.

Pages

Saturday, November 23, 2013

[ 21 ] 'வளைகுடா வாழ்க்கை' [ இடை நிலை () உயர் நிலை ஊழியர்கள் ]

டை நிலை ஊழியர்கள் :
அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் செலவினங்கள் போக ஓரளவு மிஞ்சும் நிலை இவர்களில் பலர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள் சில கம்பெனிகளில் வீட்டு வாடகைக்கான தொகையை கம்பெனியே செலுத்தும் நிலையும் உண்டு அவர்களுக்கு இதர செலவுகள் மட்டுமே ..எனவே அது போன்ற நல்ல சூழல் நல்ல கம்பெனிகள் அமைய பெற்றவர்கள் அதிர்ஷ்ட்ட சாலிகள் தான். ஆனால் சிலருக்கோ அலுவலக பணியாளராக இருந்தாலும் சராசரிக்கு கீழ் சம்பளம் கிடைக்கும் சூழல் அவர்களும் தமது குடும்பத்தை அழைத்து கஷ்ட ப் படும் சூழலும் சூழலும்
உண்டு.

சிலரின் மனைவிகள் படித்தவராக அல்லது நல்ல தொழில் தெரிந்தவராக இருப்பார் .அவர்களும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வர். ஆனால் கலாச்சாரம் பேணும் சில சமூகத்தினர் குடும்பத்தை அழைத்து கஷ்டப்படும்  சூழலையும் பார்க்க முடிகிறது. அதில் பரிதாப சூழல் என்ன வென்றால் சிறு குழந்தைகள் ஆசை படும் பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் சில புத்திசாலிகள் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பர் அவர்கள் குடும்பத்தை அழைக்காது. இரண்டு மூன்று பேரோடு கூட்டு சேர்ந்து தனி நபர் வாழ்க்கை வாழ்ந்து கணிசமான
தொகையை மிச்சம் செய்து பணம் சேர்ப்பர். வருடம் ஒருமுறை
விடுமுறையில் ஊர் வந்து செல்வர்.

சிலரின் நிலை அலை பாயும் மனதுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் நிலை என்றும் புதியவர்களாக இருப்பார்கள் எப்படி !?
தான் வேலைப்பார்க்கும் கம்பெனியில் திருப்தி கொள்ளாமல்என்றுமே பெற கம்பெனி மேல் கவனம் செலுத்துவது அங்கு கூடுதலான சம்பளம், நல்ல நிலை, நல்ல போனஸ் என்று தான் பார்க்கும் வேலையில் இருப்பு கொள்ளாமல் ஓரிரு வருடங்களில் வேலை மாறி கொண்டு இருப்பர். இதன்
காரணத்தால் மூத்த நிலை ( சீனியர் ) பதவிக்கு செல்லாமல் இளம் தலை முறையினருக்கு உதவியாளராகவே தனது கடைசி காலம் வரை கலைத்து விடுகின்றனர். இவர்கள் நிலை பரிதாபமானது தான் !

யர் நிலை ஊழியர்கள் :
உயர் அதிகாரி என்றால் எல்லா வகையிலும் வசதி இருக்கும் இதில் எள்ளளவும் சந்தேகம்  இல்லை .அலுவலகத்தில் எல்லா தரப்பிலும் தனது ஆதிக்கம் இருப்பதால் எதிரிகள் இருப்பது சங்கடமான ஒன்று .அவரை சந்திக்கும் நட்பு வட்டாரம் உறவுகளின் வருகை எல்லாம் வேலை வாய்ப்பு பற்றிய வினாக்களால் சலிப்பு ஏற்படும். இது பொதுவான நிலை இதன் காரணமாக குடும்பத்துடன் தனியாக வசிக்க முனைவதும் உண்டு.

நம் தமிழர்களில் பலர் உயர் நிலை அலுவலர்கள் சமூகத்துடன் ஒட்டி பழகுவதில்லை என்பதே உண்மை ..ஆனால் மலையாளிகள் உயர்நிலை உள்ளவவர்கள் கடை நிலை ஊழியர்களிடம் சகஜமாக பழகுவதை அன்றாடம் காண முடிகிறது.

உளவியல் ரீதியான ஒரு தகவலை பதிய விரும்புகிறேன்...
புலன் பெயர்ந்து வந்து வாழும் இவர்களுக்கு வளைகுடா நாட்டில் கிடைக்கும் வசதி மண்ணின் மைந்தர்களான அரபிகளின் நேரடி பழக்க வழக்கங்களால் தாம் வெளிநாட்டில் இருந்து வந்து பிழைப்பு தேடி வந்துள்ளோம் என்பதை
மறந்து விடுகின்றனர். சில சமயங்களில் தனது ஒத்த நிலையில் உள்ள அரேபியர்களிடம் கருத்து வேறுபாடான நிலையில் அவர்களிடம் மோதும் நிலைக்கு தள்ள பட்டு வேலை இழக்கும் நிலைக்கும் ஆளாவது உண்டு .இது போன்ற தருணங்களில் நிதான நிலைக்கு வந்து அரபிகளிடம் சமரசம் செய்து கொள்ளல் நலம் என்றே நினைக்கிறேன்.

சிலருக்கு  அலுவல் நேரம் குறைவாக  இருக்கும் மற்ற நேரத்து ஏதாவது ஒரு வியாபாரம் செய்வோம் என்று முயற்சி செய்து அதில்  வெற்றி பெறுபவரும் உண்டு. கை காசை இழந்து, வேலையை இழப்பவர்களும் உண்டு. பெரும் பதவியில் உள்ளவர்களுக்கு அந்த வேலை மீது சலிப்பு ஏற்படுவது உண்டு குறுகிய காலத்தில் வேலையினை விட்டு விலகி ஊர் திரும்புபவரும் உண்டு.

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

20 comments:

  1. இடை நிலை ஊழியர்களைப்பற்றியும், உயர் நிலை ஊழியர்களைப்பற்றியும் ஒப்பிட்ட விதம் அருமை !

    வாழ்கையின் படிப்பினையை தரும் பாடமாக அமைந்துள்ளன.

    தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி நிஜாம் அவர்களே

      Delete
  2. வணக்கம்
    ஊழியர்களை ஒப்பிட்ட விதம் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி சகோ சிம்புள் ...அவர்களே

      Delete
  4. ஒப்பீடுகள் சில நல்ல தகவலைத்தருகிறது. புதியவர்களுக்கு மிகுந்த பயன் தரும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அறிஞர் நபி தாஸ் அவர்களே ...
      படித்தவர்களும் பல விசயங்களில் படிப்பினை பெற வேண்டும்

      Delete
  5. நண்பரே சின்ன நாட்டைப்பற்றியே சொல்லிகொண்டிருந்தால் எப்படி பெரிய நாட்டைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
    சின்ன நாடு=அரபு தேசம்
    பெரிய நாடு=மேற்க்கத்திய தேசம்

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆய்வு கட்டுரை வளைகுடா பற்றியது ...
      மற்றொரு தலைப்பில் மேலை நாடுகளை பற்றி காண்போம்

      Delete
  6. கடல் கடந்த வாழ்க்கை அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதர் சித்திக் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ஹபீப் அவர்களே ...
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  7. அருமையான ஒப்பீடு!

    //
    நம் தமிழர்களில் பலர் உயர் நிலை அலுவலர்கள் சமூகத்துடன் ஒட்டி பழகுவதில்லை என்பதே உண்மை ..ஆனால் மலையாளிகள் உயர்நிலை உள்ளவவர்கள் கடை நிலை ஊழியர்களிடம் சகஜமாக பழகுவதை அன்றாடம் காண முடிகிறது.//

    உண்மையை மறைக்காமல் சொன்னீர்கள்.

    இன்னமும் இந்த நிலைமைகள் நீடித்தால் நம் தமிழர்கள் முன்னேறுவது எப்படி? ஆயினும், மலையாளிகள் போல குறுக்கு வழியை மட்டும் நம்பாமல் “நேர்மை, உழைப்பு” இவைகளில் தமிழர்களின் மீதான நம்பிக்கைச் சிறிய மற்றும் பெரிய நாடுகளிலும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள் கவியன்பரே ..
      நேர்மை மிக சிறந்த தகுதி

      Delete
  8. //நண்பரே சின்ன நாட்டைப்பற்றியே சொல்லிகொண்டிருந்தால் எப்படி பெரிய நாட்டைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் //

    இப்பொழுது நீங்கள் இருப்பது அந்தப் பெரிய வல்லரசு நாட்டில் என்பதால் உங்களால் அந்தப் பயண அனுபவத்தையும் பகிரலாம். இன்ஷா அல்லாஹ் அடியேனும் கலந்து கொள்வேன்; அடியேனும் அமெரிக்க அனுபவங்கள் பெற்றவன் என்ற ஓர் அவாவில் சொல்வேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் மற்றொரு தலைப்பில் ஆராய்வோம் ...

      Delete
  9. இடை நிலை உயர் நிலை ஊழியர்களை ஒப்பிட்ட விதம் அருமை. இப்பதிவின் மூலம் பலர் உணர்ந்து நடக்க வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நம்மவர்களுக்கு சென்றடையும் ..
      நம் தமிழர் வாழ்வில் வளம் கிடைக்கும்

      Delete
  10. வளைகுடாவில் நம் மக்களின் வளைந்து நெளிந்து செல்லும் வாழ்க்கையை தெளிவாக விளக்கியுள்ள கட்டுரை..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நன்றி சகோ ஜாபர் அவர்களே ..

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers