரூபம் என்பது, உருவம் இல்லாமை அல்லது உருவம் தோன்றாமை என்பதை குறிக்கும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் உருவத்தின் முந்தின நிலை..

இல்லாதது என்பது இல்லை. அது என்றுமே இல்லை. அப்படி ஒன்றும் இல்லவே இல்லை. பெரும்பாலும் தோன்றாமையை இல்லாமை என்று குறிக்கலாம்; குறிக்கப்படுகிறது. அத்தகைய இல்லாமையிலிருந்துதான் உள்ளமை என்கிற இருப்பு/இருப்புகள் உண்டாகின.

நாம் ஒன்றை செய்ய சிந்திக்கின்றோம், பின்பு செயல்படுகின்றோம்; செயல்படுத்துகின்றோம். அந்த சிந்தனை/எண்ணம் எங்கிருந்து வந்தது ? உங்களிடம் ஏற்கனவே இருந்திருந்தால் அது ஞாபகத்திற்கு வரும். நாம் அறியாத புதிய எண்ணமாக இருந்தால்/இருப்பதால் அது இல்லாமை என்கிற உள்ளமையிலிருந்து உண்டாகி நம் கவனத்திற்கு வரும்.

எனவே, உங்களில் இல்லை ஆனால் உங்களுக்கு ஒரு அறிவு தேவைப்படுகிறது. அதற்காக தனிமையில் இருந்து சிந்தனை செய்கிறீர்கள். அந்த தேவை/விருப்பம் அதனை நிறைவேற்ற, உங்களிடம் இல்லாத எண்ணம் எங்கிறிந்தோ என்ற இல்லாமை என்கிற உள்ளமையிலிருந்து உண்டாகி உங்கள் கவனத்தில் வருகிறது. பின் செயலாகிறது. பிறருக்குச் சொல்லும்போது சப்த சொற்களாக அடுத்தவருக்கும் செல்கிறது. அவ்வெண்ணப்படி செயல் புரிந்தால் அது செயல்.

வாயுக்கள் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்றவைகள். இவைகளின் மூலம் எலக்ட்ரன், புரோட்டான் நியூட்ரான். இதற்கும் முந்தின நிலை ஒளிக்கற்றைகலான ஆற்றல்கள். அதற்கும் முந்தின நிலை இல்லாமை என்ற தோன்றாமை என்கிற உள்ளமை. அதாவது அரூப நிலை.

அரூப நிலை. அதிலிருந்து ஆற்றல்கள். ஆற்றல்களிலிருந்து ஒளிகற்றைகள்.. அதிலிருந்து எலக்ட்ரன், புரோட்டான், நியூட்ரான். இவைகளிலிருந்து ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள், கனிமங்கள் உண்டாகின்றன. இவ்வாறு உருவம் இல்லாமையிலிருந்து உருவங்கள் உண்டாகின்றது.

அதாவது எலக்ட்ரன், புரோட்டான் நியூட்ரான் இவைகளின் கூடுதல் குறைதலுக்கேற்ப வாயுக்கள் என்றும் கனிமங்கள் என்றும் ஆகின்றன. இதனை இங்கு விளக்க வேண்டியது இல்லை. இருப்பினும் இணையும் வாயுவுக்கள் அவைகள் மூலமும் உருவம் ஆவதை மட்டும் காண்போம்.

ஆக்சிஜன், ஹைட்ரஜன் இவைகள் இணைந்து வாயுவாகி, குளிர்ந்து நீராகி, மிககுளிர்ந்து பனிக்கட்டியாகவும் ஆகின்றது. உருவம் இல்லாமை(அரூபம்) உருவமாக தெரிகின்றது.

அரூப நிலை உள்ளது/இருப்பது. அல்லது அரூப நிலை மட்டுமே உள்ளது/இருப்பது. அல்லது அரூபநிலை எங்கும் உள்ளது/இருப்பது அதனை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் உண்டாகின. அவ்வரூபத்திற்கு தனது நிலையில் கூடுதல், குறைவு என்பதில்லாது(தங்கமும் மோதிரமும் போல்) உருவ இருப்புகள் அதில் உண்டாகுகின்றது. இது பொருள்.

அரூப எண்ணத்திற்கு ஏற்ப அவ்வரூபில் சமைந்த உருவம்/உருவங்கள் செயல் படுகிறது. அரூப எண்ணத்திற்கு ஏற்ப உருவம் இணங்கி செயல்படுகின்றது. உருவம் அரூபத்தினது ஆணைக்கேற்ப நடக்கின்றது. ஆணைக்கேற்ப அடிபணிகிறது. அடிபணிதல் வணக்க தாத்பரியத்தையுடையது. இதனை வணக்கம் என்று சொல்வதைத்தவிர வேறில்லை.

இணங்குதல் வணங்குதல், ஆணைக்கேற்ப அடிபணிதல், இணங்கி நடத்தல் என்பதின் அடிப்படையில் ஒருவரது சொல்லை ஏற்று அடிபணிந்து மற்றவர் நடத்தலை வணங்கி நடக்கின்றார் என்றுதானே கூறமுடியும். அரூபத்தினது என்னத்திற்கு ஏற்ப உருவம் நடந்தால் அது அரூப வணக்கம் ஆகும். இது ஒன்றின் செயலின் விளக்கம். இதுவே அரூப வணக்கம்.

மேற்கண்ட விளக்கத்தின்மூலம், ஒரே உள்ளமை நிலையில் இருத்தல், அந்நிலையில் நிகழும் செயல் நிலைகள், இவைகள் வணக்கம். இவ்வாறுதான் (வேறு என்ற எண்ணங்கள், அவ்வெண்ணங்களை உண்டாக்கும் அசைவுகளின் குறுக்கீடுகள் இல்லாது) வணக்கம் இருக்கவேண்டும் என்பது எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய கருத்து.

ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன்வொன்றே
நன்றேயிது அறிவீரே !

எவ்வாறு ? 
நபிதாஸ்

10 comments:






  1. கானம் பாடி கூவுங் குயிலாக
    ********காதல் ஜோடி காணுங் கனவாக
    வானம் பாடி தேடுந் .துணையாக
    ********வானந் தேடி வாடும் நிலவாக
    ஞானம் நாடி வாழும் உளமாக .
    *********நானுந் தேடி கூடுங் களமாக
    பானங் கூடி தாகம் நிறைவாக
    ********பாடம் கூறும் ஞானந் நபிதாஸே !




    ReplyDelete
    Replies
    1. பானங் கூடி தாகம் நிறைவான
      ..........பாடம் தேடும் கீதம் இசைவாணர்
      ஞானம் தாக மோகம் மிகைவான
      ..........நானும் பேச கேளும் தகைவாணர்
      ஊனம் சேர மிகும் நிலைதானில்
      ..........ஓடும் வேக வாழும் புவிவாழ்வில்
      ஞானம் தேற வாழும் கலைதானை
      ..........நானும் பாட நீயும் அறிந்தாயோ !

      Delete
    2. வண்ணப்பாடலின் வாய்பாட்டின் ஓசை குறையாச் சந்தங்களில் அடியொற்றி வந்தமைக்கு அடியேனின் அகம்நிறைவான நன்றிகள்.

      Delete
    3. உந்தன் வழிபற்றி யார்த்தேன்.
      எந்தன் அறிவித்தேன் தெரிவித்தேன்.
      உள்ளம் உவந்ததை ஏற்பேன்.
      சொல்லும் வார்த்தை ஊக்கம்தான்.

      Delete
  2. ஆஹா !

    இரு கவிஞர்களும் கவிதையிலேயே மறுமொழிகள் :)

    ReplyDelete
    Replies
    1. கவிதை மறுமொழிகளில் கவனம் கொண்ட தாங்கள் அறிவுத்தேன் அகத்தில் விளைந்ததை அறிய நாங்கள்.
      புரிந்ததை பதித்தால் புரியாதோரும் பற்றிடும் இரகசியங்கள்
      புகட்டிட தினமும் தமியோன் தாகம்.

      Delete
  3. சூனம் யாவும் வாழ்வை நசுக்கும்
    -----கானம் பாடும் தேன்குரல் ஒலியாய்
    ஞானம் வேண்டும் போற்றிப் புகழ
    ------நபிதாஸ் போல ஞானம் தழைக்க

    ReplyDelete
    Replies
    1. மரபு கவிதை யாக்க களத்தில் இறங்கிவிட்டீர். என்னை புகழ எழுதவில்லை. தன்னை அறிய தூபம் போட்டேன். உண்மை வணக்கம் எங்கும் வேண்டும். வணக்கம் தோற்றம் எங்கும் கண்டேன். வார்த்தை வடிக்க சேக்கனா களத்தை கண்டேன். பொருத்தம் கொண்டேன். எடுக்க வேண்டும் எழுத்தின் ஆழம். ஏற்க காண என்றும் விருப்பம். மனதை புகுத்தி தடுக்கும் தடையை தந்தால் தகுந்த விளக்கம் தர என்றும் விருப்பம்.

      Delete
  4. ஆக்கம் அருமையாக இருக்கின்றது.வாழ்த்துக்கள் நபிதாஸ் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமான வரிகள் உள்ளத்தை கொள்ளைகொண்டன.

      நன்றி ! உண்மை விரும்பும் ஹபீப் அவர்களே .

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers