.

Pages

Wednesday, October 23, 2013

ஒரு காகிதம் பேசுகிறது...

என்னை
சுவாசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான்
மனித மனங்களை
வாசிக்கத் தெரியும்

நான் செய்திகளின்
வீரியம் புரியாத
மலட்டுக் காகிதம்

எனினும்
செய்திகளின் சாரத்தை
நேரெதிராய்
மனித முகங்களில் வாசித்தேன்

வரலாற்றை
வாழ வைப்பதும்
இலக்கியத்தை
இயங்க வைப்பதும்
என் தலைமுறைகள்தாம்

அறிவியலின் அருமை
எனக்குத் தெரியாது
கணக்கின் வீரியம் புரியாது.

நானும்
கரும்பலகையும்
ஒரே சாதிதான்.

நாங்கள்
ஆற்றலின் விருட்சத்துள்
புதைந்திருக்கும் விதைகள்

என்னில் அச்சடித்து
விபத்தை விற்கிறார்கள்

ஆபாசத்தை
அறுவடை செய்கிறார்கள்

உலகத்தை சுருக்கி
உதடுகளில் வைக்கிறார்கள்

எல்லாம் படித்து
எதைக் கிழித்தார்களோ...
அண்ணா சிங்காரவேலு

9 comments:

  1. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கற்பனை :)

    ReplyDelete
  2. நீண்ட இடைவெளிக்குப்பின் நல்ல கவி பாடினீர் உங்கள் கவி காகித கப்பல் அல்ல கப்பல் நிறைய காகிதம்

    ReplyDelete
  3. காகிதத்தின் உழைப்பு என்னவென்று தெரியவைத்தீர்கள் அருமை வாழ்த்துக்கள்.அண்ணா சிங்காரவேலு அவர்களே.

    ReplyDelete
  4. நன்றாகவும் முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. காகிதம் கசங்காமல் கருத்தான வாரிகளைத்தாங்கி வந்துள்ளது.அருமை.

    ReplyDelete
  6. பசுமைத் தாயின்
    பளிச்சென்ற
    வேலி என்னும்
    தாலியாம் அம்மரங்கள்
    அறுக்கப்பட்டதால்
    மூலியாய் ஆகிவிட்டதை
    முகவரி காட்டி நி|ற்கின்றன
    வெள்ளைக் காகிதங்கள்;
    வெள்ளையுடை பூணியவளாய்
    கொள்ளையை நாணியவளாய்...!


    அதிரை அண்ணா , சகோதரர் சிங்கார வேல் அவர்களின் சிங்கக் குரலை கா.மு.,ஆ.மே.பள்ளியின் ஆசிரியர் தினத்தில் கேட்டேன்; இன்று அவர்களின் தங்கத் தமிழைக் காண்கின்றேன். தங்களின் தங்கத்தமிழில் பசுமை என்னும் தாய்மைக்கு உயிரில் நனைத்து உணர்வின் தூரிகையில் பாமாலைப் படைத்து அணிவித்து விட்டீர்கள்; வாழ்த்துகள்; பாராட்டுகள். அதிரையின் புகழ் அகிலமெலாம் பரவிட தங்களின் தங்கத் தமிழ்க் கவிதையை, அடுத்த வாரம் விருப்புத்தலைப்பாக இலண்டன் வானொலியில் கீழ்க்கண்ட மின்மடல் முகவரிக்கு உடன் அனுப்பி வையுங்கள்.

    FATV Tamil ,
    Maleek Shaifa Begum ,
    shaifa begum ,
    firstaudio@hotmail.co.uk,
    KAVITHA R

    இறையருளால், விடுப்பில் தாயகம் வந்ததும் தங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்; தம்பி நிஜாம் அவர்கள் அறிமுகம் செய்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மின்மடல் முகவரிகள் தெளிவாக மீண்டும் இதோ

      kaviltr@gmail.com,
      shaifamaleek@hotmail.com,
      sbegum490@googlemail.com,
      firstaudio@hotmail.co.uk,
      kavitr@gmail.com,

      Delete
  7. எல்லாம் படித்து
    எதைக் கிழித்தார்களோ...

    எதையும் இல்லை...
    காகிதமே
    உன்னை கிழித்தார்கள்.
    ஆம் !
    உன்னில் எழுதிய உண்மைகளை
    உள்வாங்க மறுத்து
    உன்னை கிழித்தார்கள் !

    காகிதமே !
    நீ சொல்கிறாய்
    என் தவறு யாது ? என்று.

    இக்காலத்து மனிதனின் சிலர்
    தவறு செய்பவர்களை தண்டிப்பது அல்ல
    அப்பாவிகளை தண்டிப்பது தான்
    எங்கள் நியதி என்கிறான்.

    நாயை கல் வீசுவான்
    இது இவனின் வேடிக்கை.
    இவன் ஓணானை அடிப்பான்
    அது தவறு செய்ததா ?
    இல்லை !
    அதுவும் வேடிக்கை.
    பின்
    அதுவே வாழ்க்கை.

    அவைகள்
    'அவனின்' படைப்பு
    அதை மறந்தவன் இவன்.

    'அவன்' விடுவானா !
    இவன் வாழ்வில்
    'அவன்' பரிசுகள்
    இவனுக்கு தெரியாமல்
    எத்தனையோ வேதனைகள்
    அப்பாவும் திருந்தமாட்டான்.
    காரணம் தெரியாததால்
    நிந்திப்பான்.

    இவன் காரணத்துடனா...
    அவைகளை துன்புறித்தினான். ?!

    சிறு துளி
    பெருவெள்ளம்
    கடைசியில்
    எல்லாம் ஒன்று சேர்ந்துக்
    கொள்ளும் !
    கொல்லும் !!

    காகிதமே !
    கவலைப்படாதே !
    உன்னை
    நேசிக்க தெரிந்தவர்களும்
    இருக்கின்றார்கள்.

    நீ
    மலட்டு காகிதம் அல்ல !
    அறிவை
    திரட்டியோர் தந்ததை
    வற்றாது வாரிவழங்கும்
    பாரி வள்ளல் !

    நீ
    உண்மையைச் சொன்னாய்
    வரலாற்றை வாழவைப்பதும்,
    இலக்கியத்தை இயங்க வைப்பதும்
    உன் தலைமுறைகள்தாம்.
    ஆனாலும் அவைகளுடன்...
    உனக்கு புரியாத
    அறிவியலும், கணக்கும்
    இவைகளையும்
    எங்களுக்காய் தாங்குகின்றாய்.

    நியும் கரும்பலகையும்
    ஒரு சாதித்தான்
    ஆனாலும்..
    நீ நீதான்..!
    காரணம்,
    அறிஞர்
    அண்ணா சிங்காரவேலு அவர்களின்
    அறிவைத் தாங்கும்
    உற்ற நண்பன்.

    ReplyDelete
  8. நாங்கள்
    ஆற்றலின் விருட்சத்துள்
    புதைந்திருக்கும் விதைகள்///
    மிக சரியான கருத்து

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers