.

Pages

Tuesday, November 26, 2013

வால்வோ !? சாவோ !?

மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் எத்தனையோ கருவிகள் மனிதவாழ்வில் ஒன்றிப்போய் விடுகிறது இன்றைய செல்போனும் மின் விசிறியும் இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்று சொல்பவர்கள் தான் அதிகம் ஒரு காலத்தில் மனிதன் தொலைதூர பயணத்திற்கு கால்நடைகளைத்தான் வாகனமாய் பயன்படுத்தி வந்தனர் வியாபார நோக்கிற்காக சாமான்களை ஏற்றிக்கொண்டு வெளி ஊர்களில் விற்பனை செய்து அங்கு கிடைக்கு பொருள்களை வாங்கி வந்து சொந்த ஊர்களில் வியாபாரம் செய்வர் ஒரு வியாபார பயணம் என்பது மாத கணக்கில் நீண்டு இருக்கும் வேலை செய்வதற்காக வெளியூர் செல்வது அன்றைய காலங்களில் இல்லை காரணம் பயண இடைஞ்சல் தொலை தொடர்பு வசதி இவைகளை கருத்தில் கொண்டு சொந்த ஊரில் வேலை செய்வார்கள் வியாபார நோக்கம், கல்வி தேடல், ஆராய்ச்சி,, இவைகளின் நோக்கத்தால் தொலை தூர பயணம் மேற்கொள்வர்.
       
இன்றைய காலம் அப்படியல்ல மாட்டு வண்டி, குதிரை வண்டி, போய் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள்,மற்றும்   6 சக்கர வாகனங்களாக வளர்ச்சி கண்டுள்ளது  நாட்டின் வளர்ச்சி என்பது  சாலைகள் வளர்ச்சியிலும் பார்க்கப்படுகிறது போக்குவரத்து வசதிகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த நாடு வளர்ச்சியிலும் வேகம் எடுக்கும் இன்று மனிதர்கள் நீண்ட தூர பயணத்திற்கு ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர் காரணம் சொகுசான,விரைவான பயணம் உடல் சோர்வு இல்லாது மறுநாள் வேலைக்கு விடுப்பு எடுக்காது சொல்லாம் ஒரு இரவு தூக்கம் கூட சிரமப்பட கூடாது என்ற நோக்கத்தால் கட்டணம் அதிகமாக இருந்தாலும் ஆம்னி பஸ்களாகிய வால்வோ பஸ்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்[மனித வாழ்வோடு ஒன்றிப்போய் விட்டதில் இதுவும் ஒன்று] வாழ்வு சிறக்கவேண்டும் என்று நாம் நினைக்கையில் வால்வோ பஸ்கள் நம் வாழ்வை பறிக்கின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெருகிறது சென்ற அக்டோபர்3௦ ஆம் தேதி பெங்களுருவில் இருந்து ஹைதராபாத் சென்ற வால்வோ பஸ் மற்றும் அதே பெங்களுருவில் நவம்பர் 13 ஆம் தேதி  மும்பைக்கு சென்ற வால்வோ பஸ் இரண்டும் விபத்துக்குள்ளாகியது இரண்டுமே ஒரே காரணம்தான் டிவைடர் என்று சொல்லப்படும் இரண்டு சாலைகளையும் பிரித்து காட்டப்படும் அந்த தடுப்பில் உரசி அல்லது மோதி டீசல் டாங் தீ பற்றிக்கொள்ள முதல் பஸ்ஸில் சென்ற பயணிகள் 45 பேர்களும் இரண்டாம் பேருந்தில் 8 நபர்களும் தீக்கு இறையாகிப்போனார்கள் வாழ்க்கையில் எத்தனையோ கனவுகளோடு, பயண கட்டணங்கள் ஆதிகமானாலும் கவலைபடாது சொகுசாக செல்ல நினைத்தவர்களுக்கு! சொகுசு வால்வோ முடிவு வாழ்வாய்ப்போனது.
     
இனி இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க பயணிகள் விழிப்புணர்வு அவசியம் பேரூந்து நிர்வாகமும் விழிப்புடன் இருத்தல் வேண்டும் நம் சமூகவிழிப்புணர்வு பக்கம் தரும் ஆலோசனைகள் :
1. எல்லா வால்வோ பஸ்களிலும் டிவி இருக்கின்றது பயணம் புறப்படும் முன் ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று டெமோ வீடியோ செயல்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்

2. ஒவ்வொரு இருக்கைக்கும் கிழே கனத்த இரும்பு கம்பி [ கண்ணாடியை உடைப்பதுபோல் ] வைத்திருக்க வேண்டும் அல்லது குறைந்தது 4 இருக்கையிலாவது வைத்து அதை [இருக்கை எண்ணை]குறிப்பிட்டு இருக்க வேண்டும்

3. அவசர வழி எப்படி உபயோகிப்பது என்பதையும் செயல்படுத்தி காண்பிக்க வேண்டும்

4. டீசல் நிரப்பும் பொழுது டீசளோடு உடனடியாக தீ பற்றாத இரசாயானத்தை கலக்க நிர்வாகம் தவறக்கூடாது

5. நீண்ட தூர பயணத்தில் இரண்டு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும்

6. கிளீனர் என்பவர் வண்டியை துடைப்பதற்கும் ரிவேர்ஸ் பார்ப்பதற்கு மட்டுமே உள்ளார் அவர் நல்ல விபரம் தெரிந்த பலசாலியான ஆளாய் இருந்தால் விபத்து நிகழும்போது பயணிகளுக்கு உதவியாய் இருப்பார் [ இல்லையேல் முதலில் தப்பிப்பவர் அவராகத்தான் இருப்பார்]

7. 120 கிலோமீட்டர் மீட்டர் வேகம் செல்லும் தகுதியான சாலைவசதிகள் இல்லாது இருந்தும் ஓட்டுனர்கள் வேகத்தை மட்டுப்படுத்துவது இல்லை

8. டீசல் டேங்கை சுற்றி தண்ணீர் டேங்கு கவசம் போல் இருந்தால் விபத்தின்போது தீயை அணைக்க ஏதுவாக இருக்கும் அல்லவா

9. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஓட்டுனர் மது அருந்தி இருக்கிறாரா என்பதனை சோதனை செய்யும் கருவி வைத்து ஓட்டுனரை சோதிக்கவேண்டும்  மதுவால் விபத்து நடந்து இருந்தால் சோதனை சாவடி ஊழியரையும் கைது செய்யும்படி சட்டம் இயற்றவேண்டும்
   
வாழ்வோ சாவோ இனி வால்வோ பயணம் வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலைக்கு பயணிகளை ஆட்படுத்திவிடாதீர்

வாழ்க்கை வாழ்வதற்கே
வால்வோ சாவதற்கென்றாள்
வால்வோ அவசியமில்லை !
மு.செ.மு.சபீர் அஹமது

12 comments:

 1. வால்வோ காரின் தலைப்பை வைத்து கட்டுரையை நகர்த்திய விதம் அருமை !

  இறுதியில் சொன்ன அறிவுரைகள் அனைத்தும் அருமை ! துண்டு பிரச்சுரமாக அடித்து நகரெங்கும் விநியோகிக்கலாம்.

  ReplyDelete
 2. அங்கோலாவில் இஸ்லாத்துக்கு தடை???  தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

  நாட்டில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கும் 1% இற்கும் குறைவான முஸ்லிம் சமூகத்துக்கும் இடையில் முறுகல் நிலை உள்ளது என்பது உண்மையே. ஆனால் இப்படி ஒரு முடிவை தமது அரசாங்கம் எடுக்காது என்றும்,

  மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா.
  எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன.
  மக்கள் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது.

  எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், ப்ராடஸ்டன்ட்கள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர்.

  எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என்றார்.

  அநேக சமூக வலைதளங்களில் இந்த செய்தியுடன் பரப்பப்பட்ட பள்ளி ஒன்று இடிந்து விழுவது 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது என்று International Business Times கருத்து தெரிவித்துள்ளது.


  READ: http://tribune.com.pk/story/637133/just-media-rumours-angola-denies-it-banned-islam


  READ: http://www.news.com.au/world/angola-government-denies-it-tried-to-ban-islam/story-fndir2ev-1226768582895

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன செய்தி உண்மையாக இருக்கட்டும்

   Delete
 3. விழிப்புணர்வு பதிவு அருமையான யோசனைகள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. The contents analyzed and suggestions published were good. If followed in future most of the accidents will end with lesser damages and as well with no loss of lives. Thank you Syed Sabeer Ahmed.

  ReplyDelete
 5. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. விபத்துக்கள் அதிகம் நடப்பது கவனக்குறைவே காரணம். அதற்க்கான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதத்தில் தாங்களின் இந்தப் பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 6. பதிவுக்கு நன்றி.

  வாழ்வோ இல்லை சாவோ.

  நான் சாகவே மாட்டேன்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 7. நல்ல விழிப்புணர்வு தரும் ஆக்கம் ..
  துண்டு பிரசுரமாக ..அனைத்து ஓட்டுநரிடமும் கொடுக்க வேண்டும்

  ReplyDelete
 8. அன்றைய புதிய நடப்புகளை வைத்தே ஆக்கம் படித்து விரைவில் தரும் உங்களின் ஊக்கம் தரும் எழுத்துக்களை எண்ணி வியக்கின்றேன்; காண்பதும்- கேட்பதும் தான் ஓர் எழுத்தாளனின் கரு என்பதும்; அதுவும் நெடுந்தூரப் பயணங்களில் சிந்தைனையில் ஓடும் கருவை வைத்து கதை, கட்டுரை, கவிதைகள் வடிக்கலாம் என்பதை உறுதி செய்து விட்டீர்கள். நிற்|க்.
  இறுதிக் கவிதையை இவ்வாறு அமைத்தால் இன்னும் சந்தம் கூடும் ஒலிந்யம் ஓங்கும்

  வாழ்வோ வனப்பென்று வந்தோம்- ஆனால்
  வால்வோ விளையாடி ஆபத்தில் நொந்தோம்
  பாழ்போ னதைம்பத்து மூன்று - உயிர்கள்
  பாதை மறந்த பயணத்தின் சான்று!

  இன்னும் இதுபோன்ற விழிப்புணர்வு ஆக்கங்களை வனையும் ஆற்ற்ல் பெருக; ஆர்வமுடன் தருக.

  ReplyDelete
 9. காலத்திற்கேற்ற தகுதியான நல் விழிப்புணர்வு.
  நல்லதொரு ஆக்கம். நல்ல சிந்தனை.

  ReplyDelete
 10. \\ஆக்கம் படித்து\\ ஆக்கம் வடித்து என்று வாசிக்கவும். தட்டச்சுப்பிழைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 11. ஜசக்கல்லாஹ் ஹைரன் அனைத்து எழுத்தர்களின் ஆதரவும் துஆவும் இருக்கும் வரை உலக நடப்புகள் அனைத்தையும் [அப்டேட் ]உடனுக்குடன் செய்தியாகவும் கட்டுரையாகவும் தந்து கொண்டு இருப்போம் வாசகர்களுக்காக
  அடுத்து வினோத கோரிக்கை முதல்வருக்கு வைத்துள்ளார்கள் விபரமாய் அடுத்த வாரம் காண்போம்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers