.

Pages

Tuesday, October 1, 2013

மானிடம்

சுட்டெரிக்கும் கோடையில்
போகும்  பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயை ப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழ த்தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே  சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

harmys அப்துல் ரஹ்மான்

குறிப்பு : இந்த படைப்பு 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற இணையதளத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தளத்தில் பதியும் முதல் படைப்பு.

    தொடர்ந்து பங்களிக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்.

    ReplyDelete
  2. தாகம்
    பசி
    என எப்போதுமே இணைந்திருந்த மானுடம் இப்போதெல்லாம் எங்கே போய் தொலைகிறதோ ? என்ற கேள்வி நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள வேண்டியது தான். சிறப்பான சிந்திக்க வைத்த வரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளத்தில் பங்களிப்பாளராக இணைந்துள்ள சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களை சக பங்களிப்பாளர்களில் ஒருவனாக வாழ்த்தி வரவேற்கிறேன்.

    முதல் பதிவிலேயே மூளை ஆணையிடுவதையும். மனம் யோசித்து செயல் பட வேண்டுமென்பதை கவி வரிகளில் உணர்த்தியுள்ளீர்கள். அருமை வாழ்த்துக்கள்.

    இன்னும் நிறைய விழிப்புணர்வு கவிதை எழுதுங்கள்.

    ReplyDelete
  4. மூளை சொல்படி மனம் நடந்தால் அதைவிட மானிடம் வாழ வேறு என்ன வேண்டும்? அருமையான படைப்பு. மேலும் மேலும் பல சிறந்த படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தொலைந்துப் போன மானிடத்தை அழைத்து வந்து அருஞ்சுவைக் கவிதையில் காண வைத்த உங்களின் மானிடம் வென்றது!

    ReplyDelete
  6. தம்பி அப்துல் ரஹ்மானுக்கு வரவேற்ப்புக்களும் வாழ்த்துக்களும், மேலும் தொடர்ந்து எழுதவேண்டும்
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

    ReplyDelete
  7. மனம் ஒரு குரங்கு- மனித
    மனம் ஒரு குரங்கு.

    என்ற வரிகள் கேட்ட ஞாபகம்.

    நல்லதை சிந்தித்து நல்லபடி வாழ வழியுறுத்தும் ஆக்கங்கள் வாழ்க.

    ReplyDelete
  8. மானிடம் ..மனதிடம் பணிந்த காலம் நல்ல காலம் கடந்த காலம் ...

    மனதை ..சுய நலத்திடம் பறிகொடுத்து ..கேடுகெட்ட காலம் இக்காலம் ..நல்ல கவி வாழத்துக்கள்

    ReplyDelete
  9. சகோ. அப்துல் ரஹ்மானுக்கு வரவேற்ப்புக்களும் வாழ்த்துக்களும்,

    ReplyDelete
  10. எல்லோருக்கும் ரொம்ப நன்றி.............

    ReplyDelete
  11. தம்பி அப்துல் ரகுமான் . மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers